Monday 26 September 2016

சுவாமிஜிக்கு விஷம் வைத்துகொல்ல முயற்சித்த பாதிரிகள்

சுவாமிஜிக்கு விஷம் வைத்துகொல்ல முயற்சித்த பாதிரிகள்
-----
அமைரிக்காவில் சொற்பொழிவாற்றிகொண்டிருந்த காலத்தில்,பிப்ரவரி 1894 ல் அமெரிக்க பத்திரிக்கை ஒன்றில் சுவாமி விவேகானந்தர் இந்தியாவில் கிறிஸ்தவ மிஷனரிகளின் செயல்பாடுகள் குறித்து கடுமையான விமர்சனங்களை தெரிவித்தார். 
இந்தியர்களை வெள்ளையர்கள் கடுமையாக துன்புறுத்திக்கொண்டிருக்கிறார்கள் .உண்ண உணவின்றி பட்டினியால் பல லட்சம் மக்கள் சாகிறார்கள்,அதை கேட்ட திராணியில்லாத இவர்கள் அப்பாவி ஏழைகளை மதம்மாற்ற அனைத்து முயற்சிகளையும் செய்கிறார்கள் .இந்தியார்களுக்கு தற்போது கிறிஸ்தவ மதம் தேவையில்லை என்று பேசினார்.
இது அமெரிக்க மக்களிடம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.கிறிஸ்தவ பாதிரிகள் சுவாமிஜியை பழிவாங்க நினைத்தார்கள் .அமெரிக்க மக்கள் மத்தியில் சுவாமிஜியை குறித்து பொய்யான பல தகவல்களை பரப்பினார்கள்.அவரை பற்றி பொய்யான தகவல்களை பத்திரிக்கைகளில் வெளியிட்டார்கள் .பல சூழ்ச்சிகளை கையாண்டார்கள்
இந்த வதந்திகள் காரணமாக பல பிரச்சனைகளை சுவாமிஜி சந்திக்க நேர்ந்தது. சுவாமிஜி யாரையெல்லாம் பார்ப்பாரோ அவர்களிடம் இவரைபற்றி தவறாக சொல்லி சுவாமிஜியை முழுவதும் தனிமைப்படுத்த முயற்சித்தார்கள்.ஆனால் சுவாமிஜி கலங்கவில்லை,நிலைகுலையவில்லை எப்போதும் போல இறைவனை சார்ந்து வாழ்ந்தார்.
சுவாமிஜி ஒரு மகான் என்றால் அவர் அற்புதங்களை நிகழ்த்தட்டும்,சித்து வேலைகளை காண்பித்து, அவர் மகான் என்பதை தெரியப்படுத்தட்டும் என்று பத்திரிக்கைகளில் சிலர் எழுதினார்கள்.
சுவாமிஜி அதற்கு பதிலளித்தார்.
எனது மதத்தை நிரூபிப்பதற்கு சித்து வேலைகள் எதுவும் என்னால் செய்ய இயலாது.முதலாவது சித்து வேலைகளும் அற்புதங்களும் நிகழ்த்திக்கொண்டு திரிபவன் அல்ல நான்.இரண்டாவதாக,எந்த இந்து மதத்தின் சார்பாக நான் வந்துள்ளேனோ,அந்த உண்மையான இந்து மதம் சித்துவேலைகளையும் அற்புத நிகழ்ச்சிகளையும் சார்ந்து இருக்கவில்லை.ஐம்புலன்களுக்கு எட்டாத சில நிகழ்ச்சிகளை பலர் நிகழ்த்திக்காட்டியிருக்கிறார்கள்,ஆனால் அவையும் சில நியதிகளுக்கு ஏற்பவே நிடைபெறும்.அவற்றிற்கும் இந்து மதத்திற்கும் எவ்வித சம்மந்தமும் இல்லை.பணத்திற்காக வித்தை காட்டுபவர்கள் இவ்வாறு சித்துவேலைகளை காட்டட்டும்.சத்தியத்தை அறிய விரும்புபவர்களுக்கு இதனால் பயன் இல்லை.
சுவாமிஜியின் நண்பரும் ஸ்ரீராமகிருஷ்ணரின் பக்தருமாக மஜும்தார் என்பவரை வைத்து சுவாமிஜியை பழிவாங்க புதிதாக திட்டம் தீட்டினார்கள். மஜும்தார் தலைமையில் கல்கத்தாவில் இயங்கிவந்த இந்திய பத்திரிக்கையில் சுவாமிஜியை பற்றி பல கற்பனை கதைகளை எழுதினார்கள் .சுவாமிஜி வெளிநாடுகளில் பல தவறான பழக்கங்களில் ஈடுபட்டிருப்பதாகவும்,பெண்களுடன் தவறான பழக்கத்தின் இருப்பதாகவும்,அவர் இந்து மதத்தை போதிக்கவில்லை,வேறு எதையோ புதிதாக உருவாக்கி அதை போதிப்பதாகவும், வெளிநாட்டினர் உண்ணும் உணவை சாப்பிடுவதாகவும், எந்த விதமான ஆச்சாரங்களையும் கடைபிடிக்கவில்லை என்பதையும் எழுதினார்கள்.
