Posts

Showing posts from April, 2018

விவேகானந்தரின் அகண்ட பாரதம்

Image
சுவாமி விவேகானந்தர் வாழ்ந்த காலத்தில் இந்தியா என்பது பரந்த பெரிய நாடாக இருந்தது.இந்தியாவெங்கும் சுவாமிஜி சுற்றுப்பயணம் மேற்கொண்டார் என்று நாம் படிக்கிறோம்.அது இந்த பரந்த பாரதத்தை குறிக்கும்.  - பல காரணங்களால் நாம் நமது நாட்டின் பல பகுதிகளை இழந்துவிட்டோம். மீண்டும் இழந்த பகுதிகளை பெறவேண்டும் என்று விரும்புவதில் தவறு எதுவும் இல்லையே...

விவேகானந்தரின் மரணத்தில் உள்ள ரகசியம் என்ன?

Image
சுவாமி விவேகானந்தருக்கு நோய் வந்தது எதனால்? அவர் சிறுவயதில் இறந்தது ஏன்? - ராஜயோகம் பயில்பவர்கள் தனிமையில்,அமைதியான வாழ்க்கையை நாடி சென்றுவிடுவார்கள்.ஆகவே அவர்களுக்கு நோய் வருவதற்கான வாய்ப்பு குறைவு.உடல் நலன் பாதிக்கப்பட்டால் அதை சரி செய்யவும் அவர்களால் முடியும். - பக்தியோகத்தில் செல்லும் ஒருவருக்கு உடல் நலன் பாதிக்ப்பட்டால் அது இறைவன் தந்த பரிசு என்று நினைத்து அதை அப்படியே ஏற்றுக்கொண்டு வாழ்வார்கள்.அதை நீக்கவேண்டும் என்று இறைவனிடம் பிரார்த்தனை செய்ய மாட்டார்கள் - ஞான யோகத்தில் செல்பவர்களுக்கு உடல் நலம் பாதிக்கப்படால் அதைக்குறித்து கவலைப்பட மாட்டார்கள்.உடல் என்பது பொய்த்தோற்றம் என்பதால் அதற்கு முக்கியத்துவம் கொடுக்கக்கூடாது என்று நினைப்பார்கள். - கர்மயோகத்தில் செல்லும் ஒருவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டால். தன்னுடைய முன்வினை பயன்களால்தான் இவ்வாறு நடக்கிறது அவைகளை அனுபவிப்பதன் மூலம் பாவங்கள் போகும் என்று நினைப்பார்கள்.ஆகவே அதற்காக வருத்தப்பட மாட்டார்கள். - சுவாமி விவேகானந்தர் இந்தியாவில் பிச்சையேற்று வாழும் நாட்களில், சரியான உணவு கிடைக்கவில்லை. அந்த காலத்தில் பட்டினியால் பல லட்சம் ...

கடவுளுக்கு உருவம் உண்டா?

Image
கடவுளுக்கு உருவம் உண்டா? - வேதத்தில் கடவுளுக்கு உருவம் இல்லை என்று மிகத்தெளிவாக கூறப்பட்டுள்ளது.கடவுளுக்கு உருவம் இல்லை.அவர் ஆண்,பெண் அல்ல,அவருக்கு கண்,காது போன்ற எதுவும் இல்லை.அவர் எங்கும் இருப்பவர்.மாற்றமில்லாதவர்.பிறப்பற்றவர்.இறப்பற்றவர்.பிரம்மம் என்ற பெயரில் வேதம் கூறுகிறது. - உருவமுள்ள எதுவும் காலம்(சிலகாலம் இருக்கம் பிறகு இருக்காது) ,இடம்(ஏதாவது ஒரு இடத்தில் இருக்கும்).,காரணம் (ஏதோ ஒரு காரணத்தை திறைவேற்ற அங்கு இருக்கும்).ஆகவே அந்த உருவம் இந்த மூற்றிற்கும் கட்டுப்பட்டிரு க்கும்.அந்த உருவம் சொர்க்கத்தில் இருந்தாலும் சரி எங்கே இருந்தாலும் சரி இந்த மூன்றிற்கும் கட்டுப்பட்டிருக்கும்.ஆகவே கட்டுப்பட்ட அது கடவுள் இல்லை - கிறிஸ்தவ மதத்தில் உள்ள ஏசுகிறிஸ்து சொர்க்கத்தில் தேவனாக(ஒளிஉடல்) இருப்பதாக கூறுகிறார்கள். முஸ்லீம்கள் அதேபோல் அல்லா சொர்க்கத்தில் மனிதனை ஒத்து உருவத்துடன் ஆனால் மனிதனைவிட மிகப்பெரியவராக இருப்பதாக கூறுகிறார்கள்.இந்து மதத்திலும் இதேபோல் பல தேவர்களும் தேவதைகளும் உண்டு. - வேதம் இப்படி உருவத்துடன் இருப்பவர்களை கடவுள் இல்லை என்கிறது.வேதத்தின் பார்வையில் ஏசுவும்,அல்லாவும் க...

