Saturday, 22 June 2019

அன்னை சாரதாதேவியின் வாழ்க்கை வரலாறு-பாகம்-100

அன்னை சாரதாதேவியின் வாழ்க்கை வரலாறு-பாகம்-100
-
இத்தகைய நிவாரணப் பணிகளை முடித்து விட்டு வருபவர்களிடம் மக்களின் துயர் பற்றியும் துறவியர் செய்யும் பணிகள் பற்றியும் விளக்கமாக க்கேட்பார். கேட்பதும் சொல்வதும் மட்டுமல்ல,தாமும் ஒரு முன்னுதாரணமாக விளங்கினார். பின்னாளில் அன்னையைக் காண  ஜெயராம்பாடி செல்பவர்களுள் டாக்டர்களும் இருந்தனர். அவர்களிடம் கிராம மக்களுக்கு இலவச சிகிச்சை செய்யும் படி கூறுவார். அன்னையின் தூண்டுதலால் பலமுறை மருத்துவ முகாம்கள் நடந்ததும் உண்டு.
 இவ்வாறு மெள்ள மெள்ள கோயால்பாராவில் ஓர் இலவச மருத்துவமனை உருவாகியது. அங்கே ஒரு பிரச்சனையை அந்தத்துறவியர் எதிர்கொள்ள நேர்ந்தது. பணம் கொடுத்து மருந்து வாங்க முடிந்தவர்களும் இந்த இலவச  மருந்து வசதியைப் பயன்படுத்திக் கொள்ள ஆரம்பித்தனர். இதனால் பல ஏழைகள் மருந்து பெற முடியவில்லை. எனவே அந்தத் துறவியர் அன்னையிடம் சென்று,பண வசதி உள்ளவர்களுக்கு இலவச மருந்து கொடுக்கலாமா?கூடாதா? என்று கேட்டனர். நறுக்குத் தெறித்தாற்போல் வந்தது.அன்னையின்  பதில், மகனே.கையை நீட்டுபவன் யாராக இருந்தாலும் அவன் ஏழை தான். இலவச மருந்து வேண்டும். என்று யார் கேட்டாலும் அவரை ஏழையாகக் கருதி மருந்து கொடுத்து விடு.நமது மருத்துவ மனை  எல்லோருக்கும் திறந்தே இருக்க வேண்டும். இவ்வாறு பணிகளின் போது எதிர் கொள்ள நேர்கின்ற பிரச்சனைகளையும் தீர்த்துத் துறவியரை வழிநடத்தினார் அன்னை..
நாள் முழுவதும் ஜபம் தியானம் என்று ஆன்மீக சாதனைகளில் ஈடுபட நல்ல மனப்பக்குவம் வாய்க்கப் பெற்ற ஏதோ ஓரிருவரால் முடியும்.சோம்பியிருக்கின்ற மனம் குழப்பங்களையும் பிரச்சனைகளையும் தான் உருவாக்கும்.சாதாரணமானவர்களுக்கு இத்தகைய பணிகள் மிகவும் தேவை என்பதை அன்னை மிகத்தெளிவாக உணர்ந்திருந்தார். அதற்காகத் தான் என் நரேன் இத்தகைய  பணிகளை அறிமுகப்படுத்தியிருக்கிறான். நமது சங்கம் இந்தப் பாதையில் தான் போகும். இதனை அனுசரித்துப் போக முடியாதவர்கள் போய்விடுவார்கள்.நரேன் குருதேவரின் ஒரு கருவி. உலக நன்மைக்காகத் தம் பிள்ளைகள் மற்றும் பக்தர்களின் எதிர்காலக் கடமைகளை அவரே நரேன் மூலமாகச் செய்கிறார். அவன் கூறுபவை அனைத்தும் சரியே. காலப்போக்கில் அதன் அற்புத விளைவுகளை நீங்கள் காண்பீர்கள்? என்பார் அவர்.
அதே வேளையில் பணிகள் என்ற பெயரில் ஆன்மீக சாதனைகளை ஒரேயடியாக விட்டுவிடுவதை அன்னை ஏற்றுக்கொள்ளவில்லைஇந்த விஷயத்தில் அவர் மிகவும் கவனமாக இருந்தார். அப்படி ஈடுபட்ட ஒரு துறவியிடம் அன்னை பேசியதும் அவரை வழிநடத்திய விதமும் துறவியர் ஒவ்வொருவருக்கும் பாடமாக அமையக்கூடியது. அந்த துறவியிடம் அன்னை புளிப்புப் பொருட்களிலிருந்து விடுபட நினைத்தவன் புளிய மரத்தடியில் வீடுகட்டிக்கொண்ட கதையாக இருக்கிறது என் நடத்தை.இறைவனின் திருநாமத்தில் ஈடுபடுவதற்காக நீ உலகைத்துறந்தாய்.ஆனால் இங்கோ பணிகள் என்ற பெயரில் இன்னோர் உலகை உருவாக்கி அதில் மூழ்கிக் கிடக்கிறாய். குடும்பத்தையும் சொந்த பந்தங்களையெல்லாம் விட்டுவிட்டு மடத்தில் சேர்கிறார்கள்.ஆனால் மடத்தைப்பற்றிப்பிடித்துக்கொண்டு அதை விட்டு விலக மறுக்கிறார்கள். என்ன மாயை! நீ தகர்குண்டிக்குப்போ. அங்கே மாணவர்களுக்குப் படிப்பு சொல்லிக் கொடு.முடிந்த அளவு ஜப தியானங்கள் செய் என்றார்.
தன் தவறை உணர்ந்த துறவி உடனே முற்றிலுமாக சாதனை வாழ்வில் ஈடுபட விரும்பினார்.
சீடர்- அம்மா,ஏதாவது ஏகாந்தமான இடத்திற்குச் சென்று முற்றிலுமாகத் தவ வாழ்வில் ஈடுபட விரும்புகிறேன்.ஆனால் என் உடல்நிலையும் சரியில்லை.
அன்னை-இப்போதைக்குச் சிறுசிறு பணிகளிலும் ஈடுபட்டிரு.தீவிர வேகம் தோன்றும் போது அத்தகைய வாழ்வில் ஈடுபடலாம்.
சீடர்-நான் ஜபம் செய்கிறேன்.ஆனால் மனம் ஒருமைப்படாமல் அலைகிறது.
அன்னை- மனம்  ஒருமைப்பட்டாலும் சரி,படாவிட்டாலும் சரி,ஜபம் செய்வதை விடவே கூடாது. தினமும் ஒரு குறிப்பிட்ட அளவு ஜபம் செய்தே தீர வேண்டும்.

--
தொடரும்...
-
ஸ்ரீராமகிருஷ்ணரின் ஆன்மீகக் குழுவில் இணைய 9789374109 என்ற எண்ணிற்கு வாட்ஸ்அப் மூலம் ரிக்கொஸ்ட் மெசேஜ் அனுப்பவும்


No comments:

Post a Comment