Posts

Showing posts from 2019

ஸ்ரீராமகிருஷ்ணரின் விரிவான வாழ்க்கை வரலாறு பாகம்-45

ஸ்ரீராமகிருஷ்ணரின் விரிவான வாழ்க்கை வரலாறு பாகம்-45 குருதேவர் கூறினார், எந்த சாதனையிலும்  வெற்றி பெற எனக்கு மூன்று நாட்களுக்கு மேல் ஆனதில்லை. ஒரு சாதனையில் ஈடுபட்டு கொழுந்து விட்டெரியும் ஏக்கத்துடன் அந்த சாதனையில் வெற்றி பெற வேண்டி  அன்னையிடம் பிராத்தித்தால் மூன்று நாட்களுக்குள்  இலக்கை எட்டி விடுவேன், பொது துணையின்றி மிக்குறுகிய காலத்தில் வீர நிலை  சாதனைகளில் குருதேவர் வெற்றி கண்டதிலிருந்து வீர நிலை சாதனைகளுக்குப் பெண்துணையோ , மற்றும் பஞ்ச மகாரங்களோ இன்றியமையாதவை அல்ல என்பது தெளிவாகிறது. சபல புத்தியால் சுயக்கட்டுப்பாட்டை இழந்த சாதகர்கள்  மட்டுமே பெண் துணையுடன்  சாதனை புரிகிறார்கள். தொடர்ந்து விடாமுயற்சியுடன்  சாதனைபுரிந்தால் அவர்களும் திவ்ய நிலையை அடைய முடியும், என்று தந்திரங்கள்  கூறுகின்றன. தந்திர சாஸ்திரங்களின் கருணைத் திறத்தையே இந்தச்சலுகை எடுத்துக்காட்டுகிறது. புலனின்பப்பொருட்கள் மனிதனைக் கவர்ந்திழுத்து மீண்டும் மீண்டும் அவனைப் பிறவிச் சுழலில் பிணைக்கின்றன.இறைக்காட்சியோ ஆத்ம ஞானமோ அடைய இயலாதவாறு அவனைத்தடுத்தும் விடுகின்றன. மனக்கட்டுப்ப...

ஸ்ரீராமகிருஷ்ணரின் விரிவான வாழ்க்கை வரலாறு பாகம்-44

ஸ்ரீராமகிருஷ்ணரின் விரிவான வாழ்க்கை வரலாறு பாகம்-44 கங்கை நதிக்கு வெகு தொலைவிலிருந்து மனிதன் உட்பட ஐந்து உயிரினங்களின் சுபாவங்கள்  கொண்டுவரப்பட்டன. தாந்திரிக சாதனைகளுக்கு உகந்தவாறு இரண்டு பீடங்கள் அமைக்கப்பட்டன. இவற்றுள் ஒன்று, கோயில் நந்தவனத்தின் வடக்கு எல்லையிலிருந்த வில்வ மரத்தின் கீழும், மற்றொன்று குருதேவர் தம் கையால்  நட்டு உருவாக்கிய  பஞ்சவடியிலும் இருந்தன. இவற்றுள் ஏதேனும் ஒன்றில் அமர்ந்து குருதேவர் ஜப தியானங்களில் ஈடுபடுவார். இரவும் பகலும் எவ்வாறு கடந்து செல்கின்றன என்பது பற்றிய நினைவின்றி இந்த அற்புத சாதகரும் அந்த உத்தம குருவும் ஓரிரு மாதங்களைக் கழித்தனர். குருதேவர் கூறுவார்., பகல் வேளைகளில் பிராம்மணி கோயிலிலிருந்து வெகுதூரம் சென்று, பல இடங்களில் தேடி தாந்திரிக சாதனைக்குத் தேவையான பல அபூர்வப்பொருட்களைத் திரட்டி வருவார். அவற்றை இரவு நேரத்தில் பஞ்சவடி அல்லது வில்வ மரத்தின் கீழ் வைத்துவிட்டு என்னை அழைப்பார். அந்தப்பொருட்களைக்கொண்டு அன்னையின் பூஜையை முறைப்படி செய்துவிட்டு,ஜப தியானங்களில் ஆழ்ந்து ஈடுபடுமாறு செய்வார். ஏனோ என்னால் ஜபத்தில் சிறிதும் ஈடுபடமுடியவில்ல...

