Monday 4 January 2021

📚மனுஸ்மிருதி என்னும் மனு தர்ம சாஸ்திரம் (முழுவதும்)-பாகம்-11

 📚மனுஸ்மிருதி என்னும் மனு தர்ம சாஸ்திரம் (முழுவதும்)-பாகம்-11

அத்தியாயம் -2

...........

41.

 பிராம்மண பிரம்மசாரி மான் தோலால் ஆன மேலாடையையும், க்ஷத்ரிய பிரம்மசாரி குரு மிருகத்தின்ஆன தோலால் ஆன மேலாடையையும்,

வைசிய பிரம்மசாரி ஆட்டுத்தோலால் ஆன மேலாடையையும்  அணிய வேண்டும்.

 பிராம்மணன்  நார்மடித் துணியை அரையாடையாக அணிய வேண்டும்.

 க்ஷத்ரியன் பட்டுத் துணியை அரையாடையாக அணிய வேண்டும்.

 வைசியன் சணல் ஆடையை அரையாடையாக அணிய வேண்டும்.

(மிகப்பழைய காலத்திலேயே பட்டுத்துணி வழக்கத்தில் இருந்துள்ளது.குளிரிலிருந்து தங்களை காத்துக்கொள்வதற்காகவே மிருகத்தின் தோலாடையை பயன்படுத்துகிறார்கள்)

.................

42.

 பிராம்மண பிரம்மசாரி, முஞ்சி புல்லால் திரிக்கப் பட்டு, வழுவழுவென்று சமானமான மூன்று இழைகள் கொண்ட அரைஞாணை அணிய வேண்டும்.

 அவ்வாறே க்ஷத்ரிய பிரம்மசாரி மூர்வா புல்லினால் திரிக்கப் பட்ட மூன்று இழைகளோடு கூடிய அரை ஞானை அணிய வேண்டும்.

வைசிய பிரம்மசாரி சணலால் திரிக்கப் பட்ட மூன்று இழைகளோடு கூடிய அரை ஞானை அணிய வேண்டும்.

(இந்த அரைஞாணில்தான் கோவணம் கட்டிக்கொள்வார்கள்)

...................

43.

 முஞ்சிப் புல் முதலானவை கிடைக்காத போது, தர்ப்பை , நாணல், கோரை முதலானவற்றை முப்புரிகளாகத் திரித்து அதை ஒரு முடிச்சோடு  பிராம்மண பிரம்மசாரியும், மூன்று முடிச்சுகள் போட்டு  க்ஷத்ரிய பிரம்ம சாரியும், ஐந்து முடிச்சுகள் போட்டு வைசியப் பிரம்ம சாரியும் அணிய வேண்டும்.

.................

44.

 வலது புறமாக சுற்றிய ஒன்பது  இழைகள் கொண்டதாக பூணூல் இருக்க வேண்டும். பிராம்மண பிரம்மசாரிகளின் பூணூல்  பஞ்சினால் ஆனதாகவும், க்ஷத்ரிய பிரம்ம சாரிகளின் பூணூல் சணலாலான தாகவும், வைசிய பிரம்ம சாரிகளின் பூணூல் வெள்ளாட்டு முடியினாலானதாகவும் இருக்க வேண்டும்.

.........................

45.

 பிராம்மண பிரம்மசாரி வில்வம், புரசு இவையிரண்டில் ஏதேனும் ஒன்றை தண்டமாக ஏந்த வேண்டும்.

 க்ஷத்ரிய பிரம்மசாரி ஆல், கருங்காலி இவையிரண்டில் ஏதேனும் ஒன்றை தண்டமாக ஏந்த வேண்டும்.

 வைசிய பிரம்மசாரி அத்தி, பைலம் இவ்விரண்டில் ஏதேனும் ஒன்றை தண்டமாக ஏந்த வேண்டும்.

...................

 46.

 பிராம்மணன் ஏந்தும் தண்டம் தலை வரை உயரமுடையதாக இருக்க வேண்டும். க்ஷத்ரியன்  ஏந்தும் தண்டம் நெற்றிவரை இருக்க வேண்டும். வைசியன் ஏந்தும் தண்டம் மூக்கு வரை இருக்க வேண்டும்.

..................

47.

 அந்த தண்டங்கள் கோணலாக இருக்கக் கூடாது. வெட்டுப் பட்ட வடுக்கள் அற்றவையாக இருக்க வேண்டும். பார்க்க அழகாக இருக்க  வேண்டும். பார்ப்பவர்களுக்கு அச்சம் ஏற்படும் வண்ணம் இருக்கக் கூடாது. மேல் பட்டையோடு இருக்க வேண்டும். நெருப்புப் பட்டதாக இருக்கக் கூடாது.

.......................

48.

 ஒவ்வொரு நாளும் தண்டத்தைக் கையில் ஏந்தி, சூரிய நமஸ்காரம் செய்து, தீயை வலம் புரிந்து, பிறகு முறைப்படி பிஷை ஏற்கச் செல்ல வேண்டும்.

..............

49.

 பிராம்மண பிரம்மச் சாரி ”பவதி பிக்ஷாம் தேஹி” என்று கூறி  பிஷை கேட்க வேண்டும்.

 க்ஷத்ரிய பிரம்மச் சாரி ” பிக்ஷாம் பவதி தேஹி” என்று கூறி பிஷை கேட்க வேண்டும்.

 வைசிய பிரம்மச்சாரி ” பிக்ஷாம் தேஹி பவதி” என்று கூறி பிஷை கேட்க வேண்டும்.

.................

50.

 முதலில் தாயிடம் அல்லது சகோதரியிடம் அல்லது தாயின் சகோதரியிடம்,  அல்லது யார் இவனை அவமானப் படுத்த மாட்டார்களோ, அந்தப் பெண்ணிடம் பிட்ஷை  ஏற்க வேண்டும்.

.....................................

51.

 இவ்வாறாக பிக்ஷான்னத்தைக் கொண்டு, குருவுக்குக் கொடுத்து, அவரது அனுமதியின் பேரில் அவர் கொடுத்த மிகுதி அன்னத்தை, ஆசமனம் செய்து,  கிழக்கு நோக்கி அமர்ந்து உண்ண வேண்டும்.

(ஆசமனம் எனப்படுவது நீரினால் செய்யும் தூய்மை. மூன்று முறை மந்திரம் சொல்லி நீர் உண்ட பின், இரு முறை நீரால் வாயைத் துடைக்க வேண்டும். கண், காது, மூக்கு, தோள், மார்பு, தலை இவற்றையும் தொட்டுத் துடைக்கவேண்டும்)

....................

 52.

 தீர்க்காயுளை வேண்டுபவன் கிழக்கு திசை நோக்கி அமர்ந்து உண்ண வேண்டும்.

 கீர்த்தியை  விரும்புபவன் தெற்கு திசை  நோக்கி அமர்ந்து உண்ண வேண்டும்.

 செல்வத்தை விரும்புபவன் மேற்கு திசை நோக்கி அமர்ந்து உண்ண வேண்டும்.

 மோட்சத்தை விரும்புபவன் வடக்கு திசை நோக்கி அமர்ந்து உண்ண வேண்டும்.

............................

53.

 பிரம்மச்சாரி தினமும் ஆசமனம் செய்து, கிழக்கு நோக்கி அமர்ந்து வேறு நினைப்பின்றி உண்ண வேண்டும். உண்ட பிறகு கை கால்களை அலம்பிக் கொள்ள வேண்டும். முறைப்படி ஆசமனம் செய்து, நீரினால் இந்திரியங்களைத் துடைத்துக் கொள்ள வேண்டும்.

54.

 எப்போதும் அன்னத்தை பூஜிக்க வேண்டும். அன்னத்தை நிந்திக்காமல்  சாப்பிட வேண்டும். மனத்திலுள்ள  கலக்கங்களை யெல்லாம் விட்டு விட்டு  சாப்பிட அமர வேண்டும். சாப்பிடும்போது நிர்மலமான மனத்தோடு சாப்பிட வேண்டும். இந்த அன்னம் எனக்கு எப்போதும் கிடைக்க வேண்டும்” என்று பிரார்த்தித்துக் கொள்ள வேண்டும்.

......................

55

 இவ்வாறாக  தினமும் துதிக்கப்பட்டு உட்கொண்ட உணவு பலத்தையும் வீர்யத்தையும் அளிக்கும். மாறாக, துதிக்கப் படாமல் உட்கொண்ட உணவு பலத்தையும் வீர்யத்தையும் அழிக்கும்.

.............................

56.

 எச்சிலான உணவை யாருக்கும் கொடுக்கக் கூடாது. மத்தியானமும் இரவும் உணவு உண்ண வேண்டும். அது தவிர நடுநடுவே சாப்பிட்டுக் கொண்டிருக்கலாகாது. மத்தியானமும் இரவும் சாப்பிடும் போது கூட அளவுக்கு அதிகமாகச் சாப்பிடக் கூடாது. எச்சில் கையோடு எங்கும் போகக் கூடாது.

.....................

57.

 மிகுந்த படியாக, அளவுக்கதிகமாக சாப்பிடுவதால், ஆரோக்கியம் கெடும். ஆயுள் குறையும். சுவர்க்கம் முதலான புண்ணிய உலகங்களை அடைவதற்கு இது எதிரி. அதாவது அதிக அளவில் சாப்பிடுவது புண்ணியலோக பிராப்திக்கு தடையாகி விடும். அவ்வாறே நற்காரியங்களைச் செய்வதற்கும் இது தடையாகும். மேலும் உலகத்தாரின் தூற்றுதலுக்கும் ஆளாக  நேரிடும். எனவே அளவுக்கு அதிகமாக சாப்பிடக் கூடாது.

.................

58.

 பிராம்மணர் முதலானோர் பிரம்ம தீர்த்தத்தால் எப்போதும் ஆசமனம் செய்யவேண்டும். அன்றேல், காய தீர்த்தத் தாலோ  தேவ தீர்த்தத்தாலோ ஆசமனம் செய்யலாம். அதன்றி பித்ரு தீர்த்தத்தால் எப்போதும் ஆசமனம் செய்யலாகாது.

....................

59.

 பெருவிரலில்  முதல் பாகத்தில் பிரம்ம தீர்த்தம் உள்ளதாகவும், சுண்டு   விரலில் முதல் பாகத்தில்  காய தீர்த்தம் உள்ளதாகவும், விரல் நுனிகளில் தேவ தீர்த்தம் உள்ளதாகவும், பெருவிரல்சுட்டு விரல்களுக்கிடையே பித்ரு தீர்த்தம் உள்ளதாகவும் கூறப் டுகிறது.

.......................

60.

பிரம்ம தீர்த்தம் முதலானவைகளால் மூன்று முறைகள் ஆசமனம் செய்ய வேண்டும். உதடுகளை மூடிக் கொண்டு நீரினால் வாயைத் துடைக்க வேண்டும். பிறகு இடது கரத்தில் தண்ணீரை வைத்துக் கொண்டு தலையில் இருக்கின்ற இந்திரியங்களான கண்கள், காதுகள், மூக்கு முதலியவைகளையும், மார்பையும் தலையையும் துடைக்க வேண்டும்.

..........


......................

தொடரும்…

மேலும் தொடர்ந்துபெற வாட்ஸ்அப் 9789374109

..


📚மனுஸ்மிருதி என்னும் மனு தர்ம சாஸ்திரம் (முழுவதும்)-பாகம்-10

 📚மனுஸ்மிருதி என்னும் மனு தர்ம சாஸ்திரம் (முழுவதும்)-பாகம்-10

அத்தியாயம் -2

...........

31.

 பிராம்மண குழந்தைக்கு வைக்கும் பெயர் சுபம் தரும் வண்ணம் இருக்க வேண்டும். க்ஷத்திரியக் குழந்தைக்குப் பலம் தரும் வாசகமாக இருக்க வேண்டும். வைசியக் குழந்தைக்கு செல்வம் தரும் வாசகமாக இருக்க வேண்டும். சூத்திரர்களுக்கு   ஏவலன் என்பதை அறியும் வகையில் பெயர் வைக்க வேண்டும்.

....................

32.

 பிராம்மணனுடைய பெயர் சர்மாஎன்ற பதம் கூடியதாக இருக்க வேண்டும். ராஜாவுக்கு  ரக்ஷணம் சேர்ந்ததாக இருக்க வேண்டும். வைசியனுக்கு செல்வத்தோடு  கூடியதாக  இருக்க வேண்டும். சூத்திரனுக்கு தாசன் என்ற பதம் கூடியதாக இருக்க வேண்டும்.


( பிராம்மணனுக்கு நாராயணசர்மா, சிவ சர்மா என்று தெய்வப் பெயர்களாக அமைய வேண்டும். பிராம்மணன் வீட்டில்  எப்போதும் வேத சப்தமும், ஹோமப்புகையும் இருக்கும். அங்கே குழந்தைகளையோ  பெரியவர்களையோ  கூப்பிடும்  குரல் கூட புண்ணியத்தைத் தருவதாக அமைய வேண்டும்.

(க்ஷத்திரியனுக்கு  வர்மா என்ற பதம் சேர்க்கப் பட வேண்டும் பெயரிலேயே கம்பீரமும் இவன் காக்கப் பிறந்தவன் ” என்ற தொனியும் தெரிய வேண்டும்.

( வைசியன் செல்வத்தைப் பெருக்குபவன். அதை உணர்த்தும் வண்ணம் தன குப்தன்  என்பது போன்று பெயர் அமைய வேண்டும்.. வைசியனுக்கு குப்தா என்றபதம் அல்லது  பாலன் என்ற பதம்  பெயரோடு சேர்க்கப் படவேண்டும்.

( சூத்திரன் பிராம்மண க்ஷத்ரிய வைசியர்களுக்குப் பணிபுரிபவன்  என்பதால் இவன் பெயரோடு தாசன் என்ற பதம் சேர்க்கப் பட வேண்டும்)

.............

33.

 பெண்களுக்கு இடும் பெயர்கள் சுகமாக உச்சரிக்கக் கூடியதாகவும், குரூரமான அர்த்தம் கொடுக்கும் சொல்லாக இல்லாமலும், பொருளற்றதாக இல்லாமலும், மனத்துக்கு ஆனந்தத்தைக்  கொடுக்கக் கூடியதாகவும், மங்களமான   சொல்லாகவும் நெடில் எழுத்து ஈற்றாக இருப்பதாகவும், அதாவது  நீட்டி தீர்க்கமாகச் சொல்லும் அட்சரத்தோடு முடிவதாகவும்

( உதாரணமாக ரமா, உமா, என்ற பெயர்களைக் கூறலாம் ) 

 ஆசிகளைக் கொடுக்கக் கூடியதாகவும் இருக்க வேண்டும். ( காயத்ரீ தேவி, லக்ஷ்மீ தேவி முதலான பெயர்களை இதற்கு உதாரணமாகக் கூறலாம்.)

....................

34.

 நான்காம்  மாதத்தில், குழந்தையை வீட்டிலிருந்து வெளியே கொண்டு சென்று சூரியனை தரிசிக்கச் செய்ய வேண்டும். ஆறாவது  மாதம் அன்னம் ஊட்டும் சடங்கைச் செய்ய வேண்டும். அல்லது அவரவர் குல வழக்கப் படி அந்தந்த சடங்குகளைச் சுபதினங்களில் செய்ய வேண்டும்.

