அன்னை சாரதாதேவியின் வாழ்க்கை வரலாறு-பாகம்-105
சென்னை ரயில் நிலையத்தில் ராமகிருஷ்ணானந்தர் பக்தர்களுடன் காத்திருந்தார். ஜெய கோஷத்துடன் அன்னை வரவேற்கப்பட்டார். கார் ஒன்றில் அன்னையை ஸ்டேஷனிலிருந்து மடத்திற்கு அழைத்துவர ஏற்பாடு செய்திருந்தார்சுவாமிகள். அப்பொழுது கோடைக்காலம் . ரயில் வரும்வரை கார் வெயிலில் நின்றதால் இருக்கை சூடாகி விட்டிருந்தது. எனவே அன்னை வந்து அமருமுன் சுவாமிகள் தமது அங்கவஸ்திரத்தை எடுத்து,அருகிலிருந்த குழாய் நீரில் நனைத்துப் பிழிந்து,இருக்கையைத்துடைத்துக் குளிரச் செய்தார். அன்னை தங்குவதற்கான வசதிகளையும் மிகுந்த கவனத்துடன் செய்தார்.
மயிலாப்பூர் மடத்திற்கு எதிரில் அமைந்திருந்த சுந்தர் நிவாஸ்” என்ற ஒரு வீட்டில் அன்னை தங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சுமார் ஒரு மாத காலம் அன்னை சென்னையில் தங்கினார். மடத்தின் அருகிலுள்ள கபாலீசுவரர் கோயிலிலும்,திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலிலும்,தரிசனம் செய்தார். மாலை வேளைகளில் கடற்கரை,கோட்டை,அப்போது முற்றுப் பெறாத நிலையிலிருந்த மீன் காட்சியகம் போன்ற இடங்களைப் பார்த்தார். சென்னையில் தான் அன்னை முதன்முதலில் ரிக்ஷாவிலும் பயணம் செய்தார்.
இங்கேயும் கணக்கற்ற பக்தர்கள் அன்னையை தரிசிக்க வந்தனர். பலருக்கு தீட்சை அளித்தார். மொழியின் துணையின்றியே அன்னை பக்தர்களுக்கு தீட்சையளித்தது ஓர் அற்புத நிகழ்ச்சி. பக்தர்களுடன் சாதாரணமாகப் பேசும் போது ஒரு மொழிப்பெயர்பாளரின் துணையை நாடிய அன்னை,தீட்சை வேளையில் யாரையும் சாராமல் தாமே அவர்களுடன் பேசினார். இது பற்றி ஏற்கனவே கண்டோம். ஒரு நாள் பள்ளி மாணவிகள் வந்து அன்னையைின் திருமுன்னர் தமிழ்ப்பாடல்களைப் பாடி.வயலின் இசைத்தனர். அன்னை மிகவும் மகிழ்ந்து அந்தக் குழந்தைகளை ஆசீர்வதித்தார்.
ராமேசுவர யாத்திரையில் ராமகிருஷ்ணானந்தரும் ராம்லாலும் சேர்ந்து கொண்டனர். சென்னையிலிருந்து அனைவரும் ரயில் மூலம் மதுரை சென்றனர். அங்கே மீனாட்சி அம்மன் கோயிலை தரிசித்ததுடன் திருமலை நாயக்கர் மஹால் மற்றும் மாரியம்மன் தெப்பக்குளம் முதலான இடங்களைச் சென்று பார்த்தார்.
மதுரையில் ஒரு நாள் தங்கிவிட்டு, மறுநாள் ராமேசுவரத்தை அடைந்தனர். அங்கே அன்னை மூன்று நாட்கள் தங்கினார். ராமநாதபுரம் அரசர் சுவாமி விவேகானந்தரின் சீடரும் ராமேசுவரக்கோயிலின் அறங்காவலரும் ஆவார். தனது குருநாதருடைய குருவான அன்னை வருவதை அறிந்த அவர் அன்னையை வரவேற்கவும் ஆலய தரிசனத்திற்கும் கோயிலில் சிறப்பான ஏற்பாடுகளைச் செய்தார். மன்னரது கட்டளையின் பேரில் அன்னையும் அவருடன் சென்றவர்களும் கோயிலின் கருவறைக்குள் சென்று வழிபட முடிந்தது. அன்னை அங்குள்ள சிவலிங்கத்திற்குத் தம் கைகளாலேயே அபிஷேகம் செய்து வழிபட்டார்.ராமகிருஷ்ணானந்தர் ஏற்பாடு செய்து அளித்திருந்த நூற்றெட்டு பொன் வில்வ இலைகளால் அர்ச்சனையும் செய்தார்.
பொதுவாக லிங்கத்தின் மீதுள்ள தங்கக் கவசம் அகற்றப்படுவதில்லை. அன்னை கங்கை நீரால் அபிஷேகம் செய்ய விரும்பிய போது, அந்தக் கவசம் கழற்றப்பட்டது. அபிஷேகம் முடிந்ததும் அன்னை தம்மை மறந்த படி,நான் வைத்தது போலவே உள்ளார், என்று கூறினார். உடனே துணுக்குற்றவராய் அக்கம் பக்கம் பார்த்துவிட்டு பொருளற்ற வார்த்தைகள் எல்லாம் இப்போது என் வாயிலிருந்து வெளிவருகின்றன. என்றார். ஆனால் அவர் கூறியது அருகில் நின்ற பிரம்மசாரி கிருஷ்ணலாலின் காதுகளில் விழுந்து விட்டது.
