Posts

Showing posts from February, 2018

ஸ்ரீமத்பகவத்கீதை-அத்தியாயம்-13

ஸ்ரீமத்பகவத்கீதை-அத்தியாயம்-13 - ஸ்ரீபகவான் சொன்னது - 13.1 குந்தியின் மைந்தா, இந்த உடல் சேத்திரம் என்று அழைக்கப்படுகிறது. யார் இந்த உடலை அறிகிறானோ அவன் சேத்திரக்ஞன் என்று சொல்லப்படுகிறான் - 13.2 அர்ஜுனா எல்லா சேத்திரங்களிலும் (உடல்களிலும்) என்னை சேத்திரக்ஞன்(எல்லா உடலையும் அறிபவன்) என்று அறிந்துகொள். சேத்திரம், சேத்திரக்ஞன் பற்றிய அறிவே(உடல் மற்றும் உடலை அறிபவன் பற்றிய அறிவே) ஞானம் என்பது என்னுடைய கொள்கை - 13.3 அந்த சேத்திரம் யாது, எத்தன்மைகளை உடையது என்றும், என்னனென்ன விரிவுகளை உடையதென்றும், எதிலிருந்து எது உண்டானதென்றும் அந்த சேத்திரக்ஞன் யார் என்றும், என்ன மகிமையுடையவன் என்றும் அதை சுருக்கமாக சொல்கிறேன் கேள் - 13.4 இவ்வுண்மை ரிஷிகளால் விதவிதமான சந்தங்களால் பாங்காக பலவகைகளில் பாடப்பெற்றிருக்கிறது. நிச்சய புத்தியை தந்து பிரம்மத்தை குறிக்கின்ற பதங்களாலும் பாடப்பட்டுள்ளது. - 13.5,6 மஹாபூதங்கள், அகங்காரம்,புத்தி, அவ்யக்தம், இந்திரியங்கள் பத்து மற்றும் ஒன்று, இந்திரிய விஷயங்கள் ஐந்தும் விருப்பு,வெறுப்பு,சுகம்,துக்கம், உடலை இணைத்திருப்பது,அறிவு,மனவுறுதி இவைகள் வேறுபாடுகளோடு கூ...

ஸ்ரீராமகிருஷ்ணரின் உபதேசம்-11

Image
ஸ்ரீராமகிருஷ்ணரின் உபதேசம் 🌸 - -part 11 - 🌸 உலகியல் மனிதர்களிடம் எல்லாவற்றையும் துறந்துவிட்டு,இறைவனிடம் பக்தி செலுத்துங்கள் என்று சொன்னால் ஒருபோதும் காதில் வாங்கிக்கொள்ள மாட்டார்கள்.அவர்களுக்கு இறைவனைப்பற்றிய பேச்சு பிடிக்காது. - 🌸 சத்வகுணம் மிக்கவர்கள் எப்படி இருப்பார்கள் தெரியுமா? அவர்களுடைய வீடு அங்கும் இங்கும் இடிந்து கிடக்கும்.அதை பழுதுபார்க்க மாட்டார்கள்.பூஜையறையில் புறாக்கள் அசுத்தம் செய்யும். முற்றத்தில் பாசி படந்திருக்கும்.மேஜை நாற்காலிகள் பழையவையாக இருக்கும்.உடுத்துவதற்கு ஏதோ ஒரு துணி இருக்கும்.இவர்கள் எதைப்பற்றியும் கவலைப்படமாட்டார்கள்,சாந்தமானவர்கள்,கபடம் இல்லாதவர்கள்,கருணை நிறைந்தவர்கள்,யாருக்கும் எந்த தீங்கும் செய்ய மாட்டார்கள்.இறைவனை நம்பி வாழ்வார்கள். - 🌸 சத்துவ குண பக்தன் மிகவும் ரகசியமாக தியானம் செய்வான்.பசியை போக்கும் அளவுக்குத்தான் உடல்மீது கவனம் செலுத்துவான்.இவனுக்கு சோறும் கீரையும் கிடைத்தாலே போதும்.சுவையாக சாப்பிடவேண்டும் என்ற எண்ணமே இருக்காது.பிறரை புகழ்ந்துபேசி பணம் சம்பாதிக்க விரும்பமாட்டான்.வீட்டில் உள்ள பொருட்கள் மிகவும் சாதாரணமாகவே இருக்கும் - 🌸 இறைவன...

