Saturday, 22 June 2019

அன்னை சாரதாதேவியின் வாழ்க்கை வரலாறு-பாகம்-92

அன்னை சாரதாதேவியின் வாழ்க்கை வரலாறு-பாகம்-92

ஜெயராம்பாடியில் இத்தகைய ஒரு சம்பவம் நடந்தது. வழக்கமாக அன்னைக்குத் தொண்டு செய்கின்ற சீடர் ஒரு நாள் வெளியே போயிருந்தார். அவர் திரும்பி வந்த போது வராந்தாவில் ஒரு பாயில் அன்னை படுத்திருந்தார். சீடர் வந்ததும் அன்னை அவரிடம் வயதான மனிதர்  ஒருவர் வந்தார்.அவர் தொலைவில் வருவதைப் பார்த்துவுடனே நான் என் அறைக்குள் சென்று படுக்கையில் உடகார்ந்து கொண்டேன். அவர் என் பாதங்களைத் தொட்டு வணங்குவதில் மிகுந்த ஆர்வம் உடையவராக இருந்தார். நான் எவ்வளவோ தடுத்துப் பின்வாங்கியும், பிடிவாதமாக அவர் என் பாதங்களைத் தொட்டு வணங்கினார். அந்த நேரத்திலிருந்து கால்களிலும் வயிற்றிலும் பொறுக்க முடியாத வலியால் நான் துடித்துக் கொண்டிருக்கிறேன். மூன்று நான்கு முறை பாதங்களை கழுவி விட்டேன்.அப்படியும் எரிச்சல் நிற்கவில்லை. நீ மட்டும் இங்கே இருந்திருந்தால் என் சைகை மூலம் அந்த மனிதரைப்பற்றித் தெரிந்து கொண்டு,அவர் என் கால்களைத் தொடாதபடி செய்திருப்பாய் என்றார்.
கல்கத்தாவில் இவ்வாறு பலமுறை நிகழ்வதுண்டு.குறிப்பாகத் திருவிழா நாட்களில் எல்லோரும் வந்து அன்னையின் திருவடிகளைத் தொட்டு வணங்கும்போது இது ஓர அன்றாட நிகழ்ச்சியாகவே இருக்கும். சில வேளைகளில் தமக்கு ஏற்படும்  தமக்கு ஏற்படும் வேதனையை மற்றவர்களிடம் சொல்ல நேர்ந்தால் உடனே உடனே அன்னை, இவற்றையெல்லாம்  சரத்திடம் சொல்லிவிடாதே.அதன் பிறகு மக்கள் இங்கு வருவதையே  அவன் நிறுத்தி விடுவான்  என்பதையும் கூறுவார். அன்னையின் கருணை அத்தகையதாக இருந்தது. தாம் துன்பப்பட்டாலும் தம்மை வணங்குவதால் மக்கள் பெறும் ஆறுதலைத் தடுக்க அவர் விரும்பவில்லை.
ஒரு முறை கோயால்பாரா ஆசிரமத்தில் அவர் இருந்த போது சீடர் ஒருவர், தாம் அன்னையின் பாதங்களைத் தொட்டால் தன்னுடைய பாவத்தின் காரணமாக அவருக்கு வேதனை தோன்றுமோ என்று தயங்கி நின்றார். அப்போது அன்னை மகனே அதைப்பற்றி எல்லாம் நி கவலைப்படாதே.நாங்கள் இதற்காகத்தான் பிறந்திருக்கிறோம்.மற்றவர்களுடைய பாவங்களையும் துன்பங்களையும் நாங்கள்“ ஏற்று அனுபவிக்கவில்லை என்றால் வேறு யார் செய்வார்கள்? அவர்களின் பொறுப்புகளை எல்லாம் யார் தாம் ஏற்றுக் கொள்வார்கள்?என்றார்.
