ஸ்ரீராமகிருஷ்ணரின் விரிவான வாழ்க்கை வரலாறு
பாகம்-43
குருதேவர் ஓர் அவதார புருஷர் என்ற எண்ணம் பிராம்மணியின் உள்ளத்தில் இடையீடின்றி எப்போதும் நிலை பெற்றிருக்குமானால் அவர் குருதேவரை சாதனைகளில் ஈடுபடும்படித்தூண்டியிருக்க மாட்டார்.
ஆனால் நிலைமை அப்படியில்லை.குருதேவரை முதன்முதலில் சந்தித்ததிலிருந்து பிராம்மணி அவரை ஒரு குழந்தையாகக்கண்டு நேசித்து வந்தது, பற்றி ஏற்கனவே கூறியுள்ளோம். ஒருவரது பெருமையையும் கீர்த்தியையும் கருத்தில் கொள்ளாமல் அன்பு செய்பவரின் நன்மை ஒன்றிற்காக மட்டும் செய்யப்படுவது தான் அன்பு.
இந்த அன்பைவிடச் சிறந்த ஒன்று உலகில் இல்லவே இல்லை. இத்தகையோர் அன்பினால் உந்தப்பட்டுதான் பைரவியும், சாதனைகள் மேற்கொள்ளுமாறு குருதேவரைத் தூண்டினார்.
எல்லா அவதார புருஷர்களின் வாழ்க்கையிலும் இதனை நாம் காண முடியும். அவதார புருஷர்களுடன் நெருங்கிய உறவு கொண்டவர்கள் அவர்களிடம் அசாதாரணமான ஆற்றல்களைக்கண்டு வியப்படைந்தாலும் அடுத்த கணமே அவற்றை மறந்துவிட்டு அவர்களிம் கொண்ட அளவற்ற அன்பினால் சாதாரண மக்களைப்போலவே அவர்களையும் எண்ணி, அவர்களின் நலத்திற்காகப் பாடுபடுவதைக் காண்கிறோம். பைரவியும் குருதேவரின் அற்புதமான நிலைகளையும் அசாதாரணமான சக்திகளையும் கண்டு அவ்வப்போது வியக்காமல் இல்லை.
ஆனால் அவரது செயற்கைத்தனம் கலவாதபக்தி, நம்பிக்கை, சரணாகதி போன்ற பண்புகள் பைரவியின் உள்ளத்தில் தாயன்பை வெளிப்படுத்தி மற்ற பெருமைகளை மறக்கச் செய்தது. எப்படி ஒரு தாய் தன் குழந்தையை மகிழ்ச்சியாக வைத்திருக்கத் தன்னால் முடிந்ததை எல்லாம் செய்வாளோ, அப்படியே பைரவியும் குருதேவரின் மகிழ்ச்சிக்காக எல்லாவகையிலும் முனைந்தார்.
தகுந்த சீடனுக்குக் கற்பிக்கும் வாய்ப்பு குருவுக்கு ஏற்படும் போது அவர் மனத்தில் நிறைவும் மகிழ்ச்சியும் ஏற்படுகிறது. குருதேவரைப்போன்று உத்தம சீடரைப் பெறுவதில் பிராம்மணி அளவற்ற மகிழ்ச்சி அடைவது இயல்புதானே! அத்துடன் குருதேவரைத் தன் பிள்ளைபோல் நேசித்தார் பைரவி. ஆகவே தனது ஆன்மீக உறவு தவத்தின் பலன் ஆகியவை குருதேவருக்கு குறுகிய காலத்திலேயே கிடைக்க வேண்டும் என்று அவர் ஆர்வம் கொண்டதில் வியப்பு ஒன்றுமில்லை.
தாந்திரிக சாதனைகளைப் பயில வேண்டுவதன் தேவையையும் அவசியத்தையும் அன்னை காளியிடம் கேட்டுத் தெரிந்து அவளது அனுமதி பெற்ற பின்னரே தாம் அந்த சாதனைகளில் ஈடுபட்டதாக குருதேவர் பலமுறை கூறியுள்ளார்.
