அன்னை சாரதாதேவியின் வாழ்க்கை வரலாறு-பாகம்-73
-
அன்னை சம்பிரதாயப்படி துறவறம் ஏற்கவில்லை.தம்மை இல்லறப்பெண்ணாகவே கருதினார். ஆன்மீகத்தில் மிக உயர்நிலையைத் தொட்டவராக இருந்தும்., தாம் சாதாரணப்பெண் அல்ல என்பது தெரிந்தும் அவர் ஒருபோதும் தமது இல்லறக்கடமைகளை மறக்கவில்லை.பிறந்த வீட்டினருடன் தம்மைப்பிணைத்துக்கொண்டு அவர்களின் இன்பதுன்பங்களில் பங்கெடுத்துக்கொண்டு ஒரு சாதாரணப்பெண்ணாகவே வாழ முற்பட்டார். அன்னைக்குப் பிறந்த வீடு என்பதைச் சாதாரணமாக கருதிவிட முடியாது. உலகியல் மனிதர்களுள் எத்தனை ரகம் உண்டோ,அத்தனை ரகத்தின் மாதிரிகளும் அங்கே உண்டு.
அன்னையின் தாய் வழிக்குடும்பம் ,தாயான சியாமாசுந்தரி தேவியையும்,தம்பிகள் பிரசன்ன குமார்,உமேஷ் சந்திரர், காளி குமார்,வரத பிரசாதர்,அபயசரணர் என்ற ஐவரையும்.தங்கையான காதம்பினியையும் கொண்டிருந்தது. இதில் காதம்பினி,உமேஷ் சந்திரர்,அபய சரணர் ஆகியோர் இளமையிலேயே இறந்துவிட்டனர். அன்னை குடும்பத்தில் மூத்தவர்.ககோதரர்களை அவர் அருமையாக வளர்த்ததை முன்பே கண்டோம். இதனால் இயல்பாகவே அவர்களுக்கு அன்னையிடம் பாசம் இருந்தது. ஆனால் அவர்கள் ஆன்மீகம் மட்டும் துளியும் இல்லாத சாதாரண உலகியல் மனிதர்களாகவே வாழ்ந்தனர். சிலவேளைகளில் பணத்தாசையும் பொறாமையும் பிடித்து,மனிதத் தன்மையே இல்லாத அளவுக்கு நடந்து கொண்டார்கள். ஆனால் அவர்கள் எவ்வளவு முயன்றும் ,வசதி படைத்தவர்கள் ஆக முடியவில்லை.ஏழ்மையிலேயே உழன்றனர்.அன்னை இந்த சகோதரர்களின் நலனில் அக்கறை கொண்டார். இதனை உணர்ந்து கொண்ட அவர்கள் வளர்ந்து பல குழந்தைகளுக்குத் தந்தைகளாகிவிட்ட பிறகும் எல்லாவற்றிற்கும் அன்னையையே எதிர்பார்த்து நின்றனர். சாதாரண உலகியல் மனிதர்களைப்போல் பாசம் என்பது அவர்களுக்குப் பணத்தைச் சார்ந்தே இருந்தது. பின்னாளில் அன்னையின் பிள்ளைகளான பக்தர்களும் சீடர்களும் பல்வேறு பொருட்களையும் பணத்தையும் அனுப்பிவைத்தபோது,அவற்றை ப் பறித்துக் கொள்வதிலேயே கண்ணும் கருத்துமாக இருந்தனர். அதற்காகத் தங்களுக்குள் அடிதடி சண்டையும் போட்“டு,அன்னைக்குப் பெரும் தொந்தரவும் வேதனையும் கொடுத்தனர்.
