Posts

Showing posts from 2025

கடவுள் வாழ்த்து-திருக்குறள் அதிகாரம்-1 (திருக்குறளும் சனாதன தர்மமும் ஒன்றே)

Image

Theni Rinkaramida-Filling a pitcher of water: Parables told by Sri Ramak...

Image

தூக்கமும் மரணமும்

  தூக்கமும் மரணமும் .. இன்று இரவு நாம் தூங்க செல்கிறோம்.இதோடு நம் வாழ்க்கை முடிந்தது.இனி நாளை காலை நாம் கண்விழிக்க மாட்டோம். தூக்கத்திலேயே உயிர்போய்விடும். அதன் பிறகு எதுவும் நமக்குத் தெரியாது.நம்மையும் நமக்குத்தெரியாது,வெளி உலகமும் தெரியாது,எதுவுமே தெரியாது.அப்படியே தூக்கத்திலேயே மாண்டுவிடுவோம் என்று வைத்துக்கொள்வோம். இன்று இரவு யாராவது தூங்க செல்வார்களா? நாளை நாம் கண்விழிக்கப்போகிறோம் என்ற எண்ணம் இருப்பதால்தான் இன்று தூங்கச் செல்கிறோம். நாளை கண்விழிக்க மாட்டோம் என்று தெரிந்தால்,யாரும் தூங்க செல்ல மாட்டார்கள். தூக்கம் என்பது, அதுவும் தொடர்ந்த தூக்கம் என்பது நல்லதுதானே அப்படி இருக்கும்போது நாம் ஏன் தொடர்ந்த நிலையான தூக்கத்தை விரும்புவதில்லை? ஏனென்றால் அதுதான் உயிரின் இயல்பு. நிலையான தூக்கம் என்பது மரணம். அந்த மரணத்தை எந்த உயிரும் விரும்புவதில்லை. .. தூக்கத்திலேயே உயிர்போய்விட வேண்டும் என்று சில நேரங்களில் மனிதர்கள் கூறுவார்கள்.ஆனால் உள் மனதில் அப்படி எதுவும் நடந்துவிடக்கூடாது என்ற எண்ணமும் இருக்கும். எவ்வளவுதான் துன்பங்கள் வந்தாலும் அதை தாங்கிக்கொண்டு வாழவேண்ட...

ஆன்மீகமும்-விஞ்ஞானமும்-பாகம்-19

 ஆன்மீகமும்-விஞ்ஞானமும்-பாகம்-19 .. அணுக்களாக நாம் மாறாமல் அணுவை பார்க்க முடியாது. .. நாம் எதைப் பார்க்கிறோமோ அதுவாக ஆகிறோம்.நாமே அதுவாக இருக்கிறோம்,பிறகு அதையே நாம் பார்க்கிறோம் என்று நமது தத்துவங்கள் கூறுகின்றன.  நம்மைசுற்றியுள்ள அணுக்களை நம்மால் ஏன் காண முடிவதில்லை? நாம் அணுக்களாக மாறினால் அதைக் காணமுடியும். ஒரு நுண்ணோக்கி மூலமாக அணுவைப் பார்க்கும்போது குறிப்பிட்ட அந்த நேரத்திற்கு நாம் ஒரு அணுவாக இருக்கிறோம். நாம் அணுவாக இருப்பதால்தான் நம் கண்களுக்கு அணுக்கள் தெரிகின்றன. அதேபோல பிரபஞ்சத்தில் உள்ள galaxy யை பார்க்கும்போது நாம் galaxy. ஆக இருக்கிறோம். இது பற்றி விஞ்ஞானிகள் சிறிதும் யோசிப்பதில்லை.அதனால்தான் அவர்களால் பல கேள்விகளுக்கு விடைகாண முடிவதில்லை. மகான்கள் மிகப்பெரிய சூரியன்களையும், கிரகங்களையும் தியானத்தில் ஆழந்திருந்தபோது கண்டதாக கூறியிருக்கிறார்கள். அவர்களால் எப்படி முடிந்தது? அவர்கள் தங்களை தற்காலிகமாக மிகப்பெரியதாக மாற்றிக்கொண்டார்கள். சிலர் galaxy. அளவுக்கு தங்களை பெரிதாக்கிக்கொண்டார்கள். அதனால் அவர்களால் பலவற்றைக் காண முடிந்தது. மனிதனால் இப்படி பெரிதாக முடியுமா? ...

