Posts

Showing posts from January, 2018

ஸ்ரீமத்பகவத்கீதை -அத்தியாயம்-2

Image
ஸ்ரீமத்பகவத்கீதை -அத்தியாயம்-2 - ஸஞ்சயன் சொன்னது - 2.1 இரக்கத்தால் நெகிழ்ந்து, கண்ணீர் நிறைந்ததால் பார்வை மறைந்து, சோகத்தில் மூழ்கியிருந்த அர்ஜுனனிடம் ஸ்ரீகிருஷ்ணர் இவ்வாறு சொல்லத் தொடங்கினார் - ஸ்ரீகிருஷ்ணர் சொன்னது - 2.2.அர்ஜுனா, நெருக்கடியான இந்த நேரத்தில்,ஆரியனுக்கு இருக்காத,சுவர்க்கத்திற்கு தடையான,புகழை தடுக்கின்ற, இந்த மனச்சோர்வு எப்படி உன்னிடத்தில் வந்தது? - 2.3.பார்த்தா, அலியின் இயல்பை அடையாதே. இது உனக்கு பொருந்தாது. எதிரியை வாட்டுபவனே, இழிவான இந்த மனத்தளர்ச்சியை விட்டுவிட்டு எழுந்திரு. - 2.4. அர்ஜுனன் சொன்னது. - எதிரிகளை வென்றவரே,மது என்ற அரக்கனை கொன்றவரே,நான் போற்றக்கூடிய பீஷ்மரையும், துரோணரையும் யுத்தத்தில் எப்படி எதிர்த்து போரிடுவேன்? - 2.5.மேன்மை பொருந்திய ஆச்சார்யர்களை கொல்வதைவிட இவ்வுலகில் பிச்சைஏற்று உண்பது நிச்சயமாக நல்லது. ஆனால் பெரியவர்களை கொன்றால் ரத்தம்கலந்த பொருளையும் போகத்தையும் இவ்வுலகில் அனுபவிப்பவனாவேன் - 2.6.எது மேலானது என்று எனக்கு புரியவில்லை. நாம் ஜயிப்போமா அல்லது இவர்கள் நம்மை ஜயிப்பார்களா. யாரை கொன்றபின் நாம் உயிர்வாழ விரும்பமாட்டோமோ அந்த உறவினர்கள...

ஸ்ரீமத்பகவத்கீதை-அத்தியாயம்-1

Image
ஸ்ரீமத்பகவத்கீதை-அத்தியாயம்-1 - திருதராஷ்டிரர் சொன்னது - 1.1 ஓ ஸஞ்சயா! தர்ம சேத்திரமாகிய குரு சேத்திரத்தில் யுத்தம் செய்ய விரும்பித் திரண்ட நம்மவர்களும் பாண்டவர்களும் என்னதான் செய்தார்கள்? - 1.2 ஸஞ்சயன் சொன்னது அப்பொழுது ராஜாவாகிய துர்யோதனன் அணிவகுத்து நின்ற பாண்டவர்களுடைய படையைப் பார்த்தும் (துரோண) ஆச்சாரியரை அணுகி சொன்னான் - 1.3 ஆச்சாரியரே, உமது சிஷ்யனும் துருபதன் புதல்வனுமாகிய அவ்வல்லவனால் அணிவகுக்கப்பட்டிருக்கும் இப்பெரிய பாண்டவப் படையைப் பாரும் - 1.4,5,6 இங்கே சூரர்களாகவும், பெரிய வில்லாளிகளாகவும், யுத்தத்தில் பீமனுக்கும் அர்ஜுனனுக்கும் சமமானவருமான யுயுதானனும், விராடதேசத்தரசனும், மகாரதனாகிய துருபததேசத்து அரசனும், திருஷ்டகேதுவும், சேகிதானனும், வீரியமுடைய காசிராஜனும்,புருஜித் என்பவனும், குந்தி போஜனும், மனிதருள் முதன்மை வகிக்கும் சைகியன் என்பவனும், பேராற்றல் படைத்திருக்கும் யுதாமன்யுவும், வல்லமையுடைய படைத்திருக்கும் உத்தமௌஜஸ் என்பவனும், சுபத்திரையின் புதல்வனும், திரௌபதியின் புதல்வர்களும் கூடியிருக்கின்றனர். இவர்கள் எல்லோரும் மகாரதர்களேயாவர் - 1.7 பிராம்மண சிரேஷ்டரே, நம்மவர்களுள் ...