அன்னை அளவற்ற பொறுமையோடு அவர்கள் கொடுத்த வேதனைகளையெல்லாம் ஒரு சிறு முணுமுணுப்பு கூட இல்லாமல் ஏற்றுக்கொண்டார். அவர்களின் நல்வாழ்விற்காக முடிந்த வரையில் பணமும் பொருளும் தந்தார். ஜெயராம்பாடியில் தங்கியிருந்த காலங்களில் சகோதரர்களின் குடும்பச்செலவை ஏற்றுக்கொண்டார்.அவர்களுடைய வீட்டுவேலைகளைச் செய்தார். சியாமாசுந்தரி வயது முதிர்ந்தவர். ஆதலால் அன்னை அவரை வேலை செய்ய விடுவதில்லை. அவருடைய தம்பிகள் மனைவியர் சிறு வயதினராக இருந்தனர். முறையாக வீட்டு வேலைகளைச் செய்ய அவர்களால் முடியவில்லை. எனவே நெல்லை அவித்து , குத்தி,அரிசியாக்குவது முதல் தம்பிகளின் குழந்தைகளைக் குளிப்பாட்டி சோறூட்டுவது வரை எல்லா வேலைகளையும் அன்னையே செய்தார்.
தம்பியரின் மனைவியரும் ஒருவருக்கொருவர் சளைக்க வில்லை. அவர்கள் எல்லோருக்கும் பொதுவாக ஒன்றிருந்தது, அது பொறாமை. அன்னையின் பக்தர்களும் சீடர்களும் கொண்டு வருபவை அனைத்தும் தங்களுக்கே வர வேண்டும் என்று போட்டாபோட்டி.அதனால் சண்டை சச்சரவு. எல்லோரையும் திருப்தி ப் படுத்த அன்னை கடைபிடித்த பொறாமை விவரணைக்கு அப்பாற்பட்டது.பூமியைப் போன்ற பொறுமை நமக்கு வேண்டும். பிறரது குறைகளைப் பொறுத்துக்கொள்ள வேண்டும். ஆண்களும் இதற்கு விதிவிலக்கல்ல.என்று அடிக்கடி அவர் கூறுவார். பொறாமை எல்லை மீறும் போது,ஒரு குப்பைக் குவியலுக்கு இடையில் தாமரைபோல் நான் வாழ்கிறேன் என்று கூறுவார்.
இப்படிக் கூறியது மட்டுமல்ல,இந்த உலகில் இவர் களுடன் எதற்காக மாரடிக்கவேண்டும் என்று உண்மையிலேயே அன்னைக்குச் சிலவேளையில் மனத்துள் ஒரு போராட்டம் ஏற்படும்.காமார்புகூர் நாட்களிலேயே குருதேவர் நான் சொல்கின்“ற எல்லாவற்றையும் கேட்டால் அவள் இந்த பூமியில் தங்கமாட்டாள்.தன் இறக்கையை விரித்துக்கொண்டு பறந்து விடுவாள்.என்று கூறியிருந்ததை நாம் இப்போது நினைவு கூர வேண்டும்.இன்றோ அவர் கூறியவற்றைக்கேட்டது மட்டுமல்ல,அவற்றைப் பின்பற்றி சாதனைகள் செய்து ஆன்மீக உயர்நிலைகளைக் கண்டதுடன்,அவரது சாதனைகளின் பலனையும் ஏற்றுக் கொண்டு அருள்சக்தியாக திகழ்கின்ற இந்த நிலையில் அன்னையால் எப்படி இந்த உலகில் வாழ முடியும்., இந்த உலகம் உண்மை. இதற்கும் நமக்கும் இடையில் கொடுக்கல் வாங்கல் உறவு உள்ளது. உலகிலிருந்து நாம் சிலவற்றைப் பெற வேண்டியுள்ளது, நாமும் சிலவற்றைக் கொடுக்க வேண்டியுள்ளது.இது நமது அனுபவம்.இப்படி இந்த உலகைச் சார்ந்திருக்கின்ற நாமே சிலவேளைகளில் சலிப்பு தட்டிப்போய்.இது என்னடா உலகம்? இதிலிருந்து போய்விடலாம், என்று அங்கலாய்த்துக் கொள்கிறோம். அப்படியானால் இந்த உலகமே ஒரு கனவு,நாம் நனவு நிலை என்கிறோமே அதுவும் கனவு தான். மகளே இந்த உலகில் என்ன உள்ளது? உருப்படியாக இங்கே ஒன்றை க் காட்டு பார்க்கலாம்.என்று தமது அனுபவத்தை அடிக்கடிக் கூறுகின்ற ஆன்ம ஞானியான அன்னையால் இந்த உலகில் எப்படி வாழமுடியும்? என் மனமோ இரவும் பகலும் உயர் ஆன்மீக நிலைகளில் திளைத்திருக்க விரும்புகிறது. ஆனால் இவர்களின் மீது கருணையால் மனத்தைக் கட்டி கீழே வைத்திருக்கிறேன். பிரதியாகக் கிடைப்பது என்ன? ஏச்சும் அவமரியாதைகளும் தான். இதெல்லாம் என்ன,நான் என்ன செய்து கொண்டிருக்கிறேன்? என்னைச் சுற்றி எதற்காக இப்படியோர் உலகைப் படைத்துக் கொண்டிருக்கிறேன்? என்ற எண்ணம் அவ்வப்போது அன்னையின் மனத்தில் தீவிரமாக எழுந்தது.