இந்தியா உலகின் வல்லரசாக மாறும் காலம் வந்துகொண்டிருக்கிறது.

 இந்தியா உலகின் வல்லரசாக மாறும் காலம் வந்துகொண்டிருக்கிறது. .. ஒரு மனிதன் வெற்றிபெற வேண்டுமானால் தன்னளவில் நல்லவனாகவும்,நேர்மையானவனாகவும் இருக்க வேண்டும். வெளிஉலகில் அதிக அளவில் எதிர்ப்புகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.  ஏன் எதிர்ப்புகளை எதிர்கொள்ள வேண்டும்? சக்தியை அதிகரித்துக்கொள்ள இதுதான் வழி. ஒவ்வொரு மனிதனிடமும் ஒரு குறிப்பிட்ட அளவு சக்தி உள்ளது. தீயவர்களிடமும் ஓரளவு சக்தி உள்ளது. இந்த உலகில் ஒருவன் சாதிக்க வேண்டுமானால் அவனுக்கு நிறைய சக்தி தேவை. . ஒரு நல்லவனை தீயவன் எதிர்க்கும்போது, தீயவனின் சக்தி நல்லவனிடம் வருகிறது. அதேபோல ஒரு தீயவனிடம் நல்லவன் சமாதானமாக போகும்போது,அல்லது எதிர்க்காதபோது நல்லவனின் சக்தி தீயவனிடம் போகிறது. இதனால்தான் பிரபலமான  சில நல்லவர்கள் ஒரு காலத்தில் தீயவர்களின் சகவாசம் காரணமாக காணாமல் போய்விடுகிறார்கள். அவர்களது சக்தியை தீயவர்கள் அபகரித்துக்கொள்கிறார்கள். எனவே தீயவனிடம் சமாதானம் செய்வது நல்லவனுக்கு நல்லதல்ல .. நல்லவனை தீயவன் தொடர்ந்து துன்புறுத்தும்போதும், அவமதிக்கும்போதும். தீயவனுடைய சக்தி நல்லவனுக்கு வருகிறது. இவ்வாறு நல்லவன் அதிக சக்தியைப்பெ...

வேதங்களின் பார்வையில் யார் பிராமணன்? சாமவேதம்- வஜ்ரஸுசிகோபநிடதம்

 வேதங்களின் பார்வையில் யார் பிராமணன்? - சாமவேதம்-  வஜ்ரஸுசிகோபநிடதம் - 1.ஓம். வஜ்ரஸுசீ என்ற உபநிடதத்தை கூறுகிறேன்.அது அஞ்ஞானத்தைப் பிளக்கும் சாஸ்திரம். ஞானமில்லாதவர்களுக்கு தூஷணமாகவும் ஞானக்கண் படைத்தவர்களுக்கு பூஷணமாகவும் விளங்குவது அது - 2. பிராமணர் சத்திரியர்  வைசியர் சூத்திரர் என்று நான்கு வர்ணங்கள் அவற்றுர் பிராமணர் முக்கியமானவர் என்று வேதத்தின் கருத்தையொட்டி ஸ்மிருதிகளும் கூறும்.அதைப்பற்றி ஆராயவேண்டும். பிராமணன் என்றால் யார்? ஜீவனா,தேகமா,ஜாதியா,ஞானமா,கர்மமா,தர்மமா? - 3.முதலில் ஜீவன் பிராமணன் என்றால் அது வருவதும் போவதுமாக பல பிறவிகள் பிறக்கிறது.பல தேகங்களில் ஜீவன் ஒரே வடிவாயிருப்பதாலும்,ஒருவனேயாயிருப்பதாலும்,கர்ம வசத்தால் பல உடல்கள் ஏற்படுவதாலும்,எல்லா உடல்களிலும் ஜீவன் ஒரேமாதிரி இருப்பதாலும் ஜீவனை பிராமணன் என்று கூற இயலாது.(ஜீவன் பல பிறவிகளில் பல உடல்களில் பிறக்கிறது.சில பிறவிகளில் மிருக உடல்கள்கூட கிடைக்கலாம். ஆகவே ஜீவன்.பிராமணன் அல்ல) - 4. ஆனால் தேகம் பிராம்மணன் என்று நினைத்தால் அதுவும் பொருந்தாது. உயர்ஜாதிமுதல் தாழ்ந்தசாதிவரை உள்ள அனைவருக்கும் உடல் ஒரே வடிவாக பஞ்...