( இந்தச் சடங்குக்கு அன்னபிராசனம்  என்று பெயர். விக்னேஸ்வர பூஜை செய்து,  புண்யாஹவாசன தீர்த்தத்தால் குழந்தையையும், அன்னத்தையும் ப்ரோக்ஷிக்க வேண்டும். அதாவது  தீர்த்தத்தை குழந்தையின் மீதும், அன்னத்தின் மீதும், தெளித்து மந்திர பூர்வமாக சுத்தமாக்குறோம்.

 பிரதிசரம் என்ற கங்கணம் கட்ட வேண்டும். பிரதிசரம் என்பது  கயிறு. ஒன்பது  இழைகளால் ஆனது.

 இதை மந்திரபூர்வமாக குழந்தையிடம் கட்ட வேண்டும். இதை கங்கண தாரணம் என்றும் சொல்வார்கள். ஆண் குழந்தைக்கு வலது கையிலும், பெண் குழந்தைக்கு இடது கையிலும் கட்ட வேண்டும்.

 பிறகு தங்கப் பாத்திரத்தில் அன்னம் வைத்து, அதனோடு சிறிது தயிர், தேன், நெய் மூன்றையும்சேர்த்துக்கலந்து, குழந்தைக்கு ஊட்ட வேண்டும்.

 இதனால்  குழந்தைக்கு ஓளஷதி தேவதைகளின் அனுக்ரஹமும், ஜல தேவதைகளின் அனுக்ரஹமும் ஏற்படும்.

.....................

35.

 ” சூடாகர்மா” என்னும் குடுமி வைக்கும் சடங்கானது பிராம்மண க்ஷத்ரிய வைசியர்களுக்கு முதலாம் ஆண்டு அல்லது மூன்றாம் ஆண்டில் செய்யப் பட வேண்டியது. அல்லது அவரவர் வழக்கப் படி செய்ய வேண்டியது.

.................

36.

 பிராம்மணனுக்கு ஏழு வயதிலும், க்ஷத்ரியனுக்கு பத்து வயதிலும், வைசியனுக்கு பதினோராவது வயதிலும் உபநயனம் செய்ய வேண்டும்.

 இது பொது விதி. அனைத்து பிராம்மணர்களுக்கும், அனைத்து  க்ஷத்ரியர்களுக்கும், அனைத்து வைசியர்களுகப்குமான பொது விதி. விசேஷமான விதி அடுத்துச் சொல்லப் படுகிறது.


( உபநயனம் என்பது முக்கியமான சடங்கு. ஒரு மனிதனின் வாழ்வில் மிக மிக முக்கியமானஅங்கம் வகிக்கும் சடங்கு இது. இந்தச் சடங்கில் பூணூல்  அணிவிக்கப் படுகிறது. இந்தச் சிறுவன் இது  முதல் சிஷ்யனாகிறான். பிரம்மசாரியாகிறான். உபநயனம் என்றால் சிஷ்யனை குருவிடம் அழைத்துச் செல்வது என்று பொருள்.

 பாலனாக, சிறுவனாக இருக்கும் வரை அவனுக்கு எந்த நியமமும் கிடையாது. ஆனால் உபநயனம் ஆனதும் அவனுக்குக் கட்டுப் பாடுகள் ஏற்படும்.


( உபநயனம் என்பது இன்னொரு பிறவி எடுப்பது ஆகும். முதலில் பிறந்தது ஒரு பிறவி. இப்போது மீண்டும்இன்னொரு பிறவி எடுக்கிறான். அதனால் தான் உபநயனம் என்றசடங்கு  முடித்தவர்களுக்கு த்விஜன் என்ற பெயர் ஏற்பட்டது. இதற்கு இரண்டு பிறவிகள் கொண்டவன் என்று பொருள்.


( தற்காலத்தில் த்விஜன் என்ற சொல் பிராம்மணனை மட்டும் குறிப்பதாக நினைக்கிறார்கள். அது தவறு. த்விஜன் என்ற சொல் பிராம்மணன், க்ஷத்ரியன், வைசியன், மூவரையுமே குறிக்கும். ஏனெனில் மூவருக்குமே உபநயனச் சடங்கு உண்டு. த்விஜன் என்பதையே தமிழில் இரு பிறப்பாளன் என்று சொல்கிறார்கள்.


( இந்த உபநயனச் சடங்கை பிராம்மணனுக்கு ஏழு வயதிலும், க்ஷத்திரியனுக்கு பத்து வயதிலும், வைசியனுக்கு பதினோராவது வயதிலும் செய்ய வேண்டும் என்று இந்த ஸ்லோகத்தில் கூறுகிறார். இது பொது விதி. விசேஷ விதியும் உண்டு.

(க்ஷத்திரியர்களிலேயே அரசன், சேனாதிபதி, போன்றோரும் பிராம்மணர்களில் பிரதான புரோகிதர் போன்றோரும்,வைசியர்களிலும் மிக்க பெரும் செல்வந்தவர்களும் தங்களைப் போன்றே தங்கள் பிள்ளைகள் சிறந்து விளங்க வேண்டும் என்று விரும்பும் போது எந்த வயதில் உபநயனம் செய்ய வேண்டும் என்பதை அடுத்த ஸ்லோகத்தில் கூறுகிறார்.

..................

37.

பிரம்ம தேஜஸை விரும்பும் பிராம்மணனுக்கு ஐந்தாவது வயதிலும், பலத்தை க்கோரும் க்ஷத்ரியனுக்கு ஆறாவது வயதிலும், வாணிபம் கோரும் வைசியனுக்கு எட்டாவது வயதிலும் உபநயனம் செய்து வைக்க வேண்டும்.

.......................

 38.

 பிராம்மணனுக்கு பதினாறாவது வயது வரையும், க்ஷத்ரியனுக்கு இருபத்திரண்டாவது வயது வரையும்,  வைசியனுக்கு இருபத்து நான்காவது வயது வரையும் காயத்ரி அழியாமலிருக்கும். அதாவது அந்த வயதுக்குள்ளாவது காயத்ரி உபதேசம் நடை பெற வேண்டும்.


( இப்படி க் கூறியிருப்பது தவிர்க்க முடியாத காரணத்தால் குறிப்பிட்ட வயதில் செய்ய முடியாமல் போய், அதற்குப் பிறகும் காலம் கடந்து கொண்டே போனவர்களுக்காக சொல்லப் பட்டது. இந்த வயதுகள் உபநயனத்துக்கான வயதுகள் அல்ல.ஆனால் தவிர்க்க முடியாமல் தள்ளிப்போனாலும் இந்த வயதுக்குள் செய்ய வேண்டும், செய்யலாம் என்பதற்காகக் கூறப்பட்டது.)

...........................

39.

 அது வரையிலும் உபநயனம் செய்யாதவர்கள் காயத்ரீ உபதேசம் பெறும் அருகதையை  இழந்தவர்களாவர். இவர்கள் சான்றோர்களால் நிந்திக்கப் படுவார்கள். வைதீகச் சடங்குகளுக்கு இவர்களைச்சேர்க்க மாட்டார்கள்.

......................

40.

 இவ்வாறு தூய்மை இழந்து விதிப்படி பிராயச்சித்தம் செய்து கொள்ளாதவனோடு பிராம்மணன், யாகம், கன்யாதானம், முதலான எந்தச் சம்பந்தமும் வைத்துக் கொள்ளக்கூடாது.

......................

தொடரும்…

மேலும் தொடர்ந்துபெற வாட்ஸ்அப் 9789374109

..


📚மனுஸ்மிருதி என்னும் மனு தர்ம சாஸ்திரம் (முழுவதும்)-பாகம்-9

 📚மனுஸ்மிருதி என்னும் மனு தர்ம சாஸ்திரம் (முழுவதும்)-பாகம்-9

அத்தியாயம் -2

.........................

21.

 இமயமலைக்கும் விந்திய  மலைக்கும் இடையில் , சரஸ்வதி நதிபாயும் தேசத்துக்கும், பிரயாகைக்கும் இடைப்பட்ட  தேசத்துக்கு  ” மத்திய தேசம்” என்று பெயர்.

..................

22.

 கிழக்குக் கடலுக்கும், மேற்குக் கடலுக்கும் இடையிலுள்ள  பிரதேசத்துக்கு ” ஆர்யாவர்த்தம்” என்று பெயர்.

(தென்னிந்தியா)

..........................

23.

 கறுப்புக்கோடுகள் கொண்ட மான் பிறந்து தன்னிச்சையாக சஞ்சரிக்கின்ற பிரதேசமே யக்ஞங்கள் செய்வதற்கு உகந்த இடமாகும். மற்றைய இடங்கள் மிலேச்ச தேசம் எனப்படும். மிலேச்ச தேசம் யக்ஞம் செய்வதற்கு அருகதையற்ற இடமாகும்.

..........

24.

 பிராம்மணர், க்ஷத்ரியர், வைசியர் என்னும் இருபிறப்பாளர்களாகிய மூவர்ணத்தாரும் முயற்சி செய்து, யக்ஞபூமிகளான இந்த தேசங்களை அடைய வேண்டும். சூத்திரர்கள் தங்கள் ஜீவனமான தொழில் நிமித்தமாக எந்தத் தேசத்திலும் வசிக்கலாம்.

................

25.

 இதுவரை இந்த தர்ம சாஸ்திரத்தின் தோற்றம் முழுவதுமாகக் கூறப்பட்டது. இவ்வுலகம் தோன்றிய விஷயமும் கூறப் பட்டது. இனி  வர்ணதர்மங்களையும், ஆசிரம தர்மங்களையும் கூறுகிறேன்.கேளுங்கள்.

.....................

26.

 பிராம்மணர்களும், க்ஷத்ரியர்களும், வைசியர்களும் கர்ப்பாதானம் முதலான வைதிகக் கிரியைகளைச் செய்ய வேண்டும். இவையே ஒருவனை  பரிசுத்தமாக்குகின்றன. பரலோக வாழ்வையும்பெற்றுத் தருகின்றன.

..................

27.

 கர்ப்பாதானம் முதலான ஹோம சடங்குகளாலும், ஜாதகர்மா, சவுலம், மௌஞ்சீபந்தனம், உபநயனம் முதலான சடங்குகளாலும், பெற்றோரால் ஏற்பட்ட பீஜதோஷம், கர்ப்பவாச தோஷம் முதலான வற்றால் ஏற்பட்ட  தோஷங்கள் நீங்கி பிராம்மணர்களும் க்ஷத்ரியர்களும், வைசியர்களும் பரிசுத்தமாகிறார்கள்.

.......................

28.

 வேத மோதுவதாலும் , விரத நியமங்களாலும், ஹோமங்களாலும் காலை மாலை செய்யும் ஔ பாசனம் முதலான கிரியைகளாலும் மூன்று வேதங்களிலும் நன்கு தேர்ச்சி பெறுவதாலும், புத்ரோத்பத்தியாலும், தர்ப்பணங்களாலும், பஞ்சமஹா யக்ஞங்களாலும் பெரிய யாகங்களாலும் இவ்வுடலானது பிரம்ம பதத்தை அடைவதற்கு ஏற்றதாக ஆகிறது.

........................

29

 தொப்புள் கொடி அறுப்பதற்கு முன்பே ஜாதகர்மா என்னும்  சடங்கு செய்ய வேண்டும். தங்கம், நெய், தேன் இவைகளை மந்திரபூர்வமாக நாவில் தடவ வேண்டும்.


( ஒரு குழந்தை பிறந்தவுடன் முதலில் ஜாதகர்மா செய்ய வேண்டும். பிறந்ததும் செய்யும் சடங்கு இது. 

குழந்தை பிறந்த அன்று பித்ருக்கள் அவ்விடம் வருகிறார்கள். குழந்தையின் தந்தை குழந்தை பிறந்தவுடன், அது நடு இரவானாலும் கூட ஸ்நானம் செய்ய வேண்டும். நாந்தி சிராத்தம், தானம் முதலியவைகளைச் செய்ய வேண்டும்.   தொப்புள் கொடி அறுப்பதற்குள் இதைச் செய்ய வேண்டும். இதற்கு ஜாதகர்மா என்று பெயர்.

 இந்த ஜாதகர்மா குழந்தைக்கு ஏற்படக்கூடிய சகல தோஷங்களையும் நீக்குகிறது. பாலாரிஷ்டம் ஏற்படாது. துஷ்டகிரகங்கள் குழந்தையின் அருகே வரா. தொப்புள் கொடி அறுப்பதற்கு முன்பு தீட்டு இல்லை என்பதால், அதற்கு முன்பே இதைச் செய்ய வேண்டும்)

................

30.

 பத்தாவது நாள் கடந்த பிறகு, பதினோராவது நாள் அல்லது பன்னிரண்டாவது நாள் அல்லது வேறு ஏதாவது சிறந்த  நன்னாளில், நல்ல முகூர்த்தத்தில், நல்ல நட்சத்திரத்தில் பிராம்மணனுக்கும்,  க்ஷத்திரியனுக்கும், வைசியனுக்கும் நாமகரணம்(பெயர்சூட்டுதல்) செய்ய வேண்டும்.

............................................

..

தொடரும்…

மேலும் தொடர்ந்துபெற வாட்ஸ்அப் 9789374109

..


📚மனுஸ்மிருதி என்னும் மனு தர்ம சாஸ்திரம் (முழுவதும்)-பாகம்-8

 📚மனுஸ்மிருதி என்னும் மனு தர்ம சாஸ்திரம் (முழுவதும்)-பாகம்-8

அத்தியாயம் -2

.........................


11.

 பிரமாணங்களான ஸ்ருதிகளையும், ஸ்ம்ருதிகளையும் எந்த பிராமணனோ, க்ஷத்ரியனோ, வைசியனோ அவமதித்து தூஷிக்கின்றானோ, அப்படிப்பட்ட நாஸ்திகளை நல்லவர்கள் புறக்கணிக்க  வேண்டும்.

(நாஸ்திகள் என்பவன் முற்றிலும் வேதத்தை ஏற்காதவன்.அப்படிப்பட்ட முதல் மூன்று ஜாதியைச்சேர்ந்த நாஸ்திகர்களையும் ஜாதியைவிட்டு விலக்கிவிடுதல்,சமுதாயத்தைவிட்டு விலக்கிவைத்தல் போன்ற பழக்கங்கள் முற்காலத்தில் இருந்துள்ளன)

...................

12.

 வேதம், ஸ்ம்ருதி, நல்ல ஆசாரம், சுய ஆனந்தம் இந்த நான்கும் தர்மத்தின்  சொரூபம் என்று கூறுவார்கள் பெரியோர்.

...................

13.

 அர்த்தம், காமம் இவைகளில் விருப்பம் இல்லாதவனுக்கே தர்ம ஞானம் விதிக்கப் பட்டுள்ளது. தர்மத்தை அறிய விரும்புபவனுக்கு முக்கியமான பிரமாணம் வேதமே ஆகும்.

..............

14.

 எங்கே தர்ம சாஸ்திரங்களுக்குள் ஒன்றுக் கொன்று வேறுபாடு காணப்படுகின்றதோ, அங்கே இரண்டு விதமாக தர்மங்கள் கூறப்பட்டிருக்கும். வித்வான்கள் இவ்விரண்டு தர்மங்களையும் கடைப்பிடிக்கலாம்.

........

15.

 சூரியோதயம் ஆன பிறகு ஹோமம் செய்ய வேண்டும். இது ஒரு வேத வாக்கியம். உதிப்பதற்கு முன்பே நட்சத்திரங்கள் தெரியும்.அருணோதய காலத்தில் ஹோமம் செய்ய வேண்டும்.