வேதாந்த மூளையுடனும் இஸ்லாமிய உடலுடனும் கூடிய வருங்காலத்தின் பரிபூரண இந்தியா

வேதாந்த மூளையுடனும் இஸ்லாமிய உடலுடனும் கூடிய வருங்காலத்தின் பரிபூரண இந்தியா எழுவதை என் மனக்கண் முன்னால் காண்கிறேன் - மதம்,சிந்தனை இவற்றின் அறுதிச் சொல் அத்வைதமே. எல்லா மதங்களையும்,நெறிகளையும் அந்த நிலையிலிருந்து மட்டுமே அன்புடன் நோக்க முடியும்.அறிவொளி பெற்ற வருங்கால மனித சமுதாயத்தின் மதமாக இருக்கப்போவது அதுவே என்பது என் நம்பிக்கை.மற்ற இனத்தினருக்கு முன்பே அதை அடையப்பெற்றவர்கள் என்ற பெருமை இந்துக்களுக்கு வரலாம்.அரேபியர்களையும்,ஹீப்ரூக்களையும்விட இந்துக்கள் புனிதமான இனத்தினர்.ஆ னாலும் மனித இனம் அனைத்தையும் தனது ஆன்மாவாகவே நோக்கி அதற்கேற்ப வாழ்வதான செயல்முறை அத்வைதம் இந்துக்களிடையே ஒருபோதும் வளரவில்லை. இந்த சமத்துவ நிலையை ஏதாவது மதம் ஓரளவிற்காவது அணுகியிருக்கிறது என்றால் அது முகமதியமதம் மட்டுமே.இது எனது அனுபவம் - வேதாந்த கொள்கைகள் எவ்வளவு நேர்த்தியாக சிறப்பாக இருந்தாலும் செயல்முறை முகமதிய மதத்தின் உதவியில்லாமல் மனித இனத்திற்குச் சிறிதும் பயன்இல்லை.வேதங்களோ,பைபிளோ,குரானோ இல்லாத ஓரிடத்திற்கு மனித இனத்தை அழைத்துச்செல்ல நாம் விரும்புகிறோம்.ஆனால் வேதங்களையும் பைபிளையும் குரானையம் சமரசப்படுத்த...

நான் கற்றுக்கொண்டது என்ன? பாகம்-7

நான் கற்றுக்கொண்டது என்ன? பாகம்-7 சுவாமி வித்யானந்தர் - உங்கள் உணவு முறைகள் என்ன? என்று ஒருவர் கேட்டிருந்தார் - நான் ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்தவன் என்பதால் அவர்களிடம் எப்படிப்பட்ட உணவு வழக்கம் இருந்ததோ அதேதான் என்னிடமும் இருந்தது.வாரத்தில் இரண்டுநாட்கள் சைவம் மீதி நாட்கள் அசைவம் முக்கியமாக மீன். கன்னியாகுமரி மாவட்டத்தில் பொதுவாக வாழும் பெரும்பாலானவர்களின் உணவு பழக்கம் இப்படித்தான் இருக்கிறது. - நான் சென்னை ராமகிருஷ்ணா மடத்தில் சேர்ந்த பிறகுதான் முற்றிலும் சைவ உணவு உண்ணும் வாய்ப்பு கிடைத்தது. கல்கத்தாவில் விவேகானந்தர் ஆரம்பித்த தலைமை மடத்தில் சைவம் அசைவம் என்ற இரண்டு உணவு முறைகளும் உண்டு. சைவம் சாப்பிடுபவர்கள் தனியாகவும், அசைவம்சாப்பிடுபவர்கள் தனியாகவும் அமர்ந்திருப்பார்கள். மீன் அங்குள்ள முக்கிய உணவு. அங்கு வசித்த 2ஆண்டுகளும் மீன் உணவையே உண்டேன். - அதன் பின் படிப்படியாக அசைவ உணவு உண்ணமுடியாத மனநிலை உருவாகிவிட்டது.இந்த நிலை படிப்படியாக உருவானது. தற்போது அசைவ உணவுகளை உண்ண முடிவதில்லை. அசைவ உணவு உண்டால் ஜீரணிப்பதில்லை.அதன் மணம் பிடிப்பதில்லை. அது மட்டுமல்ல, தற்போது பால்,முட்டை,கேக்,...