ஆன்மீகமும்-விஞ்ஞானமும்-பாகம்-18

 ஆன்மீகமும்-விஞ்ஞானமும்-பாகம்-18 .. ஆண்பெண் தேடல் .. இயற்கை படைப்பில் மிருகங்களைப் பொறுத்தவரை ஆண் தனியாகவும்,பெண் தனியாகவும் படைக்கப்பட்டுள்ளது. பெண்ணைத்தேடி ஆண் அலையவேண்டும்,அப்போது போட்டி,போராட்டம்,பொறாமை அனைத்தும் ஏற்படவேண்டும் என்ற ரீதியில் உள்ளது. ஆனால் தாவரங்களைப் பொறுத்தவரையில் பெரும்பாலான தாவரங்கள் ஆண்தன்மை,பெண்தன்மை இரண்டும் சேர்ந்தே படைக்கப்பட்டுள்ளது. அதனால் இனப்பெருக்கத்திற்கான போட்டி,போராட்டம் இல்லை ஆனால் அவைகளால் இடம்பெயர முடியாது. வெயிலோ,பனியோ,புயலோ அவைகளிலிருந்து தப்பித்து செல்ல முடியாது. அவைகள் இயற்கையின் அடிமைகளாக இருக்கின்றன. சுதந்திரம் இல்லை. மிருகங்களுக்கு ஓரளவு சுதந்திரம் இருக்கிறது,ஆனால் முழுமைநிலையில் இல்லை. . மனிதன் விலங்கின் வகையை சேர்ந்தவன் என்பதால் ஆண் தனியாகவும். பெண் தனியாகவும் படைக்கப்பட்டுள்ளது. ஆனால் ஒரு உயிர் உருவாகும் ஆரம்பக் கட்டத்தைப் பார்த்தால் அது ஆணாகவும் இல்லை,பெண்ணாகவும் இல்லை. உயிரின் ஆரம்பப்புள்ளியில் பால் வேறுபாடு இல்லை. .. படைப்பின் ஆரம்பத்தில் முழுமை இருந்தது. அந்த முழுமை இரண்டாக பிரிந்து ஒன்று கவரும் சக்தியாகவும் இன்னொன்று விலக்கும் ச...

ஐந்தாம் வேதம் எது?

