ஸ்ரீராமகிருஷ்ணரின் விரிவான வாழ்க்கை வரலாறு
-
பாகம்-6
மழலைப்பருவமும் தந்தையின்
மறைவும்,
-
முதன் முதலாக சாதம் ஊட்டும் சடங்காகிய அன்ன பிராசனத்தைத் தமது தகுதிக்கேற்ப எளிய முறையில் நடத்தலாம். என்று தான் நினைத்திருந்தார். கூதிராம்.
நெருங்கிய ஒரிரு உறவினர்களை மட்டும் அழைத்து சாஸ்திரச் சடங்குகளைச் செய்து ஸ்ரீரகுவீரருக்கு அன்னத்தைப்படைத்து பிரசாதத்தைக் குழந்தைக்குக் கொடுத்து நிகழ்ச்சியை முடித்துவிடலாம் என்பது அவரது எண்ணம். நடந்ததோ வேறு.
அந்த கிராமத்தின் ஜமீன்தாரும் கூதிராமின் நண்பருமான தர்மதாஸ் லாஹாவின் மறைமுகத் தூண்டுதலினால் அந்த கிராமத்தின் வயோதிக அந்தணர்களும் பெரியவர்களும் கூதிதிராமிடம் சென்று அந்த நன்னாளில் தங்களுக்கெல்லாம் விருந்தளிக்க வேண்டும் என்று அவரை அன்புடன் வற்புறுத்தினார்.
கூதிதிராமுக்கு என்ன செய்வதென்று புரியவில்லை.ஏழையான அவர் கிராமத்தவர் அனைவரையும் அழைத்து விருந்தளிப்பது என்பது இயலாத காரியம். சிலரை அழைத்து பிறரை விடவும் முடியாது. கிராமத்தவர் அனைவருமே அவரிடம் பாசமும் மரியாதையும் மிக்கவர்கள்.
யாரைக் கூப்பிடுவது யாரை விடுவது? குழம்பினார் ’ கூதிதிராம். இறுதியில் ஸ்ரீரகுவீரர் தான் வழிகாட்ட வேண்டும் என்று உறுதிபூண்டு, நண்பரான தர்மதாஸ் லாஹாவின் அறிவுரையை நாடிச்சென்றார்.
அங்கு அவருக்கு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. ’ கூதிதிராம் விஷயத்தைத் தெரிவித்ததும் தர்மதாஸ் எல்லாப் பொறுப்பையும் தாமே எற்றுக் கொள்வதாகக் கூறினார்.
மனச்சுமை இறங்கிய மகிழ்ச்சியில் வீடு திரும்பினார் கூதிதிராம்.
தர்மதாஸ் லாஹாவின் செலவில் கதாதரனின் அன்னபிராசனச் சடங்கு சிறப்பாக நடந்தேறியது.
கிராமத்தைச் சேர்ந்த எல்லா ஜாதியினரும் கூதிராமின் குடிசைக்கு வந்து ஸ்ரீரகுவீரரின் பிரசாதத்தை உண்டு மகிழ்ந்தனர். பல ஏழைகளும் பிச்சைக்காரர்களும் வயிறார உண்டு குழந்தையை வாழ்த்திச் சென்றனர்.
கதாதரனுக்கு ஏழு எட்டு மாதம் இருக்கும்.
ஒரு நாள் காலையில் தாயிடம் பால் குடித்துக் கொண்டிருந்தவன் அப்படியே உறங்கிவிட்டான்.
அவனைப் படுக்கையில் கிடத்தி கொசுவலையையும் கட்டி விட்டு சந்திரா வீட்டு வேலைகளைக் கவனிக்கச் சென்றாள். சிறிது நேரம் கழித்து ஏதோ வேலையாக அந்த அறைக்குத் திரும்பிவந்தாள். தற்செயலாகப்படுக்கையைப் பார்த்த போது அவளுக்கு தூக்கிவாரிப்போட்டது.
ஏனெனில் அங்கே குழந்தைக்குப் பதிலாக நெடிய மனிதர் ஒருவர் படுக்கை முழுவதையும் அடைத்துக்கொண்டு படுத்திருந்தார்.