சுவாமி விவேகானந்தரின் சிந்தனைத்துளிகள்-பகுதி-30

Image
-சுவாமி விவேகானந்தரின் சிந்தனைத்துளிகள்---பகுதி-30 - முக்திநெறியை முதலில் மக்களுக்கு போதித்தவை வேதங்களே.புத்தரும்,ஏசுவும் வேதத்திலிருந்து எடுத்தே போதித்தார்கள்-8-215 - தென்னிந்திய பூர்வகுடிகளை, ஆரியர்கள் வென்ற கதைதான் ராமாயணமாம்.ராமாயணத்தை படி அயோத்தியைவிட இலங்கை நாகரீகம்பெற்ற நாடு-8-291 - இந்தியாவின் உயர்ஜாதியினரே! நீங்கள் பத்தாயிரம் ஆண்டுகளாக பாதுகாக்கப்பட்ட வெறும் பிணங்கள். நீங்கள் நடைபிணங்கள். .8-334 - மொகலாயர் ஆட்சிகாலத்திலும்,அதற்கு முற்பட்ட சிறிது காலமும் இந்துமதத்தை அழியாமல் காப்பாற்றி வைத்தது தென்நாடுதான்-8-338 - வேதங்களில் சிந்து நதி,“சிந்து”,“இந்து” என்று இரண்டுவிதமாக குறிப்பிடப்படுகிறது. பாரசீகர்கள் ஹிந்து என்றார்கள்-8-371 - ஏசு பிறக்காமல் இருந்திருந்தால் மனிதகுலம் காக்கப்பட்டிருக்காது என்று கூறுவது அபச்சாரம்-.2-457 - ஏசுநாதர் பூரணநிலையை அடைந்தவர் அல்ல.தனது சொந்த லட்சியத்தையே அவரால் முழுமையாக வாழமுடியவில்லை-2-456 - பெரிய இன்பம் கிடைக்குமானால் அதற்காக சிறிய இன்பத்தை துறப்பார்கள். இறையின்பம் தேவையானால் புலனின்பத்தை துறக்க வேண்டும் - கடவுள் சொர்க்கத்தில்...

சுவாமி விவேகானந்தரின் சிந்தனைத் துளிகள்-பாகம்-29

Image
சுவாமி விவேகானந்தரின் சிந்தனைத் துளிகள்-பாகம்-29 - - புத்தகம் 11 லிருந்து - இந்தியாவில் பணக்காரர்களிடம் நான் எதையும் எதிர்பார்க்கவில்லை. நம் நம்பிக்கைக்கு உறைவிடமான இளைஞர்களிடையே பொறுமையாக,உறுதியாக அமைதியாக வேலை செய்வதே சிறந்தது - ஆணவம்,அரசாணை இவற்றின் துணையுடன்.விடல்விட்டு எண்ணக்கூடிய சிலரிடம்(உயர்சாதியினரிடம்) எல்லா கல்வியும்,புத்திநுட்பமும் உடைமையாக்கப்பட்டதுதான் இந்தியாவின் வீழ்ச்சிக்கு முக்கிய காரணம் - நாம் மீண்டும் எழுர்ச்சி பெற வேண்டுமானால் சாதாரண மக்களிடையே (ஆன்மீக) கல்வியை பரப்ப வேண்டும் - எழுநூறு ஆண்டு முகமதிய ஆட்சியில் ஆறுகோடி முஸ்லீம்கள்,ஒரு நூற்றாண்டு கிறிஸ்தவ ஆட்சியல் இருபது லட்சம் கிறிஸ்தவர்கள்.இதற்கு காரணம் என்ன?சாதாரணமக்களுக்கு ஆன்மீக கல்வி மறுக்கப்பட்டதுதான் காரணம் - ஆன்மீகக் கல்வியால் தன்னம்பிக்கை வருகிறது. தன்னம்பிக்கையால் உள்ளிருக்கும் ஆன்மா விழித்தெழுகிறது. - எழுந்திரு.விழித்துக்கொள்,குறிக்கோளை அடையும்வரையில் நில்லாதே - நம் மாணவர்கள் பெறும் கல்வி எதிர்மறை கல்வியாக இருக்கிறது.அவர்களிடம் சிரத்தை இல்லை.சிரத்தை இல்லாதவன் சந்தேகப்பட்டுக்கொண்டே இருப்பான் - முதலில் ஆ...