அன்னை சாரதாதேவியின் அன்புமொழிகள்-பாகம்-2

அன்னை சாரதாதேவியின் அன்புமொழிகள்-பாகம்-2 - சீடர். அம்மா! பெரியவை சிறியவை என்று இந்த எண்ணற்ற உயிரினங்கள் எல்லாம் ஒரே நேரத்திலா படைக்கப்பட்டன? - அன்னை சாரதாதேவி..ஓவியன் தூரிகையினால் கண்,முகம்,மூக்கு என்று ஒவ்வொன்றாக வரைந்து படத்தை பூர்த்தி செய்வது போல் கடவுளும் ஒவ்வொன்றாகவா அன்னைத்தையும் படைத்தார்? இல்லை. பகவானிடம் விசேச சக்தி உள்ளது. அவர் ”உம்” என்னும்போது எல்லாம் படைக்கப்படுகின்றன. அவர் “உஹும்” என்னும்போது அவை மறைந்துவிடுகின்றன. இருப்பதெல்லாம் ஒரே வேளையில் தோன்றின. ஒன்றன்பின்  ஒன்றாக தோன்றவில்லை ஒரு கல்பத்தின் முடிவிற்கு பிறகு தூக்கத்திலிருந்து விழித்தெழுவதுபோல அனைவரும் தோன்றுகின்றனர். - சீடர்..ஜெபம் மூலம் இறைவனை பெற முடியுமா? - அன்னை...ஜெபம் போன்ற ஆன்மீக சாதனைகளின் மூலம் கர்மத்தளைகள் அறுபடுகின்றன.ஆனால் பிரேமபக்தி இல்லாமல் கடவுளைப்பெற முடியாது. ஜபதவங்கள் என்பது என்ன தெரியுமா? இவற்றின்மூலம் புலன்களின் வேகம் தடுக்கப்படுகிறது. இறைவனிடம் கொள்ளும் நெருக்கமான அன்பினால்தான் அவரை பெற முடியும் பணம் இருப்பவன் பகவானுக்கும் பக்தர்களுக்கும் சேவைசெய்து அவரை வழிபடவேண்டும். அது இல்லாதவன் நாமஜபத்த...

ஸ்ரீமத் பகவத்கீதை-அத்தியாயம்-14

ஸ்ரீமத்பகவத்கீதை-அத்தியாயம்-14 - ஸ்ரீபகவான் சொன்னது - 14.1 முனிவர்கள் எல்லோரும் எதை அறிந்து இங்கு மேலான சித்தியை அடைந்தார்களோ, ஞானங்களுள் உத்தமமான மேலான ஞானத்தை திரும்பவும் சொல்கிறேன் - 14.2 இந்த ஞானத்தை கடைபிடித்து என்சொரூபத்தை அடைந்தவர்கள் பிரபஞ்சம் வெளிப்படும்போது (சிருஷ்டி) பிறப்பதில்லை, பிரபஞ்சம் ஒடுங்கும்போது (பிரளயத்தில்) துன்புறுவதில்லை - 14.3 பரதகுலத்தில் உதித்தவனே, மஹத் பிரம்மம் எனது யோனி. அதில் நான் கர்ப்பத்தை வைக்கிறேன். அதிலிருந்து எல்லா உயிர்களின் உற்பத்தி உண்டாகிறது (மஹத்-பிரபஞ்சபுத்தி) - 14.4 குந்தியின்புத்ரா, எல்லா யோனிகளிலும் எந்த வடிவங்கள் பிறக்கின்றனவோ, அவைகளுக்கு மஹத்பிரம்மம் தான் யோனி(பிறப்பிடம்) நான் பீஜம் வழங்கும் பிதா - 14.5 மஹாபாகுவே ஸத்வம், ரஜஸ்,தமஸ் என்று பிரகிருதியிலிருந்து உண்டான குணங்கள் தேகத்தில் அழியாத தேகியை பந்தப்படுத்துகின்றன - 14.6 பாபமற்றவனே, அவற்றுள் சத்வகுணமானது தூய்மையானது, ஒளிபொருந்தியது, தொந்தரவு செய்யாதது. சுகத்தில் பற்றுதலாலும், ஞானத்தில் பற்றுதலாலும் பந்தப்படுத்துகிறது - 14....