 ஐந்தாம் வேதம் எது? .. மிகப்பழைய காலத்தில் வேதங்கள் தொகுக்கப்படவில்லை. பிறகு பல்வேறு இடங்களில் வாழ்ந்த பல்வேறு ரிஷிகளிடம் வெளிப்பட்ட வேதத்தை தொகுத்தார்கள்.இதுதான் ”இருக்” வேதம். இருக்கு என்ற வார்த்தை இதிலிருந்துதான் உருவானது. .. பிறகு பல ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு இன்னும் பல ரிஷிகளிடம் வெளிப்பட்ட உண்மைகளை யஜுர்வேதம் என்ற பெயரில் தொகுத்தார்கள். இது மிகப்பெரிய வேதத்தொகுப்பு.இதை மனப்பாடம் செய்வதில் சிரமம் இருந்ததால் இதை இரண்டாக பிரித்தார்கள். அவை சுக்ல யஜுர்வேதம்,கிருஷ்ண யஜுர்வேதம். இன்னும் சில ஆயிரம் ஆண்டுகள் கழித்து சாம வேதத்தை தொகுத்தார்கள். மகாபாரத காலத்தில் அதர்வண வேதம் தொகுக்கப்படவில்லை. மகாபாரதத்தில் பல இடங்களில் மூன்று வேதங்கள் பற்றித்தான் சொல்லப்பட்டுள்ளது. மகாபாரத காலத்திற்கு பிறகு அதர்வணவேதம் தொகுக்கப்பட்டது. . மகாபாரதபோர் நிறைவடைந்ததும் கலிகாலம் துவங்கியது. மனப்பாடம் செய்யும் அளவுக்கு மக்களுக்கு நினைவாற்றல் இருக்காது என்பதால் முதன்முதலில் மகாபாரதம் எழுத்துவடிவில் வந்தது. விநாயகர் இதை எழுதினார். பிறகு இதிலிருந்து பல பிரதிகள் எடுத்துக்கொண்டார்கள். இதில் பழைய காலத்து ரிஷிகள்...

ஆன்மீகமும்-விஞ்ஞானமும்-பாகம்-17

 ஆன்மீகமும்-விஞ்ஞானமும்-பாகம்-17 .. மனத்தின் மூலம் சாப்பிடுவது .. உடலை வளர்த்தேன் மனத்தை வளர்த்தேன். மனத்தை வளர்த்தேன் உடலை வளர்த்தேன் என்ற கருத்து ஒன்று உண்டு. நல்ல சுவையான சத்தான உணவுகளை சாப்பிடும்போது மனம் சந்தோசமடைகிறது. உடல் வளர்கிறது. இதை இப்படி மாற்றி யோசித்துப் பாருங்கள் மனத்தால் நன்றாக சுவையான உணவுகளை உண்டு பாருங்கள், அப்போது உடல் வளர்கிறதா? உடலால் எதையும் சாப்பிடவில்லை. மனத்தால் மட்டுமே சாப்பிடுகிறோம். இப்படி சாப்பிட முடியுமா? முடியும் சிலரால் முடியும். அப்படி மனத்தால் சுவைமிகுந்த உணவுகளை சாப்பிட முடிபவர்களால் உடல் வளரும். உடலுக்கு தனியாக உணவளிக்க வேண்டியதில்லை. .. மனம் என்பது சூட்சுமஉடல். வெறும் எண்ணங்களை மட்டுமே நாம் மனம் என்று நினைக்கிறோம்.ஆனால் இந்துமத தத்துவங்களின்படி மனம் என்பது சூட்சும உடல். நமது உடலுக்கு எப்படி உருவம் உள்ளதோ அதுபோல மனத்திற்கும் ஒரு உருவம் உண்டு. அது வளர்கிறது,தேய்கிறது. கருக்கிறது, ஒளிர்கிறது, ஈர்க்கப்படுகிறது,விலக்கப்படுகிறது. காலத்தில் விரைவாக செல்கிறது,மெதுவாக செல்கிறது. பல்வேறு பரிமாணங்களில் அது வேலை செய்கிறது. .. நாம் காணும் தூலஉடலிலிருந்து ப...

தலாய்லாமா மறுபிறப்பின் ரகசியம் என்ன?