 இது ஒரு வேத வாக்கியம். ஒன்றுக் கொன்று முரணானவை இவை.  இப்படி ஒன்றுக் கொன்று முரண்பாடு தென்படும் போது இரண்டு விதங்களில் எந்த விதமாகவும் செய்யலாம்.

........................

16.

 கர்ப்பாதானம் முதலான அனுஷ்டானங்கள் எவனுக்கு விதிக்கப் பட்டுள்ளதோ அவனுக்கே இந்த மனு தர்மத்தைப் படிக்கும் அதிகாரம் உள்ளது. மற்றவர்களுக்கு இல்லை.

(கர்பாதானம் செய்யும் அதிகாரம் உள்ளவன் திருமணமான ஆண்.அவன் மட்டுமே இந்த ஸ்மிருதியை படித்துபின்பற்ற அதிகாரம் உள்ளவன். கர்பாதானம் செய்ய விரும்பாத துறவிகள் இதை படிக்கவும் பின்பற்றவும் தேவையில்லை)

................

17.

 ஸரஸ்வதீ நதிக்கும் திருஷத்வதீ என்னும் நதிக்கும் இடையிலுள்ள பிரதேசத்தை ”தேவநிர்மிதம்” என்றும்” பிரம்மாவர்த்தம்” என்றும் கூறுவார்கள்.

.......................

18.

 அந்த தேசத்தில் நால்வர்ணத்தாருக்கும் கலப்பு வர்ணத் தாருக்கும் பாரம்பரியமாக வரும் ஆசாரமே ”சதா சாரம்” எனப்படும்.

(நான்கு வர்ணத்தவருக்கும் இடையே கலப்பு அவ்வப்போது நிகழ்ந்துள்ளது,இதுபற்றி விரிவாக பிற்பகுதிகளில் படிக்கப்போகிறோம்)

.............

19.

 குரு க்ஷத்திரம், மத்ஸ்ய தேசம், பாஞ்சாலம், சூரசேநகம் என்னும் தேசங்களுக்கு ” பிரம்மரிஷி தேசம்” என்று பெயர். இது பிரம்மாவர்த்த தேசத்துக்கு அடுத்தது.

............................

20.

 இந்தத் தேசத்தில் பிறந்த பிராம்மணர்கள் மூலமாக உலக மாந்தர் தத்தமக்குரிய ஆசாரங்கள் எவை எவை என்று அறிய வேண்டும்.

.....

(இங்கே இரண்டு பகுதிகளைப்பற்றி குறிப்பிடுகிறார் 1.பிரம்மாவர்த்தம்.2.பிரம்மரிஷிதேசம். ஸரஸ்வதீ நதிக்கும் திருஷத்வதீ நதிக்கும் இடைப்பட்ட பகுதி பிரம்மாவர்த்தம். 

ஸரஸ்வதி நதி வற்றிபோய் அந்தப்பகுதி பாலைவனமாகி பத்தாயிரம் ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது.

இதிலிருந்து இந்த மனுசாஸ்திரம் பத்தாயிரம் முதல் இருபதாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பது தெரிகிறது.மகாபாரதம் காலத்தில் ஸரஸ்வதிநதி வரண்டுவிட்டது என்பதுபற்றிய குறிப்புகள் உள்ளன.

இந்த இடம் தற்போது இந்திய- பாகிஸ்தான் எல்லைக்கு அருகே உள்ளது.

...

செயற்கைக்கோள் படங்களும் இதையே உறுதிப்படுத்துகின்றன. இதற்கிடையே தற்போது இந்த சரஸ்வதி நதியை மீட்டெடுக்கும் முயற்சிகளும் நடைபெற்றுவருகின்றன.

..

.

தொடரும்…

மேலும் தொடர்ந்துபெற வாட்ஸ்அப் 9789374109

......................

..

தொடரும்…

மேலும் தொடர்ந்துபெற வாட்ஸ்அப் 9789374109

..


📚மனுஸ்மிருதி என்னும் மனு தர்ம சாஸ்திரம் (முழுவதும்)-பாகம்-7

 📚மனுஸ்மிருதி என்னும் மனு தர்ம சாஸ்திரம் (முழுவதும்)-பாகம்-7

அத்தியாயம் -2

.........................

1.

 வேதம் முழுவதையும் நன்கு அறிந்தவர்களாகவும், விருப்பு வெறுப்பு அற்றவர்களாகவும் சாதுக்களாகவும் உள்ள மஹான்கள்  எப்போதும் அனுஷ்டிக்கின்ற தர்மம் எதுவோ அதை எடுத்தியம்புகிறேன், கேளுங்கள்.

.........................

2.

 விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்வதற்காக காரியங்களைச் செய்தல் என்பது  போற்றுதலுக்குரிய விஷயமன்று.  எனினும்  இவ்வுலகில் பலனை எதிர் நோக்காமல் காரியம் செய்வது என்பது  அரிதான விஷயம். 

வேதங்களை நன்கு படித்தல், வேதங்களில் கூறப் பட்டுள்ள தர்மங்களில் ஆழ்ந்து ஈடுபாடு  கொண்டிருத்தல் என்பதும் பலனைக் கொடுக்கக் கூடியதேயாகும்.

.

(வேதங்களின் முக்கியமாக இரண்டு பிரிவுகள் உள்ளன.1. பலன்களைத்தரக்கூடிய செயல்களைக்குறித்த யாகங்கள்,பிரார்த்தனைகள் போன்றவை. 2. பலன்களைத் துறந்து முக்தியடைவதுபற்றிய போதனைகள்.)

.......................

3.

 இவை இவை எனக்குத்தேவை என்று கோருவதற்கு ” சங்கல்பம்” என்று பெயர். சங்கல்பத்துக்கு மூல காரணமாக இருப்பது ஆசை. ஆசையாலேயே சங்கல்பம் தோன்றுகிறது. யக்ஞங்கள் செய்வதில் விருப்பம் சங்கல்பத்தாலேயே ஏற்படுகிறது. விரதங்கள், நியமங்கள், போன்றவை அனைத்துமே சங்கல்பத்தாலேயே ஏற்படுகின்றன....

............

4.

 ஆசையற்றவனுக்கு எந்தச் செயலும் இல்லை. மனிதர்கள், செய்யும்  ஒவ்வொரு செயலும் ஆசையின் காரணமாகவே செய்யப் படுகிறது.

.......................

5.

 முறையாக நல்லபடி காரியங்களைச் செய்பவன் அமரனாகிறான்(மரணமற்றவன்). இவ்வுலகிலும், அவனுடைய அனைத்து விருப்பங்களும் நிறைவேறும்.

.......................

6. 

 வேதமே உலகில் தர்மத்துக்கு மூலம், வேதமறிந்தவர்களால் இயற்றப்பட்ட ஸ்ம்ருதிகளும் அவர்களது  ஒழுக்கமுமே பிரமாணங்கள். சாதுக்கள் கடைப்பிடிக்கும் ஆசாரங்களும், அவர்களது ஆத்மானந்தமும் பிரமாணங்கள்.

.

(இந்துக்களின் சாஸ்திரங்களுக்கு வேதம் என்று பெயர்

வேதம் என்றால்  அறிவு என்று பொருள்.

அறிவு இரண்டு வழிகளில் கிடைக்கிறது. ஒன்று புறஉலகை ஆராய்வது. 

இரண்டாவது அக உலகை ஆராய்வது. புற உலகை ஆராய்வதால் கிடைக்கும் அறிவு பற்றி நாம் அறிவோம். 

அது தான் தற்கால விஞ்ஞானஅறிவு. 

அகஉலக அறிவு என்றால் என்ன?

ரிஷிகள் தியானத்தில் ஆழ்ந்து செல்லும்போது இந்த உடல் உணர்வை கடந்து செல்கிறார்கள். அப்போது நாம் காணும் சூரியன்,சந்திரன், உட்பட சூரியமண்டலம்,அதை தாண்டியவை எல்லாம் காட்சிகளாக கிடைக்கிறது. 

சூரிய மண்டலம்  பிற கிரகங்களையும்,நட்சத்திர மண்டலங்களையும்,அதைத்தாண்டிய உலகங்களையும் அவர்கள் அகக்காட்சியில் காண்கிறார்கள்.

இதிலிருந்து வானஇயல்ட சாஸ்திரம், ஜோதிடம் போன்றவை உருவானது.

பூமி சூரியனை சுற்ற இந்தனை நாட்கள் ஆகின்றன.பிற கிரகங்கள் சூரியனை சுற்ற இத்தனை நாட்கள் ஆகின்றன. என்பதை நுண்ணோக்கிகள் இல்லாமல் அவர்களால் எப்படி நுல்லியமாகக் கணக்கிட முடிந்தது? சாதாரண கண்களால் வானத்தை நோக்கினால் நட்சத்திரங்களையும்,கிரகங்களையும் நம்மால் பிரித்தறிய முடியாது.

அவர்கள் அகக்காட்சியில் அனைத்தையும் காண்கிறார்கள்.

இதிலிருந்து உருவாவது தான் அகவிஞ்ஞானம்.

இந்த பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொன்றும் ஒரு வேதம். இந்த வேதத்திற்கு அளவே இல்லை. இது எல்லையற்றது. வேதம் தொடக்கமும் முடிவும் இல்லாதது. வேதங்கள் என்பது இவ்வளவு தான், இதற்கு மேல் எதுவும் இல்லை என்று அறுதியிட்டு கூறமுடியாது. இவைகள் அனைத்தையும் புத்தகத்தில் கொண்டுவர முடியாது.

ஆகவே வேதங்கள் என்பவை புத்தகங்கள் அல்ல. அவைகள் இயற்கையின் மாறாத நியதிகள். 

இந்த நியதிகள் எப்போதும் இருக்கின்றன. மனிதன் அவைகளை கண்டுபிடிக்கிறான்.

-

இது வேதம் என்பது எப்படி தெரியும்? 

யாருடைய வாயிலிருந்து வெளிப்படும் வார்த்தைகள் ,அவர் விரும்பிய பலனை அப்படியே பலனை தருமோ அது தான் வேதம்.

வேதம் என்றால் எக்காலத்திலும் இருக்கக்கூடிய அறிவுத்தொகுதி.

தொடக்கமும் முடியும் அற்ற வேதங்களின் மூலமே உலகம் முழுவதும் படைக்கப்பட்டிருக்கிறது.

இந்த உலகத்தில் என்னென்ன உள்ளதோ அவை அனைத்தும் எண்ணங்களின் வெளிப்பாடே.

எண்ணமோ சொற்களின் மூலம் தான் தன்னை வெளிப்படுத்திக்கொள்ள முடியும்.

தோன்றா நிலையில் இருந்த எண்ணம் எந்த சொற்களின் மூலம் வெளிப்பட்டதோ, 

அந்த சொற்களின் தொகுதியே வேதங்கள்.

வேதத்தின் மொழி என்ன? சமஸ்கிருதம் இல்லை. 

வேதத்தின் மொழி வேதமொழி.(அதற்கு எழுத்துக்கள் இல்லை)

 வேதமொழியைவிட பழைய மொழி எதுவும் இல்லை.

-

வேதங்களை எழுதியது யார் ? என்று நீங்கள் கேட்கலாம். 

வேதங்கள் எழுதப்படவே இல்லை. 

சொற்களே வேதங்கள். 

ஒரு சொல்லை நான் பிழையின்றி உச்சரித்தால் அதுவே வேதம்.

விரும்பிய பலனை அது உடனே அளிக்கும்.

-

வேதத்தொகுதி என்னென்றும் உள்ளது. 

உலகம் எல்லாம் அந்தச் சொல்தொகுதியின் வெளிப்பாடே.

வெளிப்பட்டு காணப்படுகின்ற சக்தி ஒரு கல்பம் முடியும்போது சூட்சும நிலையை அடைந்து, சொல் வடிவையும், பின்பு எண்ண வடிவையும் அடைகிறது. அடுத்த கல்பத்தில் மீண்டும் எண்ணங்கள் சொல்லாகி, அதிலிருந்து உலகம் பிறக்கிறது.

வேதங்களில் அடங்காதது என்று ஒன்று இருப்பதாக நீங்கள் நினைத்தால் அது உங்கள் மனமயக்கமே. 

அப்படி எதுவும் இருக்க முடியாது.இந்த உலகம் வேதத்திற்குள் அடக்கம்

-வேதங்கள் மனிதர்களால் எழுதப்படவில்லை. மற்ற மதங்களின் நூல்கள் அனைத்தும் மனிதர்களால் எழுதப்பட்டவை,ஆனால் வேதங்கள் மனிதரால் எழுதப்படவில்லை.)


.....................

7.

 எவருக்கு  எந்தெந்த தர்மங்கள் மனுவினால் சொல்லப்பட்டுள்ளதோ, அவை அனைத்தும் வேதத்தில் சொல்லப் பட்டுள்ளவையே. சர்வ ஞான சொரூபன் மனு பகவான். அவர் கூறிய அனைத்தும் வேதம் கூறியதே.

(ஏற்கனவே வேதத்தில் இருப்பதையே மனு கூறினார்)

............................

8.

 இந்த தர்ம சாஸ்திரம் முழுவதும் ஞானக் கண்ணால் கண்டது என்பதையும் , வேதம் கூறியது என்பதையும் அறிந்து விவேகமுள்ளவன் ஸ்வதர்மத்தை அனுஷ்டிக்க வேண்டும்.

..................

9.

மனிதன் வேதங்களிலும் , தர்ம சாஸ்திரங்களிலும் கூறப் பட்டுள்ள தர்மத்தை அனுஷ்டித்தால், இவ்வுலகில் கீர்த்தியையும் மேலுலகத்தில் மோட்சத்தையும் அடைவான்.

....

(மோட்சம் என்பது வேறு முக்தி என்பது வேறு சிலர் கூறுகிறார்கள்.சிலர் மோட்சம், முக்தி இரண்டும் ஒன்றே என்று கூறுகிறார்கள்.

இந்த ஸ்மிருதி மேல்உலகில் வாழ்வதையே மோட்சம் என்கிறது. 

1.ஆன்மா மிகஉயர்ந்த உலகத்தில் பலகோடி ஆண்டுகள் ஏதாவது ஒரு உடலில் வாழ்கிறது,பிறகு பிரபஞ்சம் மொத்தமாக பிரம்மத்தில்  ஒடுங்கும்போது அவர்களது ஆன்மா, பிரம்மத்தில் ஒடுங்குகிறது..பக்தி மார்க்கத்தை கடைபிடிப்பவர்கள் இந்த நிலையை அடைகிறார்கள்.

இதையே பக்தி சாஸ்திரங்கள் மோட்சம் என்று அழைக்கின்றன. 

2.முக்தி என்பது இந்த உலகில் வாழும்போதே ஆன்மா உடலற்றநிலையை அடைத்து பிரம்மத்துடன் ஒன்று கலப்பதை முக்தி என்று அழைக்கிறார்கள். அதன் பிறகு பிறவி ஏற்படாது.ஆனால் மோட்சம் அடைந்த ஆன்மா உலகநன்மைக்காக மீண்டும் பிறக்க வாய்ப்புள்ளது.

...................

10.

 வேதங்கள் ” ஸ்ருதிகள்” எனப்படும். தர்ம சாஸ்திரங்கள் ” ஸ்மிருதிகள்” எனப்படும். இவைகளைக் குறித்து எதிர் மறையான தர்க்கங்களைச் செய்தல் கூடாது. இவை இரண்டிலுமே தர்மம்  பிரகாசிக்கிறது.

.

