ஸ்ரீராமகிருஷ்ணரின் விரிவான வாழ்க்கை வரலாறு
பாகம்-41
குருதேவரின் அறையில் நுழைந்த பைரவி அவரைக் கண்டதும் பேரானந்தமும் வியப்பும்மேலிட, கண்களில் கண்ணீர் பெருக, மகனே நீ இங்கா இருக்கிறாய்,! நீ எங்கோ கங்கைக் கரையில் இருப்பதை அறிந்து, நெடுநாட்களாக உன்னைத்தேடி வருகிறேன்.
இப்போது தான் காண முடிந்தது என்று சொன்னார். குருதேவர் பைரவியிடம் என்னைப் பற்றி எவ்வாறு நீங்கள் தெரிந்து கொண்டீர்கள்? என்று கேட்டார்.
அதற்கு பைரவி, உன்னைப்போல் மூவரைச் சந்திக்க வேண்டுமென்று முன்பே அன்னையின் அருளால் நான் அறிந்துள்ளேன். கிழக்கு வங்காளத்தில் ஏற்கனவே இருவரைச் சந்தித்து விட்டேன். இதோ மூன்றாவதான உன்னை இப்போது சந்திக்கிறேன் என்றார்.
ஒரு குழந்தை தாயின் அருகில் அமர்ந்து எப்படித் தனது எண்ணங்களை மனம் திறந்து பேசுமோ அது போல குருதேவரும் பைரவியிடம் தம்மைப் பற்றிப்பேரானந்தத்துடன் கூறினார்.
தமக்குக் கிடைத்த தெய்வீக காட்சிகள், இறைவனைப் பற்றிப்பேசும்போதுபுறவுலக நினைவை இழந்துவிடுவது, உடலில்ஏற்படும் எரிச்சல், உறக்கமின்மை போன்ற அனைத்தையும் கூறிய பின்னர் அவர் பைரவியிடம், தாயே, இவை ஏன் ஏற்படுகின்றன?
உண்மையிலேயே நான் பைத்தியமாகி விட்டேனோ? முழுமனத்துடன் அன்னையை அழைத்ததால் எனக்கு த்தீராத நோய் வந்து விட்டதா? என்று ஒரு குழந்தை போல் திரும்பத்திரும்பக்கேட்டார்.குருதேவரின்இந்த வார்த்தைகள் பைரவியின் உள்ளத்தில் எத்தனையோ உணர்ச்சிகளை எழுப்பின. பெருமிதமும் மகிழ்ச்சியும் கருணையும் அவர் முகத்தில் மாறிமாறித்தோன்றி மறைந்தன. அனைத்தையும் கேட்ட பின் அவர் ஒரு தாயைப்போன்ற பரிவுடன் குருதேவரிடம், உன்னைப்பைத்தியம் என்று கூறுவது யார்?,
நீ பைத்தியம் அல்ல, நீ மகா பாவனை நிலையில் இருக்கிறாய். அதனால் தான் இவை உன்னிடம் தோன்றின. தோன்றிக்கொண்டிருக்கின்றன. இந்த நிலைகளை சாதாரணமாக யாராவது புரிந்து கொள்ள முடியுமா என்ன? முடியாததால் தான் அவர்கள் இவ்வாறெல்லாம் பேசுகிறார்கள்.ராதைக்கும் இந்த நிலைகள் ஏற்பட்டிருந்தன. அதே போன்று சைதன்யரிடமும் தோன்றியிருந்த இந்த நிலைகள் பற்றிய விளக்கம் பக்தி சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ளன.இதோ என்னிடம் உள்ள நூல்களிலிருந்து உனக்குப் படித்துக் காட்டுகிறேன். ஒரே மனத்துடன் யார் இறைவனை அடையத் துடிக்கிறார்களோ, அவர்கள் அனைவருக்கும் இத்தகைய நிலைகள் ஏற்பட்டுள்ளன.என்று கூறினார். குருதேவரும் பைரவியும் நெருங்கிய உறவினர்கள் போலப்பேசிக் கொள்வதைக் கண்ட ஹிருதயர் விவரிக்க முடியாத திகைப்பில் ஆழ்ந்தார்.