 தலாய்லாமா மறுபிறப்பின் ரகசியம் என்ன? .. சுமார் 800 ஆண்டுகளுக்கு முன்பு முஸ்லீம்களின் படையெடுப்பு காரணமாக பௌத்தர்கள் மலை பகுதிகளை நோக்கி செல்ல நேர்ந்தது.நேபாளம்,பூடான்,திபெத்,அருணாச்சல்,லடாக் போன்ற பகுதிகளில் வாழ்ந்த புத்தமதத்தினர் வஜ்ராயன புத்தமத பிரிவை சேர்ந்தவர்கள். வஜ்ராயன பௌத்தத்தை நிறுவியதில் குரு பத்மசாம்பவா. வஜ்ராயன பௌத்தம் என்பது மஹாயான புத்தமத பிரிவுகளில் ஒன்று. இலங்கை,பர்மா,தாய்லாந்து,வியட்னாம் போன்ற நாடுகளில் உள்ளது ஹீனயான புத்தமதம்.சீனா,ஜப்பான்,கொரியாவில் உள்ளது மஹாயான புத்தமதம். .. வஜ்ராயன பௌத்தத்தை நிறுவியதில்  பத்மசாம்பவா தான் முதல் குரு. அவரே மறுபடி மறுபடி பிறந்து வந்துள்ளார். இன்றைய தலாய்லாமாவும் பத்மசாம்பவா ஒருவரே,உடல்தான் மாறுபட்டுள்ளது. .. பத்மசாம்பவா வெறும் குரு மட்டுமல்ல அவர் முழு வஜ்ராயன பௌத்தர்களுக்கும் அரசரும் அவரே. லாமா என்றால் மொட்டையடித்த துறவி. தலை என்பது தலைவர். லாமாக்களின் தலைவர்- தலைலாமா. வஜ்ராயன பௌத்தத்தை பொறுத்தவரை லாமாக்களுக்கு மறுபிறப்பு கிடையாது. அவர்கள் நிர்வாண நிலையை அடைவதற்காக வாழ்நாள் முழுவதும் தவத்தில் ஈடுபடுவார்கள். குடும்ப வாழ்வில் ...

இல்லறத்தார்கள் முக்தி பெறுவதற்கான வழிகள்

இல்லறத்தார்கள் முக்தி பெறுவதற்கான வழிகள் .. இதற்கு முன்பு உள்ள ஒரு கட்டுரையில் முக்தி பெறுவதற்கான இரண்டு வழிகள் பற்றி குறிப்பிட்டிருந்தேன்.அவை 1.அனைத்தையும் விடும் வழி மற்றும் 2.அனைத்தையும் ஏற்கும் வழி . அப்படியென்றால் இல்லறத்தார்களுக்கு இல்லறத்தில் இருந்தபடியே முக்தி பெற வழி இல்லையா? இருக்கிறது. இல்லறத்தில் இருந்தபடியே அனைத்தையும் விடும் வழியை பயிற்சி செய்தால் பல தொந்தரவுகள் ஏற்படும் என்று முன்பு உள்ள கட்டுரையில் குறிப்பிட்டிருந்தேன். ஏற்கனவே அதை படிக்காதவர்கள் ஒருமுறை படிக்கவும். இது அதன் தொடர்ச்சி கட்டுரை .. அனைத்தையும் ஏற்கும் வழியை இல்லறத்தார்கள் பயிற்சி செய்யலாம். அதில் பல பிரிவுகள் இருக்கின்றன. 1.பலன் கருதாமல் நற்கர்மங்கள் செய்து அதன் மூலம் முக்திபெறலாம் 2.இஷ்ட தெய்வத்திடம் பக்தி செய்வதன் மூலம் முக்தி பெறலாம் 3.குரு பக்தி மூலம் முக்தி அடையலாம் 4.கணவனை  தெய்வமாகவோ அல்லது மனைவியை தெய்வமாகவோ நினைத்து பணிவிடைகள்புரிந்து முக்தி அடையலாம் 5.குழந்தைகளை தெய்வமாக நினைத்து அவர்களை வளர்த்து முக்தி அடையலாம். இன்னும் பல வழிகள் உள்ளன. இவை அனைத்தும் அன்பை அடிப்படையாகக்கொண்டது. இந்த வழியில் ...

முக்தி என்பது என்ன?