(ஸ்ருதிகள்,ஸ்மிருதிகள் என்று இரண்டு இருக்கின்றன. வேதத்திற்கு ஸ்ருதி என்று பெயர். மக்கள் பின்பற்றும் சட்டங்களுக்கு ஸ்மிருதி என்று பெயர். இதில் ஸ்ருதி எக்காலத்திலும் மாறாதது.புதியதை சேர்ப்பதோ பழையதை நீக்குவதோ முடியாது.ஆனால் ஸ்மிருதிகள் காலத்திற்கு காலம் மாறக்கூடியது. மகான்கள் அந்தந்த காலத்திற்கு ஏற்றாற்போல ஸ்மிருதியில் மாற்றங்களைக் கொண்டுவருவார்கள்,புதிய விதிகளை சேர்ப்பார்கள்,பழையவற்றை நீக்குவார்கள்)

......................

..

தொடரும்…

மேலும் தொடர்ந்துபெற வாட்ஸ்அப் 9789374109

..


மனுஸ்மிருதி என்னும் மனு தர்ம சாஸ்திரம் (முழுவதும்)-பாகம்-6

 மனுஸ்மிருதி என்னும் மனு தர்ம சாஸ்திரம் (முழுவதும்)-பாகம்-6

...

101.

 பிராம்மணன் தன்னுடைய  செல்வத்தையே தான் அனுபவிக்கிறான். தன்னுடைய ஆடைகளையே தான் உடுத்துகின்றான். தன்னுடைய செல்வத்தையே பிறர்க்கு அளிக்கின்றான்.

(இந்த உலகமே பிராமணனுக்கு சொந்தமானது என்பதை இதற்கு முந்தைய ஸ்லோகத்தில் பார்த்தோம்.பிராமணன் என்பவன் யார் என்பதற்கான விளக்கத்தையும் பார்த்தோம்)

...............

102.

 ஞானியான ஸ்வாயம்புவ மநு, பிராம்மணனுடையனவும், மற்றவர்களுடையனவுமான தர்மங்களை தெரிவிப்பதற்காக இந்த தர்ம சாஸ்திரத்தை வழங்கினார்.

........

103.

 இந்த மனு தர்ம சாஸ்திரத்தை படிப்பதனால் அடையும் பலன்களை அறிந்து பிராம்மணன் இந்த  தர்ம சாஸ்திரத்தை நன்கு முயற்சியோடு படிக்க வேண்டும். சிஷ்யர்களுக்கு எடுத்துக் கூற வேண்டும்.

.....

104.

 இந்த சாஸ்திரத்தை மிக்க நியமத்தோடு படிக்கும் பிராம்மணனுக்கு மனத்தாலும்  வாக்காலும் உடலாலும் ஏற்படும் எந்த பாபமும் அண்டாது. அதாவது இதைப் படித்து அறிந்த பிறகு பாபமே  செய்ய மாட்டான்.

........................

105.

 இந்த சாஸ்திரத்தை படித்து ஓதுபவன் தன்னுடைய முன்னோர்களில் ஏழு தலை முறையினரையும், தனக்குப் பின் ஏழு தலைமுறையினரையும் புனித மாக்குகிறான். இந்தப் பூமண்டலம் முழுவதையும் தானம் பெறுவதற்கும் அருகதையுடையவனாகிறான்.

...................

106.

 இந்த தர்ம  சாஸ்திர அத்யயனம், மநோரதங்களை பூர்த்தியாக்கும். இந்த தர்ம சாஸ்திரம் மிகவும் சிரேஷ்டமானது. ஞானத்தை பெருக்குவது, புகழைத் தருவது, தீர்காயுளைத் தருவது. மோட்சமடைய மேலான சாதனமானது.

...............

107.

  இந்த தர்ம சாஸ்திரத்தில் அனைத்து  தர்மங்களும் கூறப் பட்டுள்ள, செய்யத் தக்கவைகளும், தகாதவைகளுமான தர்ம  விஷயங்களும், அதர்ம விஷயங்களும் அவற்றின் பலன்களும் கூறப் பட்டுள்ளன. மேலும் நான்கு வர்ணத்தார் நித்தியமாக கடைப்பிடிக்க வேண்டிய ஆசார விஷயங்களும் கூறப் பட்டுள்ளன.

.......................

108.

 வேதங்களிலும் ஸ்மிருதிகளிலும் கூறப்பட்ட ஆசாரங்களே மேலான தர்மங்கள். எனவே மக்களின் நலன் கோரும் துவிஜன் ஆசார விஷயங்களில் எப்போதும் முயற்சியுடன் ஈடுபட்டவனாக இருக்க வேண்டும்.( பிராம்மணன், க்ஷத்ரியன், வைசியன் என்னும் மூவர்ணத்தாரும் துவிஜர்கள்)

..................

109.

 ஆசாரத்திலிருந்து விலகிய பிராம்மணனுக்கு, வேதாத்ய யனத்தால் பலன் கிட்டாது. ஆசாரமானவனே  ஸம்பூர்ணமான பலனை ப் பெறுவான். ஆசாரம் என்பது தூய்மை, தூய்மையான  அனுஷ்டானங்களை, பூஜைகளை தினமும் செய்பவனே ஆசார சீலன்.

.................

109.

 இவ்வாறாக ஆசாரத்தை ஆதாரமாகக் கொண்டு தர்மம் இருப்பதை உணர்ந்து, எல்லா தவங்களுக்கும் ஆசாரமே முதல் முக்கியமானது என்று முனிவர்கள் தெரிவித்தார்கள்.

.....................

111.

 உலக  உற்பத்தியும், ஸ்ம்கார முறைகளும், விரத முறைகளும், பிரம்மசரிய விரத முறைகளும் இந்த தர்ம சாஸ்திரத்தில் கூறப் பட்டுள்ளன.

...............

112.

 விவாஹ முறைகளையும், விவாஹத்துக்கான லக்ஷணங்களையும், யக்ஞங்களின் லக்ஷணங்களையும், சிராத்த விஷயங்களையும், இந்த தர்ம சாஸ்திரம் கூறுகிறது.

..................

113.

 ஜீவனம் நடத்துவதற்கான தொழில்களின் லக்ஷணங்களையும் இல்லறத்தானின் நியமங்களையும்,சாப்பிடத்தக்கவை எவை, தகாதவை எவை என்ற விஷயங்களைப் பற்றியும், மரண காலங்களில் ஏற்படும் தீட்டுகளைப் பற்றிய விவரங்களையும் பொருட்களுக்கு தண்ணீர்  முதலியவற்றால் கிடைக்கும் சுத்தி முறைகளைப் பற்றியும் இந்த தர்ம சாஸ்திரம் விளக்குகிறது.

..............

114.

 பெண்களுக்குரிய தர்ம விஷயங்களும், வான பிரஸ்தர்களுக்குரிய தர்ம  விஷயங்களும், சந்யாஸ தர்ம விஷயங்களும், மன்னனுக்குரிய தர்ம விஷயங்களும், மோக்க்ஷத்துக்குரிய விஷயங்களும் இந்த தர்ம சாஸ்திரத்தில் விளக்கப் பட்டுள்ளன.

......................

115.

 சாட்சிகளை விசாரிக்கும் முறைகளும், பெண்களும் ஆண்களும் நடந்து கொள்ள வேண்டிய  முறைகள், பாகப் பிரிவினை ,  சூதாட்டம், குற்றவாளிகளைத் தண்டித்தல் முதலான விஷயங்களும் இந்த தர்ம சாஸ்திரத்தில் கூறப் பட்டுள்ளன.

....................

116.

 வைசியர்கள் சூத்திரர்கள் முதலானோரின் தர்ம அனுஷ்டான முறைகள், கலப்பு திருமணங்கள், ஆபத்துக் காலங்களில் கடைப் பிடிக்க வேண்டிய விதி முறைகள், பிராயச்சித்த முறைகள் முதலான விஷயங்களும் இந்த தர்ம சாஸ்திரத்தில் கூறப் பட்டுள்ளன.

...................

117.

 தேகத்தை விடுதல், மூன்று வகையான கர்ம வினைகள் ஏற்படுதல், சாஸ்திரத்தில் செய்யச் சொன்ன, செய்யக் கூடாது என்று சொன்ன விஷயங்களின் பலாபலன்கள் முதலானவையும் இந்த  தர்ம சாஸ்திரத்தில் கூறப் பட்டுள்ளன.

.......................

118.

 தேச தர்மங்கள், ஜாதி தர்மங்கள், குல தர்மங்கள், வேதத்துக்கு விரோதமானவர்களின் தர்மாதர்மங்கள், முதலானவற்றையும் இந்த தர்ம சாஸ்திரத்தில்  எடுத்துரைத்துள்ளார்.

........................

119.

 முனிவர்களே, நான் வினாவியபோது, மனுவானவர் எனக்கு இந்த தர்ம சாஸ்திரத்தை எவ்வாறு உபதேசித்தாரோ அவ்வாறே அதை உங்களுக்கு எடுத்துரைக்கிறேன். கேளுங்கள்.

..................................


அத்தியாயம் ஒன்று நிறைவுற்றது...இனி இரண்டாவது அத்தியாயத்தை பார்க்கலாம்

..

..

தொடரும்…

மேலும் தொடர்ந்துபெற வாட்ஸ்அப் 9789374109

..


மனுஸ்மிருதி என்னும் மனு தர்ம சாஸ்திரம் (முழுவதும்)-பாகம்-5

 மனுஸ்மிருதி என்னும் மனு தர்ம சாஸ்திரம் (முழுவதும்)-பாகம்-5

...

81.

 கிருத யுகத்தில் தர்மம் நான்கு பாதங்கள் கொண்டதாக இருக்கும்.  எங்கும் சத்யமே நிறைந்திருக்கும்.

( தர்ம தேவதையை ஒரு பசுவாக உருவகப் படுத்தினால்,அதற்கு நான்கு பாதங்கள் இருக்குமல்லவா? இவ்வாறு இந்த ஸ்லோகத்தின்  பொருளைப் பார்க்க வேண்டும். ஒரு பசு நான்கு  கால்களுடன்  இருக்கும் போது அது நலமாக இருப்பதாகக் கொள்ளலாம். ஒவ்வொரு காலாக ஒடிந்தால் நடக்க முடியாமல் நிலை தடுமாறி வீழ்ந்து விடுமல்லவா?


 நான்கு யுகங்களில் முதல் யுகம் கிருதயுகம். இந்த யுகத்தில் மனிதர்கள் அனைவரும் தத்தமக்குரிய தர்மங்களை பூரணமாகக் கடைப் பிடிப்பவர்களாக இருப்பார்கள். தர்ம தேவதை திருப்தியோடு  இருக்கும்.

 அடுத்த யுகமான திரோத யுகத்தில் மனிதர்களுக்கு கொஞ்சம் தர்மத்திலுள்ள பற்று குறையும். அந்த யுகத்தில் பசு ரூபமான தர்ம தேவதை தன் ஒரு காலை இழந்து மூன்று  கால்களுடன்  சிரமப்படும்.  அதாவது தர்மம் உலகில்  முழுமையாக இல்லாது அங்கங்கே குறைந்து காணப்படும்.

 அடுத்தது துவாபர யுகம். இந்த யுகத்தில் தர்மம் மேலும் குறையும். மனிதர்களில் துர்குணங்கள் கொண்டவர்கள் மிகுதியாக இருப்பார்கள். தர்மத்தின் கால்களில் இன்னொன்று குறையும். இரண்டு கால்களோடு  ஒரு பசு எவ்வளவு சிரமப் படும் என்று யோசித்துப் பாருங்கள். அவ்வளவு சிரமம் துவாபர யுகத்தில் தர்மத்துக்கு ஏற்படும்.

 இப்போது நடப்பது நான்காவதான கலியுகம். இதில் தர்மம் மூன்று கால்களை இழந்து ஒற்றைக் காலுடன் திண்டாடும்.  அதாவது உலகில் அதர்மம் முக்கால் பங்கு  ஓங்கி இருக்கும். அங்கங்கே தர்மம் திண்டாடித் திணறிக் கொண்டிருக்கும்.


 இப்போது கலியுகம் தொடங்கி ஐயாயிரத்து நூறு வருடங்கள் ஆகின்றன. இப்போதே தர்மத்தின் திண்டாட்டத்தை நன்கு உணர முடிகிறது. . இன்னும் கலியுகத்தில் ஆண்டுகள் மிச்சமிருக்கின்றன.

 இனி போகப்போக தர்மத்தின் உயிர் ஊசலாடிக் கொண்டிருப்பதைக் காண முடியும். ஆனால் இந்தக் கலியுகத்தில் தர்மத்தின் மீது பற்றுதல் கொண்டு, மற்றப் பற்றுக்களை விட்டவன் மிக எளிதில் மோட்ச சாம்ராஜ்ஜியத்தை அடைய முடியும்.)

...........

82.

 மற்ற யுகங்களில் தர்மம் ஒவ்வொரு பாதமாக குறைந்து கொண்டே வரும். திருட்டு, பொய், வஞ்சனை, இவற்றால் தர்மம் குறைந்து கொண்டே போகும்.

.........

83.

 கிருதயுகத்தில் மனிதர்கள் நோயற்றவர்களாகவும், எல்லா வித விருப்பங்களும் நிறைவேறியவர்களாயும், நானூறு வருடங்கள் ஆயுள் கொண்டவர்களாகவும் இருந்தனர். திரேதா யுகம், துவாபர யுகம், கலியுகங்களில் மனிதர்களின் ஆயுள் ஒவ்வொரு பாதமாக குறைபடும்.

( முதல் யுகம் கிருத யுகம். அதில் மனிதர்கள் நானூறு வயது வரை ஆயுள் கொண்டவர்கள். 

இரண்டாவது யுகமான திரேதா யுகத்தில் மனிதர்கள் முந்நூறு வயது வரை ஆயுள் கொண்டவர்கள். 

மூன்றாவது யுகமான துவாபர யுகத்தில் மனிதர்களின் ஆயுள் இருநூறு . 

கலியுகத்தில் நூறு.

 முதல் யுகத்தில் ஆயுள் நானூறு ஆண்டுகள் என்றாலும், அப்போது வாழ்ந்த மனிதர்களுடைய தவத்தாலும் தர்மானுஷ்டானங்களாலும் அளவற்ற ஆயுள் பெற்றிருந்தார்கள். பல்லாயிரக் கணக்கான

 வருடங்கள் உயிர் வாழ்ந்தார்கள். இப்படியே இரண்டாவதான யுகத்திலும் மனிதர்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகள்  வாழ்ந்தார்கள்.

 மூன்றாவதான துவாபரயுகத்தில் தவமில்லாது போய் விட்டது. தர்மமும் பாதிக்கும் மேல் க்ஷீணித்து விட்டது. எனவே, குறிப்பிட்டபடி இருநூறு வயது அல்லது அதற்கும் குறைவாகவே வாழ்ந்தார்கள். இது கலியுகம்,. இந்த யுகத்தில் மனிதனின் ஆயுள் நூறு. அதர்மத்தின் காரணமாக இந்த நூறு வயது வரை வாழ்வது கூட குறைந்து விட்டது. தவமும் சீலமும் ஒருவரது ஆயுளை வளர்த்துக் கொண்ஆட போகும். அவை இல்லாதபோது குறிப்பிட்ட அளவு ஆயுளும் குறைந்து போகும்.

...........

84.

 வேதங்களில் கூறப்பட்ட ஆயுளும், காம்ய  கர்மாக்களுக்கு கிடைக்கக் கூடிய பலன்களும், சாபங்களும், வரங்களும், பிரபாவங்களும், மனிதர்களுக்கு அந்தந்த யுகத்துக்கு தக்கபடி பலன்  கொடுக்கும்.

