அன்னை சாரதாதேவியின் வாழ்க்கை வரலாறு-பாகம்-45
ஆகஸ்ட் 15 எலும்பும்
தோலுமாக ஆகிவிட்டிருந்தார் குருதேவர். பல தலையணைகளை வைத்து அதில் சாய்ந்திருந்தார்.
எங்கும் நிசப்தம். எல்லோரிடமும் நம்பிக்கையின் கடைசி ப்பிடியும் தளர்ந்து கொண்டிருந்தது.
அவரால் பேச முடியாமல் போய்விட்டதோ என்று தோன்றியது. அன்று முழுவதும் அன்னைக்கு ச்சகுனமே
சரியில்லை.கிச்சடி சமைத்தால் அது அடிப்பிடித்துக் கொண்டது. மாடியில் காயப்போட்டிருந்த
துணி காணாமல் போனது. நீர் இருந்த பானை ஒன்றைத் தூக்கினார்.அது கீழே விழுந்து சுக்குநூறாகியது.
படபடக்கும் நெஞ்சுடன் அன்னை லட்சுமியுடன் குருதேவரின் அறைக்கு வந்தார். அப்போது குருதேவர்,
இதோ பார், எங்கு பார்த்தாலும் ஒரே தண்ணீர் மயமாக இருக்கிறது. அந்தத் தண்ணீர் வழியாக
நான் எங்கோ தொலைதூரத்திற்குப் போவது போலிருக்கிறது” என்றார். இதற்கு மேலும் தாங்க முடியாத
அன்னை அழ ஆரம்பித்தார். குருதேவர் தொடர்ந்தார். கவலைப்படாதே. இப்போதிருப்பது போலவே
நீ இனியும் இருப்பாய். என்னைக் கவனித்துக் கொண்டது போலவே அவர்கள் (நரேந்திரர் முதலானோர்)
உன்னையும் கவனித்துக் கொள்வார்கள். லட்சுமியைப் பார்த்துக்கொள் என்றார்.
அன்று நள்ளிரவில்
அனைவரின் நெஞ்சையும் துக்கத்தால் நிறைத்துவிட்டு குருதேவர் மகா சமாதியில்” ஆழ்ந்தார்.
அன்னை அப்போது அருகில் இல்லை. விவரம் தெரிந்ததும்விரைந்து படுக்கையருகில் வந்து ”அம்மா”
காளி நீஎங்கே போய் விட்டாய்? என்று கதறினார். அனைவரின் இதயமும் கலங்கியது. குருதேவரின்
புனிதவுடல் காசிப்பூர் மயானத்தில் எரியூட்டப்பட்டது. அஸ்தி ஒரு செம்புப் பாத்திரத்தில்
சேகரிக்கப்பட்டு குருதேவர் படுத்திருந்த படுக்கையின் மீது வைக்கப்பட்டது.
முப்பத்து மூன்று வயது நிரம்பியிருந்த அன்னை அன்று
மாலையில் விதவைக் கோலம் பூணலானார். கணவன் இறந்தால் அல்லவா விதவை கோலம் பூண வேண்டும்.
அவரது கணவர் இறந்துவிட்டாரா? மரணமே இல்லாதவராயிற்றே அவர்! அன்னை தம் தங்க வளையல்களைக்
கழற்ற முற்பட்டதும் அவர் முன் தோன்றினார். நான் இறந்து போனேன் என்றா நீ உன் சுமங்கலி
கோலத்தைக் கலைக்கிறாய்? நான் இறக்கவில்லை.இதோ இங்கேயே இருக்கிறேன்” என்று கூறி அன்னையின்
முயற்சியைத்தடுத்தார். கோடையில் குளிர்த் தென்றலாய் வந்த குருதேவரின் காட்சியும் வார்த்தைகளும் அன்னையின் நொந்த மனத்தை
இதமாக வருடிக்கொடுத்தன. கரையில்லா வெள்ளைப் புடவை ஒன்றை அன்னைக்காக பலராம் போஸ் வாங்கி
வந்தார். கோலாப்மாவிடம் அதைக் கொடுத்து, அன்னையிடம் தருமாறு வேண்டினார். வெள்ளைப்புடவையை
நான் கொடுப்பதா,? என்று வேதனையில் கூவினார் கோலாப்மா. ஆனால் அந்த புடவையோடு அன்னையிடம்
சென்றபோது, அன்னை ஏற்கனவே தாம் அணிந்திருந்த புடவையின் அகலமான சிவப்புக் கரையில் பெரும்பகுதியைத் தாமே கிழித்துவிட்டு, மெல்லிய கரையுடன் அதனை அணிந்து
கொண்டிருந்தார்.
தொடர்ந்த நாட்களில்
மேலும் இருமுறை தம் வளையல்களைக் கழற்ற முற்பட்டார் அன்னை. அப்போதும் குருதேவரால் முன்பு
போலவே தடுக்கப்பட்டார். அான் பின் வளையல்களுடன் மெல்லிய கரையிட்ட சேலையுடனும் நித்திய
சுமங்கலியாகவே வாழ்ந்தார் அவர்.
--
தொடரும்...
-
ஸ்ரீராமகிருஷ்ணரின்
ஆன்மீகக் குழுவில் இணைய 9789374109 என்ற எண்ணிற்கு வாட்ஸ்அப் மூலம் ரிக்கொஸ்ட் மெசேஜ்
அனுப்பவும்
No comments:
Post a Comment