ஸ்ரீராமகிருஷ்ணரின் விரிவான வாழ்க்கை வரலாறு பாகம்-43

ஸ்ரீராமகிருஷ்ணரின் விரிவான வாழ்க்கை வரலாறு பாகம்-43 குருதேவர் ஓர் அவதார புருஷர் என்ற எண்ணம் பிராம்மணியின் உள்ளத்தில் இடையீடின்றி எப்போதும் நிலை பெற்றிருக்குமானால் அவர் குருதேவரை சாதனைகளில் ஈடுபடும்படித்தூண்டியிருக்க மாட்டார். ஆனால் நிலைமை அப்படியில்லை.குருதேவரை முதன்முதலில் சந்தித்ததிலிருந்து பிராம்மணி அவரை ஒரு குழந்தையாகக்கண்டு நேசித்து வந்தது, பற்றி ஏற்கனவே கூறியுள்ளோம். ஒருவரது பெருமையையும் கீர்த்தியையும் கருத்தில் கொள்ளாமல் அன்பு                                                                          செய்பவரின் நன்மை ஒன்றிற்காக மட்டும் செய்யப்படுவது தான் அன்பு. இந்த அன்பைவிடச் சிறந்த ஒன்று உலகில் இல்லவே இல்லை. இத்தகையோர் அன்பினால் உந்தப்பட்டுதான் பைரவியும், சாதனைகள் மேற்கொள்ளுமாறு குருதேவரைத் தூண்டினார். எல்லா அவதார புருஷர்களின் வாழ்க்கையிலும் இதனை நாம் காண முடியும். அவதார புருஷர்களுடன் நெருங்...

ஸ்ரீராமகிருஷ்ணரின் விரிவான வாழ்க்கை வரலாறு பாகம்-42

ஸ்ரீராமகிருஷ்ணரின் விரிவான வாழ்க்கை வரலாறு பாகம்-42 குருதேவருக்குக் கிடைத்த ஆன்மீக அனுபவங்கள் மற்றும் காட்சிகளைப் பற்றிக்கேட்டறிந்த பிராம்மணி இத்தகைய நிலைகள் அசாதாரணமான பக்தியால் மட்டுமே தோன்றும் என்ற உறுதியான முடிவுக்கு வந்தார். கடவுளின் ஆனந்த பரவசத்தில் ஆழ்வதையும் கடவுளைப் பற்றிய  உரையாடல்களின் போது அடிக்கடி பாவ சமாதியில் மூழ்கி தன்னினைவு இழப்பதையும் கண்டபைரவிக்கு குருதேவர் சாதாரண சாதகர் அல்லர்  என்பது உறுதியாயிற்று. சைதன்ய சரிதாமிருதம், பாகவதம் போன்ற நூல்களில் பல இடங்களில் சைதன்ய மகாபிரபு மக்களை உய்விக்க மறுபடியும் அவதரிப்பார் என்று கூறப்பட்டுள்ளதுடன் அதற்கான பல அறிகுறிகளும் குறிக்கப்பட்டுள்ளன. அவை  குருதேவரைக் கண்ட பின் பிரம்மணியின் மனத்தில் அடிக்கடி எழுந்தன. இந்த நூல்களில் சைதன்யர், நித்யானந்தர் ஆகியோரின் தொடர்பாகக் கூறப்பட்டுள்ளவற்றுடன் குருதேவரின் நடைமுறைகள், அவர் பெற்ற காட்சிகள்  முதலியவற்றை ஒப்பு நோக்கி அவை ஒத்திருப்பதைக் கண்டார் அவர். சைதன்ய தேவரைப்போன்று பாவ சமாதியின் போது யாரையாவது தொட்ட மாத்திரத்திலேயே அவரிடம் ஆன்ம எழுச்சியைத்தோற்றுவிக்க வல்ல ஆற்றல்...

