Posts

Showing posts from 2018

அன்னை சாரதாதேவியின் வாழ்க்கை வரலாறு-பாகம்-18

Image
அன்னை சாரதாதேவியின் வாழ்க்கை வரலாறு - பாகம் -18 நகபத்   அறையச் சுற்றியுள்ள    வெளி வாரத்தில்   கிழக்குப்   பகுதியில்   மாடிக்குச்    செல்வதற்கான   படிக்கட்டுகள்   உள்ளன . இந்தப் படிக்கட்டின்      கீழ்ப்பகுதிதான்   அன்னையின்    சமையலறை . மாடியில்   குருதேவரின்   தாய் வாழ்ந்து வந்தார் .   கீழே    அன்னை   தங்கினார் .       அந்த அறை மிகவும் வசதி குறைவானது   . அதில் ஒருவர்   கால்நீட்டிப் படுப்பதற்குக்கூட முடியாது .   அரிசி மற்றும் பருப்பு மூட்டைகள்   , காய்கறிக் கூடைகள்   எல்லாம் அங்கேதான் .   போதாக்குறைக்கு , குருதேவருக்கான    உணவு வைத்துள்ள பானைகள்   வைக்கப்பட்ட    உறிகள் தலைக்கு மேல் தொங்கிக் கொண்டிருக்கும் . அ ன்னையின்   தனிமை வாழ்க்கைக்காக   வராந்தாவைச் சுற்றி   ஆளுயரத்திற்கு மூங்கில்   தட்டிகள் வைக்கப்பட்டன . இதனால்   சூரிய...