சுவாமி விவேகானந்தரின் விரிவான வாழ்க்கை வரலாறு-பாகம்-42
சுவாமி விவேகானந்தரின் விரிவான வாழ்க்கை வரலாறு-பாகம்-42 🌸 ஓவிய நுணுக்கம் ........................................ அந்தக் காலத்தில் பிரெஞ்சு ஓவியக் கலையில் மிகவும் புகழ் பெற்றிருந்த ஓவியர் ஒருவர், சுவாமிஜியின் வேதாந்தக் கருத்துக்களில் ஆர்வம் கொண்டிருந்தார். அவர் தாம் வரைந்த ஓவியங்கள் இடம் பெற்ற நாடகத்திற்கு சுவாமிஜியைச் சிறப்பு விருந்தினராக அழைத்திருந்தார். சுவாமிஜிக்கு பிரெஞ்சு மொழி தெரியும்.ஆதலால் அவர் நாடகத்தைக் கூர்ந்து கவனித்தார். நாடகத்தின் நடுவில் திரையில் தெரிந்த ஓர் ஓவியத்தில் ஒரு தவறு இருப்பதை சுவாமிஜி கண்டார். அது ஒரு தொழில் நுட்பத் தவறு. அந்தத் தவறு சரி செய்யப் பட்டிருந்தால், நாடகம் இன்னும் சிறப்பாக அமைந்திருக்கும் என்று சுவாமிஜி கருதினார். நாடகம் முடிந்தது. சிறப்பு விருந்தினராகியசுவாமிஜியிடம் நாடகம் பற்றிய கருத்தை அறிய அந்த ஓவியரும் அரங்கின் நிர்வாகியும் வந்தார்கள். அப்போது சுவாமிஜி தாம் நாடகத்தை மிகவும் ரசித்ததை அவர்களிடம் தெரிவித்தார். அதோடு, அவர் தாம் கண்ட தொழில் நுட்ப த் தவறையும் அவர்களுக்குச் சுட்டிக் காட்டினார். அதைக்கேட்டதும், பிரெஞ்சு...