அன்னை சாரதாதேவியின் வாழ்க்கை வரலாறு-பாகம்-78
சொத்துக்களைப் பிரித்த பிறகாவது சகோதரர்களுக்கு இடையே பொறாமையும் சண்டைச்சச்சரவுகளும் ஓய்ந்ததா என்றால் இல்லை. ஏனென்றால் அவர்கள் அனைவருக்குமே மிகவும் மதிப்பு வாய்ந்த பொதுச்சொத்தாக அன்னை இருந்தார். அந்தச் சொத்திடமிருந்து ஒருவர் அதிகமான உதவியைப் பெற்று விடுவதோ அல்லது பெற்று விட்டதாகக் கற்பனை செய்து கொள்வதோ தான் இப்போதைய சண்டைக்குக் காரணம். அதனால் அன்னை அடைந்த வேதனை சொல்லொணாதது.அத்தகைய நிகழ்ச்சிகள் சிலவற்றைக்காண்போம்.
ஒரு முறை அன்னை கல்கத்தாவிலிருந்து சீடர்கள் சிலருடன் ஜெயராம்பாடி வந்தார்.ஆமோதருக்கு அருகில் யாராவது வந்து தங்களை ஆற்றைக் கடத்திக் கூட்டிச் செல்லுமாறு தம்பிகளுக்கு எழுதியிருந்தார். ஆனால் யாரும் வரவும் இல்லை. யாரையாவது அனுப்பி வைக்கவும் இல்லை. நேரம் வேறு மாலை மங்கி இருட்டத்தொடங்கியிருந்தது. இதைக்கண்ட சீடர் ஒருவர், அம்மா உங்கள் தம்பிகளைப் பார்த்தீர்களா? நீங்கள் வருவது தெரிந்ததும் ஓர் ஆளைக்கூட அனுப்பி வைக்கவில்லையே என்று வருத்தத்துடன் கூறினார். அன்னை வீட்டிற்குச் சென்றபின் தம்மைப்பார்க்க வந்த சகோதரர்களிடம் , நான் எவ்வளவு தொலைவிலிருந்து வருகிறேன். என் குழந்தைகளும் உடன் வருகிறார்கள். ஆற்றைத்தாண்டியல்லவா வர வேண்டும்! நீங்கள் தான் வர முடியாது, ஓர் ஆளையாவது அனுப்பக்கூடாதா? என்று கேட்டார். அதற்கு பிரசன்னா், அக்கா காளிக்குப் பயந்துத்தான் நான் வரவில்லை. நான் வந்தால் உன்னிடம் பணம் பறிப்பதற்காகத்தான் இப்படியெல்லாம் செய்கிறேன் என்று சண்டைக்கு வருகிறான். நீ ஒரு விலைமதிப்பில்லாத செல்வம் என்பது எனக்குத் தெரியாதா? இருந்தும் என்னால் ஒன்றும் செய்ய முடியவில்லை. அக்கா, இனி வரும் பிறவிகளிலும் நான் உன் சகோதரனாகப் பிறக்க வேண்டும். என்று அருள் புரி என்றார். இதைக்கேட்ட அன்னை,உங்கள் குடும்பத்திலா? அப்படிக் கனவு கூடக் காணாதே.இப்போது பிறந்து நான் படுகின்ற துன்பம் போதாதா? மறுபடியும் உங்கள் சகோதரியாகப் பிறப்பதா? வேண்டவே வேண்டாம்.அப்பா நான் உங்களுக்காகவா இந்தக்குடும்பத்தில் பிறந்தேன்? இல்லவே இல்லை. என் தந்தை மிகச்சிறந்த ராம பக்தர். என் தாயோ கருணையே வடிவெடுத்தவர். அவர்களுக்காகத்தான் இந்தக்குடும்பத்தில் பிறந்தேன் என்று கூறினார்.
எப்போதும் பணம் பணம் என்று அடித்துக்கொள்கின்ற அந்தச் சகோதரர்களை எண்ணி அன்னை ஒரு முறை, இவர்களெல்லாம் என்ன ஜென்மங்கள்! எப்போது பார்த்தாலும் பணம் பணம் என்று சாகிறார்களே தவிர,பக்தி வேண்டும், ஞானம் வேண்டும் என்கிற நினைப்பு மறந்தாவது இவர்களுக்குத் தோன்றுகிறதா? என்று பெரிதும் அலுத்துக் கொண்டார்.அப்போது அங்கிருந்த சீடர் ஒருவர் அன்னையிடம் அம்மா குருதேவரிடம் கேட்டு அவர்களுக்கு வேண்டிய பணத்தை அளித்துவிடுங்களேன்,என்றார். அதற்கு அன்னை மகனே! அவர்களின் ஆசை தீரக்கூடியதா! கொடுக்க க் கொடுக்க கேட்டுக் கொண்டே இருப்பார்கள். அவர்களின் ஆசைக்கு முடிவே இல்லை. உலகியல் மக்களுக்குத் திருப்தி என்பது உண்டா என்ன! என்று கேட்டார்.
