தூக்கமும் மரணமும்
தூக்கமும் மரணமும் .. இன்று இரவு நாம் தூங்க செல்கிறோம்.இதோடு நம் வாழ்க்கை முடிந்தது.இனி நாளை காலை நாம் கண்விழிக்க மாட்டோம். தூக்கத்திலேயே உயிர்போய்விடும். அதன் பிறகு எதுவும் நமக்குத் தெரியாது.நம்மையும் நமக்குத்தெரியாது,வெளி உலகமும் தெரியாது,எதுவுமே தெரியாது.அப்படியே தூக்கத்திலேயே மாண்டுவிடுவோம் என்று வைத்துக்கொள்வோம். இன்று இரவு யாராவது தூங்க செல்வார்களா? நாளை நாம் கண்விழிக்கப்போகிறோம் என்ற எண்ணம் இருப்பதால்தான் இன்று தூங்கச் செல்கிறோம். நாளை கண்விழிக்க மாட்டோம் என்று தெரிந்தால்,யாரும் தூங்க செல்ல மாட்டார்கள். தூக்கம் என்பது, அதுவும் தொடர்ந்த தூக்கம் என்பது நல்லதுதானே அப்படி இருக்கும்போது நாம் ஏன் தொடர்ந்த நிலையான தூக்கத்தை விரும்புவதில்லை? ஏனென்றால் அதுதான் உயிரின் இயல்பு. நிலையான தூக்கம் என்பது மரணம். அந்த மரணத்தை எந்த உயிரும் விரும்புவதில்லை. .. தூக்கத்திலேயே உயிர்போய்விட வேண்டும் என்று சில நேரங்களில் மனிதர்கள் கூறுவார்கள்.ஆனால் உள் மனதில் அப்படி எதுவும் நடந்துவிடக்கூடாது என்ற எண்ணமும் இருக்கும். எவ்வளவுதான் துன்பங்கள் வந்தாலும் அதை தாங்கிக்கொண்டு வாழவேண்ட...