ஸ்ரீமத்பகவத்கீதை-வாழ்க்கைக்கான பாடங்கள் 54
வகுப்பு-54 நாள்-11-3-2020 - ஸ்ரீமத்பகவத்கீதை-வாழ்க்கைக்கான பாடங்கள் - ஸ்ரீகிருஷ்ணர் கூறுகிறார் - ஊர்த்வமூலமத:ஷாகமஷ்வத்தம் ப்ராஹுரவ்யயம்। சந்தாம்ஸி யஸ்ய பர்ணாநி யஸ்தம் வேத ஸ வேதவித்॥ 15.1 ॥ 15.1 மேலே வேருள்ளதும் கீழே கிளைகள் உள்ளதும் ஆகிய ஆலமரத்தை அழிவற்றது என்று சொல்கிறார்கள். வேதங்கள் அதனுடைய இலைகள். அதை யார் அறிகிறானோ அவன் வேதத்தை அறிபவன் ஆகிறான் - ஆலமரத்தின் வேர்கள் பூமிக்குள் இருக்கும்.கிளைகள்,இலைகள்,பழங்கள் மேலே இருக்கின்றன. ஆனால் மனிதனைப்பொறுத்தவரை எது வேர்? தலைதான் வேர் எது பழம்? ஆண்,பெண் பிறப்புறுப்புகள் பிரபஞ்சத்தை ஒட்டுமொத்தமாக எடுத்துக்கொண்டால் தூலம்,சூட்சுமம்,காரணம் என்று மூன்று படிகள் இருக்கின்றன. தூலம் என்பது கண்களால் காணக்கூடிய காட்சிகள் சூட்சுமம் என்பது மரணத்திற்குபிறகு காணக்கூடிய காட்சிகள் காரணம் என்பது பிரஞ்சம் தோன்றுவதற்கு காரணமாக இருப்பவை - தலைகீழாக வளர்ந்துள்ள மேலே வேர்களையும். இடையில் மரத்தின் கிளைகளையும்,முடிவில் இலைகளையும் கொண்ட ஒரு மிகப்பெரிய மரத்தை கற்பனை செய்து பார்க்க வேண்டும். இந்த பிரபஞ்சம் தோ...