............

85.

 கிருத யுக தர்மங்கள் வேறு. திரேதா யுக தர்மங்கள் கிருத  யுக தர்மங்களை விடக் குறைவானவை. அவற்றைவிட குறைவானவை துவாபர யுக தர்மங்கள். கலி யுக தர்மங்களோ இவற்றிலிருந்தும் குறைந்து இருக்கும். இவ்வாறாக யுகங்களைப் பொறுத்து தர்மங்கள் வேறு பட்டவையாக இருக்கும்.

...........

86.

 கிருதயுகத்தில் தவம் செய்வதே மேலான தர்மம். திரோதா யுகத்தில் தவம் குறைந்து, ஆத்ம ஞானம் மேலான தர்மமாக  இருக்கும். துவாபர யுகத்தில் அதுவும் குறைந்து  யக்ஞம் செய்தல் மேலான தர்மம் என்றாகும். கலி யுகத்தில் தானம் செய்தலே சிறந்த தர்மமாக கூறப் படும்.

........

 87.

 மிக்க தேஜஸ் பொருந்தியவரான பிரம்மா அனைத்து உயிர்களையும் காப்பதற்காக தன்னிலிருந்து  நான்கு வருணத்தாரைத் தோற்றுவித்தார். அவரவர்க்குரிய தர்மங்களையும் ஏற்படுத்தினார்.

...................

88.

 வேதங்களை ஓதுவதும் , வேதத்தை கற்பித்தலும், தனக்காக யக்ஞங்கள் செய்தலும், பிறருக்குகாக யக்ஞங்கள் செய்வித்தலும், பிறருக்கு தானம் கொடுத்தலும், பிறரிடமிருந்து தானம் வாங்குதலும் என்னும்  ஆறையும் பிராம்மணனுக்குரிய தர்மங்களாக ஏற்படுத்தினார்.

(யாகம் என்றால் பிரதிபலனை கருதி செய்யப்படும் செயல். யக்ஞம் என்றால் பிரதிபலன் கருதாமல் செய்யப்படும் செயல்)

.................

89.

 மக்களைக் காத்தல், தானமளித்தல், யாகம் செய்தல், வேத மோதுதல், விஷயசுகங்களில் மூழ்காமலிருத்தல் முதலானவைகளை க்ஷத்ரியர்களுடைய தர்மங்களாக ஏற்படுத்தினார்.

............................

90.

 பசுக்களைக் காத்தல், யாகங்கள் செய்தல், வேத பாராயணம் செய்தல், வாணிபம் செய்தல், வட்டிக்குப் பணம் கொடுத்து  ஜீவித்தல், விவசாயம் செய்தல் இவைகள் வைசியர்களின் தர்மங்கள்.

..........

91.

 பிரம்ம தேவர், சூத்ரர்களுக்கு விதித்த தர்மமோ ஒன்றே ஒன்று தான் .அது. அசூயையின்றி(சோம்பலின்றி) முதலில் கூறப்பட்ட மூன்று  வர்ணத்தாருக்கும்  பணிவிடை புரிதல்.

...

பிராமணர்,சத்திரியர்,வைசியர் என்ற மூன்று வர்ணத்தாருக்கும் உரிய பணிகளை செய்வது சூத்திரர்களுக்கு விதிக்கப்பட்ட தர்மம்.

இதை படித்தவுடன் பலர் தங்களை சூத்திரர்களாகக் கருதிக்கொண்டு கோபப்படுவார்கள்.

மிகமிக பழைய காலத்தில் கூறப்பட்ட நான்கு வர்ணங்களும் இன்று வழக்கத்தில் இல்லை.

இன்று யார் சூத்திரர்? அப்படி யாராவது இருக்கிறார்களா?

மனுஸ்மிருதி கூறியவடி வாழும் பிராமணர்கள் இருக்கிறார்களா?

க்ஷத்திரியர்கள் இருக்கிறார்களா? வைசியர்கள் இருக்கிறார்களா?

சூத்திரர்கள் இருக்கிறார்களா? இல்லை..

காலம் மாறிவிட்டது..இன்று யாரும் யாருக்கு கீழும் வேலைசெய்ய வேண்டிய கட்டாயம் இல்லை.

இந்த நாட்டில் யார்வேண்டுமானாலும் உயர்ந்தபதவியை அடையலாம்.

எனவே இதைப்படிக்கும்போது உணர்ச்சி வசப்படவேண்டியதில்லை.

இவைகள் மிகப்பழைய காலத்தில் வழக்கத்தில் இருந்தவை என்பதை மறக்கவேண்டாம்.

.............

92.

 நாபிக்கு கீழுள்ள  பாகங்களை விட மேலுள்ள பாகங்கள் பரிசுத்தமானவை என்று கூறப் பட்டுள்ளது. 

அதிலும் முகம் மிகவும் பரிசுத்தமானதுஎன்பது பிரம்மாவின் கூற்று.

(உடலை நான்கு பாகங்களாக பிரித்தால் மேலே உள்ள தோள்களும், முகமும் பரிசுத்தமானவை,கீழே உள்ள வயிறும் கால்களும் அசுத்தமானவை.பிராமணனின் தவ ஆற்றலால் எழும் தேஜஸ் முகத்தில் பிரதிபலிக்கிறது. க்ஷத்திரியர்களின் வீரமும்,ஆளுமையும் அவர்களது தோள்களில் பிரதிபலிக்கிறது.வைசியர்களின் உழவும்,கால்நடை,வியாபாரம் போன்றவை வயிற்றில் தெரிகிறது. வைசியர்கள் செழிப்பாக இருந்தால் வயிறு சுருங்கியிருக்காது. சூத்திரர்களின் வேலைத்திறன் அவர்களது கால்களில் தெரிகிறது) 

................

93.

 வேதங்களை உணர்ந்துள்ளதால் படைக்கப் பட்டவர்களுள் பிரம்மணன் மேலானவன்.

..............

94.

ஹவ்ய, கவ்யங்களை அளிப்பதற்காகவும், உலகம்  காக்கப்படுவதற்காகவும் , பிரம்மா பிராம்மணனைப் படைத்தார்.


( ஹோமம் செய்து மந்திரங்களால் தெய்வங்களை அழைத்து அவர்களுக்கு அளிக்கப்படும் உணவு ஹவிஸ் எனப்படும். இதையே ஹவ்யம் என்பர். இது ஹோமத்தில் இடப்படும். ஹோமத் தீயில் வார்க்கப்படும் நெய் பிரதானமான ஹவிஸ். பால், நெய், சேர்த்த சாதமும் ஹவிஸாகும். தேவர்களுக்கான உணவு  ஹவ்யம். இதே போன்று பித்ருக்களுக்கு அளிக்கும் உணவு கவ்யம் எனப்படும்.

(உலகம் காக்கப்படுவதற்காக பிராமணர்களைப் படைத்தார்.பிராமணன் தன் தவவலிமையால் உலகத்தைக் காக்கிறான்)

................

95.

யாருடைய வாயினின்றும் வெளிப்படும் மந்திரங்களால் தேவர்கள் தங்களுக்கு அளிக்கப் படும் ஹவ்யத்தை உண்பார்களோ, பித்ருக்கள் தங்களுக்கு அளிக்கப் படும் கவ்யத்தை உண்பார்களோ, அதை விட உயர்ந்தது யாதுளது?

............

96.

 பஞ்ச பூதங்களால் உருவாக்கப் பட்ட வற்றுள் பிராணிகள் உயர்ந்தவை. பிராணிகளில்  புத்தியால் ஜீவனம் செய்பவை உயர்ந்தவை. புத்தியுடையவற்றில் மனிதர்கள் உயர்ந்தவர்கள்.

............

97.

பிராம்மணர்களிலேயும் வித்வான்கள்  உயர்ந்தவர்கள். அவர்களிலும் தங்கள்  அனுஷ்டானங்களில் புத்திரியைச் செலுத்துபவர்கள்  உயர்ந்தவர்கள். அவர்களிலும் அத்தகு கர்மானுஷ்டானங்களை நன்கு  இயற்றுபவர்கள் உயர்ந்தவர்கள். அவர்களை விட பிரம்மஞானிகள்  உயர்ந்தவர்கள்.

.....................

98.

 பிரார்த்தணனுடைய உற்பத்தியே தர்மத்துக்கு சாஸ்வதமான சரீரம் . பிராம்மணன் தர்மத்தை கடைப் பிடிப்பதற்காகவே  படைக்கப் பட்டவன். அத்தகு தர்மத்தை கடைப் பிடிப்பதனால்  பிரம்மபதத்தை அடைவான்.

...........

99.

 எல்லா  உயிர்களுக்கும் உரிய தர்மமனைத்தையும் காக்கும் தலைவன் பிராம்மணன்.

....................

100.

 பூமியிலுள்ள அனைத்தும் பிராம்மணனுடையது.  எனவே பிராம்மணன் எல்லா செல்வங்களுக்கும் உடைமையாளன்.

............

இதில் கூறப்பட்டுள்ள பிராம்மணன் என்பவன் தற்காலத்தில் வாழும் பிராமணன் அல்ல.

பிராமணனின் லட்சணம் குறித்து வேதம் கூறுவதை படிக்க வேண்டும்

..

வேதங்களின் பார்வையில் யார் பிராமணன்?

-

சாமவேதம்-  வஜ்ரஸுசிகோபநிடதம்

-

1.ஓம். வஜ்ரஸுசீ என்ற உபநிடதத்தை கூறுகிறேன்.அது அஞ்ஞானத்தைப் பிளக்கும் சாஸ்திரம். ஞானமில்லாதவர்களுக்கு தூஷணமாகவும் ஞானக்கண் படைத்தவர்களுக்கு பூஷணமாகவும் விளங்குவது அது

-

2. பிராமணர் சத்திரியர்  வைசியர் சூத்திரர் என்று நான்கு வர்ணங்கள் அவற்றுர் பிராமணர் முக்கியமானவர் என்று வேதத்தின் கருத்தையொட்டி ஸ்மிருதிகளும் கூறும்.அதைப்பற்றி ஆராயவேண்டும். 

பிராமணன் என்றால் யார்? ஜீவனா,தேகமா,ஜாதியா,ஞானமா,கர்மமா,தர்மமா?

-

3.முதலில் ஜீவன் பிராமணன் என்றால் அது வருவதும் போவதுமாக பல பிறவிகள் பிறக்கிறது.பல தேகங்களில் ஜீவன் ஒரே வடிவாயிருப்பதாலும்,ஒருவனேயாயிருப்பதாலும்,கர்ம வசத்தால் பல உடல்கள் ஏற்படுவதாலும்,எல்லா உடல்களிலும் ஜீவன் ஒரேமாதிரி இருப்பதாலும் ஜீவனை பிராமணன் என்று கூற இயலாது.(ஜீவன் பல பிறவிகளில் பல உடல்களில் பிறக்கிறது.சில பிறவிகளில் மிருக உடல்கள்கூட கிடைக்கலாம். ஆகவே ஜீவன்.பிராமணன் அல்ல)

-

4. ஆனால் தேகம் பிராம்மணன் என்று நினைத்தால் அதுவும் பொருந்தாது. உயர்ஜாதிமுதல் தாழ்ந்தசாதிவரை உள்ள அனைவருக்கும் உடல் ஒரே வடிவாக பஞ்சபூதங்களால் ஆக்கப்பட்டிருக்னகிறது. பிறப்பு.இறப்பு.முதுமை போன்றவை ஒரேபோலவே இருப்பதாலும், ஒவ்வொரு ஜாதியினரின் உடலும் தனித்தனி வண்ணமாக இல்லாமல் ஒரே போல் இருப்பதாலும். உடலை அடிப்படையாக கொண்டு ஒருவனை பிராமணன் என்று கூறமுடியாது

-

5.ஆனால் பிறப்பால் வந்த  ஜாதியால் ஒருவன் பிராமணனா என்றால்,அதுவும் இல்லை. பிற  ஜாதிகளிலும்,அனேக ஜாதிகளிலும் பல ரிஷிகள் தோன்றியிருக்கிறார்கள்.வால்மீகி, வியாசர், வசிஷ்டர் உட்பட பலர் கீழ்ஜாதியில் பிறந்திருக்கிறார்கள்.ஆகையால் பிறப்பின் அடிப்படையில் வரும் ஜாதியால் ஒருவனை பிராமணன் என்று கூறமுடியாது

-

6.அறிவால் ஒருவனை பிராமணன் என்று அழைக்கலாமா என்றால் அதுவும் பொருந்தாது. சத்திரியர் முதலான பிற ஜாதியிலும் மிக்கஅறிவு பெற்றவர்கள் பலர் இருக்கிறார்கள்.ஆகையால் அறிவால் ஒருவனை பிராமணன் என்று அழைக்க முடியாது

-

7. செய்யும் தொழிலை(கர்மத்தை) வைத்து ஒருவனை பிராமணன் என்று அழைக்கலாமா என்றால் அதுவும் இல்லை. எல்லா உயிர்களுக்கும் பிராரப்தம் ஸஞ்சிதம் ஆகாமி என்ற மூன்று கர்மங்களும் பொதுவாக இருக்கிறது. முன்ஜன்மத்தால் தூண்டப்பட்ட மக்கள் பலர் கிரியைகளை செய்கிறார்கள்.ஆகையால் கர்மத்தால் பிராமணன் இல்லை

-

8.தர்மம் செய்பவர்கள் பிராமணன் என்று கூறலாமா என்றால் அதுவும் இல்லை. சத்திரியர் உட்பட பிறரும் தர்மம் செய்கிறார்கள்.

-

9.அப்படியானால் யார்தான் பிராம்மணன்? 

இரண்டற்ற சச்சிதானந்த ஸ்வரூபனாகவும் ஜாதி,குணம்,கிரியை அற்றதும்,பிறப்பு,இறப்பு முதலிய ஆறு நிலைகள் அற்றதும் சத்தியம்,ஞானம்,ஆனந்தம் என்ற ஸ்வரூபமுடையதும்,தோசங்கள் அற்றதும் , தான் நிர்விகல்பமாயும் எல்லா கற்பனைகளுக்கும் ஆதாரமாயும்,எல்லா உயிர்களுக்கு உள்ளே நின்று இயங்குவதாயும்,ஆகாயத்தைபோல் உள்ளும் வெளியும் வியாபித்துப் பிளவுபடாமல்  ஆனந்த வடிவாயும் மனதிற்கெட்டாததாயும்,அனுபவத்தில் மட்டும் அறியக்கூடியதாயும்,அபரோக்ஷமாய் பிரகாசிப்பதாயும் உள்ள ஆத்ம வடிவினனாயும்,விரும்பு வெறுப்பு முதலிய தோசங்கள் அற்றவனாயும். சமம்,தமம் முதலியவைகளுடன் கூடி மாச்சர்யம்,ஆசை,மோகம் முதலியவை நீங்கியவனாயும் அகங்காரம் முதலியவற்றால் தொடப்படாதவனாகவும் முக்தலக்ஷணம் வாய்ந்தவன் எவனோ அவனே பிராம்மணன் என்பது வேதம்,ஸ்மிருதி,புராணம்,இதிகாசம் முதலியவற்றின் முடிவான கருத்து. இதற்கு புறம்பாக பிராமணத் தன்மை இல்லவே இல்லை. இரண்டற்ற ஸச்சிதானந்தமானதுமான பிரம்மமாக ஆத்மாவை உணவவேண்டும்.

