ஸ்ரீராமகிருஷ்ணரின் விரிவான வாழ்க்கை வரலாறு
பாகம்-39
குருதேவர் கூறியதில் தாய்க்கும் தமையனுக்கும் அவ்வளவு நம்பிக்கையில்லை. எனினும் ஜெயராம்பாடிக்கு ஒருவரை அனுப்பி விசாரிக்கச் செய்தனர்.அவர் கூறியது உண்மையாக இருந்தது.
எல்லாம் பரவாயில்லை.ஆனால் பெண் மிகவும் சிறியவள் ஐந்தே வயது தான் . எனினும் இந்தப்பெண்ணை சந்திரா ஏற்றுக்கொண்டு, உடனே மகனுக்கு மணமுடிக்க இசைந்தாள்.
ஓரிரு நாட்களுள் பேச்சுவார்த்தைகள் முடிந்தன. ஒரு நல்ல நாளில் சுபமுகூர்த்த வேளையில் காமார்புகூருக்குமேற்கே நான்கு மைல் தொலைவிலிருந்த ஜெயராம்பாடிக்கு ராமேசுவரர் கதாதரரை அழைத்துச்சென்று ராமசந்திரரின் ஒரே மகளைத் திருமணம் செய்து விட்டுத் திரும்பினார்.
வரதட்சணையாக முன்னூறு ரூபாய் பெண் வீட்டாருக்குக் கொடுக்கப்பட்டது.
இது நிகழ்ந்தது 1859, மே மாதத்திலாகும் அப்போது குருதேவருக்கு வயது இருபத்திநான்கு.
குருதேவரின் திருமணத்திற்குப் பின் சந்திரமணியின் கவலை பெருமளவிற்குக் குறைந்தது.
திருமண விஷயத்தில் மகன் தன் சொற்படி நடந்து கொண்டது இறைவனின் பேரருளால் தான் என்று மனநிறைவு எய்தினாள். அவள், எதிலும் பற்றற்ற மகன் திருமணம் செய்து கொண்டான், கௌரவமான குடும்பத்தைச்சேர்ந்த பெண் மருமகளாக வாய்த்துள்ளாள், பணக்கஷ்டமும் சமாளிக்கப்பட்டு விட்டது. சுருக்கமாகச் சொன்னால் மகன் உலகியல் வாழ்க்கையில் அடியெடுத்து வைத்துவிட்டான், இறையருள் அன்றிவேறு எதனால் இத்தனையையும் சாதிக்க முடியும்? இதனை எண்ணியெண்ணி மகிழ்ந்தாள் சந்திரா.ஆனால் இந்த மகிழ்ச்சி நீடிக்கவில்லை.
மணமகளின் தந்தையை மகிழ்விக்கவும் ஆடம்பரத்திற்காகவும் பல நகைகளை இரவல் வாங்கி மணமகளை அலங்கரித்திருந்தனர்.
புதிய மருமகளைச் சொந்த மகளாகவே பாவித்தாள் சந்திரா. எனவே நகைகளைத் திருப்பிக்கொடுக்க வேண்டிய நாள் வந்த போது மிகவும் வருந்தினாள்.ஆனால் தன் வருத்தத்தை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை.தாயின் வருத்தத்தை குருதேவர் புரிந்து கொண்டார்.
தாய்க்கு ஆறுதல் சொல்லிவிட்டு உறங்கிக்கொண்டிருந்த சிறுமியின் உடம்பிலிருந்து அவள் அறியாமல் நகைகளைக் கழற்றினார்.
புத்திமதியான அந்தச்சிறுமியோ விழித்தவுடன் என் உடம்பில் பல நகைகள் இருந்தனவே, அவை எங்கே? என்று கேட்டாள். சந்திராவின் கண்களில் நீர் ததும்பியது. மருமகளை மடிமீது அமர்த்திக்கொண்டு என் கண்ணே, இவற்றை விட எவ்வளவோ நல்ல நகைகளை கதாதரன் உனக்குக் கொடுக்கப்போகிறான். பாரேன், என்று ஆறுதல் கூறினாள்.
பிரச்சனை இத்துடன் நிற்கவில்லை. மணப்பெண்ணின் சித்தப்பா அன்று அங்கு வந்திருந்தார். அவருக்கு விஷயம் தெரியவந்தது. ஆத்திமுற்ற அவர் மணமகளை வீட்டிற்கு அழைத்துச் சென்றுவிட்டார்.