 முக்தி என்பது என்ன? .. நமது ஆன்மா, பரமாத்மாவுடன் இணைவதுதான் முக்தி. வெளிநாடுகளில் இருந்து வந்த மதங்களில் முக்தி பற்றிய கருத்து கிடையாது. சொர்க்கம் செல்வது முக்தி அல்ல. ஆசைகள் உள்ளவர்கள் புண்ணிய பலனின் காரணமாக சொர்க்கதில் சென்று அந்த ஆசைகளை அனுபவிக்கலாம் என்று நமது மதம் கூறுகிறது. புண்ணியம் தீர்ந்தவுடன் மறுபடியும் மனிதனாக பிறக்க வேண்டும். நூற்றுக்கணக்கான சொர்க்கங்கள் உள்ளன. சக்தி வாய்ந்த மகான்கள் தங்கள் தவ வலிமையால் சொர்க்கம் மற்றும் நரகத்தை தோற்றுவிக்கிறார்கள். இந்த சொர்க்கங்கள் காலத்தால் அழியும் தன்மை கொண்டது. புராணங்களில் குறிப்பிடப்படும் பல்வேறு சொர்க்கங்கள் தற்போது இல்லை. இது பற்றி விரிவாக தேவைப்படுபவர்கள் சந்தேகங்களைக் கேட்கலாம். .. முக்தி என்பதில் பல வகைகள் உள்ளன. . கைலாயம், வைகுண்டம்,சத்தியலேகம்,ரிஷிலோகம், போன்ற உயர்ந்த உலகங்களுக்கு செல்பவர்கள் உடனடியாக முக்தி அடைவதில்லை. அந்த உயர்ந்த லோகத்தில் பல லட்சம் ஆண்டுகள் அல்லது பல ஆயிரம் ஆண்டுகள் தவத்தில் மூழ்கியிருப்பார்கள். அல்லது சிவன்,விஷ்ணு போன்ற தெய்வங்களுக்கு சேவை செய்துகொண்டிருப்பார்கள். இதேபோல பல உயர்லோகங்கள் உண்டு. சிலர் ...

இந்த உலகத்தின் எதிர்காலம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதா?

 இந்த உலகத்தின் எதிர்காலம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதா? - சிலர் எதிர்காலத்தை கணித்து சொல்வதை பார்க்கிறோம்.சிலர் 500 ஆண்டுகளுக்கு முன்பே பலவற்றை கணித்திருக்கிறார்கள்.அதன்படிதான் நடக்கவும் செய்கிறது.எதிர்காலத்தில் நடப்பதை அவர்கள் எப்படி அறிந்துகொண்டார்கள்? - இந்த உலகம் தோன்றி பல கோடி ஆண்டுகள் ஆகிவிட்டன.ஒடுக்கம் அல்லது கல்பம் முடிய இன்னும் பலகோடி ஆண்டுகள் இருப்பதாக கூறுகிறார்கள்.உதாரணமாக நாம் இதை 10 கோடி ஆண்டுகள் என்று எடுத்துக்கொள்வோம்.ஏற்கனவே பாதி முடிந்துவிட்டது.கடந்த காலத்தில் நடந்த நிகழ்வுகள் எல்லாம் அப்படியே யாருக்கும் தெரியாமல் அழிந்துபோயிருக்குமா?  - பழைய காலத்தில் நிகழ்ந்தவை அனைத்தும் முற்றிலும் யாருக்கும் தெரியாமல் அழிந்துபோயிருந்தால் எப்படி ஒருவரால் 500 ஆண்டுகளுக்கு முன்பு நடந்ததை சொல்ல முடிகிறது. எப்படி ஒருவரால் 500 ஆண்டுகளுக்கு பின்பு நடக்க இருப்பதை சொல்ல முடிகிறது?  - எப்படியென்றால் இவைகள் பிரபஞ்சமனம் அல்லது மஹத் என்ற நினைவுகளில் இருக்கும்.இந்த கல்பத்தின் 10 கோடி ஆண்டுகள் ழுழுவதும் அந்த நினைவுகளில் இருக்கும்.அவைகளில் பாதியை நாம் கடந்திருக்கலாம்.மீதி என்ன நடக்க வேண்ட...