ஸ்ரீராமகிருஷ்ணரின் விரிவான வாழ்க்கை வரலாறு பாகம்-41

ஸ்ரீராமகிருஷ்ணரின் விரிவான வாழ்க்கை வரலாறு பாகம்-41 குருதேவரின் அறையில் நுழைந்த பைரவி அவரைக் கண்டதும் பேரானந்தமும் வியப்பும்மேலிட, கண்களில் கண்ணீர் பெருக, மகனே நீ இங்கா இருக்கிறாய்,! நீ எங்கோ கங்கைக் கரையில் இருப்பதை அறிந்து, நெடுநாட்களாக உன்னைத்தேடி வருகிறேன். இப்போது தான் காண முடிந்தது என்று சொன்னார். குருதேவர் பைரவியிடம் என்னைப் பற்றி எவ்வாறு நீங்கள் தெரிந்து கொண்டீர்கள்? என்று கேட்டார். அதற்கு பைரவி, உன்னைப்போல் மூவரைச் சந்திக்க வேண்டுமென்று முன்பே அன்னையின் அருளால் நான் அறிந்துள்ளேன். கிழக்கு வங்காளத்தில் ஏற்கனவே இருவரைச் சந்தித்து விட்டேன். இதோ மூன்றாவதான உன்னை இப்போது சந்திக்கிறேன் என்றார். ஒரு குழந்தை தாயின் அருகில் அமர்ந்து எப்படித் தனது எண்ணங்களை மனம் திறந்து பேசுமோ அது போல குருதேவரும் பைரவியிடம் தம்மைப் பற்றிப்பேரானந்தத்துடன் கூறினார். தமக்குக் கிடைத்த தெய்வீக காட்சிகள், இறைவனைப் பற்றிப்பேசும்போதுபுறவுலக நினைவை இழந்துவிடுவது, உடலில்ஏற்படும் எரிச்சல், உறக்கமின்மை போன்ற அனைத்தையும் கூறிய பின்னர் அவர் பைரவியிடம், தாயே, இவை ஏன்            ...

ஸ்ரீராமகிருஷ்ணரின் விரிவான வாழ்க்கை வரலாறு பாகம்-40

ஸ்ரீராமகிருஷ்ணரின் விரிவான வாழ்க்கை வரலாறு பாகம்-40 பைரவி பிரம்மணியின் வருகை. குருதேவர் காமார்புகூரிலிருந்து தட்சிணேசுவரத்திற்கு 1861-ஆம் ஆண்டு திரும்பிவந்த பின் இரண்டு முக்கிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இவை குருதேவரின் வாழ்க்கையில் முக்கியத் திருப்பங்களை விளைவித்தவை. எனவே இவற்றைப்பற்றி அறிந்து கொள்வது அவசியம்.1861-ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் ராணிராசமணிக்குக் கடுமையான வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. ஒரு நாள் ராணி திடீரென்று கிழே விழுந்து விட்டதாகவும், அதனால் காய்ச்சலும் உடல் வலியும் அஜீரணமும் வேறு  சிக்கல்களும் உண்டாகி படிப்படியாக அது வயிற்றுப்போக்கு  நோயாக மாறியதாகவும் சில நாட்களுக்குள் அது மிகவும் தீவிரமாகி விட்டதாகவும் குருதேவர் கூறினார். குருதேவர் கூறினார், ராணி ராசமணி உயிர் துறப்பதற்கு முன் காளிகட்டத்தில் ஆதிகங்கா பகுதியில் இருந்த தம் வீட்டில் சென்று வாழ்ந்தார். உயிர் பிரிவதற்குச் சற்று முன் அவரை கங்கை கரைக்குக்கொண்டு வந்தனர்.அங்கே பல விளக்குகள் எரிந்து கொண்டிருப்பதைக் கண்ட ராணி திடீரென, இவற்றை அணைத்துவிடுங்கள்.அப்புறப்படுத்துங்கள்.இவை எனக்குப் பிடிக்கவில்லை.என் அன்னை வந்துவிட்...

