Sunday, 16 June 2019

அன்னை சாரதாதேவியின் வாழ்க்கை வரலாறு-பாகம்-53

அன்னை சாரதாதேவியின் வாழ்க்கை வரலாறு-பாகம்-53

குருதேவரின் வாழ்விலும் சரி. அன்னையின் வாழ்விலும் சரி, சாதனைகளையோ தவ முறைகளையோ அவர்களாக நாடிப்போக வில்லை. எத்தகைய சூழ்நிலையையும் ஏற்றுக்கொள்ள அவர்கள் தயாராக இருந்தனர். வரும்போது அதைப்பயன்படுத்தி தாங்கள் அடைய வேண்டியதைச் சாதித்துக் கொண்டனர். அன்னை இந்தத் துன்ப வாழ்க்கையை விரும்பி ஏற்று. அதைத் தவ வாழ்வாக்கிக் கொண்டார். குருதேவரின்  விருப்பமும் அதுவாகவே இருந்தது.காசிப்பூர் நாட்களில் அவர் ஒரு நாள் அன்னையை அழைத்து, என் காலத்திற்குப் பிறகு நீ காமார்புகூரில் சென்று தங்கு. ஏதாவது கீரையை நட்டுக்கொள். வெறும் சோறோ வேகவைத்த கீரையோ எது கிடைக்குமோ அதைச் சாப்பிட்டுக்கொண்டு ஆன்மீக சாதனைகளில் ஈடுபடு.ஆனால் ஒன்று ஒரு காசுக்காகக் கூட யாரிடமும் கையேந்தி விடாதே.கையை நீட்டினால் உன் தலையை அடமானம் வைத்துவிட்டாய் என்று பொருள். யாராவது பக்தர்கள் தங்கள் வீட்டில் வந்து தங்கும் படி அன்புடன் உன்னை அழைக்கலாம். அதையும் ஏற்றுக்கொள்ளாதே, அதைவிடப் பிச்சையெடுத்து வாழ்வது மேல். காமார்புகூரிலுள்ள உன் சொந்த வீட்டை விடாதே. சாதாரண உணவுக்கும் உடைக்கும் உனக்குக்குறைவு வராது.என்று கூறியிருந்தார்.ஆனால் குருதேவர் கூறினார் என்பதற்காக மட்டுமே அன்னை எதையும் ஏற்றுக் கொள்பவர் அல்ல.என்பதை நாம் முன்பே கண்டோம். பின்னாளில் ஒரு முறை யோகின்மா அன்னையிடம் அம்மா” சில விஷயங்களில் குருதேவரைின் அறிவுரையையும் மீறி நீங்கள் உறுதியாக இருந்தீர்களேஅது எப்படி? என்று கேட்டார். அதற்கு அன்னை புன்னகையுடன் “யோகின்” எல்லா விஷயங்களிலும் ஒருவர் மற்றவருக்கு அடங்கி நடப்பது என்பது சாத்தியமா என்ன? என்று பதில் கூறினார். மற்றொரு சமயம் திருமண வாழ்வைப்பற்றிக் கூறும் போது, காலம்  முழுவதும் ஒருவனுக்கு அடங்கி நடப்பதும் அவனது பலவீனங்களுக்கெல்லாம் தாளம் போடுவதுமான வாழ்வும் ஒரு வாழ்வாகுமா? என்று கூறினார். எனவே கணவனுக்கேற்ற மனைவியாக அன்னை வாழ்ந்தார் என்று கூறும்போது கணவன் எதைச் சொன்னாலும் தாம் எதையும் யோசிக்காமல் அதை எழுத்துக்கு எழுத்து பின்பற்றுகின்றவராக வாழ்ந்தார் என்பது பொருள் அல்ல. அதை குருதேவர் எதிர்பார்க்கவும் இல்லை. இது குருதேவரின் கட்டளை அல்ல. இப்படி ஒரு வாழ்க்கையை அன்னை வாழலாம் என்பதை அவர் கோடிகாட்ட மட்டுமே செய்தார்.என்று இந்த இடத்தில் எழுதுகிறார் சுவாமி கம்பீரானந்தர். எனவே காமார்புகூர் வாழ்க்கையை அன்னை தாமாகவே ஏற்றுக்கொண்டார்.
இனி இந்த நாட்கள்  துன்பமயமாக இருக்கப் போகின்றன.என்பதும் அன்னைக்குத் தெரிந்தே இருந்தது. குருதேவர்  இருக்கும் போதே ஹிருதயன் அவரை அவமதித்தது நமக்குத் தெரியும். ராம்லால் அர்ச்சகரான பின் குருதேவரையே மதிக்காதவன். இத்தகைய உறவினர்கள்
-
-
தொடரும்...
-


No comments:

Post a Comment