சந்திராவுக்கு அதிர்ச்சிமேல் அதிர்ச்சி.தாயின் மனவருத்தத்தைப் போக்க குருதேவர், அவர்கள் எது வேண்டுமானாலும் சொல்லட்டும், செய்யட்டும் நடந்த திருமணத்தை யாராலும் மாற்ற முடியாது அல்லவா? என்று வேடிக்கையாகக் கூறினார்.
திருமணத்திற்குப் பின்னர் குருதேவர் பத்தொன்பது மாதங்கள் காமார்புகூரில் தங்கியிருந்தார்.
பரிபூரணமாக மகனுக்கு மீண்டும் பத்திசுவாதீனம் இல்லாமல் போய்விடுமோ என்று அஞ்சிய சந்திரமணி அவர் செல்ல எளிதில் அனுமதிக்கவில்லை. மனைவி ஏழாவது வயதில் அடியெடுத்து வைத்தபோது, குடும்ப வழக்கப்படி மாமனார் வீட்டிற்குச் சென்று சிலநாட்கள் குருதேவர் தங்கினார்.
பின்னர் ஒரு சில நாளில் அவளுடன் காமார்புகூருக்குத் திரும்பினார். சில நாட்கள் கழித்து கல்கத்தாவிற்கு திரும்ப முடிவு செய்தார்.
சகோதரனும் தாயும் மேலும் சில நாட்கள் அங்கேயே தங்கும்படி வற்புறுத்தினர். குடும்பத்தின் வறுமைச் சூழ்நிலையை உணர்ந்திருந்த குருதேவரின் கனிந்த மனம், மேலும் அவர்களுக்குச்சுமையாக இருக்க விரும்பவில்லை.
எனவே அவர்களது வேண்டுகோளை நிராகரித்து விட்டு கல்கத்தா திரும்பினார். மீண்டும் காளிகோயில் அர்ச்சகர் பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.
பூஜைப்பொறுப்பை ஏற்ற சில நாட்களில் குருதேவரின் மனம் அதில் லயித்து விட்டது. தாய், தமையன், மனைவி, இல்லறம், வறுமை எல்லாம் மூலையில் தள்ளப்பட்டுவிட்டன. எல்லா உயிர்களிலும் எப்போதும் அன்னை பராசக்தியைக் காண்பது என்ற ஒரே எண்ணம் மனத்தை முழுக்கமுழுக்க ஆட்கொண்டது.
இரவு பகலாக இடையீடின்றி இறைவன் புகழ் பாடுதல், சிந்தனை, ஜபம், தியானம் என்று உயர்ந்த உணர்ச்சி வெள்ளங்களில் திளைத்ததால் அவரது மார்பு எப்போதும் சிவந்தே காணப்பட்டது. உலகியல் பேச்சுக்கள் அவரது காதுகளில் நாராசமாகஒலித்தன.
உடம்பின் பழைய எரிச்சல் மீண்டும் பற்றிக்கொண்டது.உறக்கம் அடியோடு கண்களிடமிருந்து விடைபெற்று விட்டது போல் தோன்றியது. இத்தகைய நிலைகளை அவரது மனமும் உடலும் ஏற்கனவே அனுபவித்து இருந்ததால் இப்போது அவர் அதிகம் பாதிக்கப்படவில்லை.
மதுர்பாபுவின் கட்டளைப்படி பிரபல மருத்துவரான கவிராஜ் கங்காபிரசாதர் குருதேவரின் உறக்கமின்மை, வாய்வுக்கோளாறு, உடல் எரிச்சல் ஆகியவற்றை குணப்படுத்துவதற்காக அவருக்குச் சிகிச்சையளித்தார். உடனடியாகப்பெரிய நன்மை எதுவும் ஏற்படவில்லை எனினும் தாம் மனம் தளராமல் அடிக்கடி அவரைக் கல்கத்தாவிற்கு அழைத்துச்சென்று மருத்துவரிடம் காண்பித்துக்கொண்டிருந்ததாக ஹிருதயர் கூறினார். குருதேவரும் அதைப்பற்றிச்சொன்னதுண்டு. அ
வர் சொன்னார், ஒரு நாள் இவ்வாறு கங்காபிரசாதரின் மருத்துவ மனைக்குச் சென்றிருந்தேன்.தன் சிகிச்சையால் முன்னேற்றம் எதுவும் இல்லாதது கண்டு கங்காபிரசாதர் மிகவும் வருந்தினார்.