உரையாடலில் காலைப்பொழுதின் நீண்டநேரம் கழிந்துவிட்டதை அறிந்த குருதேவர், தேவியின் பிரசாதப் பழங்கள், வெண்ணெய், கற்கண்டு ஆகியவற்றை பைரவிக்குக் காலை உணவாக வழங்கினார்.
குழந்தைக்குக் கொடுக்காமல் எந்தத் தாயும் உணவு கொள்வதில்லை. பைரவியைத் தாயாகக் கருதிய குருதேவர், தன்னை உண்பிக்காமல் பைரவி உண்ணமாட்டாள், என்பதைப்புரிந்து கொண்டு முதலில் தாமே சிறிது பிரசாதத்தை உட்கொண்டார்.கோயில் தரிசனமும் காலை உணவும் முடிந்தது.
பைரவியின் வழிபாடு தெய்வம் ரகுவீரர். அவர் ரகுவீரர் சிலை ஒன்றை எப்போதும் கழுத்தில் அணிந்திருப்பார். வழிபாடு நைவேத்தியம் எல்லாம் அந்த சிலைக்கே. கோயில் பண்டகசாலையிலிருந்து நைவேத்தியத்திற்கான மாவு, அரிசி ஆகியவற்றைப்பெற்று, பஞ்சவடியில் தனது சமையலை ஆரம்பித்தார் பைரவி.
சமையல் முடிந்தது.நைவேத்தியத்தை ரகுவீரரின் திருமுன்னர் படைத்து விட்டு தியானத்தில் மூழ்கினார் பைரவி. சிறிது நேரத்தில் ஒர் அற்புதக் காட்சி பெற்று சமாதியில் ஆழ்ந்து புறவுணர்வை இழந்து விட்டார்.
அவரது கண்களில் நீர் பெருகி வழிந்தது. அப்போது குருதேவர் மனம் ஈர்க்கப்பட்டு வெளியுணர்வை இழந்தவராய் பஞ்சவடிக்கு வந்து சேர்ந்தார்.
தெய்வீக உணர்வால் ஆட்கொள்ளப்பட்ட அவர், பிராம்மணி தன் இஷ்டதெய்வத்திற்கு நிவேதனம் செய்த உணவை உண்ணத் தொடங்கினார். பிராம்மணி சுயநினைவு பெற்றுக் கண்களை விழித்தபோது இஷ்டதெய்வத்திற்கு நிவேதனம் செய்திருந்தவற்றை வெளியுணர்வை முற்றிலும் இழந்த நிலையில் குருதேவர் உண்டு கொண்டிருந்ததைக் கண்டார்..
இதனைத் தாம் பெற்ற காட்சியுடன் ஒப்பிட்டுப் பார்த்த பைரவி சொல்லிலடங்காத ஆனந்தத்தில் மூழ்கினார். சிறிது நேரத்தில் குருதேவர் சாதாரண நிலைக்குத் திரும்பினார்.
தாம் ஏன் இவ்வாறு நடந்து கொண்டோம் என்பது புரியாததால் செய்த செயலுக்கு நாணி அவர் பைரவியிடம் அம்மா! நான் ஏன் கட்டுப்பாட்டை இழந்து அவ்வாறு செய்தேன், எதுவும் புரியவில்லையே? என்று படபடப்புடன் கூறினார்.
ஆனால் பைரவி ஒரு தாயைப்போல குருதேவரைத்தேற்றியவாறே மகனே! உகந்ததையே செய்தாய் நீ!
இதனை நீயாக ச் செய்யவில்லை.உன்னுள் இருப்பது யாரோ அவரே இதனைச் செய்தார். தியான வேளையில் நான் பெற்ற காட்சியில் இதைச் செய்தது யார், ஏன் இவ்வாறு செய்தார், என்பவற்றைத் தெளிவாகப் புரிந்து கொண்டேன். எனக்கு இனிமேல் புறப்பூஜை அவசியமில்லை.
