யாரும் முற்றிலும் நல்லவனும் அல்ல முற்றிலும் கெட்டவனும் அல்ல.தொடர்ந்த பயணத்தின் ஒரு பகுதியில் நாம் நிற்கிறோம்.
யாரும் முற்றிலும் நல்லவனும் அல்ல முற்றிலும் கெட்டவனும் அல்ல.தொடர்ந்த பயணத்தின் ஒரு பகுதியில் நாம் நிற்கிறோம். - சிலர் தங்களை நல்லவர்கள் என்று நினைத்துக்கொள்கிறார்கள்.சிலர் கெட்டவர்கள் என்று நினைத்துக்கொள்கிறார்கள்.ஆனால் உண்மையில் யாரும் நல்லவர்களும் அல்ல கெட்டவர்களும் அல்ல என்கிறது தத்துவம். - மஹத் அதாவது பிரபஞ்ச மனத்துடன் நமது எல்லோருடைய மனங்களும் இணைக்கப்பட்டுள்ளது.இந்த பிரபஞ்சமனத்தில் கோடிக்கணக்கான ஆண்டுகளுடைய நினைவுகள்,கோடிக்கணக்கான உயிர்களுடைய வாழ்க்கை முறைகள் பதியப்பட்டிருக்கின்றன சர்வர்.ஹார்ட் டிஸ்க் போன்றது.இதில் ஒரு பகுதி நமது மூளையோடு இணைக்கப்பட்டுள்ளது.நாம் முன்னேற முன்னேற மஹத்தை பற்றிய புரிதல் விரிவாகிக்கொண்டே செல்கிறது. - சர்வரில் எல்லாமே இருக்கும்.எதை தேடுகிறோமே அதை தெரிந்துகொள்ளலாம்.அதைப்போல மஹத்தில் எல்லாமே உள்ளது.எதைப்பற்றி தெரிந்துகொள்ள வேண்டுமோ அதை தெரிந்துகொள்ளலாம்.இப்போது முக்கிய விஷயத்திற்கு வருவோம் - இந்த மஹத்-தான் நம்முடைய உண்மையான மூளை.தற்போது நம்மிடம் உள்ள மூளை அந்த மஹத்தின் ஒரு பகுதிதான்.சர்வரில் இணைக்கப்பட்டுள்ள எல்லா க...