மீண்டும் சோதித்துப்பார்த்துவிட்டு புதிய மருந்துகளும் தந்தார். அன்று அவருடன் கிழக்கு வங்காளத்தைச்சேர்ந்த மருத்துவர் ஒருவரும் இருந்தார்.நோயின் அறிகுறிகளைப்பற்றி கவனமாகக்கேட்ட அவர், இவர் தீவிர தெய்வீக உணர்வால் ஆட்கொள்ளப்பட்டிருக்கிறார்.
இது யோகப் பயிற்சியின் விளைவாக தோன்றிய நோய். இதனைமருந்தால் தீர்க்க முடியாது என்று சொன்னார்.
உடல் நோய் போன்று தோற்றமளித்த என் வியாதிக்கு உண்மையான காரணத்தைக்கூறிய முதல் மருத்துவர் அவர் தான். அப்போது இதனை யாரும் நம்பவில்லை.குருதேவரிடம் அக்கறை கொண்டிருந்த மதுர்பாபு போன்றவர்கள் அவரது நோயைக்கண்டு மனம் கலங்கி மருத்துவ முறைகளைத்தொடர்ந்து வந்தனர். ஆனால் நோய் குறைவதற்குப் பதில் அதிகரித்தது.
இந்தச் செய்தி காமார்புகூரை எட்டியது. வேறு வழியற்ற சந்திரா, மகன் குணமடைவதற்காக சிவபெருமானை் சன்னதியில் சாகும் வரை உண்ணாநோன்பு மேற்கொள்வதான ஹத்யா விரதத்தைக் கடைப்பிடிக்க உறுதி பூண்டாள். காமார்புகூரில் குடிகொண்டுள்ள முதிய சிவபெருமான்” மிகவும் சக்திவாய்ந்தவர். அன்ன ஆகாரமின்றி அவரது திருமுன்னர் வீழ்ந்து கிடந்தாள். அங்கே” முகுந்த பூரிலிருக்கும் சிவபெருமானின் ”திருமுன்னர் இந்த விரதத்தை மேற்கொண்டால் உன் விருப்பம் நிறைவேறும்,என்ற அருளாணையைப்பெற்றாள்.
அதன்படி அங்குச்சென்று விரதத்தை மேற்கொண்டாள்.முகுந்தபூர் சிவாலயத்தில் இதற்குமுன் யாரும் இத்தகைய விரதத்தை மேற்கொண்டதில்லை. என்பது சந்திரமணிக்குத் தெரிந்திருந்தும், சிவபெருமானின் அருளாணையை ஏற்று அங்குச்சென்று விரதத்தை மேற்கொண்டாள். இரண்டு மூன்று நாட்கள் கழிந்தன.ஒரு நாள் வெள்ளியைப் பழிக்கின்ற வெண்மேனியனான எம்பெருமான்,புலித்தோல் உடுத்தி சடாமுடி ஒளியை அள்ளிவீச சந்திராமணியின் கனவில் தோன்றி, அஞ்சாதே! உன் மகன் பித்தன் அல்லன்.தெய்வீக உணர்வினால் ஆட்கொள்ளப்பட்டிருப்பதால் தான் அவனுக்கு இத்தகைய நிலைஎற்பட்டுள்ளது என்று கூறியருளினார்.
இதனால் மனம் தெளிந்த சந்திராமணி சிவபெருமானுக்கு மனமார்ந்த வழிபாடுகள் செய்து வீடு திரும்பினாள். மகனின் மனஅமைதிக்காக குலதெய்வங்களான சீதளாவிற்கும், ஸ்ரீரகுவீரருக்கும் தொடர்ந்து சேவைகளைச் செய்வதில் ஈடுபட்டாள். சந்திரமணி பயன்பெற்றபின்னர் முகுந்தபூர் ஆலயத்தில் இவ்வாறு பிராத்தனை செய்து பலரும் தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றிக்கொண்டுள்ளனர்.
அந்த நாட்களில் தமது இறைப்பித்து நிலையைப்பற்றி சம்பவங்களை நினைவுகூர்ந்து எங்களுக்கு அவ்வப்போது குருதேவர் சொல்வதுண்டு.