சுவாமி விவேகானந்தரின் சிந்தனைத் துளிகள்-பாகம்-28

Image
சுவாமி விவேகானந்தரின் சிந்தனைத் துளிகள்-பாகம்-28 - புத்தகம் 11 லிருந்து - இந்திய பெண்மணி ஒருவர் இந்தியஉடையில் நின்று இந்திய ரிஷிகளின் மதத்தைப் பிரச்சாரம் செய்தால் பேரலை ஒன்று எழுந்து,மேற்கு உலகம் முழுவதையும் மூழ்கடிக்கும்.இது எனது தீர்க்க தரிசனம்-விவேகானந்தர் - இங்கிலாந்து,ஐரோப்பா,அமெரிக்கா ஆகியவற்றை வெல்வது ஒன்றே இப்போது நமது உயர்ந்த மந்திரமாக அமைய வேண்டும்.இதில்தான் நமது நாட்டின் நன்மை அடங்கியுள்ளது - விரிவே வாழ்வின் அடையாளம்.நாம் நமது ஆன்மீக லட்சியங்களுடன் உலகமெங்கும் பரவவேண்டும் - எனது வேலையை செய்வதற்கான என்னைப் போன்ற ஒருவன் பிறப்பான் - இப்போபதுள்ள சூழ்நிலையில்(அதாவது 120 வருடங்களுக்கு முன்பு) மனிதன் செயல்திறன் பெற வேண்டுமானால் மாமிசம் உண்பதைத்தவிர வேறு வழியில்லை. - தாவர உணவை உண்டு மனைவி மற்றும் மகள்களின் மானத்தை காக்க சக்தியற்றிருப்பது பாவமா அல்லது கொள்ளையர்களிடமிருந்து இவர்களை காக்க மாமிசம் உண்பது பாவமா?எது பாவம்? - உடலுளைப்பால் வாழாத உயர் வகுப்பினர் மாமிசம் உண்ணவேண்டாம்.ஆனால் அல்லும் பகலும் உழைப்பதன் மூலம் மட்டுமே உணவைபெறும் ஒருவன் தாவர உணவை உண்ணும்படி கட்டாயப்படுத்தக்கூடாது...

சுவாமி விவேகானந்தரின் சிந்தனைத் துளிகள்-பாகம்-27

Image
சுவாமி விவேகானந்தரின் சிந்தனைத் துளிகள்-பாகம்-27 - புத்தகம் 11 லிருந்து - சென்னை மக்கள் (தமிழர்கள்) கல்கத்தா மக்களைவிட (வங்காளிகளைவிட) மிகஆழ்ந்தபோக்கும் நேர்மையும் உடையவர்கள். - பொறாமைபிடித்த கருணையற்றவர்களே இந்தநாட்டில்(இந்தியாவில்) நிறைந்துள்ளார்கள்.எனது பணியை சின்னாப்பின்ப்படுத்த என்னவேண்டுமானாலும் செய்வார்கள் - வீரர்களுக்கே முக்தி எளிதாகக் கிடைக்கிறது.பேடிகளுக்கு அல்ல.மகாமோகமாகிய எதிரிகள் உங்கள் முன் உள்ளார்கள் - பெருஞ்செயல்களுக்குத் தடைகள் பல என்பது உண்மைதான்,என்றாலும் இறுதிவரை விடாமல் முயலுங்கள். - முன்னேறிச்செல்லுங்கள்.வீரர்களே! கட்டுண்டவர்களின் தளைகளை வெட்டி எறியவும்,எளியவர்களின் துயரச்சுமையை குறைக்கவும்,இருண்ட உள்ளங்களில் ஒளிபெறச்செய்யவும் முன்னேறிச் செல்லுங்கள் - இந்த வாழ்க்கைப்போராட்டத்தில்,புதிய கருத்தை கூறுபவனை ஆதரிக்கின்ற ஆண்களையே காண்பது அரிது.பெண்களைப்பற்றிய பேச்சிற்கே இடமில்லை - சாதிக்கப்படவேண்டியவை ஏராளம் உள்ளன.நம்மிடம் வேதாந்த நெறி உள்ளது.அதை செயல்படுத்தும் ஆற்றல் இல்லை.நமது நூல் சமரசம் பற்றி பேசுகிறது.நடைமுறையில் நாம் அதை பின்பற்றுவதில்லை - சுயநலமற்ற,ஆசையற்ற,உயர...

சுவாமி விவேகானந்தரின் சிந்தனைத் துளிகள்-பாகம்-26

Image
சுவாமி விவேகானந்தரின் சிந்தனைத் துளிகள்-பாகம்-26 - - இந்த உலகம் எல்லா உயிர்களுக்கும் இன்பமானது. எல்லா உயிர்களும் இந்த உலகிற்கு இனிமை மயமானவை.இவை ஒன்றுக்கொன்று உதவியாக இருக்கின்றன - எல்லா இனிமையும் பிரபஞ்சத்தின் உட்பொருளாக இருப்பதான,ஒளிமிக்க,அழிவில்லாத ஆன்மாதான்.அவரை தவிர எந்த இனிமை இருக்க முடியும்?இந்த ஒரே இனிமைதான் பலவிதமாக வெளிப்படுகிறது - இந்த மனித உடலிலோ,புலன்களிலோ எங்கே இனிமை அல்லது அன்பு தோன்றினாலும்,அது அவரேஃஉடலின்பங்கள் அவரே,மன இன்பங்கள் அவரே.ஆன்மீக இன்பங்கள் அவரே.அவரின்றி வேறொன்று எப்படி இருக்க முடியும்? - மிகத் தாழ்ந்த உடலின்பம்கூட அவரே,மிகஉயர்ந்த ஆன்மீக இன்பமும் அவரே.அவரின்றி எந்த இனிமையும் இல்லை - எப்போது எல்லாவற்றையும் சமநோக்குடன் பார்க்கிறீர்களோ,அதாவது குடிகாரனின் குடிஇன்பத்திலும் ஆன்மாவின் இனிமையை என்று காண்கிறீர்களோ அன்றுதான் உண்மையை உணர்ந்தவர் ஆவீர்கள் - தன்னொளி உடையவரும் அழிவற்றவருமான அவரே உலகின் ஆனந்தம்.நம்மிலும் அந்த ஆனந்தமாக அவரே இருக்கிறார்.அவரே பிரம்மம் - பூமியை தியானியுங்கள் கூடவே பூமியில் இருப்பது எதுவோ அதுவே நம்முள்ளும் இருக்கிறது , இரண்டும் ஒன்றுதான் என்ப...