ஸ்ரீராமகிருஷ்ணரின் விரிவான வாழ்க்கை வரலாறு பாகம்-39

ஸ்ரீராமகிருஷ்ணரின் விரிவான வாழ்க்கை வரலாறு பாகம்-39 குருதேவர் கூறியதில் தாய்க்கும் தமையனுக்கும் அவ்வளவு நம்பிக்கையில்லை. எனினும் ஜெயராம்பாடிக்கு ஒருவரை அனுப்பி விசாரிக்கச் செய்தனர்.அவர் கூறியது உண்மையாக இருந்தது. எல்லாம் பரவாயில்லை.ஆனால் பெண் மிகவும் சிறியவள் ஐந்தே வயது தான் . எனினும் இந்தப்பெண்ணை சந்திரா ஏற்றுக்கொண்டு, உடனே மகனுக்கு மணமுடிக்க இசைந்தாள். ஓரிரு நாட்களுள் பேச்சுவார்த்தைகள் முடிந்தன. ஒரு நல்ல நாளில் சுபமுகூர்த்த வேளையில் காமார்புகூருக்குமேற்கே நான்கு  மைல் தொலைவிலிருந்த ஜெயராம்பாடிக்கு ராமேசுவரர் கதாதரரை அழைத்துச்சென்று ராமசந்திரரின் ஒரே மகளைத் திருமணம் செய்து விட்டுத் திரும்பினார். வரதட்சணையாக முன்னூறு ரூபாய் பெண் வீட்டாருக்குக் கொடுக்கப்பட்டது. இது நிகழ்ந்தது 1859, மே மாதத்திலாகும் அப்போது குருதேவருக்கு வயது இருபத்திநான்கு. குருதேவரின் திருமணத்திற்குப் பின் சந்திரமணியின் கவலை பெருமளவிற்குக் குறைந்தது. திருமண விஷயத்தில் மகன் தன் சொற்படி நடந்து கொண்டது இறைவனின் பேரருளால் தான் என்று மனநிறைவு எய்தினாள். அவள், எதிலும் பற்றற்ற மகன் திருமணம் செய்து கொண்டான், கௌரவ...

ஸ்ரீராமகிருஷ்ணரின் விரிவான வாழ்க்கை வரலாறு பாகம்-38

ஸ்ரீராமகிருஷ்ணரின் விரிவான வாழ்க்கை வரலாறு பாகம்-38 திருமணமும் தட்சிணேசுவரத்திற்குத் திரும்புதலும் குருதேவர் பூஜைப் பொறுப்புகளிலிருந்து விலகிவிட்டார். என்ற செய்தி காமார்புகூரில் அவரது தாய். சகோதரர் ஆகியோர் செவிகளுக்கு எட்டியது. அது அவர்களை ஆழ்ந்த கவலைக்கு உள்ளாக்கியது. ராம்குமார் காலமாகி இரண்டாண்டுகள் கூட முடியவில்லை. அதற்குள் இளையமகனும் மூளைக்கோளாறு என்ற செய்தி கேட்டு, சந்திரமணி தேவியும், ராமேசுவரரும் மிகுந்த அதிர்ச்சியும் கவலையும் கொண்டனர். துரதிஷ்டத்தால் வரும் துன்பங்கள் ஒருபோதும் தனியாக வருவதில்லை. அவை பல்வேறு திசைகளிலிருந்து பற்பல உருவங்களில் வந்து கவிந்து வாழ்க்கையையே இருள்மயமாக்கி விடும். சந்திரமணியின் வாழ்க்கையும் இப்போது இவ்வாறு தான் அமைந்துவிட்டது. அவளுக்கு மிகவும் காலந்தாழ்த்திப் பிறந்த பிள்ளை குருதேவர். அதனால் அவர்மீது அவள்  அளவு கடந்த அன்பு கொண்டிருந்தது இயல்பே. ஆகவே சந்திரமணி அவரை உடனடியாகக் காமபர்புகூருக்கு அழைத்து வந்தாள். அவரது உதாசீனம், படபடப்பு, அம்மா அம்மா என்ற கதறல் எல்லாம் அவளை மிகவும் வேதனையுறச் செய்தன. அவரை குணப்படுத்த பலவகை மருத்துவ முயற்சிகளுடன் சாந...

