ஆவி உலகம்-தொடர்-பாகம்-11
ஆவி உலகம் - தொடர் - பாகம் -11 .. ஆவியால் பாதிக்கப்பட்ட மனிதனை குணப்படுத்துவது எப்படி ? .. ஆவிகளைப்பற்றி நாம் தொடர்ந்து பார்த்துவருகிறோம் . மனிதனுக்கு தூலஉடல் சூட்சுஉடல் இருப்பதைப்பார்த்தோம் . ஆவிகளுக்கு தூலஉடல் இல்லை . சூட்சும உடல் மட்டுமே இருப்பதையும் விளக்கியிருக்கிறேன் . சில நேரங்களில் பலவீனமான மனிதனின் உடலுக்குள் இந்த ஆவிகள் புகுந்து , அந்த தூலஉடலை தங்கள் உடலாக கருதத்தொடங்கிவிடுகின்றன . ஏற்கனவே ஒரு சூட்சுஉடல் உள்ளது , அத்தோடு இந்த ஆவிகளின் சூட்சுமஉடலும் அதற்குள் வந்துவிடுகிறது . இப்போது ஒரு தூலஉடலுக்குள் இரண்டு சூட்சுமஉடல் வந்துவிட்டது . .. இதனால் மனிதன் சாதாரணநிலையிலிருந்து அவ்வப்போது விபரீதமான மனநிலைக்கு சென்றுவிடுகிறான் . தேவையிலலாமல் கத்துவது , கோபப்படுவது , எதையெதையோ கண்டு பயப்படுவது . பிறர்மீது எரிச்சலடைவது போன்ற மனிநிலைக்கு அவ்வப்போது செல்கிறான் . சில ஆவிகள் அதிகம் ஆக்ரோசமாக இருக்கும் எனவே அந்த உடலை ஆட்டிப்படைக்கும் . இதனால் ஆவி பாதிக்கப்பட்டவர்களால் ஓரிடத்தில் சும்மா இருக்கமு...