சுவாமி விவேகானந்தரின் சிந்தனைத் துளிகள்-பாகம்-25

Image
சுவாமி விவேகானந்தரின் சிந்தனைத் துளிகள்-பாகம்-25 - - இறைவனின் மூச்சாக அறிவு வெளிவந்துள்ளது. எல்லாம் அவரிடமிருந்தே தோன்றியுள்ளன.எல்லா அறிவையும் மூச்சாக அவர் வெளியிட்டார் - உப்புத்துண்டை கடலில் போட்டால் திரும்ப நாம் பெற முடியாதபடி கரைந்துவிடுகிறது.அப்படியே இறைவனும் பிரபஞ்சப் பொருள் எல்லாவற்றுள்ளும் பிரிக்க முடியாதபடி கலந்துள்ளார் - இந்த பிரபஞ்சம் முழுவதும் இறைவனிடமிருந்தே தோன்றி அவரிடமே ஒடுங்குகின்றன.இதற்கு அப்பால் அறிவோ, மரணமோ இல்லை.பொறிகள் சிதறுவதைப்போல நாம் அவரிடமிருந்து தோன்றியுள்ளோம் - எல்லாமே ஆன்மாவாகிவிட்டால் யார் யாரைப் பார்ப்பது? யார் பேச்சை யார் கேட்பது? யாரை யார் வரவேற்பது? யாரை யார் அறிவது? - அவனுள்ளும் அவன் மூலமாகவும்தானே நாம் எல்லாவற்றையும் அறிகிறோம்.அவனை அறியும் கருவி எது? ஒன்றும் இல்லை.ஏனெனில் அவனே அந்த கருவி - எல்லா இன்பங்களும்-மிகத் தாழ்ந்தநிலை இன்பமானாலும் சரி-அது ஆன்மாவின் பிம்பம்தான்.நல்லவை அனைத்தும் அவரது பிரதிபிம்பமே.இந்தப் பிரதிபிம்பம் நிழலானால் அதைத் தீமை என்கிறோம் - மிகநல்லது என்று நமக்கு ஒருசமயத்தில் பட்ட பொருள்,இப்போது அவ்வளவு நல்லதாகப்படவில்லை. எனவே நல்லது...

சுவாமி விவேகானந்தரின் சிந்தனைத் துளிகள்-பாகம்-24

Image
சுவாமி விவேகானந்தரின் சிந்தனைத் துளிகள்-பாகம்-24 - வயதானபின் ஒவ்வொருவரும் உலகைத் துறந்துவிட வேண்டும் என்று இந்திய சாஸ்திரங்கள் வற்புறுத்துகின்றன - இந்த உலகம் முழுவதையும்நிரம்பும் அளவுக்கு எனக்கு செல்வம் இருந்தாலும்,அதனால் மரணமிலாப் பெருநிலை கிடைக்குமா? - மனைவி கணவனிடம் அன்பு செலுத்துவது கணவனுக்காக அல்ல,ஆன்மாவிற்காகவே.அவன் தன் ஆன்மாவிடம் அன்பு செலுத்துகிறாள்.அதேபோல் தான் கணவனும் ஆன்மாவிற்காகவே மனைவியை நேசிக்கிறான் - இந்த ஆன்மாவைப்பற்றி நன்றாகக் கேட்ட பிறகு,ஆன்மாவைக் கண்டபிறகு,அனுபூதியில் உணர்ந்த பிறகு.எல்லாம் தெளிவாக விளங்கிவிடுகிறது - அன்பு செலுத்த வேண்டுமானால்,அது ஆன்மாவிலும் ஆன்மாவின் மூலமாகவும்தான் முடியும்.எங்கும் நிறைந்த இந்த ஆன்மாவை உணர்ந்தாக வேண்டும் - ஆன்மாவின் உண்மை தன்மையை அறியாமல் அதனிடம் அன்பு செலுத்துவது தன்னலம்.ஆன்ம என்பதன் உண்மையை அறிந்து அன்பு செலுத்தினால் அது அன்பு.அது சுதந்திரமானது - ஆன்மாவில் அ்ல்லாமல் வெளியே தெய்வம் இருப்பதாக நினைப்பவனை தெய்வம் விலக்கிவிடுகிறது - இந்த உலகம்,இந்தத் தெய்வங்கள் என்று இருப்பவை எல்லாமே ஆன்மாவின் உள்ளேயே இருக்கின்றன - ஒவ்வொரு முறையும்...

