விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு- பகுதி -44
விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு- பகுதி -44 -- ஒருமுறை அமெரிக்காவில் ஹாலிஸ்டர் என்ற சிறுவனுடன் புல்வெளி ஒன்றின் வழியாக நடந்துகொண்டிருந்தார். அங்கே கோல்ஃப் மைதானம் இருந்தது. விவேகானந்தர் கோல்ஃப் பற்றி அறியாதவர். எனவே மைதானத்தில் ஒரு கொடி பறந்ததைக் கண்டதும் ஹாலிஸ்டரிடம் அதுபற்றி கேட்டார். கோல்ஃப் விளையாட்டைப்பற்றி விரிவாக விளக்கினான் ஹாலிஸ்டர். பிறகு, ‘ஆரம்பத்தில் விளையாடுபவர்கள் அந்தக் கொடிக்குக் கீழ ே உள்ள குழியில் பந்தைப் போடுவதற்கு 4,7 அல்லது 9 அவகாசங்கள் தரப்படுகின்றன’ என்று கூறினான். உடனே விவேகானந்தர், ‘நான் ஒரே தடவையில் குழியில் பந்தைப் போடுகிறேன். வேண்டுமானால் பந்தயம் கட்டலாம்’ என்றார். விவேகானந்தர் இதுவரை கோல்ஃப் விளையாடாதவர், எனவே அவரால் அது சாத்தியம் இல்லை என்று கருதினான் ஹாலிஸ்டர். எனவே, ‘பந்தயத்திற்கு நான் தயார். நீங்கள் ஒரே அடியில் பந்தைக் குழிக்குள் போட்டால் நான் உங்களுக்கு 50 சென்ட் தருகிறேன்’ என்றான். ‘போடாவிட்டால் நான் ஒரு டாலர் தருகிறேன்’ என்றார் விவேகானந்தர். அப்போது அங்கே வந்த லெக்கட் என்பவரும் பந்தயத்தில் கலந்துகொண்டார். ‘விவேகானந்தர் பந்தைப் போட்டுவிட்டால் நான் 10...