சூத்திரன் காலில் பிறந்தான் என்பது தவறு-புருஷ சூக்தத்தில்

சூத்திரன் காலில் பிறந்தான் என்பது தவறு. - புருஷ சூக்தத்தில், - "பிராமணஸ்ய முகமாஸீத், பாஹூ ராஜன்ய: க்ருத: ஊரு ததஸ்ய யத்வைஸ்ய:,பத்ப்யாகும் சூத்ரோ அஜாயத" - என்று உள்ளது.இந்த வரிகளுக்கு திராவிட &மிஷனரி வாதிகள் கொடுத்த விளக்கம் யாதெனில், - இந்த.வேத புருஷனின் முகம் கழுத்து. தொடை, பாதம் போன்றவற்றில் இருந்து சாதி தோன்றியது .எனவே வேதம் சாதிரீதியாக பிரிக்கின்றது என பிரச்சாரம் செய்தனர். இவ்வாறு பிரச்சாரம் செய்தால்தான் இந்து தர்மத்தை தாழ்த்தமுடியும். - ஆனால் இதன் உண்மையான அர்த்தம் யாதெனில், - பிராமணன் முகத்தில் பிறந்தான் என்பது தவறு. பிராமனணுக்கு முகமே பலம்.ஏனெனில் வேதம் ஓதும் பிராமணன் முகலட்சணத்தோடு விளங்கவேண்டும்.மேலும் வாயால் நல்லாசி வழங்கவும்.நல் உபதேசம் செய்யவும்,நல் மந்திரம் உச்சாடனம் செய்யவும் முகமே துணை.எனவே பிராமணணுக்கு முகபலம் தேவை. - அதுபோல் ஷத்திரியன் தோளில் பிறந்தான் என்பதும் தவறு. சத்திரியனுக்கு தோள் பலம் தேவை.ஏனெனில் சத்திரியன் வாள் கொண்டு எதிரிகளிடம் இருந்து மக்களை காப்பாற்றவும்,பாதுகாக்கவும்.வறியவர்களுக்கு கொடை அளித்து ஆதரிக்கவும் தோள் பலம் கொண்ட கரங்கள் தேவை. - அத...

இந்துமதத்தில் உள்ள விஞ்ஞானத்தை தெரிந்துகொள்வோம்-1

Image
இந்துமதத்தில் உள்ள விஞ்ஞானத்தை தெரிந்துகொள்வோம்-பாகம்-1 - பகவத்கீதையில் இந்த பிரபஞ்சம் சத்வம்,ரஜஸ்.தமஸ் என்ற முக்குணங்களால் ஆக்கப்பட்டிருக்கிறது என்று கூறுகிறது.(கீதை7.13)(14.5)(2.45) இதைப்பற்றி ஆராய்வோம். - ரஜஸ் என்பது விலக்கும் சக்தி. தமஸ் என்பது கவரும் சக்தி. சத்வம் என்பது இரண்டையும் சமன்படுத்தும் சக்தி.இதை முதலில் நன்றாக புரிந்துகொள்ள வேண்டும். - ஒவ்வொரு பொருளிலும் இந்த மூன்று சக்திகளும் எப்படி இயங்குகிறது என்பதை பார்ப்போம். முதலில் ஒரு அணுவை எடுத்துக்கொள்வோம். அணுவில் நியூட்ரான்,எலக்ட்ரான்,புரோட்டான் என்ற மூன்று இருக்கிறது. எலக்ட்ரான் என்பது சுற்றிக்கொண்டே இருக்கும்.எலக்ராானின் வேகம் காரணமாக அது மையத்திலிருந்து விலகிசெல்ல முயன்றுகொண்டே இருக்கும்.புரோட்டான் என்பது மையத்தில் இருப்பது எலக்ட்ரானை தன்னை நோக்கி கவர்ந்து இழுத்துக்கொண்டே இருக்கும். எலக்ரானின் சுற்றும்வேகம் குறைந்துவிட்டால் அது புரோட்டனுடன் ஒன்றாகிவிடும். அவ்வாறு நிகழாமல் தடுப்பது நியூட்ரான் என்ற இன்னொன்று. எலக்ரானும் புரோட்டானும் ஒன்று சேராமலும்,இரண்டும் தனினத்தனியே விலகிவிடாமலும் பாதுகாப்பது நியூட்ரானின் வேலை.இந்த நி...