சுவாமி விவேகானந்தரின் சிந்தனைத் துளிகள்-பாகம்-23

Image
சுவாமி விவேகானந்தரின் சிந்தனைத் துளிகள்-பாகம்-23 - - பக்தன் நாமரூபங்கள் மற்றும் அது போன்றவற்றால் இறைவனை தியானிக்கிறான்.இதுதான் இயற்கை வழி.ஆனால் மெதுவான வழி. - யோகி தன் உடலில் உள்ள சில மையங்களை தியானித்து,தன் மன ஆற்றவை வளர்க்கிறான்.ஞானியோ உடலும் இல்லை.மனமும் இல்லை என்கிறான். - ஞானியின் தியானம் மிகவும் கடினம்.இது எதிர்மறை தியானம்.அவன் எல்லாவற்றையும் மறுக்கிறான் எஞ்சி நிற்பது ஆன்மாவே.இது மிகவும் நுட்பமான ஆராய்ச்சிப்பாதை - உண்மையான ஞானியாவது மிகவும் கடினம்.இந்த வழி மிக நீளமானது.வாளின் கூரிய முளையின்மீது நடப்பதுபோல் கடினமானது.என்றாலும் மனம் தளராதீர்கள். - எழுந்திருங்கள்.விழித்துக்கொள்ளுங்கள்.லட்சியம் கைகூடும் வரையில் நிற்காதீர்கள் என்கின்றன வேதங்கள் - ஞானியின் தியானம் என்ன? உடல் மனம் போன்ற ஒவ்வொன்றிற்கும் அப்பால் போக அவன் விரும்புகிறான்.தான் உடல் என்ன எணண்த்தை விரட்ட பாடுபடுகிறான். - நான் என்ன செய்ய வேண்டும்? என் மனத்திற்கு அடிகொடுத்து நான் உடல் அற்ற என்பதை தெளிவுபடுத்த வேண்டும். எனக்கு மரணம் எவ்வளவு பயங்கரமான முறையில் வந்தாலும் அதனால் எனக்கு என்ன நான் உடல் அல்ல - ஒருவன் நிறைநிலையை அடைந...

சுவாமி விவேகானந்தரின் சிந்தனைத் துளிகள்-பாகம்-22

Image
சுவாமி விவேகானந்தரின் சிந்தனைத் துளிகள்-பாகம்-22 - நான் பிரம்மம் என்றே எப்போதும்நினையுங்கள்.மற்ற எண்ணமெல்லாம் பலவீனத்தை தரும் என்று கருதி விலக்கிவிடுங்கள்.நீங்கள் ஒரு ஆண்,பெண் என்ற எண்ணத்தை ஒழித்துக்கட்டுங்கள் - நானே பேசுபவன்.நானே அதை கேட்பவன்.நானே ஆசிரியன்,நானே மாணவன்.நானே ஆக்குபவன்,நானே ஆக்கப்படும் பொருள்.இந்த நிலை வரும்போது பயம் நம்மை விட்டு அகலுகிறது - நானே பிரம்மம்.இந்த உண்மையை மீண்டும் மீண்டும் சிந்தியுங்கள்.இந்த உண்மையை கேட்டுக்கேட்டு உங்கள் உள்ளம் நிறையட்டும்.ஒவ்வொரு துளி ரத்தத்திலும் இந்த உண்மை நிறையட்டும் - நானே அவன்.நானே அவன் என்று எப்போதும் சொல்லுங்கள்.மரணத்தின் வாயில் இருக்கும்போதும்கூட நானே அவன் என்று சொல்லுங்கள் - மரணத்தின் வாயிலில் இருக்கம்போதும்.பேராபத்தை எதிர்கொள்ளும்போதும்,கடுமையான போர் முனையிலும்,அடர்ந்த காட்டின் நடுவிலும் நானே அவன் நானே அவன் என்று முழங்குங்கள் - பலவீனர்களால் ஒருபோதும் ஆன்மாவை அடையமுடியாது.இறைவா நான் இழிந்த பாவி என்று சொல்லவே சொல்லாதீர்கள்.உங்களுக்கு யார் உதவுவார்கள்.நீங்களே அல்லவா பிரபஞ்சத்திற்கே உதவுபவர்கள் - உங்களுக்கு உதவக்கூடிய மனிதனோ,தேவனோ...

