Posts

Showing posts from July, 2017

ஆன்மா,இயற்கை,இறைவன் சொற்பொழிவின் முக்கிய கருத்துக்கள்

Image
சுவாமி விவேகானந்தரின்- ஆன்மா,இயற்கை,இறைவன் சொற்பொழிவின் முக்கிய கருத்துக்கள் ‡ வேதாந்த தத்துவத்தின்படி மனிதன் மூன்று பொருட்களால் ஆனவன் தூலவடிவமான உடல் அடுத்து சூட்சும உடல்,கடைசியில் ஆன்மா ‡ சூட்சும உடல் பல யுகங்களானாலும் அழியாமல் இருக்கும்.இவை  எந்த தடைகளையும் கடந்துவிடும்.ஆனால் தூலஉடலைப்போல அதுவும் ஜடம்தான் ‡ நான்‡உணர்வு,புத்தி,சித்தம்,பொறிகள்,புலன்கள்,உடல் எல்லாமே ஆன்மாவின் கட்டளைக்கு அடங்கி நடக்கின்றன.இவற்றையயல்லாம்  தோன்றுவித்ததும் ஆன்மாதான் ‡ பிரபஞ்சத்தை முழுவதுமாக எடுத்துக்கொண்டால் அது எந்த அமைப்பில்  உருவாக்கப்பட்டிருக்கிறதோ,அதே அமைப்பில்தான் அதன் ஒவ்வொரு பகுதியும் அமைக்கப்பட்டிருக்கிறது ‡ பிரபஞ்சத்தில் ஒரு சிறுபகுதியில் என்ன இருக்கிறதோ அதுவே பிரபஞ்சம் முழுவதும் இருக்கும் என்பதை நாம் காணலாம் ‡ ஒரு கண்ணாடித்துண்டை உடைத்துபொடியாக்கியால் அது மூலக்கூறுகளாக  மாறுமேதவிர சூன்யமாகிவிடாது.இந்த உலகிலுள்ள எல்லா பொருட்களும் அதேபோல்தான் ‡ எந்த பொருட்களையும் சூன்யமாக மாற்றமுடியாது.கண்களால் காணமுடியாத நுட்பநிலையை அவை அடையலாம்.ஆனாலும் அவை நுட்பமாக இருக்கவே செய்கிறது ‡ சூன்ய...

ஆன்மா: அதன் தளையும் முக்தியும் சொற்பொழிவின் முக்கிய கருத்துக்கள்

Image
சுவாமி விவேகானந்தரின்- ஆன்மா: அதன் தளையும் முக்தியும் சொற்பொழிவின் முக்கிய கருத்துக்கள் ‡ நாம் ஒவ்வொருவரும் அந்த பிரம்மமாகிய உண்மையும் மாயையும் கலந்த கலவை. மாயையிலிருந்து நம்மால் விடுபட முடிந்தால் நாம் உண்மையில் யாரோ அதுவாக இருப்போம் ‡ குறிப்பிட்ட அளவு சக்தியும் குறிப்பிட்ட அளவு ஜடப்பொருளும்  இணைந்தே உருவம் உண்டாகிறது. ‡ நமது உடலுக்கு ஓர் ஆரம்பம் உண்டு என்றால் ஒரு முடிவும் உண்டு.ஆன்மாவிற்கு ஆரம்பம் இல்லாததால் அதற்கு முடிவும் இல்லை ‡ வேதாந்தத்தின் கருத்துப்படி உங்களுள்,என்னுள் என்று எல்லோருள்ளும் உள்ள ஆன்மா எங்கும் நிறைந்தது ‡ நாம் செய்யும் ஒவ்வொரு செயலும்,நினைக்கும் ஒவ்வோர் எண்ணமும் நம் மனத்தில் ஒரு பதிவை உண்டாக்குகிறது.அதை சம்ஸ்காரம் என்கிறார்கள் ‡ ஒவ்வொரு மனிதனும் தன் வாழ்வில் மனத்தாலும் உடலாலும் செய்ய செயலின் பலனே குணம். ஒவ்வொருவரும் தன் குணத்தை தானே உருவாக்கிக்கொள்கிறான். ‡ ஒருவன் இறக்கும்போது அவனது சம்ஸ்காரங்கள் இறப்பதில்லை. அவை மனத்துடன் சேர்ந்திருக்கின்றன.மரணத்திற்கு பிறகு எங்கு செல்வது என்பதை இந்த சம்ஸ்காரங்களே முடிவு செய்கின்றன ‡ பிராணன் என்று சொல்லப்படும் சக்திகள் ஒன்று...

ஞானயோகம் சாதனைப்படிகள் சொற்பொழிவின் சுருக்கம்

Image
சுவாமி விவேகானந்தரின் ஞானயோகம் சாதனைப்படிகள் சொற்பொழிவின் சுருக்கம் -- கண்,காது போன்ற வெளிப்பொறிகள்.மூளையிலுள்ள நரம்பு மையங்களான உட்புலன்கள் மற்றும் மனம் இந்த மூன்றும் சேர்ந்தது புலனறிவு ‡ ஏதாவது சின்னம் இல்லாமல் நீங்கள் சிந்திக்க முடியாது.பார்வையற்றோர்கூட  ஏதாவது ஓர் உருவத்தை ஆதாரமாகக் கொண்டுதான் சிந்திக்க முடியும் ‡ புலன் என்னும் சொல் மூளையில் உள்ள நரம்பு மையத்தையே குறிக்கிறது என்பதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும் ‡ மனத்தை அடக்கவேண்டுமானால் முதலில் இந்தப் புலன்களை அடக்க வேண்டும்.உள்ளேயோ வெளியேயோ மனம் அலையாமல்  தடுக்க வேண்டும் ‡ நாம் பார்த்தவை,கேட்டவை,உண்டவை,நாம் வசித்த இடங்கள் இப்படி புலன் விசயங்களை நினைப்பதிலேயே நம் வாழ்வின் பெரும்பகுதி கழிந்துவிடுகிறது ‡ தன் மதத்திலும் இறைவனிடமும் எல்லையற்ற நம்பிக்கை ஒருவனுக்கு  இருக்கவேண்டும்.நம்பிக்கை இல்லாதவன் ஞானியாக முடியாது. ‡ கடவுள் உண்டு என்று ஒருவனுக்கு நம்பிக்கை இருந்தால்,அந்த கடவுளை அடைந்தால் பேரானந்தம் கிடைக்கும் எனறு தெரிந்தால்,அதை அடையாமல் சும்மா இருப்பானா? ‡ ஒவ்வொரு நாளும் நாம் இன்பத்தின் பின்னால் ஓடுகிறோம்.ஆனால் நாம...