-

இங்ஙனம் சாமவேதத்தில் இடம்பெற்றுள்ள  - வஜ்ரஸுசிகா உபநிடதம் கூறுகிறது.

..

ஸ்ரீகிருஷ்ணருடைய கருத்து என்ன என்பதைப் பார்ப்போம்.

-

பிராம்மண, சத்திரிய, வைசிய, சூத்திரர்களுடைய கர்மங்கள் ஸ்வபாவத்திலிருந்து பிறந்த குணங்களுக்கு ஏற்றவாறு பிரிக்கப்பட்டிருக்கிறது.

-

பிறப்பின் அடிப்படையில் பிரிக்கப்படவில்லை. 

..

இதை தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும்.

சிலர் பகவத்கீதையினால்தான் ஜாதி வளர்ந்தது என்று கூறுகிறார்கள்.

ஆனால் ஸ்ரீகிருஷ்ணர் அவ்வாறு கூறவில்லை. பிறப்பின் அடிப்படையில் ஜாதிகள் பிரிக்கப்பட்டதாக கூறவில்லை. ஸ்வபாவத்தில் பிறந்த குணங்களின் அடிப்படையில் பிரிக்கப்படுவதாக கூறுகிறார்.

முதலில் ஜாதிகள் பிறப்பை அடிப்படையாக கொண்டவையாக இருந்தன.பிறகு அது பரிணமித்து குணத்தை அடிப்படையாகக்கொண்டவையாக மாறியது.

-

18.42 அந்தக்கரணங்களை அடக்குதல், புறக்கரணங்களை அடக்குதல்,தவம்,தூய்மை,பொறுமை,நேர்மை,சாஸ்திரஞானம்,விக்ஞானம்,கடவுள் நம்பிக்கை இவையாவும் பிராமணனுக்கு ஸ்வபாவத்தில் உண்டான கர்மங்களாகும்

-

பிறக்கும்போதே ஒருவன் மேலே கூறப்பட்டுள்ள குணங்களுடனா பிறக்கிறான்? பிறக்கும்போதே சாஸ்திர ஞானத்துடனா பிறக்கிறான்? பிறக்கும்போதே ஐம்புலன்களையுடம் அடக்கியவனாகவா பிறக்கிறான்?

ஏதோ ஒருசிலர் அப்படி பிறக்கிறார்கள்.

மற்றவர்கள் அனைவரும் கடுமையான தவத்திற்கு பிறகே பிராமணநிலையை அடைகிறார்கள்.

எனவே ஸ்ரீகிருஷ்ணர் பிறப்பின் அடிப்படையில் ஜாதி வருவதில்லை என்பதை தெளிவாக கூறுகிறார்.

..

இந்த உலகமே பிராமணனுக்கு சொந்தமானது என்றால் என்ன அர்த்தம்?

பிராமணன் இந்த உலகத்தையே தனது உடலாகக் காண்கிறான். உலகிலுள்ள அனைத்து உயிர்களையும் தனதாகக் காண்கிறான்.அவன் தன்னை ஓர் உடலாகக் காண்பதில்லை. உலகத்தையே தனது உடலாகக் காண்பதால் உலகமே அவனுக்குரியதாகிறது..

..

இதைப்பற்றிய மேலும் பல விளக்கங்கள் இனிவரும் பகுதிகளில் பார்க்கலாம்

..

..

தொடரும்…

மேலும் தொடர்ந்துபெற வாட்ஸ்அப் 9789374109

..


மனுஸ்மிருதி என்னும் மனு தர்ம சாஸ்திரம் (முழுவதும்)-பாகம்-4

மனுஸ்மிருதி என்னும் மனு தர்ம சாஸ்திரம் (முழுவதும்)-பாகம்-4

….

61.

 மஹாத்மாக்களும், தேஜஸ்மிக்கவர்களுமான, ஸ்வாயம்புவ மனுவின் வம்சத்தவர்களான ஆறுபேர். சிருஷ்டித் தொழிலில் ஈடுபட்டு தத்தம் பிரஜைகளை உருவாக்கினார்கள்.

.................

62.

ஸ்வரோசிஷன், உத்தமன், தாமசன், ரைவதன், சாட்சுசன், மஹா தேஜஸ் கொண்ட வைவஸ்வதன் இவர்களே அந்த ஆறு பேர்கள்.

...............

63.

 மிக்க சக்தி படைத்தவர்களான, ஸ்வாயம்புவ மனு முதலான இந்த ஏழு பேரும் தங்கள் தங்கள் அந்தரங்களில்( காலங்களில்) உயிர்களைப் படைத்து, காத்து ஆட்சி நடத்தினர்.

...............

64.

 இமை கொட்டும் நேரம் பதினெட்டு கொண்டது ஒரு காஷ்டை எனப்படும். முப்பது காஷ்டைகள் கொண்டது ஒரு கலை எனப்படும்.

 முப்பது கலைகள் கொண்டது ஒரு முகூர்த்தம்.

 முப்பது முகூர்த்தங்கள் கொண்டது ஒரு இரவும் பகலும் ஆகும்.

................

65.

 சூரியன் இரவு பகல்களை தேவர்களுக்கென்றும் மானிடர்களுக்கென்றும் ஏற்படுத்தினார். இரவு என்பது உறக்கத்துக்காகவும், பகல் காரியமாற்றுவதற்காகவும் ஏற்படுத்தப் பட்டன.

...................


66.

 மானிடர்களுடைய ஒரு மாதம் என்பது பித்ருக்களுடைய இரவும் பகலுமான ஒரு நாள் எனப்படும். அதில் தேய்பிறை கர்மானுஷ்டானங்களுக்கும், வளர்பிறை உறக்கத்துக்கும் ஏற்பட்டவை.

( அதாவது தேய்பிறை பித்ருக்களுடைய ஒரு பகல் பொழுது. வளர்பிறை பித்ருக்களுடைய ஒரு இரவுப்பொழுது)

................

67.

 மனிதர்களுடைய ஒரு வருடம் தேவர்களுக்கு ஒரு இரவும் பகலுமான ஒரு நாள். இதில் உத்தராயனம் என்னும் ஆறு மாதங்கள் தேவர்களின் ஒரு பகல் பொழுது. தட்சிணாயனம் என்னும் ஆறு மாதங்கள் தேவர்களின் ஒரு இரவுப் பொழுது.

....................

68.

 பிரம்ம தேவருடைய இரவு பகலுக்கான  காலக் கணக்கையும் யுகங்களின் காலக் கணக்கையும்  கூறுகிறேன் , கேளுங்கள்.

.......................

69.

 நாலாயிரம் தேவ வருடங்கள் கொண்டது கிருதயுகம்.

 மேலும் காலையில் சந்த்யாகாலம் என்று நானூறு வருடங்களும், மாலையில் சந்த்யா காலம் என்று நானூறு வருடங்களும் சேரும். மொத்தத்தில் நாலாயிரத்து எண்ணூறு தேவ வருடங்கள் கொண்டது கிருதயுகம்.

........................

70.

 மற்ற யுகங்களில் சந்தியைகளுக்கும் யுகத்துக்கும் நூறும் ஆயிரமுமாக குறைத்துக் கொண்டே வர வேண்டும். அப்படி யென்றால், திரேதா யுகத்துக்கு மூவாயிரம் தேவ வருடங்கள், அதில் இரண்டு சந்தியைகளுக்குமாக முந்நூறு, முந்நூறு தேவ வருடங்கள் . ஆக மூவாயிரத்து அறு நூறு தேவ வருடங்கள் கொண்டது திரேதாயுகம்.

 இவ்வாறாகப் பார்க்கும் போது, துவாபர யுகம் இரண்டாயிரத்து நானூறு தேவ வருடங்கள் கொண்டது.

 கலியுகம் ஆயிரத்து இரு நூறு தேவ வருடங்கள் கொண்டது.

...........................

71.

 மானிட யுகங்கள் நான்கும் சேர்ந்தால் மொத்தம் பன்னிரண்டாயிரம் தேவ வருடங்கள். இது தேவர்களின் ஒரு யுகம்.

........................

73.

 இப்படிப்பட்ட தேவ யுகங்கள்ஆயிரம் கொண்டது பிரம்மாவின் ஒ ரு பகல். அவ்வாறே ஆயிரம் தேவ யுகங்கள் கொண்டது ஒரு இரவு. எனவே இரண்டாயிரம் தேவ யுகங்கள் கொண்டது பிரம்மாவின் ஒரு நாள்.

................

73.

 இவ்வாறான தேவ யுகங்கள் ஆயிரம் கொண்ட பிரம்மாவின் பகல் பொழுதை ” புண்ணிய தினம்” என்பார்கள். அவ்வாறே அதே அளவுள்ள பிரம்மாவின் இரவுப் பொழுதை” புண்ணிய இரவு” என்பார்கள். இவ்வாறான பிரம்மாவின் இரவு பகல் கணக்கை அறிந்தவர்களை, ” அஹோராத்ரி யறிந்தவர்கள்” என்பார்கள்.


.............................

74.

 பிரம்மா தன்னுடைய இரவு நேரத்தில் உறங்குவார். இரவு நேரம் முடியும் தருவாயில் எழுந்திருப்பார். அப்படி எழுந்திருப்பவர் சத் அசத் ரூபமான சிருஷ்டியைச் செய்யத் தொடங்குவார்.

.........................

75.

 பிரம்மாவால் மனம் மஹத் சிருஷ்டியில் ஏவப்பட்டு மஹத் சிருஷ்டியிலிருந்து ஆகாயம் தோன்றியது. ஆகாயத்துக்கு ” சப்தம்” குணமாய் அமைந்தது.

....................

76.

ஆகாயத்திலிருந்து இனிய வாசனைகளையும், துர்வாசனைகளையும் கொண்டு செல்வதும், பவித்ரமானதும் ,  மிகுந்த பலம் கொண்டதுமானவாயு தோன்றியது. வாயு ” ஸ்பரிசம்” என்னும் குணம் கொண்டதாகக் கூறுகிறார்கள்.

........................

77.

 வாயுவிலிருந்து மிக்க பிரகாசம் கொண்டதும், இருட்டைப்போக்கடிப்பதுமான ஜோதி ( நெருப்பு) தோன்றியது. அந்த ஜோதி ” உருவம்” என்னும் குணம் கொண்டது என்று கூறுகிறார்கள்.

......................

78.

நெருப்பிலிருந்து தண்ணீர் தோன்றியது. தண்ணீர்”ரஸம்” என்னும் குணம் கொண்டது. தண்ணீரிலிருந்து பூமி தோன்றியது. பூமி ”வாசனை” என்னும் குணம் கொண்டது.

 இப்படித்தோன்றியதே ஆதி சிருஷ்டி.

.....................

79.

 பன்னிரண்டாயிம் வருடங்கள் எண்ணிக்கையில் மனிதர்களின் நான்கு யுகங்கள் கொண்டது ஒரு ” தேவ யுகம்” என்று முன்னர் கூறப் பட்டது. அப்படிப்பட்ட தேவ யுகங்கள் எழுபத்தொன்று நிறைந்தால், அது ஒரு மன்வந்தரம் எனப்படும்.

......................

80.

 சிருஷ்டியும், சம்ஹாரமும் எண்ணற்றவையாதலின், மன் வந்தரங்களும் எண்ணற்றவையே.

 சிருஷ்டியை, பிரம்மா விளையாட்டாகவே மீண்டும் மீண்டும் செய்கிறார்.

........................

..

தொடரும்…

மேலும் தொடர்ந்துபெற வாட்ஸ்அப் 9789374109


மனுஸ்மிருதி என்னும் மனு தர்ம சாஸ்திரம் (முழுவதும்)-பாகம்-3

 மனுஸ்மிருதி என்னும் மனு தர்ம சாஸ்திரம் (முழுவதும்)-பாகம்-3

….

41.

 மஹரிஷிகள் தவம் புரிந்து என் ஆணைப்படி இங்கே தென்படுகின்ற தாவரங்கள், மிருகங்கள், மனிதர்கள் ரூபமான உலக முழுதையும், அதனதன் வினைப்படி படைத்தனர்.

................

42.

 இனி எந்தெந்த பூதங்களுக்கு அதாவது எந்தெந்த  உயிரினங்களுக்கு எந்தெந்த கர்மாக்கள் சொல்லப் படுகின்றனவோ அந்தந்த பூதங்களுடைய கர்மாக்களையும் ஜன்மாவினுடைய கிரம யோகத்தையும் உங்களுக்கு  உரைக்கிறேன்.

..........................

43.

 பசுக்கள், மான்கள், கொடிய மிருகங்கள், ராட்சதர்கள், பிசாசர்கள், மனிதர்கள்,  முதலானோர் கர்ப்பத்தினின்று பிறந்தவர்கள்.

....................

44.

 பறவைகள், சர்ப்பங்கள். மீன்கள், ஆமைகள் போன்றவை முட்டையினின்று  தோன்றுவன். இவற்றில்  சில  நீரில் வாழ்வன. சில நிலத்தில் வாழ்வன.

................

45.

 காட்டு ஈக்கள், கொசுக்கள், பேன்கள், ஈக்கள், மூட்டைப் பூச்சிகள், மேலும் இவற்றைப்போன்று எவையெல்லாம் வெப்பத்தினால் ( புழுக்கத் திலிருந்து) பிறக்கின்றனவோ , அவை யனைத்தும் ஸ்வேதஜங்கள் எனப்படும்.

...............

46.

 மரங்களனைத்தும்  விதைகளைப் பிளந்து கொண்டு, பூமியையும் பிளந்து கொண்டு பிறப்பன.

 விதைகளினின்று பிறப்பவை போக, சில கிளைகளை பூமியில் ஊன்றுவதால், மரங்களாகின்றன. நெல் போன்ற தானியங்களும், இன்னும் சில தாவரங்களம், பயிர் வளர்ந்து பலன் தந்தவுடனே அழிகின்றன.

...........

 47.

 மலர்கள் இல்லாமலே பழங்களைத் தரும் மரங்களுக்கு வனஸ் பதிகள் என்று பெயர். பூத்துப் பலன் தரும்  மரங்களுக்கு விருட்சங்கள் என்று பெயர்.

................

48.

 கொத்துக் கொத்தாக ப் பூப்பவை ”குச்சம்” என்று சொல்லப் படும். புதராக மண்டி வளர்பவை ” குல்மம்” என்று சொல்லப் படும். சில புல்வகைகளும், படரும் தாவரங்களும், கொடிவகைகளும் விதைகளினின்றும் பிறந்தவை மேலும் சில  கிளைகளை பூமியில் ஊன்றுவதால் வளர்பவை.

........................

49.

 இந்தத் தாவரங்கள் அனைத்துமே, கர்மஹேதுவான தமோ குணத்துடன் கூடியதாக,, உணர்வுகளுடன் கூடிய மனமும் பெற்றிருப்பதால் சுகதுக்கங்களை அனுபவிப்பவையாக உள்ளன.

..................

(தாவரங்களுக்கு உணர்வு உண்டு என்பதை பழைய காலத்திலிலேயே கண்டறிந்துள்ளனர் நமது முன்னோர்கள்)

50.

 பயங்கரமானதாகவும், எப்போதும்  அழிவுக்கு ஆட்படுவதாகவும் உள்ள இந்த பூத சம்சாரத்தில் பிரம்மா முதல் தாவரங்கள் ஈறாக உள்ள சகல ஜீவசிருஷ்டிகளும் கூறப் பட்டன.