இத்தனை நாள் செய்த பூஜையின் பலன் எனக்குக் கைகூடிவிட்டது என்றார். இவ்வாறு சொல்லிக்கொண்டே பைரவி, எவ்விதத் தயக்கமும் இன்றி குருதேவர் உண்ட மீதத்தைப் பிரசாதமாக உட்கொண்டார். குருதேவரின் உடலிலும் உள்ளத்திலும் உயிருணர்வுடன் திகழும் தனது இஷ்ட தெய்வமான ரகுவீரரின் தரிசனத்தை இப்போது பெற்று விட்டார் அவர்! புறப்பூஜையின் பலனை அனுபவித்ததால் அன்புப்பேரானந்தப்பெருவெள்ளம் கண்களில் ஆறாகப்பெருக பல காலமாகப் பூஜித்து வந்த ரகுவீரரின் சிலையை கங்கையில் விட்டுவிட்டார்.!.
குருதேவருக்கும் பிரம்மமணிக்கும் இடையே தோன்றிய அன்பும் ஈர்ப்பும் நாளுக்குநாள் வளர்ந்தன. குருதேவரிடம் தாயன்பு கொண்டிருந்த பைரவி தட்சிணேசுவரத்திலேயே தங்கிவிட்டார். நாட்கள் எப்படிக் கழிந்தன என்பது இருவருக்குமே தெரியவில்லை.
குருதேவர் தாம் பெற்ற இறைக்காட்சிகளையும் அனுபவங்களையும் ஒளிவுமறைவின்றி பிராம்மணியிடம் கூறிவார். பல ஐயங்களை எழுப்புவார், பைரவி தாந்திரிக சாஸ்திரங்களிலிருந்து மேற்கோள் காட்டி, அவரது ஐயங்களை விலக்குவார்.பக்தியின் வேகத்தால் அவதாரபுருஷர்களின் உடல், உள்ளம் ஆகியவற்றில் எத்தகைய அறிகுறிகள் தோன்றுகின்றன. என்பதைப் படித்துக்காட்டி அவரது உண்மை நிலையை விளக்குவார்.
இவ்வாறு பஞ்சவடியில் ஆனந்த வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.ஆறேழு நாட்கள் கழிந்தன. மேலும் பிராம்மணி அங்குத் தங்குவது நல்லதல்ல என்று குருதேவர் எண்ணினார். பொன்னாசை , பெண்ணாசை கொண்ட உலகியல் மக்கள் ஏதேதோ பேசி. தூயவரான அவரது வாழ்வில் களங்கம் கற்பிக்கக்கூடும் என்று கருதினார்.
இதை எடுத்துக்கூறியவுடனேயே பைரவியும் புரிந்து கொண்டார். அருகில் எங்காவது ஓரிடத்தில் தங்கி. நாள்தோறும் வந்து குருதேவரைப் பார்க்கலாம் என்ற எண்ணத்துடன் காளி கோயிலைவிட்டு அகன்றார்.
கங்கைக் கரையில் தட்சிணேசுவரக் கிராமத்திற்கு வடக்கே தேவ மண்டல் துறையில் தங்கினார் பைரவி. அந்த கிராமத்தின் பல பகுதிகளுக்குச்சென்று கிராமப்பெண்களுடன் பேசி அவர்களின் அன்பைப்பெற்றார்.
ஆகவே தங்குமிடம், உணவு போன்ற விஷயங்களில் எந்தவிதப் பிரச்சனையும் அவருக்கு இருக்கவில்லை. மக்களின் ஐயத்திற்கு இடமளிக்கும் சூழ்நிலை இல்லாதவாறு நாள்தோறும் குருதேவரைச் சந்திக்கும் வாய்ப்பும் பைரவிக்குக் கிடைத்தது.
தினமும் சிறிதுநேரம் காளி கோயிலுக்குச்சென்று குருதேவருடன் பேசிவிட்டு வருவார்.
கிராமப் பெண்களிடம் பல்வேறு உணவுப்பொருட்களைப்பெற்று, சமைத்து குருதேவருக்கு அடிக்கடி அளிக்கவும் செய்தார்.
தொடரும்..

No comments:
Post a Comment