ஸ்ரீராமகிருஷ்ணரின் விரிவான வாழ்க்கை வரலாறு பாகம்-37

ஸ்ரீராமகிருஷ்ணரின் விரிவான வாழ்க்கை வரலாறு பாகம்-37 இந்தக் காலகட்டத்தில் தமது தூய மனமே குருவாகி தம்மை வழி நடத்தியதாக குருதேவர் கூறினார். எதைச்செய்வது, எதைச்செய்யக்கூடாது என்று கற்பித்ததுடன் அவரது மனம் சிலவேளைகளில் ஒரு மனித வடிவம் தாங்கி அவர்முன் தோன்றி சாதனைகளில் தீவிரமாக ஈடுபட்டு முன்னேறுமாறு உற்சாகப்படுத்தும். ஒரு குறிப்பிட்ட சாதனைகளில் ஆழ்ந்து ஈடுபடாவிட்டால் அந்த உருவம் தோன்றி அந்த சாதனையில் எவ்வாறு ஆழ்ந்து ஈடுபடவேண்டும் என்றும் அதில் ஈடுபட்டால் கிடைக்கின்ற பலனைப் பற்றியும் எடுத்துக்கூறும். தியானத்தில் ஆழ்ந்து மூழ்காவிட்டால் தண்டனை தருவதாகப் பயமுறுத்தவும் செய்யும். அவர் தியானம் செய்ய அமரும் போது, ஒரு துறவி கையில் கூரிய திரிசூலத்துடன் வெளிவந்து, வேறு நினைவுகள் அனைத்தையும் விட்டு, இஷ்டதெய்வத்தை மட்டும்  நினைத்து தியானம் செய், இல்லையெனில் இந்த திரிசூலத்தால் உன் நெஞ்சைப் பிளந்து விடுவேன். என்று பயமுறுத்துவதும் உண்டாம். வேறொரு சமயம் தம் உடலிலிருந்து ஆசை, போகமயமான பாவபுருஷன் வெளிப்பட்ட போது இந்த இளம் துறவியும் உடனே வெளிப்பட்டு, அந்தப் பாவ புருஷனைக் கொன்றதை குருதேவர் கண்டார். த...

ஸ்ரீராமகிருஷ்ணரின் விரிவான வாழ்க்கை வரலாறு பாகம்-36

ஸ்ரீராமகிருஷ்ணரின் விரிவான வாழ்க்கை வரலாறு பாகம்-36 தட்சிணேசுவர ஆலயத்திற்கு வரும் ஏழைகளை  நாராயணனின் வடிவமாகவே குருதேவர் கருதினார். அவர்களுக்கு வழங்கப்பட்ட பிரசாதத்தில் அவர்கள் உண்டது போக எஞ்சியதை த் தாம் உண்ணவும் செய்தார். இதனால் வெறுப்புற்ற ஹலதாரி குருதேவரிடம் , நீ உன் குழந்தைகளுக்கு எப்படித் திருமணம் செய்து வைக்கப்போகிறாய் என்பதை நான் பார்க்கிறேன், என்று சொன்னார். அறிவுச்செருக்கு மிக்க ஹலதாரியின் இந்தச்சொற்களால் ஆத்திரமுற்ற குருதேவர், மடையா, அங்கே சாஸ்திர விளக்கம் செய்யும் போது உலகம் பொய், அனைத்தையும் பிரம்மமாகக் காண வேண்டும். என்றெல்லாம் நீதானே நீட்டி முழக்கினாய்,? நானும் உன்னைப்போல இந்த உலகம் பொய் என்று   சொல்லிக்கொண்டு, அதே சமயம் குழந்தைகளையும் பெற்றுக்கொள்வேன் என்றா நினைத்தாய்? உன் சாஸ்திர அறிவைக்குப்பையில் போடு என்று கடிந்து கொண்டார். குழந்தை உள்ளம் கொண்ட குருதேவர் சிலவேளைகளில் ஹலதாரியின் சாஸ்திர அறிவால் குழப்பம் அடைவதும் உண்டு. உடனே அவர் அன்னை காளியிடம் ஓடிச்சென்று தெளிவு பெற்றுவிடுவார். இவ்வாறு தான் ஒருமுறை, குருதேவர் உயர் உணர்வு நிலையில் பெற்ற இறை ...