துறவிகள் காட்டிலோ அல்லது மடங்களிலோதானே இருக்க வேண்டும். மக்களிடம் அவர்களுக்கு என்ன வேலை

Image
துறவிகள் காட்டிலோ அல்லது மடங்களிலோதானே இருக்க வேண்டும். மக்களிடம் அவர்களுக்கு என்ன வேலை? - இந்த  கேள்வி பொதுவாக பலர் கேட்கும் கேள்விதான். ஞானம் பெற வேண்டுமானால் மனிதர்களின் தொடர்பைவிட்டு புத்தரைபோல தனி இடத்திற்கு சென்று வாழவேண்டும்.பல ஆண்டுகள் தொடர்ந்த பயிற்சியின் காரணமாக ஞானம் கிடைக்கும். அவ்வாறு ஞானம் கிடைக்கும்வரை பயிற்சிகள் மேற்கொள்ளவேண்டும்.ஒருவேளை இந்த பிறவியல் ஞானம் கிடைக்காமலும் போகலாம்.  சிலருக்கு விரைவில் ஞானம் கிடைத்துவிடும்.அதற்கு குருவின் அருள் காரணமாக இருக்கலாம் அல்லது முற்பிறவிகளில் அவர்கள் செய்த தவத்தின் காரணமாக இருக்கலாம்.அவ்வாறு ஞானம் கிடைத்த பின் அதில் நிலைத்திருக்க வேண்டுமா அல்லது அந்த ஞானத்தை மற்றவர்களுக்கு தெரிவிக்க வேண்டுமா என்பது அவர்களது விருப்பம் - சிலர் ஞானம் பெற்ற பிறகும் சில ஆண்டுகள் தனிமையிலேயே வாழ்ந்து உடலைவிட்டு விட்டு முக்தி அடைவார்கள். சிலர் ஞானம் பெற்ற பிறகு அந்த ஞானத்தை மக்களுக்கு கொடுப்பதற்காக மக்களிடம் வருவார்கள். மக்கள் எல்லோரும் ஞானம் பெற தகுதி உடையவர்களாக இருக்கமாட்டார்கள்.பலர் பல படிகளில் இருப்பார்கள்,அவர்களுக்கு ஏற்றாற்போல உ...

இந்தியா-பாகிஸ்தான் பிரிவினை- இறைவனின் சித்தம் மகாத்மாகாந்தி மூலம் செயல்பட்டது

Image
- இந்தியா-பாகிஸ்தான் பிரிவினை- இறைவனின் சித்தம் மகாத்மாகாந்தி மூலம் செயல்பட்டது - இந்திய சுதந்திரத்தின்போது முஸ்லீம்கள் தனிநாடு கேட்டு போராடினார்கள்.அதற்கு அவர்கள் கூறிய காரணம் என்வென்றால்,இந்துக்களுடன் சேர்ந்து வாழமுடியாது. அவ்வாறு சேர்ந்து வாழ நேர்ந்தால் தினமும் மதம் சார்ந்த படுகொடுகொலைகள் பல இடங்களில் நடக்கும்.அதை தடுக்க வேண்டுமானால் முஸ்லீம்களுக்கு தனி நாடு வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்கள். முதலில் இந்துக்கள் இதை எதிர்த்தார்கள். தனிநாடு உருவானால் அந்த நாட்டிற்குள் உள்ள புனித தலங்களுக்கு,கோவில்களுக்கு செல்ல முடியாது,அங்குள்ள கோவில்கள் இடிக்கப்பட்டுவிடும் என்று கூறினார்கள்.ஆனால் முஸ்லீம்கள் தனிநாடு கேட்டு பிடிவாதமாக இருந்தார்கள்.வெள்ளைக்காரர்களும் இந்தியாவை பிரிக்கவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்கள்.இந்தியாமீது உள்ள கோபத்தை வெளிக்காட்ட இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்டார்கள். - முடிவில் இந்தியாவில் உள்ள முஸ்லீம்கள் அனைவரும் மேற்கு பாகிஸ்தான்,கிழக்கு பாகிஸ்தான்(பங்களாதேஷ்) செல்ல வேண்டும். அங்கு உள்ள இந்துக்கள் அனைவரும் இந்தியாவிற்கு வரவேண்டும் என்று ...