ஆனால் ஒருமுறை தப்பித்தவறி ஞானமும்,பக்தியும் வேண்டும் என்ற ஆசை காளிக்கு வரத்தான் செய்தது.ஆனால் வந்த வேகத்திலேயே அது பறந்து விட்டது. அந்த நிகழ்ச்சி வருமாறு. அன்னையை தரிசிக்க கிரீஷ் ஜெயராம்பாடி வந்திருந்தார். அவர் காளியிடம் ஆன்மீகப் பேரரசுக்கு குருதேவியாக விளங்குகின்ற அன்னையைத் தமக்கையாகப் பெற்றும் அவரிடம் பணம்பணம் என்று அவர் அடித்துக்கொள்வதை மிகவும் கண்டித்துப்பேசினார். காளிக்கும் ஏதோ புத்தியில் உறைத்தது போலிருந்தது.உடனே கைகள் இரண்டையும் குவித்தபடி பக்திமயமாக அன்னையைச் சென்று வணங்கினார். அன்னைக்கு அவரது மனநிலை நன்றாக த் தெரிந்திருந்தது. எனவே டேய் காளி,என்ன இதெல்லாம்! நான்குருவும் இல்லை,தேவியும் இல்லை, உன் அக்கா தான். அக்காவே தான். எழுந்திரு என்றார். காளிக்கு இது மிகுந்த திருப்தியைக் கொடுத்தது.அதன் பிறகு அவர் ஆன்மீகம் அது இது என்றெல்லாம் எண்ணிப் பார்க்கவே இல்லை.
ஒரு நாள் காலை பத்துமணி இருக்கும். அன்னை வராந்தாவில் உட்கார்ந்திருந்தார். காளி போட்ட ஒரு வேலியைக்குறித்து வரதருக்கும் அவருக்கும் சண்டை மூண்டது. இருவரும் அடித்துக்கொள்ள ஆரம்பித்தனர்..அன்னை எழுந்து போய் அவர்களைத் தடுத்தார். அவர்கள் நிறுத்தியபாடில்லை. அன்னை கோபத்துடன் இருவரையும் திட்டிப்பார்த்தார். அவர்கள் அதையும் கண்டுகொள்ளாமல் சண்டையில் தீவிரமாகஇருந்தனர். அன்னையின் சீடர் ஒருவரும் பிறரும் வந்து இருவரையும் விலக்கினார்கள். அதன் பின்னர் இருவரும் தங்கள் வீட்டிற்குச் சென்று,அங்கிருந்தபடி நெடுநேரம் ஒருவரையொருவர் ஏசிக்கொண்டிருந்தனர். அன்னையும் வீட்டிற்குள் சென்றார். உள்ளே சென்றுஅமர்ந்ததும் குலுங்கிக்குலுங்கிச் சிரிக்க ஆரம்பித்தார். சிரித்தபடியே ஓ!மகாமாயையின் விசித்திரம் தான் என்ன! காலம் காலமாக இந்தப்பூமி அழியாமல் இருக்கிறது. மரணம் வரும்போது மனிதனால் இதிலிருந்து ஒரு துரும்பைக்கூட எடுத்துப்போக முடியாது. இந்தச் சாதாரண உண்மையைக்கூட மனிதன் அறியாமல் அடித்துக் கொள்கிறானே.என்ன விந்தை இது! என்று கூறிக்கொண்டு மீண்டும் நெடுநேரம் சிரித்தார். அவரால் சிரிப்பை அடக்கவே முடியவில்லை.
-
தொடரும்...
-
ஸ்ரீராமகிருஷ்ணரின் ஆன்மீகக் குழுவில் இணைய 9789374109 என்ற எண்ணிற்கு வாட்ஸ்அப் மூலம் ரிக்கொஸ்ட் மெசேஜ் அனுப்பவும்

No comments:
Post a Comment