அன்னை சாரதாதேவியின் வாழ்க்கை வரலாறு-பாகம்-67
சுவாமி யோகானந்தரை யோகின் என்ற பெயரில் ஏற்கனவே இந்த வரலாற்றில் சந்தித்திருக்கிறோம். அன்னையின் முதற்சீடர் இவர். தட்சிணேசுவர நாட்களிலிருந்தே அன்னையின் வேலைகளில் உதவி வந்த இவர் தமது இறுதிக்காலம் வரை அவருக்குச் சிறப்பான சேவை புரிந்தார். அன்னை பிருந்தாவனத்திலிருந்து காமார்புகூர் சென்றபோது அவருடன் சென்றுவிட்டுபிறகு காசி சென்று கடுமையான தவ வாழ்வில் ஈடுபட்டார்.பின்னர் திரும்பி வந்து பலராம் போஸின் வீட்டில் தங்கினார். அன்னை கல்கத்தா வரும்போதெல்லாம் , அவருக்குத் தேவையான சேவைகளைச் செய்வார். அன்னை தங்கியிருக்கின்ற வீட்டிற்கு வெளியே ஓர் அறையில் தங்கிக்கொண்டு, பக்தர்கள் கொண்டு வரும் காணிக்கைகளை வாங்கி வைப்பதும், அன்னைக்கு வசதியான நேரம் பார்த்து பக்தர்களை அனுப்பி வைப்பதுமாக அன்னையின் கல்கத்தா வாழ்க்கை இடைஞ்சலின்றி இருப்பதற்குத் தன்னால் முடிந்தவை அனைத்தையும் செய்வார். மிக மோசமாக நோயுற்றிருந்த நேரத்திலும் இந்தச்சேவைகளைத் தொடர்ந்து செய்து வந்தார்.
யோகானந்தரிடம் அன்னைக்கு இருந்த பாசத்தை விளக்கும் நிகழ்ச்சியொன்றை இங்கே குறிப்பிடலாம். அன்னைக்கு ப் பஞ்சாலான மெல்லிய போர்வை ஒன்றை சுவாமிகள் கொடுத்திருந்தார். அன்னை பல ஆண்டுகள் அதைப்பயன்படுத்தி வந்ததால் அது நைந்து கிழிந்து விட்டது. எனவே அதைப் பிரித்து பதிய பஞ்சு சேர்த்து தைத்துவரஏற்பாடு செய்தார். ஆனால் சிறிது நேரத்திற்கெல்லாம் அப்படிச் செய்ய வேண்டாமென்று தடுத்து, நைந்து போயிருந்த அந்தப்போர்வையை வாங்கிப் பாசத்தோடு அருகில் வைத்துக் கொண்டார். என் மகன் யோகின் கொடுத்தது இது, அது எப்போதும் எனக்கு அவனது நினைவை ஊட்டிக் கொண்டிருக்கிறது. என்று கூறினார். தம் அன்பிற்குரியவர்கள் கொடுக்கும் சிறு பொருளையும் பாசத்தோடு பாதுகாத்து வைப்பது அன்னையின் வழக்கம்.
ஏதாவது பணம் கிடைக்குமானால் அதை அன்னைக்காக சேர்த்து வைத்துக்கொள்வார் யோகின். ஜகத்தாத்ரி பூஜை போன்ற விசேஷகாலங்களில் அன்னை உலோகப்பாத்திரங்களைத் தேய்த்து சிரமப்படுவதை க் கண்ட அவர் மரப்பாத்திரங்களை வாங்கிக் கொடுத்தார்.
ஆனால் அன்னை அழுது துடிக்கும் படி யோகானந்தர் 1899 மார்ச் 23-ஆம் நாள் தம் இளம் வயதிலேயே காலமானார். அப்போது அன்னை அளவில்லாத சோகத்தோடு,” கட்டிடத்திலிருந்து ஒரு கல் விழுந்து விட்டது.மற்றவையும் இனி விழஆரம்பிக்கும் என்றார்.
பிற்கால வாழ்வில் அன்னை அடிக்கடி யோகானந்தரை நினைத்துக் கொண்டு யோகினைப்போல் என்னிடம் பாசம் கொண்டவர்கள் யாருமில்லை. அவனிடம் யாராவது எட்டணா தந்தாலும் அதைச் செலவு செய்யாமல் அன்னையின் பயணங்களுக்குத் தேவைப்படும் என்று கூறி தனியாக வைத்துக்கொள்வான். எந்த நேரமும் எனக்குச் சேவை செய்த படியே இருப்பான். அவன் என்னோடும் என்னுடன் இருக்கும் மற்ற ப் பெண்களோடும் இருப்பதைப் பார்த்து, குருதேவரின் மற்றச் சீடர்கள் அவனைக் கேலி கூடச் செய்வார்கள் என்றார்.
யேதகானந்தரைத் தொடர்ந்து சாரதானந்தர் அன்னையின் பொறுப்புக்களை ஏற்றுக் கொள்ளுமுன்னர் பிரம்மசாரி கிருஷ்ணலாலும் சுவாமி திரிகுணா தீதானந்தரும் சில காலம் அன்னையின் சேவையில் ஈடுபட்டனர்.பின்னவர் காசிப்பூர் நாட்களிலேயே அன்னையிடம் தீட்சைக்காக அனுப்பப்பட்டார்.சுவாமி யோகானந்தரின் மறைவுக்குப் பின்னர் தொடங்கி 1902-ஆம் ஆண்டுவேதாந்தப்பணிகளுக்காக அமெரிக்கா செல்லும் வரை அன்னையின் சேவைகளில் ஈடுபட்டிருந்தார். மடத்தின் வங்க மாத வெளியீடான உத்போதன் பத்திரிகையின் ஆசிரியர் பொறுப்புடன் அன்னையின் பணிகளையும் அவர் செய்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.திரிகுணாதீதானந்தர் அன்னையிடம் கொண்டிருந்த து ஒரு விதமான முரட்டு பக்தி எனலாம். எடுத்துக்காட்டாக ஓரிரு நிகழ்ச்சிகளைப் பார்ப்போம்.
-
தொடரும்...

No comments:
Post a Comment