அன்னை சாரதாதேவியின் அன்புமொழிகள்-பாகம்-10
அன்னை சாரதாதேவியின் அன்புமொழிகள்-பாகம்-10 - மகனே கவலைப்படாதே.உலகின் உறவுகள் நிலையற்றவை.இன்று அவையே எல்லாம்போல் தோன்றும்.நாளை மறைந்துவிடும். உனது உண்மையான உறவு இறைவனுடன்,குருதேவருடன். - இறைவனின் திருநாமம் புலன்களின் வலிமையைவிட ஆற்றல்மிக்கத.முறையாக ஜபதியானம் செய்துவந்தால் எல்லாம் சரியாகிவிடும்.உன்னை வழிநடத்துபவர் குருதேவர்.அவரை எப்போதும் நினை.தவறுகளை எண்ணி கவலைப்பட்டுக்கொண்டிருக்கதே - உனது பயிற்சி.பேச்சு,செயல் அனைத்திலும் நேர்மையாக இரு.நீ எவ்வளவு பேறுபெற்றவன் என்பதை அப்போது உணர்வாய் - நேர்மை,உண்மை,அன்பு ஆகியவற்றையே கடவுள் நம்மிடம் எதிர்பார்க்கிறார்.வெறும் வாய்ஜாலங்கள் அவரைத் தொடுவதில்லை - உண்மையான ஆர்வத்துடன் முயற்சி செய்தால்,மற்ற எல்லா எண்ணங்களையும் விலக்கி,உன் இதய ஆழங்களிலிருந்து அவரிடம் பிரார்த்தனை செய்தால் அவர் கேட்பார்.அவரது அருளால் அந்த பிரார்த்தனைகள் நிறைவேறும் - ஆபத்து காலத்தில் உயிர்போய்விடுமோ என்ற நிலை வரும்போது உங்களிடம் எப்படிப்பட்ட மனநிலை தோன்றவேண்டும் தெரியுமா?பரிபூரணமாக பொறுப்பை இறைவனிடம் ஒபப்டைத்துவிட்டு,சிறு குழந்தையைப்போல் அவரிடம் முற்றிலும் சரணடைந்...