சுவாமி விவேகானந்தரின் சிந்தனைத் துளிகள்-பாகம்-21

Image
சுவாமி விவேகானந்தரின் சிந்தனைத் துளிகள்-பாகம்-21 - நீங்கள் எங்கும் நிறைந்தவர்கள்.வானம் நகர்வதில்லை.ஆனால் மேகங்கள் மேற்பரப்பில் நகர்கின்றன.வானம்தான் நகர்கிறது என்று நாம் ஒருவேளை நினைக்கலாம் - நாம் கனவு காணும்போது அந்த நிகழ்சிசிகள் நன்றாக தொடர்புடையவை போல்தான் தோன்றுகின்றன.அந்த செயல்கள் நடைபெற முடியாது என்று கனவு காணும்போது நமக்கு தோன்றுவதில்லை.விழித்தபிறகே புரிகிறது - உலகம் என்ற இந்த கனவிலிருந்து விழிப்படைந்து அதை உண்மையுடன் ஒப்பிடும்போது,அது தொடர்பற்றதாக முன்னுக்குபின் முரணாக இருப்பது நமக்கு தெரியும் - உங்களிலிருந்து வேறான இறைவன் இல்லை.உங்களைவிட உயர்ந்த.உங்களைவிட உண்மையான இறைவனும் இல்லை.உங்கள்முன் தேவதைகள் சாதாரணமானவர்களே - இறைவன் மனிதனை தன் பிரதிபிம்பமாக படைத்தார் என்பது சரியல்ல. மனிதனே இறைவனைத் தன் பிரதிபிம்பமாக படைத்தான் என்பதுதான் சரி - பிரபஞ்சம் எங்குமே தெய்வங்களை நம் பிரதிபிம்பமாக நாமே உருவாக்கியிருக்கிறோம்.நாமே ஒரு தெய்வத்தை உருவாக்கி பிறகு அதன் காலில் விழுந்து வணங்குகிறோம். - இந்த பிரபங்சத்தின் அழியாத ஜீவன்நாம்.என்றாலும் நம்மை ஆண்களாக,பெண்களாக கற்பனை செய்துகொண்டு, ஒருவனது க...

சுவாமி விவேகானந்தரின் சிந்தனைத் துளிகள்-பாகம்-20

Image
சுவாமி விவேகானந்தரின் சிந்தனைத் துளிகள்-பாகம்-20 - பக்தன் எல்லைற்ற அன்புருவான இறைவனிடம் அன்புசெலுத்தி மற்ற சிற்றின்பங்களைத் துறக்கிறான். - எது மனிதனுக்கு அதிகஇன்பம் தருகிறதோ அதுவே அவனுக்கு மிகவும் பலன் தருவதாகும்.ஆன்மீக இன்பமே மிக உயர்ந்த இன்பம் - அனைத்து விஞ்ஞானத் துறையின் நோக்கம் என்ன? சமுதாயத்திற்கு அதிக இன்பம் தேடித்தருவது.அதிக இன்பம் கிடைப்பதை எடுத்துக்கொண்டு,குறைந்த இன்பம் உள்ளதை மனிதன் விட்டுவிடுகிறான் - மிருகங்களுக்கும்,மிருக நிலையில் உள்ள மனிதர்களுக்கும் இன்பம் உடலளவில்தான் உள்ளது.சற்று உயர்ந்த நிலையில் உள்ளவர்கள் எண்ணங்களில் இன்பம் காண்கிறார்கள்.ஞானி மிக உயர்ந்த இன்பத்தை சுவைக்கிறான் - எந்திரங்கள் போல் உழைத்து தேய்பவர்கள் யாரும் உண்மையில் எந்த இன்பத்தையும் அனுபவிப்பதில்லை.இவர்களின் உழைப்பால் இன்பத்தை அனுபவிப்பவன் அறிஞனே - முட்டாள்கள் எந்த இன்பத்தையும் அனுபவிப்பதில்லை.தன்னை அறியாமலே அவன் பிறரது இன்பத்திற்காக உழைக்கிறான். - பிரபஞ்சம் முழுவதும் நிறைந்திருக்கும் அந்த பொருளே, புலன்களின் மூலம் பார்க்கப்படும்போது உலகமாக காட்சியளிக்கிறது - மனிதனுக்குள் ஆன்மா உள்ளது என்று எண்ணிவிட...