சாப்பிட்டு முடித்தபிறகு அவ்வப்போது சூடான நீர் சிறிது குடியுங்கள்.

சாப்பிட்டு முடித்தபிறகு அவ்வப்போது சூடான நீர் சிறிது குடியுங்கள்.எத்தனை முறை குடிக்கலாம்? காலையில் சாப்பிடுவதற்கு முன்பு கால் டம்ளர். சாப்பிட்டு அரை மணிநேரம் கழித்து கால் டம்ளர். அடுத்த அரை மணிநேரம் களித்து அரை டம்ளர். மதியம் இதேபோல சாப்பிட்ட பிறகு இரண்டு தடவை. இரவு சாப்பிட்ட பிறகு இரண்டு தடவை. இதனால் இரத்தத்தின் வேகம் அதிகரிக்கும். இரத்தத்தில் உள்ள,கொழுப்பு மற்றும் உப்பு கரையும்.இரத்தம் சுத்தமாகும்.ஜீரண சக்தி அதிகரிக்கும். எப்போதுமே சூடாகத்தான் குடிக்க வேண்டுமா? இல்லை. இரண்டுமுறை சூடான நீர் குடித்தபிறகு சிறிது இடைவெளி விட்டு தேவைக்கு ஏற்றாற்போல தண்ணீர் குடிக்கலாம்.  உடல் உழைப்பு குறைவாகவும், மனஉழைப்பு அதிகமாகவும்,அதிக நேரம் ஏ.சி யில் உள்ளவர்களுக்கு இது பயனுள்ளதாக இருக்கும். அதிக உடல் உழைப்பு உள்ளவர்களுக்கு இது பொருந்தாது. .. நான் பல வருடங்களாக இதை பின்பற்றி வருகிறேன்.(சுவாமி வித்யானந்தர்

இந்த பதில் கண்டிப்பாக உங்களின் பல சந்தேகங்களைத் தீர்க்கும்.

  இந்த பதில் கண்டிப்பாக உங்களின் பல சந்தேகங்களைத் தீர்க்கும் . .. ஒருநாள் தட்சிணேசுவரத்தில் சுவாமி நிரஞ்ஜனானந்தருடன் நானும் ( சுவாமி சாரதானந்தர் ) மனிதனுக்குச்   சுயேச்சை சிறிதளவாவது உள்ளதா இல்லையா அனைத்தும் ஏற்கனவே திட்டமிட்டபடிதான் நடக்கிறதா என்பது குறித்து நீண்ட விவாதத்தில் ஈடுபட்டிருந்தோம் . வெகுநேரத்திற்குப் பிறகும் பிரச்சினைக்கு ஒரு சரியான தீர்வு கிட்டாததால் நேராக குருதேவரிடம் ( ஸ்ரீராமகிருஷ்ணர் ) சென்றோம் . குருதேவர் எங்கள் விவாதத்தைக் குறும்புடன் கேட்டார் . பின்னர் கம்பீரமாக , ‘ யாருக்காவது சுயேச்சை என்றெல்லாம் ஒன்று இருக்கிறதா என்ன ? கடவுளின் விருப்பத்தால் மட்டுமே உலகில் அனைத்தும் நடக்கின்றன , இனிமேலும் நடக்கும் . நாளாக நாளாகத்தான் மனிதன் இதைப் புரிந்து கொள்கிறான் .   பசு ஒன்று நீளமான கயிற்றால் ஒரு கம்பத்தில் கட்டப்பட்டுள்ளது என்று வைத்துக் கொள்வோம் . அந்தப் பசுவால் கயிறு எவ்வளவு நீளமோ அவ்வளவு தூரம் போகவும் இயலும் . ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் பசு தன் விருப்பம்போல...