ஸ்ரீராமகிருஷ்ணரின் விரிவான வாழ்க்கை வரலாறு பாகம்-35

ஸ்ரீராமகிருஷ்ணரின் விரிவான வாழ்க்கை வரலாறு பாகம்-35 ஹலதாரியிடம் குருதேவர் கொண்ட தொடர்பில் ஓர் இனிமையான மறைபொருள் இருந்தது. ஹலதாரி குருதேவரின் சித்தப்பாவின் மகன் என்பதை முன்னரே குறிப்பிட்டிருந்தோம். அவர் குருதேவருக்கு மூத்தவர். ஏறக்குறைய 1858-ஆம் ஆண்டில் அவர் தட்சிணேசுவரத்திற்கு வந்திருக்கக்கூடும். ராதாகோவிந்தர் ஆலய அர்ச்சகராக நியமிக்கப்பட்ட அவர் அந்தப் பொறுப்பை 1865- ஆம் ஆண்டு வரை வகித்தார். ஆகவே அவர் குருதேவரின் இரண்டாவது நான் காண்டு சாதனைக்காலத்தில் அதிகமாகவும், தட்சிணேசுவரத்தில் தங்கியிருக்க  வேண்டும். குருதேவரிடம் நெருங்கிப் பழகுகின்ற பேறு பெற்றிருந்தாலும் குருதேவரைப்பற்றி எந்தவித முடிவான கருத்தும் அவருக்கு ஏற்படவில்லை. சாஸ்திரங்களில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டிருந்தவர் ஹலதாரி.ஆகவே குருதேவர் பரவச நிலையில் இருக்கும் போது அணிந்திருக்கின்றஉடை , பூணூல் முதலியவற்றைக் களைந்து எறிந்து விடுவது ஹலதாரிக்குப் பிடிக்கவில்லை. தன் சகோதரன் ஒரு பைத்தியம் அல்லது சாஸ்திர சம்பிரதாயங்களில் நம்பிக்கையற்றவன் என்று நினைத்தார். ஹிருதயர் கூறினார்.சிலவேளைகளில் அவர் என்னிடம் ”ஹிருதய்! அவன் தனது ஆடை,பூ...

ஸ்ரீராமகிருஷ்ணரின் விரிவான வாழ்க்கை வரலாறு பாகம்-34

ஸ்ரீராமகிருஷ்ணரின் விரிவான வாழ்க்கை வரலாறு பாகம்-34 தவம் செய்வதற்கு தகுந்த புனிதமான ஓர் இடம் தேவை. என்று உணர்ந்த குருதேவர் ஐந்து புனித மரங்கள் நடப்பட்ட புதிய பஞ்சவடி ஒன்றை உருவாக்கவேண்டும் என்ற தம் விருப்பத்தை ஹிருதயரிடம் வெளியிட்டார். ஹிருதயர் கூறினார், பஞ்சவடியின் அருகிலிருந்த சிறிய குளமான ஹம்ச புகூர் தூர்வாரப்பட்டு அந்த மண்ணைப் பழைய பஞ்சவடிக்கு அருகில் இருந்ததாழ்ந்த நிலத்தில் பரப்பி, அந்தப்பகுதி சமநிலமாக்கப்பட்டிருந்தது. எனவே குருதேவர் எந்த நெல்லி மரத்தின் அடியில் அமர்ந்து தியானம் செய்வாரோ அந்த மரம் அப்போது இல்லை, அதனால் தற்போது சாதனைக்குடில் அமைந்திருக்கின்ற இடத்திற்கு மேற்கில் குருதேவர் தம் கைகளாலேயே ஓர் அரசமரத்தை நட்டார். ஆல், அசோக, வில்வ, நெல்லி மரங்களை ஹிருதயர் நட்டார். அந்த இடத்தைச்சுற்றி துளசி, அபராஜிதம், இன்னும் பல செடிகொடிகளும் நடப்பட்டன. ஆடு, மாடுகள் அந்த இளஞ்செடிகளை அழித்து விடாதிருக்க கோயில் தோட்டக்காரன் பர்தாபாரியின் உதவியுடன் வேலியும் அமைக்கப்பட்டது. குருதேவரின் பராமரிப்பினால் துளசிச் செடியும் அபராஜிதக் கொடியும் வெகுவிரைவில் அடர்த்தியாக வளர்ந்தன. அங்கு அவர் தியா...

