அன்னை சாரதாதேவியின் வாழ்க்கை வரலாறு-பாகம்-57
இந்தக்காலத்தில் ஒரிசாவிலிருந்து சாது ஒருவர் அங்கே வந்து,தனியாக ஒரு குடிசையில் தங்கி, தவ வாழ்வில் ஈடுபட்டிருந்தார். ஒரு நாள் காலிகளின் கும்பல் ஒன்று அவருடைய குடிசைக்குச் சென்று அவரை நன்றாக அடித்து உதைத்துஈஅவருடைய வழிபாட்டுப்பொருட்களையும் குடிசையையும் நாசம் செய்து அவரைத்துன்புறுத்தியது.எனவே அந்த சாது காமார்புகூரை விட்டுப்போவது என்று முடிவு செய்தார். இதனைக்கேள்விப்பட்டார் அன்னை. தமக்கு ஊரார் இழைக்கின்ற கொடுமைகளை அவர் பெரிதாக எண்ணவில்லை. அந்த சாதுவுக்கு எப்படியாவது உதவ வேண்டும் என்று விழைந்தது அவரது உள்ளம். தமக்கு ஆதரவாக சிலரைக்கூட்டிக்கொண்டு அங்கே சென்றார். அவர்களின் உதவியுடன் ஹல்தார்புகூரின் தென்மேற்குக் கரையில் சிறிய ஓலைக் குடிசை ஒன்றைக் கட்ட தொடங்கினார். அப்போது பார்த்துதானா வானம் இருட்டிக்கொண்டு வர வேண்டும்.இதோ பெருமழை கொட்டும் போல் தோன்றியது. அன்னை கைகளைக் கூப்பிக்கொண்டு, இறைவா.பொறுக்க வேண்டும்.ஓலை வேய்ந்து முடிந்ததும் உங்கள் திருவுள்ளம் போல் மழை கொட்டட்டும் என்று பிராத்தனை செய்தார். அவ்வாறே கூரை வேலை முடிந்த பின்னரே மழை பெய்தது. சாதுவையும் அந்தக் குடிசையில் தங்கச் செய்தார்.அந்த வழியாகச் செல்லும் போதெல்லாம் சுவாமி எப்படி இருக்கிறீர்கள்? என்று நலம் விசாரிப்பார் அன்னை. அந்தச் சாது அதிக நாள் உயிர் வாழவில்லை. குடிசையில் தங்கத் தொடங்கிய சில காலத்திற்குள் அங்கேயே உயிர் நீத்தார்.
நில்” என்ற போது மழை நின்றது மட்டுமல்ல,பெய்” என்றபோது பெய்யவும் செய்தது.பின்னாளில் ஒருமுறை ஜெயராம்பாடியிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் தொடர்ந்த மழையின்மையால் பஞ்சம் தலைவிரித்தாடியது.ஒருநாள் ஊர் மக்கள் ஒன்று திரண்டு அன்னையிடம் சென்று அம்மா இந்த வருடமும் மழை பெய்யவில்லை என்றால் எல்லோருமே செத்து மடிய வேண்டியது தான் என்று கூறினார்கள். அவர்களின் துயரைக் கண்டு அன்னை மனம் உருகிய அன்னை அவர்களுடன் வயலுக்குச் சென்றார். வறண்டு கிடந்த நிலங்களைப் பார்த்தபோது அவரால் கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியவில்லை. கைகூப்பிக் கொண்டு மிகுந்த பணிவுடன் எம்பெருமானே” இதென்ன கொடுமை ! பஞ்சத்தால் அனைவரும் மடிய வேண்டியது தானா! என்று கூறியபடியே மனமுருகி பிரார்த்தித்தார். அன்றிரவே மழை கொட்டோ கொட்டென்று கொட்டியது. பஞ்சமும் தீர்ந்தது.