பிராம்மணியின் ஆர்வத்தாலும் தூண்டுதலாலும் மட்டுமே அவர் தாந்திரிக சாதனைகளில் ஈடுபட்டார் என்பதில்லை. சாதனைகளின் விளைவாக அவர் பெற்ற யோக திருஷ்டியும் அதற்குக் காரணமாக அமைந்தது. சாஸ்திரங்கள் கூறும் சாதனை வழி நின்று அன்னையின் அருட்காட்சி பெறுவதற்கான வாய்ப்பு தம்க்குத் தற்போது அமைந்துள்ளது என்பதை அவரது அகக்காட்சி அவருக்குக் காட்டிற்று .
அதனால் குருதேவரின் ஒருமைப்பட்ட மனம், பிராம்மணியின் ஆர்வத்தால் தூண்டப்பட்டு சாதனைப்பாதையில் முன்னேறியது.
நம்மைப்போன்ற சாதாரண மக்களால் அந்த ஆர்வத்தின் தீவிரத்தையோ ஆழத்தையோ புரிந்து கொள்ள முடியாது.
உலகின் பல்வேறு ஆசாபாசங்களில் கட்டுண்ட நம்மிடம் அந்த தெய்வீக உள்நோக்கும், ஒருமைப்பட்ட மனமும் எப்படி இருக்க முடியும்? வண்ண ஜாலங்களை அள்ளி வீசி, நுரை பொங்கி த் தவழும் அலைகளின் வனப்பிலும் வண்மையிலும் மகிழ்வதை விட்டுவிட்டு கடலின் ஆழத்தில் அமிழ்ந்து அதன் அடிப்பரப்பைத் தொட்டு பார்க்கின்ற தைரியம் நம்மிடம் எங்கே இருக்கிறது? உன்னுள் ஆழ்ந்து மூழ்கு, ஒரேயடியாக மூழ்கிவிடு, என்எறல்லாம் திரும்பத்திரும்பக்கூறி குருதேவர் நம்மை ஊக்குவிப்பரோ அதைப்போல உலகின் மீதும் உடலின் மீதும் உள்ள பற்றுக்களை எல்லாம் உதறித் தள்ளிவிட்டு ஆன்மீகம் என்ற அகண்ட கருவறையில் ஒரேயடியாக மூழ்குகின்ற திறமை நம்மிடம் எங்கே? இறைவனைக்காண முடியாததால் தீவிர ஆன்ம வேட்கையுடன், அம்மா உன் காட்சியைக்கொடு” என்று கதறியபடியே அவர் தமது முகத்தைப் பஞ்சவடியின் கங்கைக்கரை மணலில் தேய்த்துக்கொள்வார்.
இப்படி ஒரு நாளா, இரு நாட்களா? நாட்கள் தாம் கழிந்து கொண்டே போகும், இந்த மன ஏக்கம் மட்டும் தணியவே இல்லை. இந்தச்சொற்கள் எல்லாம் நம் செவிகளில் நுழைவது உண்மை தான், ஆனால் அவை நம்மில் எந்த மாற்றத்தையாவது ஏற்படுத்துகின்றனவா? இல்லையே! ஏன் தான் ஏற்படுத்த வேண்டும்? அன்னை நிச்சயம் இருக்கிறாள், எல்லாவற்றையும் துறந்து மன ஏக்கத்துடன் அவளைக்கூவியழைத்தால் , அவள் நம்முன் கண்டிப்பாக வருவாள், என்பதை த்தான் குருதேவரைப்போல முழுமையாக நாம் நம்புகிறோமா?
குருதேவர் காசிப்பூரில் தங்கியிருந்தபோது சாதனை நாட்களில் தமக்கிருந்த ஆன்ம தாகத்தின் தீவிரத்தைப் பற்றி ஒருநாள் கூறினார். எங்களுக்கு பிரமிப்பாகி விட்டது. நாங்கள் அதை எந்த அளவிற்கு வாசகர்களுக்குவிவரிக்க முடியும் என்று தெரியவில்லை.இருப்பினும் முயற்சி செய்கிறோம்.