சுவாமி விவேகானந்தரின் சிந்தனைத் துளிகள்-பாகம்-19

Image
சுவாமி விவேகானந்தரின் சிந்தனைத் துளிகள்-பாகம்-19 - பிரபஞ்சத்தை பொறுத்தவரை அதை ஆட்சி செய்வது சட்டதிட்டங்களே.மாயைக்கு அப்பால் சட்டதிட்டங்கள் எதவும் இல்லை - காலம்,இடம்,காரணகாரியம் என்ற நியதிகளுக்குள் நீ கட்டுப்பட்டிருக்கும்வரை நான் சுதந்திரன் என்று சொல்லிக்கொள்வது பொருளற்ற பேச்சு.இந்த மாயைக்கு உட்பட்டவை எல்லாம் சட்டதிட்டத்திற்கு கட்டுப்பட்டவை - உனது ஒவ்வோர் எண்ணத்திற்கும், உணர்ச்சி எழுச்சிக்கும் காரணம் உண்டு.சுதந்திர சங்கல்பம் என்றுசொல்வது பொருளற்றது.மாயைக்குள் சுதந்திரம் என்பது இல்லவே இல்லை - நீ கனவில் இருக்கும்போது அரக்கன் உன்னை துரத்துவதாக வைத்துக்கொள்வோம்.அப்போது அது கனவு என்று உனக்கு தெரியாது.அது உண்மை என்றே பயந்து ஓடுகிறாய் - உருவமுள்ள இறைவன்,விலங்கு,மக்கள் என்ற எண்ணம் எல்லாம் மாயைக்கு உட்பட்டவை. எனவே இவை வெறும் கற்பனைகள்,பொய்த்தோற்றங்கள்.வெறும் கனவுகள் - இந்த பிரபஞ்சம் உண்மை,உருவமுள்ள இறைவன் என்பது கற்பனை என்று சிறர் கூறுகிறார்கள்.ஒன்று உண்மையானால் இன்னொன்றும் உண்மைதான்.ஒன்று கற்பனையானால் இன்னொன்றும் கற்பனைதான். - இந்த உலகமும் கற்பனை, மறுஉலகமும் கற்பனை என்று என்று சொல்பவனே உண்ம...

சுவாமி விவேகானந்தரின் சிந்தனைத் துளிகள்-பாகம்-18

Image
சுவாமி விவேகானந்தரின் சிந்தனைத் துளிகள்-பாகம்-18 - புத்தகம்-3 லிருந்து எடுக்கப்பட்டது - இந்த பிரபஞ்சத்தில் உள்ள உடல்கள் எல்லாம் என்னுடையதே.ஆயிரம் உடல்களில் நான் துன்பத்தில் உழன்றாலும்,ஆயிரமாயிரம் உடல்களில் நான் இன்பத்தில் திளைக்கிறேன். - யார் யாரை குற்றம் சொல்வது? யார் யாரை புகழ்வது?யாரை விலக்குவது?யாரை தேடுவது? நான் யாரையும் விலக்குவதும் இல்லை. நான் யாரையும் தேடுவதும் இல்லை. நானே அல்லவா முழுப் பிரபஞ்சமும் - பிரபஞ்சமே இடிந்து விழட்டும்.அது இருந்தால் அல்லவா இடிந்துவிழ என்று புன்சிரிப்புடன் ஞானி கூறுவான்.பிரபஞ்சம் என்ற ஒன்று இருந்தால்தானே அது இடிந்துவிழ.அவையெல்லாம் வெறும் தோற்றம் - மனிதன் ஆராய்ந்து பார்த்தால் இருப்பது ஒன்றேதான் மற்றவை எல்லாம் வெறும் தோற்றங்களே என்ற முடிவுக்குத்தான் வரமுடியும் - இந்த மனமயக்கம் எப்படி வந்தது?பதிலும் கேள்வியைப்போலவே நுட்பமானதே.விடையற்ற கேள்விக்கு விடையை எதிர்பார்க்க கூடாது என்பதே அதற்கான விடை - காரண காரிய நியதிகளுக்கு அப்பாற்பட்ட கடவுள் எப்படி காரண காரியநியதிகளுக்கு கட்டுப்பபட்டார் என்று கேட்பதே தவறானது.அப்பாற்பட்டவர் ,கட்டுப்பட்டால் பிறகு எப்படி அப்...

சுவாமி விவேகானந்தரின் சிந்தனைத் துளிகள்-பாகம்-17

Image
சுவாமி விவேகானந்தரின் சிந்தனைத் துளிகள்-பாகம்-17 - நான் ஆண்,நான் பெண்,எனக்கு சிந்தனை உண்டு,மனம் உண்டு என்பவையெல்லாம் வெறும் மனமயக்கங்கள்.நீ சிந்திப்பதே இல்லை. உனக்கு உடல் என்ற ஒன்று இல்லவே இல்லை - சூரியர்கள்,சந்திரர்கள்,நட்சத்திரங்கள்,பூமிகள் எல்லாவற்றிற்கும் கடவுள் நீயே.சூரியன் ஒளி வீசுவது உன்னால் நட்சத்திரங்கள் மின்னுவது உன்னால் - எல்லோருக்குள்ளும் நீயே இருக்கிறாய்.எல்லாம் நீயே.யாரை ஒதுக்குவதுஃயாரை ஏற்றுக்கொள்வது? எல்லாற்றிலுமுள்ள எல்லாமும் நீயேதான் - பிரபஞ்ச தோற்றம் என்ற மாயை ஒருநாள் மறைந்துவிடும்.பிரபஞ்சம் முழுவதுமே மறைந்துவிடும்,கரைந்துவிடும்.இதுவே அனுபூதி - தத்துவம் என்பது வெறும் கேலிப்பேச்சோ வெட்டிப்பேச்சோ அல்ல,அது அனுபூதியில் அறியப்பட வேண்டிய ஒன்று - எந்த பற்றும் இல்லாமல் இந்த உலகில் வாழக்கூடியவனே ஜீவன்முக்தன்.அவன் தண்ணீரில் உள்ள தாமரை இலைபோன்றவன். நீரிலேயே இருந்தாலும் அது நீரில் நனைவதில்லை - ஜீவன்முக்தர்கள் தானும் பரம்பொருளும் ஒன்றே என்பதை அனுபூதியில் உணர்ந்துவிட்டார்கள்.அவர்கள் மனிதர்களைவிட உயிர்கள் அனைத்தையும்விட உயர்ந்தவர்கள் - இறைவனுக்கும் உனக்கும் சிறிது வேற்றுமை உண்ட...