திகைப்பில் உறைந்துபோன அவள் பதறியடித்துக் கொண்டு வெளியே ஓடிவந்து கூதிதிராமிடம் விபரத்தைக்கூறி அவரை உள்ளே அழைத்துச் சென்றாள்.இருவருமாக அறைக்குள் சென்று பார்த்தால் உறங்கிக்கொண்டிருக்கும் கதாதரனைத் தவிர அங்கே வேறு யாரும் இல்லை.
சந்திராதேவியின் அச்சம் குறையவில்லை. இது ஏதோ பொல்லாத ஆவியின் வேலை தான். குழந்தை படுத்திருந்த இடத்தில் நெடிய ஒருவர் படுத்திருப்பதைக் கண்கூடாகக் கண்டேன். எனக்கு ஏதோ பிரமை என்று எண்ணி விடாதீர்கள்.
உடனடியாக யாராவது மந்திரவாதி ஒருவனை அழையுங்கள். இல்லையெனில் அவனுக்கு ஏதேனும் தீங்கு நேரலாம்” என்று மீண்டும் மீண்டும் கூதிதிராமிடம் கூறினாள்.
அவளைத்தேற்றுவதற்காக கூதிதிராம் ”கதாதரன் பிறப்பதற்கு முன்னரே இது போன்ற எத்தனையோ தெய்வீகக் காட்சிகளை நாம் கண்டதில்லையா?
ஏன் அத்தகைய ஒன்று இப்போது நேர்ந்தபோது இவ்வளவு பதறுகிறாய்? இது ஆவியின் வேலையுமல்ல, பூதத்தின் வேலையும் அல்ல.வீட்டில் ஸ்ரீரகு வீரர் இருக்கும் போது குழந்தைக்குக்கேடு விளைவிக்க எந்தப் பிசாசு வர முடியும்? அமைதியாக இரு. யாரிடமும் இது பற்றி எதுவும் சொல்லாதே!
கதாதரனை ஸ்ரீரகுவீரர் எப்போதும் காத்து வருகிறார் என்பதில் உறுதி கொள். என்றெல்லாம் கூறினார்.
கணவனின் சொற்களால் சந்திரா அப்போதைக்கு மன அமைதி பெற்றாலும் குழந்தைக்குக்கேடு நேரலாம் என்ற அச்சம் அவளை நிழல் போலத் தொடர்ந்து மனத்தை உறுத்திக்கொண்டு தான் இருந்தது. அன்று நீண்ட நேரம் கூப்பிய கரங்களுடன் ஸ்ரீரகுவீரரிடம் தன் கவலைகளை வெளியிட்டுப் பிராத்தித்தாள் சந்திரா.
இன்பம் துன்பம் , அமைதி-சஞ்சலம் என்று மாறி மாறிப் பாய்கின்ற உணர்ச்சி நீரோட்டங்களின் ஊடே கூதிராம் தம்பதியினரின் நாட்கள் ஓடிக்கொண்டிருந்தன.
கதாதரனின் மனத்தை மயக்கும் உருவமும் மழலைக்குறும்புகளும் குடும்பத்தினரை மட்டுமின்றி கிராமத்தையும் கவர்ந்தது.
நான்கைந்து ஆண்டுகள் கழிந்தன.இந்தச் சமயத்தில் தான் கூதிராமின் கடைசிக்குழந்தையாக சர்வமங்களா என்னும் பெண் பிறந்தாள்.
கதாதரன் வளரவளர அவனது அறிவுக்கூர்மையும் நினைவாற்றலும் வளர்ந்தன. அவனது அபார அறிவாற்றல் கூதிராமை வியப்பிலும் மகிழ்ச்சியிலும் ஆழ்த்தியது.
அவர் சில வேளைகளில் கதாதரனை மடிமீதமர்த்திக் கொண்டு,தம் முன்னோர்களின் நீளமான பெயர்ப் பட்டியலைச் சொல்லிக் காட்டுவார்.தேவதேவியர் பற்றிய சின்னஞ்சிறு பாடல்களையும் அவர்களை வழிபடும் முறைகளையும் எளிய முறையில் கூறுவார்.