இத்தகைய தெய்வீக உணர்வுப்பெருக்கை சாதாரண மக்களின் உடலும் உள்ளமும் தாங்கமுடியாது. இந்த அனுபவத்தில் கால்பங்கு ஏற்பட்டால் கூட அவர்களின் உடல் அழிந்து விடும். இரவும் , பகலும் நாளில் பெரும்பகுதி நேரமும் நான் அன்னையின் ஏதோனும் ஒரு வகைக்காட்சியில் திளைத்திருப்பேன். அது தான் என்னைக் காப்பாற்றியது. இல்லையெனில் இந்தக்கூடு( தம் உடலைக்காட்டி) வாழ்ந்திருக்க முடியாது. நீண்ட ஆறு ஆண்டுகள் எனக்குத் தூக்கம் என்பது துளிகூட இல்லாமல் போயிற்று. இமைக்கும் சக்தியைக் கண்ணிமைகள் இழந்துவிட்டன. சிலவேளைகளில் நான் முயன்றாலும் கண்களை மூட முடியாது. காலம் எப்படிக் கழிந்தது என்பதே எனக்குத்தெரியாது. உடலைக்காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் அடியோடு மறந்து விட்டது. எப்போதாவது உடல் பற்றிய கவனம் திரும்பும்போது எனது நிலை எனக்கு புரியாது, எங்கே நான் பைத்தியக்காரன் ஆகிவிடுவேனோ என்ற அச்சம் என்னை வாட்டும். கண்ணாடியின் முன் நின்று என் விரலைக் கண்ணுக்குள் வைத்து இமைகள் மூடுகின்றனவா என்று பார்ப்பேன். ஆனால் அவை படபடக்கக்கூட இல்லை. பயத்தினால் அழுவேன், அன்னையிடம் அம்மா! உன்னிடம் பிராத்தித்ததன் பலன் இதுவா? உன்னையே நம்பியிருந்ததன் விளைவு இது தானா? என்று முறையிடுவேன்.
அடுத்த கணமே எதுவும் நேரட்டும் . என் உடம்புவேண்டுமானால் அழியட்டும். நீ மட்டும் என்னைக்கைவிட்டு விடாதே. உன் திருக்காட்சியை எனக்குக்கொடுத்து உன் அருளைப்பொழிவாயாக! அம்மா, நான் என்னை முழுவதுமாக உன் திருப்பாதகமலங்களில் அர்ப்பணித்துவிட்டேன். உன்னையன்றி எனக்கு வேறுகதியில்லை, என்று விம்மிவிம்மி அழுவேன். உடனே மனம் லேசாகி சொல்லொணாத அருளானந்தத்தில் திளைக்கும். அப்போது உடம்பு பொருளற்றதாகத் தோன்றும். அன்னையின் திருக்காட்சியும் அபய மொழிகளும் மனத்தில் சொல்லொணா சாந்தியை நிறைக்கும்.
இந்தச் சமயத்தில் தான் ஒரு நாள் மதுர்பாபு குருதேவரிடம் தெய்வீகத்தின் உன்னதமான வெளிப்பாட்டைக்கண்டார். எவ்வாறு அவர் அன்று குருதேவரிடம் சிவபெருமானையும் அன்னை காளியையும் கண்டு அவரை நடமாடும் பரம்பொருளாக வழிபட்டார் என்பதை வேறொரு பகுதியில் விளக்கியுள்ளோம். அன்றிலிருந்து மதுர்பாபு குருதேவரை உயர்ந்த கண்ணோட்டத்தில் தான் பார்த்தார். அவரது நம்பிக்கையும் பக்தியும் அசைக்க முடியாததாயிற்று. இந்த அபூர்வ நிகழ்ச்சிகளிலிருந்து ஒரு விஷயம் தெளிவாகின்றது. இனிமேல் நிகழவிருக்கும் குருதேவரின் சாதனை வாழ்க்கைக்கு மதுரின் உதவியும், உறுதுணையும் இன்றியமையாதது என்பதால் அன்னை அவர்கள் இருவரையும் பிரிக்க முடியாதபடி அன்பென்னும் கயிற்றால் பிணைத்து வைத்தாள்.உலகாயதமும் நாத்திகமும் அவநம்பிக்கையும் மலிந்து கிடக்கும் இந்த உலகத்தில் தர்மத்தின் அழிவைத் தடுத்து ஆன்மீக சக்தியைப் பரப்புவதற்காக குருதேவரின் உடலையும் உள்ளத்தையும் அன்னை எவ்வளவு கவனமாகவும் அற்புதமானதொரு வழியைக் கடைப்பிடித்தும் கருவிகளாக உருவாக்கியுள்ளான்! இதனை அறியும் போது நாம் எத்தகைய பிரமிப்பில் ஆழ்ந்து விடுகிறோம்.
-
தொடரும்..

No comments:
Post a Comment