இந்த உலகத்தில் மற்றுமொரு மதப்பிரிவை உண்டாக்குவதற்காக நான் பிறக்கவில்லை

Image
சுவாமி விவேகானந்தர்--மதத்தை பரப்புவது என்றால் ஒவ்வொருவர் மீதும், வொவ்வொன்றின்மீதும் குறைசொல்வதே என்று நினைத்துக்கொள்ளாதே.உடல்,மனம்,ஆன்மீகம் ஆகிய ஒவ்வொரு நிலையிலும் மனிதர்களுக்கு உடன்பாட்டுக் கருத்துக்களை தரவேண்டும்.யாரையும் வெறுக்கக்கூடாது. நீங்கள் ஒருவரை ஒருவர் வெறுத்ததால்தான் இவ்வளவு இழிநிலையை அடைநதிருக்கிறீர்கள்.இப்போது உடன்பாட்டுக் கருத்துக்களை மட்டுமே பரப்பி மனிதர்களை உயர்த்த வேண்டும்.முதலில் இந்த வகையில் இந்துக்களை எழுச்சி பெறச்செய்ய வேண்டும். பிறகு உலகம் முழுவதையுமே விழிப்புற செய்ய வேண்டும். அதற்காகத்தான் ஸ்ரீராமகிருஷ்ணர் அவதாரம் செய்தார். யாருடைய கருத்தையும் அவர் அழித்ததில்லை.மிகமிகக் கீழ்நிலையில் உள்ள மக்களுக்கு கூட அவர் நம்பிக்கையும் உற்சாகமும் தந்து உயர்த்தி இருக்கிறார். நாம் அவரது வழியை பின்பற்றி அவர்களை மேலே தூக்கி உற்சாகப்படுத்தவேண்டும்.புரிகிறதா? ---- சுவாமி விவேகானந்தர்--- உங்கள் வரலாறு,இலக்கியம்,புராணங்கள் என்று எல்லா சாஸ்திரங்களுமே மக்களைப் பயமுறுத்த மட்டுமே செய்கின்றன. ”நரகத்திற்குத்தான் போவாய்.உனக்கு கதியே இல்லை” என்றே அவை மனிதர்களிடம் சொல்கின்றன.அதனால் தான் இந்...

யாரெல்லாம் ஹிந்துக்கள்?இந்துமதம் என்ற பெயரை ஏன் மாற்றக்கூடாது?

Image
யாரெல்லாம் ஹிந்துக்கள்?இந்துமதம் என்ற பெயரை ஏன் மாற்றக்கூடாது? - ஸ்ரீகிருஷ்ணர் வாழ்ந்த அன்றைய பாரதத்தில் மக்கள் சிறுசிறு குழுக்களாக வாழ்ந்துவந்தார்கள்.பல அரசர்கள் ஆட்சிபுரிந்து வந்தாலும்,அனைவரிடமும் ஒரே விதமான கலாச்சாரம்தான் நிலவி வந்தது.பாண்டிய மன்னனும் யுதிஷ்டிரரும் ஒரே அணியில் இருந்தார்கள். சிவன் பெரியவனா?விஷ்ணு பெரியவனா? போன்ற கருத்துக்கள் அப்போது எழவில்லை.சைவமதமும் வைணவமதமும் அப்போது தோன்றவில்லை. ஸ்ரீ கிருஷ்ணரின் காலத்தில் இரண்டு பிரிவுகள்தான் இருந்தன ஒன்று வேதத்தின் கர்மகாண்டத்தை பின்பற்றுபவர்கள் இன்னொன்று வேதத்தின் ஞான காண்டத்தை பின்பற்றியவர்கள். சாங்கியம் மற்றும் யோகம் என்று அதை அழைத்தார்கள். சாங்கியர்கள் துறவு வாழ்க்கைக்கு முக்கியத்துவம் கொடுத்தார்கள். யோகியர் இல்லற வாழ்க்கைக்கு முக்கியத்துவம் கொடுத்தார்கள்.ஸ்ரீ கிருஷ்ணர் இவை இரண்டையும் சமரசப்படுத்தி இல்லறவாழ்க்கையை முறையாக மேற்கொள்ளமல் துறவு வாழ்க்கைக்கு சென்றால் தோல்வி அடைய நேரலாம் என்றும். இல்லறத்தில் இருப்பவன் அடையும் அதே பலனையே துறவறத்தில் இருப்பவனும் அடைகிறான் என்று போதித்தார். - அவரது காலத்தி...