ராமாயணம், மகாபாரதம் ஆகியவற்றிலிருந்து அருமையான கதைகளைச் சொல்வார். கதாதரனுக்கு இவற்றை ஒரு முறை கேட்டால் போதும் எத்தனை நாட்களானாலும் மறக்காது. அது மட்டுமின்றி அவர் கூறிய அனைத்தையும் சிறிதும் தடுமாற்றமின்றி எந்த நேரத்திலும் அவரால் திருப்பிச் சொல்ல முடியும். மகனின் ஆற்றலை எண்ணி யெண்ணி வியந்து உள்ளம் பூரிப்பார் கூதிராம்.
அதே வேளையில் எந்த அளவிற்குச் சிலவற்றில் ஆர்வம் இருந்ததோ அந்த அளவிற்கு அவனுக்குப் பிடிக்காதவற்றில், எவ்வளவு தூண்டினாலும் ஆர்வம் உண்டாகவில்லை. என்பதையும் அறிந்து கொண்டார்.
கணிதத்தில் குறிப்பாகப் பெருக்கல் வாய்ப்பாட்டை அவனுக்குச் சொல்லிக் கொடுக்கும் போது தான் இதைக் கண்டுபிடித்தார். எனவே அவனை வற்புறுத்திக் கணிதம் கற்கச் செய்யாமல் விட்டுவிட்டார். ஆனால் அவனது குறும்புகளையும் தொல்லைகளையும் சமாளிக்கவாவது அவனைப் பள்ளிக்கு அனுப்புவது அவசியம் என்று நினைத்தார்.ஏடு தொடங்குதல் முதலிய சடங்குகளை நிறைவு செய்து கதாதரனைப் பள்ளிக்கு அனுப்பிவைத்தார். அப்போது அவனுக்கு வயது ஐந்து.
தன் வயதொத்த சிறுவர்களைக் கண்டு கதாதரன் மகிழ்ந்தான். அவனது துடுக்குத் தனமும் நல்லியல்புகளும் விரைவிலேயே ஆசிரியர்களையும் அவன் பால் ஈர்த்தது. அனைவரும் அவனை மிகவும் நேசித்தனர்.
ஜமீன்தாரான லாஹாவின் வீட்டிற்கு முன்புறமிருந்த பெரிய மண்டபத்தில் பள்ளி நடைபெற்றது.
ஜமீன்தாரால் நியமிக்கப்பட்ட ஆசிரியர் ஒருவர் அவர் வீட்டுக் குழந்தைகளுக்கும் கிராமத்திலுள்ள பிற குழந்தைகளுக்கும் பாடம் கற்பித்தார். எல்லோருக்கும் பயன்படுகின்ற அந்தப் பள்ளியை நிறுவுவதற்கு லாஹாக்களே காரணமாக இருந்தனர். கூதிராமின் வீட்டிற்கு அருகில் அந்தப் பள்ளி இருந்தது. காலை, மாலை இரு வேளைகளிலும் பள்ளி நடைபெற்றது. காலையில் மாணவர்கள் இரண்டு மூன்று மணிநேரம் கல்வி கற்பர். பின்னர் வீடு சென்று குளித்து, சாப்பிட்டு,ஓய்வெடுப்பார்கள்.மீண்டும் பிற்பகல் மூன்று அல்லது நான்கு மணிக்குப் பள்ளி ஆரம்பமாகும். இருட்டும் முன் வீடு திரும்புவார்கள். கதாதரனைப்போன்ற சிறு பிள்ளைகள் அவ்வளவு நேரம் படிக்க வேண்டியதில்லை. ஆனால் பள்ளியில் தான் இருக்க வேண்டும். புதிய மாணவர்களுக்குப் பாடம் சொல்லிக் கொடுப்பதிலும் பழைய பாடங்களை அவர்கள் அன்றாடம் படிக்கிறார்களா என்று கவனிப்பதிலும் பெரிய மாணவர்கள் உதவினர்.
ஒரே ஆசிரியர் பணியாற்றினாலும் வேலை நன்றாக நடைபெற்று வந்தது.
கதாதரன் பிறப்பதற்கு முன்னர் தோன்றியிருந்த அதிசயக் கனவுகளும் தெய்வீகக் காட்சிகளும் கூதிராமின் மனத்தில் சில எண்ணங்களை நிரந்தரமாக நிலைபெறச் செய்திருந்தன.