( ஜீவசிருஷ்டியில் மனிதர்களுக்கு இருப்பதைப்போன்றே விலங்குகளுக்கும் அறிவு உண்டு. அவைகளுக்கு மனமும் உணர்வுகளும் உண்டு. அவ்வாறே தாவரங்களுக்கும் உண்டு. பிரம்மா முதல் தாவரங்கள் ஈறாக உள்ள சகல சிருஷ்டிகளுக்கும் மனம் என்ற ஒன்று உணர்வுகளுடன் கூடியதாக இருப்பதால் சுகம் துக்கம் இரண்டும் உண்டு.

 இந்த சுகம் துக்கம் இரண்டிலிருந்தும் விடுபட்டு நிலையான மோட்ச ஆனந்தத்தைப் பெறக் கூடியவர்கள் மனிதர்களே. அவர்களுக்கென்று விதிக்கப் பட்ட தர்மங்களைக் கடைபிடிப்பது ஒன்றே அதையடையும் வழி. அந்த தர்மங்களை மிகமிகத் தெளிவாக பின்னால் பார்க்கப் போகிறோம்.

 இப்போது மனு கூறுவதை அடுத்த ஸ்லோகத்தில் பார்ப்போம்.

....................

51.

 இவ்வாறு என்னையும் சர்வத்தையும் படைத்த, அளவற்ற பராக்ரமம் பொருந்திய பிரம்மா, காலத்தை காலத்தோடு சேர்த்து, அதாவது சிருஷ்டி காலத்தை பிரளயகாலத்தோடு சேர்த்து, தன்னுள் தான் கலப்பார்.

...............

52.

 எப்போது அவர் விழிப்புறுவரோ, அப்போது இந்த உலகம் இயங்கத் தொடங்கும். எப்போது அவர் சாந்தமாக உறங்கத் தொடங்குகிறாரோ, அப்போது அனைத்தும் ஒடுங்கும்.

......

53.

 எப்போது அவர் உறங்கிக் கொண்டிருக்கிறாரோ, அப்போது கர்மாவின் உருவங்களான ஜீவன்களனைத்தும் காரியங்கள் ஏதுமற்று இருக்கும். அனைத்து இந்திரியங்களோடு மனமும் ஓய்வெடுத்துக் கொள்ளும்.

......................

54.

 எப்போது ஜீன்களெல்லாம் ஒரே தருணத்தில் அந்த மஹாத்மாவிடம் கலக்கின்றனவோ, அப்போது அவர் அனைத்து இயக்கங்களையும் விட்டு சுகமாக உறங்குகிறார்.(ஒடுக்கம்)

....................

55.

 எப்போது இந்த ஜீவன் இந்திரியங்களுடன், ஞானமற்றுப் போய், மூச்சுவிடும் செயலைச் செய்யாமல் இருக்கிறதோ, அப்போது இந்த ஜீவன் உடலிலிருந்து விலகுகிறது.

.......................

56.

 எப்போது ஜீவன் இந்திரியங்களுடன் கூடியதாகிறதோ, அப்போது விதையை அடைந்து தாவரமாகவோ அல்லது மனித தேகத்தை அடைந்து மனிதனாகவோ பிறப் பெடுக்கிறது.

...................

57.

 இவ்வாறாக பிரம்மா, விழிப்பு, உறக்க நிலைகளை மேற்கொண்டு , இந்த உலகத்தைப் படைக்கவும் செய்கிறார். அழிக்கவும்(ஒடுக்கவும்) செய்கிறார்.

.......................

58.

 இந்த தர்ம சாஸ்திரத்தை முதலில் உருவாக்கியவர் பிரம்மா. அவரே எனக்கு(மனுவுக்கு)  இந்த சாஸ்திரத்தை விதி முறைப் படி உபதேசித்தார். நான் இதை மரீசி முதலான முனிவர்களுக்கு உரைத்தேன்

................

59.

 இந்த ப்ருகுமுனி  இந்த சாஸ்திரம் முழுவதையும் என்னிடம் பயின்றிருப்பதால், இவர் உங்களுக்கு இதை உரைக்கத் தக்கவர்.

...............

60.

 இவ்வாறு மனு கூறவும், எவ்வளவோ முனிவர்கள் இருக்கும் போது,தன் குருவான  மனு இந்த சாஸ்திரத்தை எடுத்தியம்ப, தன்னை நியமித்ததைக் கண்டு மிகுந்த சந்தோஷமுற்று கேட்கக் காத்திருக்கும்  அம்முனிவர்களைப் பார்த்து  ” கேளுங்கள்” என்றார்.

( இதிலிருந்து தொடர்வது ப்ருகு முனிவர் வாயிலாக வெளிப் பட்டவை)

..............

.................


..

தொடரும்…

மேலும் தொடர்ந்துபெற வாட்ஸ்அப் 9789374109


மனுஸ்மிருதி என்னும் மனு தர்ம சாஸ்திரம்(முழுவதும்)-பாகம்-2

 மனுஸ்மிருதி என்னும் மனு தர்ம சாஸ்திரம்(முழுவதும்)-பாகம்-2

….

21.

 பிரம்மா தன்னால் படைக்கப் பட்ட அனைத்துக்கும் வேதத்திலுள்ளபடி பெயர்களைச் சூட்டினார். அவைகளுக்கான வெவ்வேறு விதமான காரியங்களையும் வேதங்கள் கூறியபடியே ஏற்படுத்தினார்.


................

22. 

 பிரம்மா, கர்மாத்மாக்களான தேவர்களையும், பிராணிகளையும், சாத்யர்களையும், யக்ஞங்களையும் படைத்தார்.

.................

23.

 யக்ஞங்கள் வேதங்களைக் கொண்டே நிறைவேற்றக் கூடியவை  என்பதால், யக்ஞங்களுக்காக வேண்டி, ருக், யஜுர், சாமம் என்னும் வேதங்களை , அக்நி, வாயு, சூரியர்களிடமிருந்து கிரகித்தார்.

...........

24.

 பிரம்மா, காலத்தையும், மாதங்கள், ருதுக்கள், வருடங்கள் முதலான கால அளவுகளையும், நட்சத்திரங்களையும், கிரகங்களையும் , நதிகளையும், கடல்களையும், மலைகளையும், படைத்தார்.

...............

25.

 அவ்வாறே சமவெளியையும், மேடு பள்ளங்களையும், தவம், வாக்கு, சிரத்தை, காமம், கோபம் முதலானவற்றையும் படைத்தார்.

.....................

26.

 செய்யத்தக்கது இது. தகாதது இது என்னும் அறிவைப் பெறுவதற்காக தர்மங்களையும் அதர்மங்களையும் வேறு படுத்தினார். மேலும் மக்களை சுகம், துக்கம் என்னும்  இரட்டைகளோடும்  விருப்பு, வெறுப்பு என்னும் இரட்டைகளோடும் இணைத்தார்.

...................

27.

 பஞ்ச பூதங்களின் சொரூபங்களோடு, இனி சொல்லப்போகின்ற அனைத்தையும் படைத்தார்.

.........................

28.

 பிரம்மா, முதன் முதலில், ஆதியில் சிருஷ்டித்தபோது எந்தெந்த காரியங்களைச் செய்வதற்காக எந்தெந்த வர்ணங்களைப் படைத்தாரோ, அந்தந்த  வர்ணங்கள் மீண்டும் படைக்கப் படும் போதும் பழைய படியே ஒழுகுகின்றன.

( இங்கே வர்ணம் என்பதே இப்போதைய நடைமுறையில் ஜாதி என்று கூறப் படுகிறது. ஆனால் இப்போதுள்ள ஜாதிகளை மனு கூறவேயில்லை. காரணம், பிரம்மா. இவைகளை உருவாக்க வில்லை. மேலும் இந்த நூலைப் படிக்கப் படிக்க இந்த விஷயத்தை நன்கு புரிந்து கொள்ள முடியும்)

................

29.

 சிருஷ்டியின்போது பிரம்மா ஹிம்சிக்கும் குணம், அஹிம்சை, மிருதுவான குணம் , குரூர குணம், தர்மம், அதர்மம், பொய் உண்மை முதலானவைகளை எவை எவைகளுக்கு எவை என்று நியமித்தாரோ, அதே போன்றே அவையவை மீண்டும் படைக்கப் படும் போது ம் அதே குணங்களோடு ஒழுகுகின்றன.

....................

30.

 எவ்வாறு ருதுக்கள்  தாமே தத்தமது குணங்களை அடைகின்றனவோ அவ்வாறே பிராணிகளும் தத்தமது குணங்களை அடைகின்றன.

 ( ஒரு வருடத்தை ஆறு ருதுக்களாகக் கூறுகிறோம். அந்தந்த காலத்தில் அந்தந்த தன்மைகள் ஏற்படுவதைப் பார்க்கிறோம். அதாவது கோடையிலும் வெளிலும், குளிர் காலத்தில் குளிரும். பனிக் காத்தில் பனியும் என்று இயற்கையாகவே நாம் அந்தந்த  மாற்றங்களைப் பார்க்கிறோம். இதையே அந்தந்த  ருதுக்களுக்குரிய குணங்கள்  அல்லது தன்மைகள் என்று இங்கு கூறப்பட்டுள்ளது. அவ்வாறே பிராணிகளுக்கும் வெவ்வேறான  தன்மைகள் படைக்கப் பட்டுள்ளன. புலிக்கு இருக்கும் தன்மை வேறு. பூனைக்கு இருக்கும் தன்மை வேறு. அரக்களுக்கு இருக்கும் தன்மை வேறு. மனிதனுக்கு இருக்கும்தன்மை வேறு. அந்தந்தப் பிராணிகளும் தத்தமக்குரிய குணங்கள்  அடைகின்றன  என்பதன்  பொருள் இதுவேயாகும்.

.................

31.

 உலகைப் படைத்த பிரம்மா அது பல்கிப் பெருகும் பொருட்டு, உலகம் உய்யும் பொருட்டு நான்கு வகையினரை- நான்கு வருணத்தாரைப் படைத்தார்.

....................

32.

 பரம் பொருளானவர், தம் தேகத்தை  இரண்டாகப் பிரித்துக் கொண்டு ஒரு பாகம் ஆணாகவும், மற்றொரு பாகம் பெண்ணாகவும் மாறினார். அந்த ஆண், அந்தப் பெண்ணிடம் ” விராட்” புருஷனை சிருஷ்டித்தார்.

( அகில உலகங்களையும் தம் சரீரமாகக் கொண்ட விஸ்வரூபிக்கு விராட் புருஷன் என்று பெயர்)

..................

35.

 இப்போது  மனுபகவான், பிரம்ம தேவர் தம் கூற்றாக மனுவுக்கு  எப்படி உரைத்தாரோ, அதை அவ்வாறே இப்போது எடுத்துரைக்கிறார்.


 நானே விராட் புருஷனின் தவத்தால்  தோன்றிய பிரம்மா. உலக சிருஷ்டியை செய்வதற்காக விராட் புருஷனால் படைக்கப் பட்டவன்.

 நான் பிரஜைகளை சிருஷ்டிப்பதற்கான அளப்பரிய சக்தியை அடைவதற்காக கடும் தவமியற்றினேன்.முதலில் பத்து  பிரஜாபதிகளை சிருஷ்டித்தேன். ( பிரஜாபதி என்பவர்கள், உலகில் சிருஷ்டியை செய்வதற்காக பிரம்மாவால் படைக்கப் பட்டவர்கள்)

மரீசி, அத்ரி, அங்கிரஷ், புலஸ்தியன், புலஹன்,க்ரது, பிரசேதஸ், வசிஷ்டன், பிருகு, நாரதன் என்னும் பத்துப்பேர்களே முதலில் நான் படைத்த பிரஜாபதிகள்” இவ்வாறு பிரம்ம தேவர் கூறினார்.


........................

36.

 தேஜஸ் மிகுந்த  அவர்கள், தங்களைப் போல் தேஜஸ் கொண்ட ஏழு மனுக்களையும், தேவர்களையும் , தேவ உலகங்களையும்,   மிகுந்த தேஜஸ் கொண்டமகரிஷிகளையும் சிருஷ்டித்தனர்.


......................

37.

 யக்ஷர்கள், ராட்சதர்கள், பிசாசர்கள், கந்தர்வர்கள் , அப்சரஸ்கள், அசுரர்கள், நாகர்கள், சர்ப்பங்கள், கருடன், முதலான பறவைகள் முதலாக பித்ருக்களுடைய பல்வேறு  கணங்களையும் படைத்தனர்.

..............

38.

 மின்னல்கள், இடிகள், மேகங்கள், ரோஹிதம் எனப்படும் நீண்ட நட்சத்திரம், வானவிற்கள், வால் நட்சத்திரங்கள், உற்பாதங்கள், எரி நட்சத்திரங்கள் முதலான பலவித நட்சத்திரங்களையும் படைத்தனர்.

....................

39.

 கின்னரர்கள், வானரர்கள், மீன்கள்,விதவிதமான பறவைகள்,பசுக்கள், மான்கள், கொடிய மிருங்கள், மனிதர்கள் முதலான வற்றை படைத்தனர்.

..............

40.

 கிருமிகள், புழு  பூச்சிகள், வண்டுகள்,விட்டில் பூச்சிகள், பேன்கள், ஈக்கள், கொசுக்கள், முதலானவற்றையும் மரங்களையும், மலைகளையும் கூட படைத்தனர்.

.................


..

தொடரும்…

மேலும் தொடர்ந்துபெற வாட்ஸ்அப் 9789374109


மனுஸ்மிருதி என்னும் மனு தர்ம சாஸ்திரம்(முழுவதும்)-பாகம்-1

மனுஸ்மிருதி என்னும் மனு தர்ம சாஸ்திரம்(முழுவதும்)-பாகம்-1

….

 அத்தியாயம் -1

..............

 1.ஏகாக்ர  சித்தத்தோடு  அமர்ந்திருந்த மனுவை அணுகிய மஹரிஷிகள் அவரை முறைப்படி வணங்கி இவ்வாறாகச் சொன்னார்கள்.

…..

 மகரிஷிகள் சிலருக்கு, தங்களுக்கு ஏற்பட்ட சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்ள வேண்டும் என்ற உத்வேகம் ஏற்பட்டது. தர்மம், அர்த்தம், காமம், மோட்சங்களைப் பற்றிய ஞானம் முழுமையாக கைவரப் பெற்றவரான மனுபகவானை அணுகினால், தங்கள் சந்தேகங்கள் தீரும் என்ற தீர்மானத்தோடு அவர்கள் மனுவின்  இருப்பிடம் வந்தார்கள். அங்கேயே சில நாட்கள் தங்கியிருந்தார்கள்.

 ஒரு சமயம் மனு நிச்சலனமாக, சாந்தமாக  ஓரிடத்தில் அமர்ந்திருப்பதைப் பார்த்தார்கள். இதுவே தக்க தருணம் என்று அவரை அணுகினார்கள்.

 கோபதாபங்கள் முதலான உணர்ச்சிகளில் ஆழாமலும், பரபரப்பான காரியங்களில், ஈடுபட்டிராமலும், ஏதோ ஒரு காரியத்தில் முனைப்பாக ஈடுபட்டிராமலும், இருக்கும் போது தான் ஒருவர்  தெளிவாக ஞானத்தோடு, சிந்தையோடு இருப்பார். மஹான்களுக்கு கோப தாபங்கள் முதலானவை இரா. ஆனால் தீர்க்கமான சிந்தனையில் தீவிரமாக ஆழ்ந்திருக்க இடமுண்டு. அவ்வாறெல்லாம் இல்லாமல், சாந்தமான  மனதோடு, வேறு வேலைகளில் ஈடுபடாமல் விச்ராந்தியாக இருக்கும் போது  மஹான்களை அணுகி தங்கள் சந்தேகங்களைக்கேட்டால் நிச்சயமாக நல்ல முறையில் சந்தேகங்கள் தீரும். எதற்காக  அணுகுகிறார்களோ, அந்தக் காரியம் ஈடேறும்.