இந்த நிகழ்ச்சிக்குப்பிறகு சில மாதங்கள் கழித்து கோயால்பாராவைச் சேர்ந்த அன்னையின் சீடரான கேதார்பாபு கல்கத்தாவிற்கு வந்து அன்னையை தரிசித்து பேசிக் கொண்டிருந்தார். அவர் அன்னையின் ராமேசுவரதரிசனத்தைப் பற்றிக் கேட்டார். அப்போதும் அன்னை மகனே, எம்பெருமான் நான் அன்று வைத்துச் சென்றது போலவே இப்போதும் உள்ளார், என்று கூறினார். அப்போது அந்தப் பக்கமாக ச் சென்று கொண்டிருந்த கோலாப்மாவின் காதுகளில் இந்தச் சொற்கள் விழுந்தன.அவருக்கு அன்னை கூறியதன் பொருள் புரிந்துவிட்டது. உடனே அவர் அன்னை தம்மையும் மீறிய நிலையில் கூறிய இந்த வார்த்தைகளால் தாம் யார் என்பதைத்தாமே வெளிப்படுத்தி விட்டார்.என்று கூறி விட்டு,அன்று நான் விட்டுச் சென்றது போலவே உள்ளது என்று அன்னை கூறியதன் உட்பொருளையும் கூறத்துவங்கினார்.ராமாவதாரத்தில் அன்னை சீதையாக அவதரித்தார். இலங்கைப்போர் முடிந்து ராமரும் சீதையும் அயோத்தி திரும்பிய போது கடற்கரை மணலால் லிங்கம் செய்து ராமபிரான் சிவபெருமானை வழிபட்டார். அப்போது அன்னையாகிய சீதையும் அருகில் இருந்தார். இப்போது கவசம் கழற்றப்பட்ட நிலையில் அதைக் கண்டதும் தமது முந்தைய அவதார நினைவுகள் மனத்தில்பளிச்சிட நான் விட்டுச் சென்றது போலவே உள்ளது.என்று கூறினார்அன்னை. இப்படியெல்லாம் கோலாப்மா விளக்கம் கூறுவதைக்கேட்ட அன்னை, என்ன இது! லிங்கத்தைப் பார்த்தபோது எனக்கு ஏற்பட்ட ஆனந்தத்தைத்தான் சொன்னேன். அதற்குப்போய் இப்படியெல்லாம் கதைகட்டிக் கொண்டிருக்கிறாயே! என்று தாம் பேசிய சொற்களின் பொருளை மறைக்க முற்பட்டார். தமது ராமேசுவர அனுபவங்களைப் பிற்காலத்தில் அன்னை சீடர்களிடம் கூறியுள்ளார். ராமேசுவரத்தில் நான் ராமலிங்கரை வழிபடுவதற்காக,தங்கத்தால் நூற்றெட்டு வில்வ இலைகளை சசி தயார் செய்து வைத்திருந்தான். நான் கோயிலுக்கு வந்ததை அறிந்த ராமநாதபுர மன்னர் கோயிலையும் சுவாமிக்கு அணிவிக்கும் நகைகளையும் கஜானாவையும் காட்டும்படி ஆணையிட்டிருந்தார். அதோடு அந்த ஆபரணங்களில் நான் எதையாவது விரும்பினால் அதை எனக்குக் கொடுக்கும் படியும் உத்தரவிட்டிருந்தார். எனக்கு அவை எதற்கு? எனவே, என் தேவைகளை எல்லாம் சசி கவனித்துக் கொள்கிறான் என்று கூறினேன். அவர்களின் மனம் வருந்துமே என்பதற்காக அருகிலிருந்த ராதுவைக் காட்டி இவளுக்கு ஏதாவது வேண்டுமானால் கொடுங்கள், என்றேன். உடனே கோயில் அதிகாரிகள் வைரம், மாணிக்கம், இவைகளால் ஆன நகைகளை அவளிடம் காண்பித்து அவளுக்குப் பிடித்ததை எடுத்துக்கொள்ளும்படி கூறினர். நகைகளைப் பார்த்த பின்னர் என் இதயம் வேகமாக அடித்துக்கொள்ளத் துவங்கியது.ஐயோ! இவள் எதையும் எடுக்கக்கூடாதே என்று எண்ணியவாறே பரபரப்போடு குருதேவரிடம் பகவானே,ராதுவிற்கு இந்த நகைகள் மீது ஆசை ஏற்பட்டுவிடக்கூடாது. என்று பிராத்தனை செய்தேன். நெடுநேரம் ஒவ்வொரு நகையாகப் பார்த்து வந்த ராது கடைசியில்,தனக்கு அவை எதுவும் வேண்டாம் என்றும். தொலைந்து போன பென்சிலுக்குப் பதிலாகப் புதிய பென்சில் ஒன்று வாங்கித் தருமாறு கூறினாள். நான் நிம்மதிப் பெருமூச்சு விட்டேன். கோயிலை விட்டு வெளியே வந்ததும் ஒரு கடையில் அரைஅணாவுக்கு அவளுக்கு ஒரு பென்சில் வாங்கிக் கொடுத்தேன்.
ராமேசுவரத்திற்கு அருகிலுள்ள புண்ணியத் தலம் தனுஷ்கோடி, அங்கே அன்னை செல்ல முடியவில்லை. எனினும் அங்குள்ள வழக்கப்படி வெள்ளியில் அம்பும் வில்லும் செய்வித்து ஒருவர் மூலம் காணிக்கை செலுத்தினார்.

No comments:
Post a Comment