ஒரிசா சாதுவைத்தாக்கிய கும்பல் எந்த நேரத்திலும் தன்னந்தனியாகக்குடிசையில் வாழும் அன்னைக்கு தொந்தரவுகள் தரலாம். அப்படி நேர்ந்தால் அவர்களைத் தடுப்பதற்கோ ஏனென்று கேட்பதற்கோ கூட அங்கே யாரும் இல்லை. ஆனால் துன்பம் அவர்களிடமிருந்து வராமல் குருதேவரின் பக்தரான ஹரீஷ் என்பவர் வடிவில் வந்தது. அவர் குருதேவரின் இல்லறச்சீடர்.குருதேவரின் துறவிச் சீடர்கள் தங்கித் தவமியற்றிய வராக நகர்மடத்திற்கு அவர் அடிக்கடிச் செல்வார். எங்கே அவரும் துறவியாகி விடுவாரோ என்று பயந்த அவரது மனைவி மருந்துகள், மந்திரம் போன்றவற்றின் மூலம் அவர் மனத்தைத் திருப்ப எண்ணினாள். ஆனால் விளைவு விபரீதமாகி அவருக்குச் சித்தப்பிரமை பிடித்துவிட்டது. அந்த நிலையில் அவர் காமார்புகூர் வந்து சேர்ந்தார். அவரைக் கண்டதுமே அவரால் ஏதேனும் குழப்பம் விளையலாம் என்று அஞ்சிய அன்னை உடனடியாக வராக நகர் மடத்திற்குக் கடிதம் எழுதி யாராவது வந்து அவரை அழைத்துச் செல்லுமாறு தெரிவித்தார். அதன்படி அங்கிருந்து சரத்தும் நிரஞ்ஜனும் புறப்பட்டு வந்தனர். ஆனால் அவர்கள் வருவதற்குள் நிலைமை மோசமாகிவிட்டது. அன்னை கூறினார்- அப்போது ஹரீஷ் சில நாட்கள் காமார்புகூரில் தங்கியிருந்தான். மனைவியின் காரணமாக அவனுக்கு மனநிலை சரியில்லை. ஒரு நாள் பக்கத்துவீட்டிற்குப் போய்விட்டு, வீட்டிற்குள் நுழைந்து கொண்டிருந்தேன். அப்போது அவன் என்னைத் துரத்த ஆரம்பித்தான்.வீட்டில் யாரும் இல்லை. எனக்கு எப்படித் தப்பித்துக் கொள்வது என்று தெரியவில்லை. முதலில் அங்கேயிருந்த நெற்குதிருக்குப் பின்னால் ஒளிந்தேன்.அங்கும் வந்து துரத்த ஆரம்பித்தான்.என் கால்கள் ஓய்ந்து களைத்துப் போகும் வரை ஏழெட்டு முறை அவன் கைக்கு அகப்படாமல் அந்தக் குதிரைச் சுற்றி ஓடினேன். அதன் பிறகும் என்னால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. என் சொந்த உருவை எடுத்துக் கொண்டேன். அவனைப்பற்றிப் பிடித்து ஓர் அறை கொடுத்து கீழே தள்ளினேன். என் முட்டியை அவனது மார்பில் ஊன்றிக் கொண்டு,நாக்கைப் பிடித்து இழுத்து, அவனது இரண்டு கைகளும் சிவந்து கன்றும் வரை அறைந்தேன். அவனுக்கு மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்கியது. நாணமும் பணிவும் அடக்கமும் உருவானவர் அன்னை. ஆனால் அந்த மென்மையும் தன் பெண்மைக்குச் சோதனை என்று கண்டபோது வன்மையாகியது அவரால் ஓர் ஆணையே அடித்து வீழ்த்த முடிந்தது.
இந்த நிகழ்ச்சி அன்னையை வெகுவாக ச் சிந்திக்க வைத்தது. அடிக்கடி தோன்றும் குருதேவரின் காட்சியும் அவர் தம்முடன் எப்போதும் இருக்கிறார்.என்ற உணர்வும் ஆன்மீக அனுபவங்களும் மட்டுமே அவருக்குத் துணையாக இருந்தன.
-
தொடரும்...

No comments:
Post a Comment