அன்னை சாரதாதேவியின் வாழ்க்கை வரலாறு-பாகம்-60
1918-ஆம் ஆண்டு வாக்கில் ஒருமுறை அன்னை உத்போதனில் தங்கியிருந்தபோது லட்சுமியும் ராம்லாலும் அங்கு வந்திருந்தனர். குருதேவர் அவதரித்த இடத்தில் கோயில் கட்டுவது பற்றிய பேச்சு வார்த்தைகள் அந்த நாட்களில் நடந்து கொண்டிருந்தன. அதைக்குறிப்பிட்டு லட்சுமி அன்னையிடம் அந்தக்கோயில் வரும்போது அதுநம் பொறுப்பில் இருக்குமா? இல்லை குடும்பத்தினரின் பராமரிப்பில் இருக்குமா? என்று கேட்டாள். அதற்கு அன்னை கட்டாயமாக அது மடத்தின் பொறுப்பில் தான் இருக்கும்.எதிர் காலத்தில் பிற ஜாதி மற்றும் மதத்தினர் மட்டுமல்ல அன்னிய நாடுகளிலிருந்து எண்ணற்ற மக்கள் அந்த இடத்தை தரிசிக்க வருவார்கள். குடும்பத்தினரின் பொறுப்பில் இருந்தால் அவர்களுக்கு ஜாதி,ஆசாரம் இவற்றைப்பின்பற்றுவது கடினம்.அவற்றை மீறினாலோ பிள்ளைகளுக்குத்திருமணம் செய்விக்க முடியாத அளவிற்கு சமுதாயக்கட்டுப்பாடுகள். எனவே அது மடத்தின் பொறுப்பில் இருப்பது தான் நல்லது என்று தெரிவித்தார். ஆனால் குலதெய்வங்களான ரகுவீரர்,சீதளா கோயில்களைக் குடும்பத்தினரே பராமரித்துவரலாம் என்றும் கூறினார். இது எல்லோருக்கும் ஏற்புடையதாக இருந்தது. இதற்கேற்ப 1918 ஜீலை 27-ஆம் நாள் குருதேவர் அவதரித்த திருத்தலம் முறைப்படி பேலூர் மடத்திடம் ஒப்படைக்கப்பட்டது. இதில் அன்னையும் மற்ற பங்குதாரர்களும் கையொப்பம் இட்டனர்.
ஜெயராம்பாடியில் ஒருமுறை பக்தர் ஒருவர் அன்னையிடம், அவர் ஏன் காமார்புகூரில் தங்கவில்லை என்று கேட்டார். அதற்கு அன்னை ” குருதேவர் இப்போது ஊனுடம்பில் இல்லை. நான் அங்கே போனால் அவரது நினைவு என்னை வாட்டும். அதனால் தான் நான் அங்கே போவதில்லை என்பார். பிறரைக்குற்றம் சொல்வதோ, அவர்களை மனம் நோகச் செய்வதோ அன்னையால் இயலாத ஒன்று. ஆனால் சில வேளைகளில் தப்பித்தவறி அவர் வாயிலிருந்து உண்மை வெளிப்பட்டுவிடும். உறவினரும் ஊராரும் என்னை ஒதுக்கி வைத்துவிட்டனர். எனது நிலைமை கண்ட என் தாய் என்னை ஜெயராம்பாடிக்கு அழைத்து வந்தார். அன்றிலிருந்து என் சகோதரர்களின் நல்லதிலும் கெட்டதிலும் பங்கெடுத்துக் கொண்டு இங்கேயே வாழ்ந்து வருகிறேன். ஆனாலும் பார், அவர்களால் தான் நான் இங்கே என் சகோதரர்களிடம் வர நேர்ந்தது. இப்போது என்னடாவென்றால் நான் அவர்களைக் கவனிக்கவில்லை என்று என்னையே குற்றம் சாட்டுகிறார்கள்.
அன்னை கல்கத்தா வந்து சேர்ந்ததும் ஸ்ரீராமகிருஷ்ணரது சீடர்களின் மனம் மகிழ்ச்சியால் பொங்கியது. குறிப்பாக பக்தைகள் பெருமகிழ்ச்சி அடைந்தனர். தங்கள் ஆன்ம நலனுக்காக அன்னையின் நல்வாழ்வைக் கவனித்துக் கொள்வது மிக முக்கியம் என்பதை அவர்கள் உணர்ந்தனர்.இது வரையிலும் குருதேவரின் பக்தர்கள் சிலர் அன்னையைப்பற்றிப் பெருமையாக நினைக்கவில்லை.அவர் ஒரு பெண் என்பதால் கோலாப்மா, யோகின்மா போன்ற பக்தைகள் மிகைப்படுத்திப்பேசுவதாகஅவர்கள் எண்ணினார்கள்.அவர்களுள் ஒருவர், எனக்கு ஸ்ரீராமகிருஷ்ணரைத்தான் தெரியும். அவரது மனைவியா? அவரைப்பற்றி நான் கேள்விப்பட்டதில்லையே!என்றுக்கூட ச் சொன்னாராம்.பிறகு யோகின்மா,யோகின்,கோலாப்மா முதலியோர் பிருந்தாவனத்திலும் மற்ற இடங்களிலும் அன்னையிடம் தாங்கள் கண்ட சமாதி உட்பட மிக உயர்ந்த பல தெய்வீக நிலைகளைப்பற்றிக்கூறியதும்,அவர்களுள் பலரும் தங்கள் கருத்துக்களை மாற்றிக்கொண்டனர்.அவரைப்பேணுவது தங்கள் கடமை என்று உணர்ந்து ,தங்களால் முடிந்த அனைத்தையும் செய்யத்துவங்கினர்.எனினும் அன்னையை நேரடியாகப்பாதுகாக்கும் முக்கியப்பொறுப்பு யோகின் மீதும் கோலாப்மா மீதும் விழுந்தது. இறுதியில் சுவாமி சாரதானந்தர் தன் தனிப்பட்ட முயற்சியாலும் உழைப்பாலும் அன்னை நிலையாகத் தங்குவதற்காக 1909-ஆம் ஆண்டு கல்கத்தா பாக்பஜாரில் உத்போதன்” என்னும் வீட்டைக்கட்டி முடிக்கும் வரையில்அன்னை கல்கத்தா வந்தால் பக்தர்களின் வீடுகளிலேயே தங்கினார்.நெடுங்காலம் தங்குவதாக இருந்தால் வாடகை வீட்டில் தங்குவார்.சிறிது காலம் என்றால் பலராம்போஸ்,மகேந்திரநாத்குப்தர் முதலியவர்களின் வீடுகளிலும் தங்குவார்.
-
-
தொடரும்...

No comments:
Post a Comment