எனவே எல்லாக்குழந்தைகளையும் போல கதாதரன் குறும்பு செய்யும்போது சிலவேளைகளில் அவரால் அவனிடம் கடுமையாக நடந்து கொள்ள இயலாமல் போய்விடும். மீண்டும் அவ்வாறு செய்யாதிருக்குமாறு மென்மையாகக்கூற மட்டும் செய்வார். அவன் அவ்வப்போது காட்டும் பிடிவாதம் அவரைச் சிந்தனையில் ஆழ்த்தும்.
எல்லோரும் காட்டும் அளவு கடந்த அன்பினால் அவன் இவ்வாறு நடந்து கொள்கிறானா? அல்லது அவனது இயல்பே அது தானா என்பதை அவரால் உறுதி செய்ய முடியவில்லை.
கதாதரன் வளரவளர அவனது குறும்புகளும் கூடவே வளர்ந்தன.
பள்ளி செல்வதற்குப் பதிலாக அவன் கிராமத்திற்கு வெளியே சென்று விருப்பம் போல் விளையாடுவான்.அருகில் எங்காவது நடைபெறும் யாத்ரா எனப்படும் திறந்தவெளி நாடகத்திற்கு யாருக்கும் தெரியாமல் சென்று விடுவான். பொதுவாக பெற்றோர் செய்வதை ப்போல கூதிராம் இதற்கெல்லாம் அவனைக்கடிந்து கொள்ளவில்லை. தன்னிச்சையாகச் செயல்படுவது அவனை உயர்ந்தவனாக்க உதவும் என்று உறுதியாக நம்பினார். அவர் அவ்வாறு அவர் நம்பியதற்கு கதாதரனின் ஓரிரு அடிப்படை குணங்கள் தாம் காரணமாக இருந்தன.
செய்யத்தொடங்கிய எதையும் செய்து முடிக்கும் வரை அவனால் ஓய்ந்திருக்க முடியாது.
தவறு செய்தாலும் அவற்றை அவன் பொய் சொல்லி மறைப்பதில்லை. எல்லாவற்றிற்கும் மேலாக பிறருக்குத் தீங்கு செய்யும் எண்ணம் அவனிடம் சிறிதும் இல்லை. இத்தகைய
நற்பண்புகளுடன் கூதிராமைக் கவலையில் ஆழ்த்திய ஒன்றும் அவனிடம் இருந்தது.அது சில விஷயங்களில் அவனது அணுகுமுறை. வற்புறுத்தி அவனை எதற்கும் பணிய வைக்க முடியாது.
. அவன் எதையாவது செய்ய வேண்டுமானாலும் சரி, அவன் செய்கின்ற எதையாவது தடுக்க வேண்டுமானாலும் சரி, அவனது அறிவிற்கும் மனத்திற்கும் புரியும் வகையில் அதனை விளக்க வேண்டும். விளங்கம் வரையில் அதற்கு நேர்மாறாகவே அவன் செய்வான். இதற்கு காரணம் அவனது ஆராய்ச்சி அணுகுமுறை என்பதை கூதிராம் புரிந்து கொண்டார். எந்தப்பெற்றோரும் பிள்ளையின் இத்தகைய நடத்தையைப்பொறுத்துக்கொள்ள மாட்டார்கள். எல்லாவற்றையும்காரண காரியங்களோடு விளக்கி, பிள்ளைகளின் ஆவலை நிறைவு செய்யவும் மாட்டார்கள். மரபு வழி வந்த நல்லொழுக்க வழிகளை விட்டுப் பிள்ளைகள் விலகிச் செல்வதற்கு பொதுவாக இதுவே காரணமாகிறது. என்பதை கூதிராம் உணர்ந்திருந்தார். கதாதரனின் வாழ்வில் இத்தகைய ஒன்று நேர்வதற்கு அனுமதிக்கக்கூடாது என்பதற்காகஈஅவன் கேட்டவற்றை எல்லாம் முடிந்தவரையில் விளக்கினார். இந்தக் காலத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சி அவனது மனநிலையை கூதிராமுக்கு நன்றாகப் புரியவைத்தது. அதற்கேற்ப அவரும் கதாதரனுக்குப் பல விஷயங்களைக் கற்பிக்கலானார். நிகழ்ச்சி வருமாறு.
-
தொடரும்

No comments:
Post a Comment