இந்துமதம்-வகுப்பு-23
இந்துமதம்-வகுப்பு-23 நாள்-14-6-2020 --- சதி (உடன்கட்டை ஏறுதல்) ---- இந்துமதத்தை தற்காலத்தில் கேலி செய்பவர்களில் பலர் உடன்கட்டை ஏறும் பழக்கத்தைப்பற்றி பேசுகிறார்கள். தற்காலத்தில் அவைகள் சட்டப்படி நிறுத்ப்பட்டுள்ள. இந்துக்களிடையே ஒரு காலத்தில் இந்த பழக்கம் பரவலாக காணப்பட்டுள்ளது. இது ஏன் ஏற்பட்டது பின்பு ஏன் நீக்கப்பட்டது என்பதை நாம் தெரிந்துவைத்துக்கொள்வது நல்லது. - சதி என்னும் சொல்லின் பொருள் நல்ல மனைவி. தக்ஷனின் மகளான சதி தேவி(பார்வதி) தனது தந்தையின் யாகத்தில் தன் கணவனுக்கு(சிவன்) ஏற்பட்ட அவமானம் தாளாது அக்னிக்கு தன்னை இறையாக்கிக்கொண்டாள். இதன் தாக்கமாகவே சதி எனும் பெயருடன் உடன்கட்டை ஏறும் வழமை கைக்கொள்ளப்பட்டது. சதிபதி (பார்வதியின் கணவன் சிவன்) -- வாரிசு இல்லாமல் அரசன் இறந்துவிட்டாலோ,போரின் போது அரசன் இறந்துவிட்டாலோ மனைவி அரசனுடன் சேர்ந்து இறந்துபோவாள். அப்படி இறக்காவிட்டால் அடுத்து வரும் அரசன் இவளை அந்தப்புறத்தில் அமர்த்திவிடுவான்.இவளது கற்பு களங்கமடைந்துவிடும் அரசருடன் அரசியர் சிதையேறவேண்டுமென்று எந்த நெறிநூலும் வகுத்துரைக்கவில்லை. அது போரில் இறந்த அரசர்களின் மனைவியரின் வழக்கம் மட...