பித்ருக்களுக்கு தினமும் உணவிட வேண்டும்
பித்ருக்களுக்கு தினமும் உணவிட வேண்டும் .. துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும் இறந்தார்க்கும் இல்வாழ்வான் என்பான் துணை. -திருக்குறள் .. துறந்தார்க்கும் என்றால் துறவிகளுக்கு, துவ்வாதவர் என்றால் உணவு இல்லாதவர்களுக்கு,இறந்தார் என்றால் முன்பு வீட்டில் இறந்துபோன பித்ருக்களுக்கு இல்வாழ்வான் என்பான் துணை என்றால் தினமும் சாப்பாடு வழங்க வேண்டும் என்று அர்த்தம். . பித்ருக்களுக்கு தினமும் சாப்பாடு படைக்க வேண்டும் என்பது நமது சாஸ்திரம் சொல்லும் செய்தி. திருக்குறளை பலர் மொழியெர்த்திருக்கிறார்கள். ஆனால் யாரும் பித்ருக்களுக்கு தினமும் சாப்பாடு படைக்க வேண்டும் என்பதைப்பற்றி பேசவில்லை.இதற்கு காரணம் நமது சாஸ்திரங்களைப்பற்றி அவர்கள் படிக்காததுதான் காரணம். . திருக்குறளை படிப்பதற்கு முன்பு மனுஸ்மிருதி,மகாபாரதத்தில் வரும் நீதி மொழிகள் இவைகளைப் படித்திருந்தால் திருக்குறள் இன்னும் நன்றாக புரியும். .. நாம் பல பழங்கங்களை மறந்துவிட்டோம். அதில் முக்கியமான ஒன்று தினமும் தெய்வத்திற்கும்,பித்ருக்களுக்கும் உணவு படைக்க வேண்டும் என்பது. சிலர் தெய்வத்திற்கு தினமும் உணவு படைப்பார்கள். ஆனால் பித...