குருதேவரின் மகாசமாதிக்குப் பின்னரும் இத்தகைய மனநிலையை அன்னையிடம் கண்டோம். தோன்றாத்துணையாக அவருடன் எப்போதும் இருந்து வருகின்ற குருதேவர் அப்போது அவருக்கு ஒரு காட்சியைக் காட்டினார். அதில் பன்னிரெண்டு வயது மதிக்கத்தக்க,சிவப்பு ஆடை உடுத்திய சிறுமி ஒருத்தி அன்னையின் முன் அங்குமிங்குமாக உலவினாள். அப்போது குருதேவர் தோன்றி நீ உலகில் வாழ்வதற்கு இவளை ஆதாரமாகப் பற்றிக்கொள். பல பிள்ளைகள் உன்னிடம் வருவார்கள் என்று கூறினார்.தம் வாழ்வில் இத்தகைய பெண்ணொருத்தி தம்மை இந்த உலக வாழ்வில் கட்டிவைக்கப் போகிறாள் என்பதை இந்தக் காட்சி அன்னைக்கு உணர்த்தியது. ஆனால் தொடர்ந்த பத்து வருடங்கள் அவர் தவ வாழ்வில் ஈடுபட்டிருந்தால் அதன் தேவை அவருக்கு இருக்கவில்லை. இப்போதும் அத்தகைய ஒரு தேவை ஏற்பட்டது.உடனே அந்தக் காட்சியும் அவர் முன் தோன்றியது.
மனித மனம் செயல்பட வேண்டுமானால் அதற்குத்தூலமான ஆதாரம் ஒன்று தேவை.ஆண்டவனும் உலக நன்மையின் பொருட்டுக்கீழே இறங்கி வரும்போது அத்தகைய ஆதாரம் ஒன்றை வைத்துக் கொள்கிறான்.இதுவே யோக மாயை.எனது மாயையால் நான் அவதரிக்கிறேன்.என்று ஸ்ரீகிருஷ்ணர் கீதையில் கூறியுள்ளார். அவதரிக்கும் போது இறைவனும் மாயை வசப்படுகிறான்.நாமும் மாயை வசப்பட்டுள்ளோம்.இரண்டும் ஒரே விதமானபிணைப்பா?இல்லவே இல்லை. நம் விஷயத்தில் மாயை சக்திவாய்ந்ததாக இருந்து நம்மை அதன் கட்டுக்குள் வைத்திருக்கிறது. நாம் நினைத்தாலும் மாயையிலிருந்து விடுபடுவது அவ்வளவு சுலபம் அல்ல. இறைவன் விஷயத்தில் மாயை அவரது கட்டுக்குள் இருக்கிறது. அவர் இந்த உலகில் செய்ய வேண்டிய பணிகளை அதன் மூலம் செய்துவிட்டு மாயையை உதறிவிடுகிறார். அப்படி அன்னையின் வாழ்வில் வந்த யோக மாயை ராது.
-
தொடரும்...

No comments:
Post a Comment