 ஆகவே தான், மஹரிஷிகள் நேராகப்போனோம். கேட்டோம் என்றிராமல், மனுவானவர் நிச்சலனமாக அமர்ந்திருக்கும் தருணத்துக்காகக் காத்திருந்து, தக்க தருணம் வாய்த்ததும் அவரை அணுகி வணங்கி, தங்கள் சந்தேகங்களை க்கேட்கத் தொடங்கினார்கள்.


 அன்று அவர்களுக்கு மனு விரிவான விளக்கங்களை அளித்தார், அவை இன்றுவரை மக்களுக்கு தர்மாதர்மங்களையும், நியாய அநியாயங்களையும், செயல்முறைகளையும், ராஜ நீதிகளை மட்டுமின்றி குடும்ம நீதிகளையும், சட்ட நுணுக்கங்களையும், வாழ வேண்டிய முறைகளையும் இன்னும் இன்னும் பற்பல வற்றையும் பறைசாற்றிக் கொண்டிருக்கின்றன. 

 மனுவின் வாக்காக, அன்று வெளிப்பட்ட ஒலி அலைகள் வானத்தோடு கலந்து விட்டாலும், அந்த ஒலியோடு வெளிப்பட்ட ஞான ஒளி இன்றுவரை பிரகாசித்துக் கொண்டிருக்கிறது. அழியாத அந்த  ஒளி  இப்போது உங்கள் கரத்திலுள்ள இந்த நூலின் மூலமாக உங்கள் அறிவையும் பிரகாசிக்கச்  செய்யும். இந்த நூலின் மூலமாக உங்கள்அறிவையும் பிரகாசிக்கச் செய்யும். இப்படி என்றென்றும் எவர்க்கும் ஞான ஒளி கிட்ட வேண்டும் என்ற எண்ணத்தோடு தான் அன்று அந்த மஹரிஷிகள் மனுவை கேள்விகளால் துளைந்து, நல்ல பதில்களைப் பெற்று, நமக்கு அளித்தார்கள். இனி அடுத்தடுத்த  ஸ்லோகங்களில் அவர்கள் தங்கள் கேள்விகளைக்கேட்கப் போகிறார்கள். அவற்றைப் பார்ப்போம்.


2.

 பகவானே, நான்கு வர்ணத்தவரும் கடைப்பிடிக்க வேண்டிய தர்மங்களைப் பற்றியும் இவர்களுக்குள் கலப்பு சம்பந்தங்களால் ஏற்பட்ட வர்ணத்தாருடைய தர்மங்களைப் பற்றியும் எமக்கு எடுத்துரைப் பீராக.

 ................

விளக்கம்

(வர்ணம் என்றால் நிறம். இது சூட்சுமஉடலை அடிப்படையாகக்கொண்டது. நான்கு வர்ணத்தவருக்கு நான்கு நிறம்.

பிராமணன் தெய்வீக எண்ணங்களில் மூழ்கியிருப்பதால் அவனது சூட்சும உடல் சத்துவ குணத்தால் நிறைகிறது. சத்துவத்தின் நிறம் வெண்மை.

க்ஷத்திரியன் போர்புரிதல் போன்ற கடுமையான சூழலில் வாழ்வதால் ராஜச குணம் மேலோங்கியிருக்கும்.அவனது சூட்சம சரீரம் சிவப்பு நிறத்தைப்பெறுகிறது.

சூத்திரன் சோம்பல்,தூக்கம்,அறிவின்மை போன்ற தாமச குணத்தினால் ஆட்கொள்ளப்பட்டிருக்கிறான்.அவனது சூட்சும சரீரம் கருமை நிறத்தைப்பெறுகிறது.

வைசியன் ராஜஸ மற்றும் தாமஸம் இரண்டும் கலந்த குணத்தைப்பெறுகிறான் எனவே அவனது சூட்சும சரீரம் கருப்பு,சிவப்பு கலந்த நிறத்தைப்பெறுகிறது.

ஒரு மனிதனுக்கு புறத்தில் தெரியும் சரீரம் தூலசரீரம்,மனத்தால் ஆக்கப்பட்டிருக்கும் சரீரம் சூட்சுமசரீரம்.

மனிதன் இறந்தபிறகு

சூட்சும சரீரம் அவனது உடலைவிட்டு வெளியேறுகிறது.)


3.

 பிரபுவே, வேதங்களில் கூறப்பட்ட அனைத்தையும், பிரம்ம சொரூபத்தையும், தத்துவங்ளையும் அறிந்தவர் தாங்கள் ஒருவரே.  தாங்களே நாங்கள் கேட்ட விஷயத்தை தெளிவுபடுத்தக் கூடியவர்.


4.

 மஹான்களான மஹரிஷிகள் இவ்வாறு வினவ, அளப்பரிய ஞானம் கொண்டவரான மனுபகவான் அந்த மகரிஷிகளைத் தக்கபடி உபசரித்து, அவ்வாறே ஆகட்டும்” கூறுகிறேன், கேளுங்கள் என்றருளினார்.

..........................

5.

  இவ்வுலகம் இருட்டாகவும், பார்வைக்குப் புலப் படாததாகவும் ஊகிக்க முடியாததாகவும் , உருவமற்றதாகவும், ஒலியற்றதாகவும் தூங்கிக் கொண்டிருப்பது போல் இருந்தது.

.............................

6.

 ஐஸ்வர்யங்களோடு கூடியவரும், யோகாப்யாசத்தால் அறியக் கூடியவரும், இடையூறு ஏதுமின்றி சிருஷ்டிக்கக் கூடியவருமான பரமாத்மா பஞ்ச பூதங்களைப் பிரகாசிக்கச் செய்த படி தாமாக வெளிப் பட்டார்.

...................

7.

 வெளிப் புலன்களால் அறிய முடியாதவரும்,பரிசுத்தமான மனத்தினால் அறியத் தக்கவரும், அருவமானவரும், நித்யமானவரும், ஊகிக்க முடியாதவருமான பரமாத்மா தாமாகவே சிருஷ்டி புரிவதற்காக வெளிப் பட்டார்.

.......................


8.

 அப்படி வெளிப்பட்ட அவர்,  சிருஷ்டி செய்ய மனங் கொண்டவராக, முதலில் அப்புவை(ஆதிநீர்) சிருஷ்டி செய்தார். அந்த நீரில் தம் சக்தியின் ரூபமான ஒரு விதையை வைத்தார்.

...................

9.

 அந்த விதை சூரிய ஒளிக்கு நிகரான ஒளியோடும், தங்கமென தகதகத்த நிறத்தோடும்  ஒரு அண்டமாக அதாவது  ஒரு முட்டை வடிவமாக ஆனது. அந்த அண்டத்தில் பரமாத்மாவானவர் தாமே பிரம்மாவாக ஜன்மமெடுத்தார்.

.......................

10.

 தண்ணீருக்கு நாரம்  என்றும் பெயருண்டு. ஒரு செயலில் ஈடுபட்டு, தண்ணீரில் இயங்கத் தொடங்கியதால் பரமாத்மாவான அவர் நாராயணன் என்ற நாமம் பெற்றார்.

...................


11.

 சிருஷ்டிக்கப் பட்டவற்றுக் கெல்லாம் காரணமாய், வெளிப் புலன்களுக்கு எட்டாத படியாக, தோற்றமும் அழிவும் அற்று, நித்தியமான, அநித்தியமான பொருட்களின் உருவமாய் எந்த பரமாத்மா உள்ளாரோ, அந்த பரமாத்மாவினால் சிருஷ்டிக்கப் பட்ட அந்த புருஷன் உலகத்தில் ” பிரம்மா” என்றழைக்கப் பட்டார்.

..............

12.

 அந்த அண்டத்தில் பிரம்மா ஒரு வருடம் முழுமையும் தவமியற்றிய பிறகு, ” இந்த அண்டம் இரண்டாகப் பிளக்கட்டும்” என்று நினைத்த அளவில்அண்டம் இரண்டானது.

( பிரம்மா தவமியற்றிய ஒரு வருட காலம் என்பது நாம்  இப்போது கூறும் வருடம் மாதம் நாள் கணக்கைச்சேர்ந்ததல்ல. நாம் கணக்கிடும் வருடம் என்பது மானிடர்களான நமக்கானது. தேவர்களுக்கு வேறு காலக்கணக்கு. இது பின்னால் வரும் ஸ்லோகங்களில் விரிவாக எடுத்துரைக்கப் பட்டுள்ளது)

 ......................

13.

பிரம்மா, பிளவுண்ட அண்டத்தின் மேல் பாதியில் ஆகாயத்தையும், கீழுள்ள பாதியில் பூமியையும்,நடுவில் வெளியையும் ( அண்ட வெளியையும்) எட்டு திசைகளையும், கடலையும் படைத்தார்.

விளக்கம்…

(தற்காலத்தில் வானஇயல் முன்னேறியிருக்கும் அளவுக்கு பழைய காலத்தில் முன்னேறவில்லை. முற்காலத்தில் பூமி நிலையாக இருப்பதாகவும் சூரியன் பூமியை சுற்றி வருவதாகவும் நம்பினார்கள்.)

....................

14.

 பிரம்மா பரமாத்மாவிடமிருந்து  சத், அசத் ரூபமான மனத்தைப் பெற்றார். அந்த மனத்திலிருந்து தன் செயலை நிறைவேற்றிக் கொள்ளத் தக்கதான அஹங்காரத்தைப் பெற்றார்.

.....................

15.

 மஹத்” என்னும் தத்வத்தையும், ஆத்மாவுக்கு உதவியாக இருப்பதான சத்வ குணத்தையும், ரஜஸ், தமஸ் என்னும் குணங்களையும், விஷயங்களைக்கிரகிக்கும் சக்தி கொண்ட பஞ்சேந்திரியங்களையும் முறையாகப் படைத்தார்.

...............


16.


 அகங்காரத்தையும்,  அதன் தன் மாத்திரைகளையும், சூட்சும அவயவங்களையும் ஆறு  விகாரங்களையும் சேர்த்து சகல பூதங்களையும் படைத்தார்.

( நீங்கள் இப்போது படித்துக் கொண்டு வந்த ஸ்லோகங்களின் பொருளைப் புரிந்து கொள்வது கடினமானது தான். ஆனால் இவற்றைப் பற்றி இப்போது  விளக்கப் புகுவது உசிதமானதன்று.   இந் நூலின் உட்புகுந்து அநேக விஷயங்களைப் புரிந்து கொண்ட பின்னால் இவற்றை விளக்கிக்  கொள்வது மிகவும்  எளிதாக இருக்கும்.

 எனவே, மேற்கொண்டு ஸ்லோகங்களைப் பார்ப்போம்)

.............................


17.

 அஹங்கார தன்  மாத்திரை வடிவங்களான சூட்சும அவயவங்கள் ஆறும், பூதேந்திரியங்களும் காரிய ரூபமாக பிரம்மாவிடம் சேருவதால் பிரம்மாவை அவற்றின் சேர்க்கை கொண்டவர் என்று பொருள் படும் விதமாக, சரீரம்” என்று பண்டிதர்கள் கூறுகிறார்கள்.

.......................


18.

 பஞ்ச மகா  பூதங்களும் தங்கள் காரியங்களுடன் கூடியும், மனம் வெளியில் புலப் படாத சூட்சுமமான அவயவங்களோடு கூடியும் சரீரத்தில் பிரவேசிக்கின்றன.

.......................

19.

 பஞ்ச பூதங்கள், ”மஹத்” தத்துவம்”, ” அஹங்காரம்” என்னும் இரண்டு, ஆக ஏழின் காரணமாக உலகம் தோன்றுகிறது.

............................

20.

ஆகாயம், வாயு, அக்னி, ஜலம், மண் என்னும் பஞ்ச பூதங்களில் முதலில் உள்ளதன் குணம் அடுத்ததன் குணத்தோடு சேர்ந்திருக்கும். இவற்றின் குணங்கள் இவற்றுக்கு அடுத்ததாக உள்ளதோடு சேர்ந்திருக்கும்.

( தற்காலத்தில் பூதங்கள் என்ற சொல்லைப் பிசாசுகளைக் குறிக்கப் பயன் படுத்துகிறார்கள். பூதம் என்ற சொல்லுக்கு பிசாசு என்ற பொருள் இருப்பது உண்மை தான். ஆனால் அது ஒன்று மட்டுமே பொருளல்ல. மனிதன் முதல் விலங்கு  தாவரம் வரை  உயிர் வாழும் அனைத்துப் பிராணிகளுக்கும் பூதங்கள் என்று பெயர் உண்டு. மேலும் பூமி, ஜலம், நெருப்பு, காற்று, ஆகாயம் இவையும் பூதங்கள் எனப்படும். ஐந்து  பூத தத்துவங்கள், ஐம் பெரும் பூதங்கள், என்று சொல்லும் போது இந்த ஐந்தையே குறிக்கும். இனி இந்த ஸ்லோகம் கூறுவதைப் பார்ப்போம்.

 முதலில் ஆகாயம். இதற்கு ஓசை என்ற தன்மை இருக்கிறது. அடுத்தது வாயு. இதற்கு ஆகாயத்தின் தன்மையான ஓசையோடு ஸ்பரிசம் என்ற தன்மையும்( தொடு உணர்ச்சி) உண்டு.  காற்று மேலே பட்டால் தொடு உணர்ச்சியால்உணர முடியும்.

அடுத்து தேஜஸ்.  அதாவது நெருப்பு.  நெருப்புக்கு ஒளி என்னும் தன்மையோடு ஆகாயத்துக்கும் வாயுவுக்கும் இருக்கும் தன்மைகளும் சேர்ந்து ஒளி, ஓசை, ஸ்பரிசம் என்னும் தன்மைகளுமாக மொத்தம் நான்கு தன்மைகள் உள்ளன.

 இவ்வாறே பிருத்விக்கு அதாவது மண்ணுக்கு வாசனை என்ற தன்மையோடு ஒளி, ஓசை,  ஸ்பரிசம், சுவை என்ற நான்கு தன்மைகளும் சேர்ந்து மொத்தம் ஐந்து தன்மைகள் உள்ளன.

 பஞ்ச மகா பூதங்களின் தன்மைகள் இவை. இந்தத் தன்மைகளையே தன் மாத்திரைகள் என்பார்கள்.

 இவ்வாறே  அகங்காரத்துக்குத் தன்மைகள் அதாவது  தன் மாத்திரைகள் ஆறு. காமம், குரோதம், லோபம், மதம், மாத்ஸரியம், மோகம் என்பவை.

 மஹத் என்னும் பெரும் தத்துவத்தோடு பஞ்ச பூதங்களும் தங்கள்  தன்மைகளோடும், அகங்காரம் தன் தன்மைகளோடும் சேர்ந்து இவ்வுலகம் உண்டாகிறது.

சாங்கிய தத்துவம்

வேதாந்த தத்துவம்

சைவசித்தாந்தம்

போன்ற தத்துவங்களை

படித்தவர்கள் இதனை எளிதாக புரிந்துகொள்வார்கள்)

..

தொடரும்…