நான் கற்றுக்கொண்டது என்ன? பாகம்-8

நான் கற்றுக்கொண்டது என்ன? பாகம்-8 சுவாமி வித்யானந்தர் - பிற மதத்தினருடன் உங்களுக்கு ஏதாவது பழக்கம் உண்டா?அவர்களை ஏற்றுக்கொள்வீர்களா? என்று ஒருவர் கேட்டார் - நான் கேபிள்,டி.வி யில் பணியாற்றிய காலத்தில் 2 ஆண்டுகள் இஸ்லாமிக் டி.வி என்ற ஒரு முஸ்லீம் டி.வியில் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது.முதலில் முஸ்லீம்களின் டி.வி க்கு ஏன் செல்ல வேண்டும் என்றுதான் நினைத்தேன் ஆனால், காலசூழ்நிலைகள் என்னை அங்கே கொண்டுவந்து சேர்த்தது. வீடியோ ரிக்கார்டிங் மற்றும் எடிட்டடிங் பணி,டி.வி சேனல் நிகழ்ச்சிகள் ஒழுங்காக ஒளிபரப்பாகிறதா என்பதை கவனிப்பது இதுதான் அங்கு எனது பணி. முஸ்லீம் மத பிரச்சாரகர்கள் பேசுவதை ரிக்கார்டிங்செய்து.எடிட் செய்து, டி.வி யில் ஒளிபரப்ப வேண்டும். - தினமும் 12 மணிநேரம் வேலை. எப்போதும் முஸ்லீம் மதம் தொடர்பான சொற்பொழிவுகளை கேட்க வேண்டியிருக்கும். அவர்கள் பேசுவதை கேட்கவேண்டும்,எடிட்டிங் நேரத்திலும் அதை கேட்க வேண்டும்.டி.வி யில் ஒளிபரப்பாகும் போதும் ஒழுங்காக எடிட்டிங் செய்திருக்கிறோமா என்பதை தெரிந்துகொள்ள மீண்டும் கேட்க வேண்டும். இவ்வாறு ஒரு சொற்பொழிவை குறைந்தது மூன்று முறை கேட்க வேண்டும். அது மட...

இந்தியாவில் நடக்கும் அடக்குமுறைகள் பற்றி அமெரிக்க சீடர் மேரி ஹேல்க்கு எழுதிய கடிதம்

Image
இந்தியாவில் நடக்கும் அடக்குமுறைகள் பற்றி அமெரிக்க சீடர் மேரி ஹேல்க்கு எழுதிய கடிதம் - தற்கால இந்தியாவில் நடைபெறுகின்ற பிரிட்டிஷ் ஆட்சியில் ஒரே ஒரு நல்ல காரியம் நடந்தது,ஆனால் அது அவர்களை அறியாமல் நடந்த ஒன்று.அது. அவர்கள் இந்தியாவை மீண்டும் ஒருமுறை உலக அரங்கில் கொண்டுவந்தது,வெளியுலகத்தொடர்பை இந்தியாமீது திணித்தது.இந்திய மக்களின் நலலை மேற்கொண்டு அது செய்யப்படவில்லை.ரத்தத்தை உறிஞ்சுவதே அவர்களது முக்கிய நோக்கமாக இருக்கும்போது எந்த நன்மையும் செய்ய முடியாது.  - முகமதிய வரலாற்று ஆசிரியரான பெரிஷ்டாவின் கணக்குப்படி 12ம் நூற்றாண்டில் இந்துக்களின் எண்ணிக்கை 60 கோடி தற்போது(அதாவது1899) இருப்பதோ 20 கோடிக்கும் குறைவாகவே உள்ளது. - நாட்டை வெற்றிகொள்ள ஆங்கிலேயர் போட்டியிட்டபோது பல நூற்றாண்டுகளாக தலைவிரித்தாடிய அராஜகம்,1857 லும்,1858லும் ஆங்கிலேயர்கள் செய்த படுகொலைகள். பிரிட்டிஷ் ஆட்சியின் தவிர்க்கமுடியாத விளைவாகியுள்ள அவற்றைவிட பயங்கரமான பஞ்சங்கள், சுதேசிகள் ஆட்சிசெய்தபோது ஒருபோதும் பஞ்சம் வந்ததில்லை,இந்த பஞ்சங்கள் காரணமாக இறந்துபோன கோடிக்கணக்கான மக்கள் இவையெல்லாம் இருந்தும் மக்கள்தொகை அதிரிக்கத...