கடவுளைக் காண்பதற்காக சுவாமி விவேகானந்தருக்கு இருந்த தீவிர ஆர்வத்தை. காசிப்பூரில் வாழ்ந்த நாட்களில் நாங்கள் நேரடியாகக் கண்டுள்ளோம். சட்டத்தேர்வுக்குப் பணம் செலுத்தச் சென்ற வேளையில் அவருக்குத் திடீரென ஆன்மீக விழிப்பணர்வு உண்டாயிற்று. அதன் விளைவாகச்சுற்றுப்புற சூழ்நிலைகளை மறந்து பைத்தியம் பிடித்தவரைப்போல், உடலில் ஒரே ஓர் ஆடையுடன், வெறுங்காலுடன், நேராக குருதேவரிடம் ஓடினார். அவரிடம் தன் இதய தாகத்தைக்கொட்டி அருளைப்பெற்றார். அதன்பின் உணவு உறக்கம் துறந்து இரவும் பகலும் ஜபம், தியானம், பாடல்கள் ஆன்மீக விவாதம் என்றே கழித்தார். சாதனையில் அவர் கொண்டிருந்த அளவற்ற ஆர்வத்தின் காரணமாக அவரது இளகிய மனம் கூடக் கடினமாகி தாய் சகோதரர்கள் ஆகியோரின் துன்பங்களையும் பொருட்படுத்தாத நிலைக்கு வந்துவிட்டது. குருதேவர் காட்டிய பாதையில் ஒருமித்த மனத்துடன் தொடர்ந்து முன்னேறி. ஒன்றன் பின் ஒன்றாக தெய்வீகக் காட்சிகளைப்பெற்று நான்கு மாதங்களுள் நிர்விகல்ப சமாதியின் பேரின்பத்தையே பெற்றார். இவையெல்லாம் நமக்குத் தெரிந்த செய்திகளே.
இவையனைத்தும் எங்கள் கண்முன் நடந்தவை. எங்களை வியப்புறச் செய்தவை.இவற்றால் பெருமகிழ்ச்சியுற்ற குருதேவர் சுவாமிஜியின் அசாதாரண பக்தி இறைஏக்கம் சாதனையில் அளவற்ற ஆரை்வம் ஆகியவற்றைப்பற்றி தினமும் புகழ்ந்து பேசுவார். ஒருநாள் அவர் தமது ஆன்ம வேட்கையையும் விவேகானந்தரின் ஆன்ம வேட்கையையும் ஒப்பிட்டு, நரேன் பக்தியும் ஆர்வமும் உண்மையிலேயே அசாதாரணமானவை தாம்,ஆனால் இங்கு( தம்மைச்சுட்டிக்காட்டி)ஏற்பட்ட ஏக்கத்துடன் ஒப்பிடும் போது அவனுடைய வேட்கை மிகவும் சாதாரணமானதே. எனக்கிருந்த வேட்கையில் அது நாவில் ஒரு பங்கு கூட இருக்காது, என்று கூறினார். வாசகர்களே, குருதேவரின் இந்தச்சொற்கள் எத்தகைய உணர்ச்சிகளை எங்களுள் எழுப்பியிருக்கும் என்பதை முடிந்தால் நீங்களும் சற்று கற்பனை செய்து தான் பாருங்களேன்.
அன்னையின் அருளாணைபெற்ற குருதேவர் பிற அனைத்தையும் மறந்து சாதனையில் மூழ்கினார். நுட்பமதியும் செயல்திறனும் ஒருங்கே அமையப்பெற்ற பிராம்மணி, தாந்திரிக சாதனைக்கு வேண்டிய பொருட்களைச்சேகரித்து அவற்றைப் பயன்படுத்துவது குறித்து எடுத்துக்கூறி குருதேவருக்கு உதவுவதில் ஈடுபட்டார்.
தொடரும்..

No comments:
Post a Comment