இறுதி நாட்களில் அன்னையின் உடல் மிகவும் பலவீனமாகி,பிறருடைய உதவியின்றி எழவோ அமரவோ முடியாத நிலையில் இருந்தார். அப்போது சீடர்கள் அன்னையின் வேதனையைப்பற்றித் தங்களுக்குள் பேசிக் கொண்டிருந்தார்கள். அவர்களள் ஒருவர் அன்னை உடல் நலமடைந்த பின்னர் தீட்சைக்கென்று யாரையும் அவரிடம் அனுமதிக்கக்கூடாது.எண்ணற்றோரின் பாவங்களை ஏற்றுக் கொண்டதால் தானே அவர் இப்படித் துன்புற நேர்கிறது! என்று கூறினார். இதைக்கேளிவியுற்ற அன்னை மெல்ல ச் சிரித்தபடி நீ ஏன் இப்படிப் பேசுகிறாய்? வெறும் ரசகுல்லா சாப்பிடுவதற்காகத் தான் குருதேவர் இந்த உலகத்திற்கு வந்ததாக நினைத்து கொண்டிருக்கிறாயா? என்றார்.
தீட்சை தந்தால் அன்னை மிகவும் துன்புறுகிறார்  என்பதை அறிந்து வேதனையுற்ற ஒரு பக்தர் ஒரு முறை அன்னையிடம் அம்மா பக்தர்களின் பாவங்களை ஏற்று கொண்டதால் உங்களுக்கு வாதநோய் வந்து நீங்கள் துன்பப்படுவதைக் கண்டு மிகுந்த வேதனையாக இருக்கிறது. நான் தங்களிடம் உள்ளமுருகி ஒரு வேண்டுகோள் விடுக்கிறேன். என் காரணமாக நீங்கள் துன்பப்படக்கூடாது என் வினைப்பயன்களுக்கான  துன்பம் முழுவதையும் நானே அனுபவிக்கும்படி எனக்கு அருள் செய்ய வேண்டும் என்றார். இதைக்கேட்ட  அன்னை அமைதியாக, அதுஎப்படி முடியும் மகனே!அதை எப்படி என்னால் அனுமதிக்க முடியும்?நீ சுகமாக இரு! உனக்காக என்னைத்துயரப்படவிடு என்றார்.
இது வரை நாம் கண்ட மூன்று பண்புகளும் ஓர் உண்மை குருவிடம் காணப்படக் கூடியவைதாம்.சாதாரண குரு மிகச்சிலருக்கு நாம் மேற்கண்டது போல் உண்மை வழிகாட்ட முடியும். ஆனால் அன்னை ஆன்மீக ஆற்றலின் சுரங்கமாக இருந்ததால் அவரால் எண்ணற்றோருக்கு வழிகாட்ட முடிந்தது. ஆனால் அன்னையின் தனித்தன்மை இதில் இல்லை.ஒரு சாதாரணகுருவிலிருந்து அன்னை இரண்டு விஷயங்களில் வேறுபட்டு நிற்கிறார்.
அவை-அன்பு,2)அபயம்,. அன்னையிடம் சென்ற ஒவ்வொருவருமே இதனை உணர்ந்தனர். பிரபஞ்சம் தழுவிய தாய்மையையும் தாம் குருதேவரின் அருள் சக்தி என்ற உணர்வையும் அடிப்படையாகக் கொண்டிருந்தால் தான் உலகம் இதுவரை கண்டிராத இத்தகைய அன்பை அவரால் அனைவரிடமும் செலுத்த முடிந்தது. சென்றோர் அனைவருக்கும் அவரால் அபயம் அளிக்க முடிந்தது.
-
-
தொடரும்...
-
ஸ்ரீராமகிருஷ்ணரின் ஆன்மீகக் குழுவில் இணைய 9789374109 என்ற எண்ணிற்கு வாட்ஸ்அப் மூலம் ரிக்கொஸ்ட் மெசேஜ் அனுப்பவும்


No comments:

Post a Comment