ஸ்ரீராமகிருஷ்ணரின் விரிவான வாழ்க்கை வரலாறு பாகம்-33

ஸ்ரீராமகிருஷ்ணரின் விரிவான வாழ்க்கை வரலாறு பாகம்-33 தமது சாதனையின் முதல் நான்கு ஆண்டுகளில் இறைவனை உணர்வதற்கு தணியாத ஆன்ம தாகம் ஒன்றையே குருதேவர் துணையாகக் கொண்டிருந்தார் என்று முன்பே கண்டோம். அந்தக் காலகட்டத்தில் சாஸ்திர விதிமுறைகளின்படி அவருக்கு யாரும் சாதனைகளைக் கற்பிக்கவில்லை. எல்லா சாதனைகளுக்கும் இன்றியமையாத தான தீவிர ஆன்ம தாகம் ஒன்றுதான் அவருக்குத்துணையாக இருந்தது. ஆன்ம தாகத்தால் மட்டுமே அவர் அன்னையின் தரிசனம் பெற்றதிலிருந்து, ஒரு சாதகன் மற்ற எதன் துணையும் இன்றி தீவிர மனஏக்கம் ஒன்றினாலேயே இறைக்காட்சி பெறமுடியும் என்பது உண்மையாயிற்று.  ஆனால் எத்தகைய தீவிரமான மனஏக்கம் இதற்குத்தேவை என்பதை நாம் உணரத் தவறி விடுகிறோம்.  குருதேவரின்  வாழ்க்கையில் இந்தக் காலகட்டத்தை சற்றுக் கவனித்தால் இது நமக்குத் தெளிவாகும்.  தீவிர மனஏக்கத்தின் விளைவால் அவரது உடலும் மனமும் முற்றிலும் மாற்றி அமைக்கப்பட்டதுபோலாகிவிட்டது. உணவு, உறக்கம், வெட்கம், பயம் போன்ற நன்கு வேரூன்றிவிட்ட உணர்ச்சிகள் கூட அவரிடமிருந்து மறைந்தது. உயிர்தரிப்பதற்குத்தேவையான முயற்சிகளில் கூட ஈடுபடாத போது, உடல் நல...

ஸ்ரீராமகிருஷ்ணரின் விரிவான வாழ்க்கை வரலாறு பாகம்-32

ஸ்ரீராமகிருஷ்ணரின் விரிவான வாழ்க்கை வரலாறு பாகம்-32 முதல் நான்கு ஆண்டு சாதனைகளின் நிறைவு  குருதேவரின் சாதனைக் காலத்தைப்பற்றி அறிய அவரே அதனைப்பற்றிக்கூறியிருப்பதைக் கருத்தில் கொள்ளவேண்டும். குருதேவரின் சாதனைக்காலம்(தவ வாழ்க்கை) 1856-1867 ஆம் ஆண்டு வரை நீடித்தது. இந்தக் காலகட்டத்தை குருதேவரின் சாதனைக்காலம் என்று நாம் குறிப்பிடுகிறோம். இப்படி நாம் வரையறுத்தாலும் இந்தக் காலகட்டத்தின் நிறைவுப் பகுதியில் தீர்த்த யாத்திரை மேற்கொண்டு அந்த இடங்களிலும், தட்சிணேசுவரத்திற்குத்  திரும்பிய பின்னரும் அவர் தமது சாதனைகளைத் தொடர்ந்தார் என்பதையும் நாம் பார்க்கப்போகிறோம். இந்தப் பன்னிரண்டு ஆண்டு காலத்தையும் நாம் மூன்று பகுதிகளாகப் பிரித்துக்கொண்டு ஒவ்வொன்றைப் பற்றியும் தனித்தனியாக அறிய முற்படுவோம். முதல் நான்கு ஆண்டு காலத்தின் (1856-1859) முக்கிய நிகழ்ச்சிகளை நாம் முன்னரே பார்த்தோம். அடுத்த பகுதி 1860 முதல் 1863 முடிய உள்ளதாகும். இப்பகுதியில் கடைசி இரண்டு ஆண்டுகளில் கோகுல விரதத்தில் தொடங்கி வங்கநாட்டின் புகழ்மிக்க அறுபத்துநான்கு தந்திரங்கள் கூறுகின்ற சாதனைகளையும் விதிப்படிச் செய்தார்...