ஸ்ரீமத்பகவத்கீதை-அத்தியாயம்-15

ஸ்ரீமத்பகவத்கீதை-அத்தியாயம்-15 - ஸ்ரீபகவான் சொன்னது - 15.1 மேலே வேருள்ளதும் கீழே கிளைகள் உள்ளதும் ஆகிய ஆலமரத்தை அழிவற்றது என்று சொல்கிறார்கள். வேதங்கள் அதனுடைய இலைகள். அதை யார் அறிகிறானோ அவன் வேதத்தை அறிபவன் ஆகிறான்.(ஆலமரத்திற்கு வேர்கள் பூமிக்கு கீழே இருக்கும்.ஆனால் மனிதனின் வேர்கள் அதாவது மூளை மேலே இருக்கிறது.இந்த அடிப்படையில் மனிதனையும், பிரபஞ்சத்தையும்  புரிந்துகொள்ள முயற்சிக்க வேண்டும்.) - 15.2 அந்த மரத்தினுடைய கிளைகள், குணங்களால் செழிப்படைந்து, விஷயங்கள் என்னும் தளிர்விட்டு,கீழும் மேலும் படர்ந்திருக்கின்றன. மனித உலகத்தில் வேர்கள் கர்மத்தை விளைவிப்பனவாய் கீழ்நோக்கி பரவியிருக்கின்றன - 15.3 இகத்தில் அந்த மரத்தினுடைய ரூபம் அவ்வாறு புலப்படுவதில்லை. அதற்கு முடிவில்லை.ஆதியில்லை,இருப்புமில்லை. இந்த வலுத்து வேரூன்றிய அசுவத்த மரத்தை திடமான பற்றின்மை என்னும் வாளால் வெட்டவேண்டும். - 15.4 எங்கு போய் திரும்பவும் திரும்பி வருவதில்லையோ, யாரிடத்திலிருந்து பண்டைய பிரவிருத்தி பிரபவித்ததோ அதே ஆதிபுருஷனை சரணடைகிறேன்.அந்த மேலானநிலை தேடத்தக்கது - 15.5 அகங்காரத்தையும்.பகுத்தறிவிமையும் ந...

சுவாமி விவேகானந்தரின் சிந்தனைத் துளிகள்-3

சுவாமி விவேகானந்தரின் சிந்தனைத் துளிகள்-3 - நாம் வளரவளர பாடம் கற்கிறோம்.அந்தோ!முழுவதும் கற்றபின் அரங்கத்தைவிட்டு அப்புறப்படுத்தப்பட்டு விடுகிறோம்.இதுதான் மாயை - உலகம் நமது ஆன்மாவை தொடமுடியாது. உடல் கிழிபட்டு ரத்தம் வடிந்தாலும், உனது மனத்தின் அடிஆழத்தில் அமைதியை நீ அனுபவிக்கலாம் - துன்பம் என்பது யாரையும் நெருங்கக்கூடாது என்று மனமார விரும்புகிறேன்.ஆனால் அதுதான் நம்மை அகத்திற்குள் அழைத்துசெல்கிறது - நானாக வேலை செய்யாவிட்டாலும், இளைஞர்களை இந்தியாவெங்கும் அனுப்பி மீண்டும் ஒருமுறை கிளர்ச்சி செய்யப்போகிறேன் - இதயத்தை துயரம் வாட்டும்போது,நம்பிக்கை முற்றிலும் நம்மைவிட்டு அகலும் நிலைவரும்போது அகத்தே உள்ள பிரம்மஜோதி ஒளிர்கிறது - எதைக்கொடுத்தாவது வாழ்க்கையில் நாம் பெற வேண்டியது ஒன்றே ஒன்றுதான் அதுதான் அன்பு.எல்லையற்று விரிந்த கடல்போல ஆழமான அன்பு - வாழ்க்கை என்பது துக்கம்.துக்கத்தை தவிர வேறில்லை என்பதே நான் கற்றுக்கொண்ட பெரிய பாடம் - நான் மீண்டும் ஒருமுறை பிறவி எடுத்து வரவேண்டும் என்று எனக்கு கடவுளாக இருந்த ஒருவர் சொன்னார்.அப்படியே அது நடக்கட்டும் - இந்துமதம்,இஸ்லாம் ஆகிய இருபெரும் மதங்களின் சேர்க...