சுவாமிஜியின் பிறந்த ஊராக கல்கத்தாவில் இப்படிப்பட்ட தகவல் பரவியதும் சுவாமிஜி மிகவும் கலக்கம் அடைந்தார்.தன் தாய் இந்த தகவல்களை கேட்டால் மிகவும் மனம் வருந்துவார் என்று வேதனை அடைந்தார்.
இவர்களுடன் இந்தியாவில் இருந்து பிழைப்புதேடி அமெரிக்கா வந்தது கிறிஸ்தவராக மதம் மாறிய ரமாபாய் என்ற பெண்ணும் சுவாமிஜியை பற்றி பல வதந்திகளை பரப்பி வந்தார்
தங்கள் இயக்கத்தில் சேர மறுத்ததால் தியோசபிக்கல் சொசைட்டியினரும் சுவாமிஜியை எதிர்த்தார்கள்.
இவர்களின் சூழி்ச்சியால் சுவாமிஜிக்கு பல இன்னல்கள் வந்தாலும் பொறுமையாக அவற்றை தாங்கிக்கொண்டார் பதிலுக்கு யார்மீதும் கோபம் கொள்ளவில்லை
சுவாமிஜி கிறிஸ்தவராக மதம்மாற வேண்டும் என்றும் இல்லாவிட்டால் உயிருக்கு பாதுகாப்பு இல்லை என்றும் அச்சுறுத்தினார்கள்.
ஆனால் சுவாமிஜி அசைந்துகொடுக்கவில்லை. அடுத்த கட்டமாக விலைமாதுக்களை சுவாமிஜியிடம் அனுப்பி அவரை வீழ்த்த திட்டம் தீட்டினார்கள் .ஆனால் அவர்கள் சூழ்ச்சி தோல்வியடைந்தது.
அமெரிக்காவில் உள்ள டெ்டராய்ட் நகருக்கு விருந்திற்காக ஒருவர் சுவாமிஜியை அழைத்தார். (பெரும்பாலும் சுவாமிஜி விருந்தினர்கள் கொடுத்த உணவையே உண்டு வந்தார்.தமக்காக அவர் சமையல்காரர்களை நியமிக்கவில்லை.)அங்கு கொடுக்கப்பட்ட காப்பியை குடிப்பதற்காக சுவாமிஜி வாயருகே கொண்டு சென்றார். எப்போதும் உடன் நின்று காக்கும் ஸ்ரீராமகிருஷ்ணர் அப்போது தோன்றினார். ”அந்த காப்பியில் விஷம் கலந்துள்ளார்கள் அதை குடிக்காதே என்றார்“ சுவாமிஜி சுதாரித்துக்கொண்டார். பாதிரிகளின் திட்டம் தோல்வியடைந்தது.
ஆரம்பத்தில் சுவாமிஜி இந்த எதிர்ப்புகளை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் அமைதிகாத்தார்.ஆனால் விஷம்வைத்து கொலைசெய்யும் அளவுக்கு சென்றபின் அவரால் பொறுமையாக இருக்க முடியவில்லை. சென்னையில் இருந்த அளசிங்கருக்கு இது குறித்து கடிதம் எழுதினார். ராநாதபுரம் மன்னரை சென்றுபார்த்து வெளிநாட்டில் தனது பணிகுறித்து மகிழ்சியடைவதாக தெரிவித்து ஒரு கூட்டம் கூட்ட ஏற்பாடு செய் அந்த கூட்டம் பற்றிய விபரங்கள் பத்திரிக்கைகளில் வரும்படி செய் என்றார்.
ஆனால் உடனடியாக எந்த நிகழ்வுகளும் இந்தியாவில் நடக்கவில்லை. சென்னை இளைஞர்களின் கடும்முயற்சிக்கு பின் சிறிதுசிறிதாக கும்பகோணம்,பெங்களுர் போன்ற இடங்களில் சுவாமிஜியை புகழ்ந்து கூட்டங்கள் நடந்தன. இவைகள் அமெரிக்க பத்திரிக்கைகளிலும் வெளிவர ஆரம்பித்தன.
அமெரிக்காவில் சுவாமிஜியை எதிர்த்த பாதிரிகளும் மற்ற வெறியர்களும் வாயடைத்துபோனார்கள்.கடைசியில் அவர்கள் சூழ்ச்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தது.
இறைவனின் அருளை எண்ணி நான் ஒரு குழந்தை போல அழுகிறேன்.இறைவன் தன் அடியவரை ஒருபோதும் கைவிடுவதில்லை என்று தன் மகிழ்ச்சியை சுவாமிஜி வெளியிட்டார்
----
சுவாமி விவேகானந்தர் வாட்ஸ் அப் குழு 9003767303 அட்மின்- சுவாமி வித்யானந்தர்

tamil quotes images

tamil quotes images