அன்னை சாரதாதேவியின் வாழ்க்கை வரலாறு-பாகம்-116
அன்னை இனிமேல் அதிக நாட்கள் வாழமாட்டார் என்பதை உணர்ந்து கொண்ட சரளா ஒரு நாள் அழுதவாறே அன்னையிடம் சென்று அம்மா நீங்கள் இல்லாமல் என்னால் வாழ முடியாது. என்னையும் உங்களுடன் அழைத்துச் சென்று விடுங்கள் என்று கூறினாள்.அதற்கு அன்னை ஆழ்ந்த அமைதியுடன், மகளே இறுதியில் என்னிடம் நீ வருவாய், என்னிடம் தான் வந்து சேர்வாய்.ஆனால் உன் மூலம் நான் செய்ய வேண்டிய வேலை சிறிது பாக்கியிருக்கிறது.அதை நிறைவேற்றிய பின் நீ என்னிடம் வரலாம், என்று கூறினார். அன்னையின் இந்த வார்த்தைகள் சுமார் முப்பது ஆண்டுகளுக்குப் பின் நடக்கப்போகின்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பணிக்கான விதையாகும். ராமகிருஷ்ண மடத்தைப்போல பெண்களுக்குரிய அமைப்பான சாரதா மடத்தின் தோற்றத்தையே அன்னை அவ்வாறு குறிப்பிட்டார். சாரதா மடம் பின்னாளில் உருவாகியபோது இந்த சரளாவே ப்ரவ்ராஜிகா பாரதீப்ராணா என்ற பெயரில் அதன் முதல் தலைவி ஆனார். ராமகிருஷ்ணதுறவியர் சங்கத்தின் ஜனனியாகவும் குருதேவியாகவும் விளங்கிய அன்னை, அதில் பெண்களுக்கும் உரிய இடத்தை இவ்வாறு அளித்தார்.
இனி? இனி என்ன, வந்த வேலை முடிந்தால் போக வேண்டியது தான், எங்கோ உயரத்தில் உலவுகின்ற நிலவின் பிம்பம் குளத்து நீரில் பிரதிபலிக்கிறது. மீன்கள் அந்தப் பிம்பத்தைத் தங்களுள் ஒன்றாகக் கருதி அதனுடன் விளையாடிக்களிக்கின்றன. ஆனால் அதன் உண்மையான இருப்பிடம் எது என்பதைப் பாவம் அந்த மீன்கள் அறிந்திருக்கவில்லை. விடியும் போது அந்தப் பிம்பம் காணாமல் போய்விடுகிறது. தமது தெய்வீகத்தைக் கோடி காட்டுவது போல் சிலவேளைகளில் அன்னை இவ்வாறு கூறுவார். இப்போது இந்த பிம்பமும் மறைய வேண்டியது தான். அப்படியானால் விடிய வேண்டும். விடிவது என்றால் இருள் விலக வேண்டும். உலகில் தமது பணிகளுக்கான இருளாகிய மாயையுடன் அன்னை தம்மைப் பிணைத்துக்கொண்டிருந்தார். இப்போது பணிகள் நிறைவுற்றுவிட்ட நிலையில் மாயையை விலக்க வேண்டியது தான். காசியில் ஒரு முறை அன்னையை ராது மற்றும் குடும்பத்தினருடன் கண்ட ஒரு பெண், அம்மா, இது என்ன? நீங்கள் இப்படி மாயையில் உழல்கிறீர்களே? என்று கேட்டாள் . அதற்கு அன்னை என்ன செய்வது மகளே! மகாமாயையும் நானே அல்லவா? என்று மெல்லிய குரலில் கூறினார். மகாமாயையான அவரிடம் மாயை இருக்கத்தானே செய்யும்! ஆனால் நாம் முன்பு கண்டது போல் அது அவரது கைக்கருவி, வேண்டிய நேரத்தில் உபயோகிப்பார். வேண்டாத நேரத்தில் விலக்கி வைத்துவிடுவார். இப்போது விலக்கத் திருவுளம் கொண்டு விட்டார். அதற்கான அறிகுறிகள் மே மாத இறுதியில் தெரிய ஆரம்பித்தன.
தட்சிணேசுவர நாட்களிலேயே அன்னைக்குச் சேவகராக விளங்கியவர் லாட்டு. குருதேவரின் மறைவுக்குப்பின்னர் சுவாமி அத்புதானந்தர் என்ற பெயருடன் வராக நகர மடத்தில் மற்ற துறவியருடன் வாழ்ந்து சாதனை கள் பழகிவந்தார். ஒரு முறை அவர் பலராம்போஸின் வீட்டில் தங்கியிருந்தபோது அன்னையும் அங்கிருந்தார். ஒரு நாள் அன்னைப்புறப்படத் தயாரானார். அப்போது ஒருவர் அத்புதானந்தரிடம் அன்னை புறப்படும் விஷயத்தைத் கூறினார். அதற்கு அவர் போகட்டும், நான் துறவி. எனக்கு அன்னையும் கிடையாது.அப்பனும் கிடையாது என்று கூறிவிட்டார். புறப்படும் போது அவரைக் காணாததால் அன்னை அவரைப்பற்றி விசாரித்தார். அவர் சொன்னதை அப்போது அன்னையிடம் தெரிவித்தனர். உடனே அன்னை, அவனுக்கு அன்னை இல்லாமல் இருக்கலாம்.ஆனால் எனக்குப் பிள்ளை உண்டே! என்று கூறியபடி தாமே நேரில் சென்று அவரைப்பார்த்தார். இதனைச்சிறிதும் எதிர்பார்க்காத சுவாமிகள் வெலவெலத்துப்போய் அன்னையின் திருப்பாதங்களில் வீழ்ந்து பணிந்தார். அன்னையின் இத்தகைய புத்திரவாஞ்சைக்குப் பாத்திரமானவர் லாட்டு. அவர் அன்னையின் இந்த இறுதி நாட்களில் ஏப்ரல் 24-ஆம்நாள் மகா சமாதி அடைந்தார். அவரைத்தொடர்ந்து மே 14-ஆம் நாள் பலராம்போஸின் மகனான ராமகிருஷ்ணபோஸ் காலமானார். அன்னையின் சிர்குலைந்த உடல்நிலையைக்கருதி இவற்றை அன்னையிடம் தெரிவிக்கவில்லை. ஆனால் கோலாப்மா தமக்கே உரிய பாணியில் ஒரு நாள் எல்லாவற்றையும் பட்டென்று கூறிவிட்டார். விளைவு? அன்று முழுவதும் அன்னை ஏங்கிஏங்கி அழுதார். இரவிலும் தூங்கவில்லை. இதனால் ஜீரம் அதிகரித்து, அன்னை நினைவிழக்கும் நிலைக்குப்போய் விட்டது.

No comments:
Post a Comment