ஆன்மீகமும்-விஞ்ஞானமும்-பாகம்-10
ஆன்மீகமும் - விஞ்ஞானமும் - பாகம் -10 .. இந்த உலகத்தில் ஏன் துன்பம் இருக்கிறது? .. இந்த உலகமே துன்பத்தால்தான் சூழப்பட்டுள்ளது என்றே நமது முன்னோர்களும் கூறியுள்ளார்கள். நமக்கு கிடைக்கும் உணவே பிற உயிர்களைக் கொன்றோ அல்லது அவைகளை அழித்தோதான் கிடைக்கிறது. ஒரு உயிர் வாழவேண்டுமானால் இன்னோர் உயிர் அழிய வேண்டியிருக்கிறது. இது ஏன்? கடவுள் ஏன் இப்படிப்பட்ட துன்பம் நிறைந்த உலகைப் படைக்க வேண்டும்? .. நாம் சிறுமதி கொண்டவர்கள். நமக்கு முன்னால் உள்ள சிறிய உலகை மட்டுமே நம்மால் அறிய முடியும். பரந்து விரிந்த பிரபஞ்சத்தைப்பற்றி நம்மால் அறிய முடிவதில்லை. ஒரு சிறிய புழுவுக்கு மிகச்சிறிய இடத்தைப்பற்றிய புரிதல் மட்டுமே உள்ளது. அதேபோல பரந்து விரிந்த இந்த பிரபஞ்சத்தில் நாம் அறிந்தது மிகக்குறைவே. .. இந்த பரந்த பிரபஞ்சத்தில் எங்கும் எதிலும் சமநிலையே நிலவுகிறது. அதை நாம் பார்க்கும் சமகண்ணோட்டத்தில் பார்த்தால்தான் புரிந்துகொள்ள முடியும். ஒரு இடத்தில் மேடு இருந்தால் அதன் பக்கத்தில் பள்ளம் இருக்கும். வெளிச்சம் எங்கே முடிகிறதோ அங்கே இருள் இருக்கும். இன்பம் எங்கே முடிகிறதோ அங்கே துன்பம் இருக்கும். நாம் ஒன்றை மட்டுமே வி...