சுவாமி விவேகானந்தரின் சிந்தனைத் துளிகள்-பாகம்-16

Image
சுவாமி விவேகானந்தரின் சிந்தனைத் துளிகள்-பாகம்-16 - ஆன்மா உருவம் இல்லாதது.உருவம் இல்லாத ஒன்றை இங்கோ,அங்கோ,எங்கோ ஓர் இடத்தில் இருப்பதாக சொல்லமுடியாது.அது எங்கும் நிறைந்ததாகவே இருக்கும் - பிரபஞ்சத்திற்கு அப்பால் நின்று பிரபஞ்சத்தை இயக்கும் மூலஅறிவு சக்தியையே வேதாந்திகள் இறைவன் என்கிறார்கள். - பிரபஞ்சம் இறைவனிலிருந்து வேறானது அல்ல.அவரே பிரபஞ்சமாக ஆகியிருக்கிறார் - இறைவன் பிரபஞ்சம் ஏற்பட காரணம் மட்டுமல்ல,பிரபஞ்சப் பொருளும் அவரே,இருப்பதெல்லாம் அவரே - ஒரு நெருப்புப்பிழம்பிலிருந்து கோடிக்கணக்கான தீப்பொறிகள் சிதறி செல்வதுபோல் அந்தப் பரம்பொருளிலிருந்து இந்த ஆன்மாக்கள் எல்லாம் வந்துள்ளன - ஒரு சூரியன் பலகோடி நீர்த்துளிகளில் பட்டு பலகோடி சூரியன்களாக தெரிகிறது.இவை தோற்றம்தான்.அதேபோல் பல்வேறு உயிர்களாக தெரியும் இறைவன் வெறும் தோற்றம் மட்டுமே - பிரபஞ்சத்திலுள்ள எல்லையற்ற ஒரே ஒருவர் இறைவன் மட்டுமே.அவரே நான் நீ என்றெல்லாம் தோன்றுகிறார்.இந்த வேறுபாடுகள் எல்லாம் வெறும் மனமயக்கம் - காலம்,இடம்,காரண காரியம் என்ற வலையின் வழியாக பார்ப்பதால் இறைவன் பிரபஞ்சமாக தெரிகிறார் - நீங்கள் உங்கள் முகத்தை கண்ணாடி என்ற...

முக்தி பெறுவதற்கான வழிகள்

முக்தி பெறுவதற்கான வழிகள் - பிரம்மச்சாரிகளுக்கான வழி - 1.உலகத்தைவிட்டு விலகி சாதுக்களுடன் சில ஆண்டுகள் வாழவேண்டும் 2.இறைவனிடம் பக்தியும்,ஞானமும் பெற்ற பின் மடங்களைவிட்டு விலகி தனிமையில் பிச்சையேற்று வாழவேண்டும் 3.மனித தொடர்புகளைவிட்டு விலகி உணவை குறைத்துக்கொண்டு,குகைகளில் அல்லது அதைப்போன்ற இடங்களில் வாழவேண்டும். 4.பிரம்மஞானம்பெற்ற பிறகு 99 சதவீதம் பேர் மீண்டும் இந்த உலக வாழ்க்கைக்கு திரும்புவதில்லை.முக்தியடைந்துவிடுவார்கள். 1 சதவீதம் பேர் மீண்டும் இந்த உலகத்திற்கு வருகிறார்கள்.அவர்கள் குரு-என்ற தகுதியை பெறுகிறார்கள் - இல்லறத்தார்களுக்கான வழி - 1.அவ்வப்போது இல்லறத்தைவிட்டு விலகி குருவை சந்திக்க வேண்டும் அல்லது உண்மையான சாதுக்களுடன் வாழவேண்டும் 2.இறைவனிடம் பக்தியும் ஞானமும் அதிகமாகும்போது கடமைகள் குறைந்துகொண்டே வந்து கடைசியில் குடும்ப கடமைகளிலிருந்து ஓய்வு ஏற்படும் 3.வீட்டின் ஒரு அறையிலோ அல்லது வீட்டிலிருந்து சற்று தூரத்திலோ தனிமையில் வாழவேண்டும். 4.பிரம்மஞானம் பெற்ற பிறகு 99 சதவீதம் பேர் உடலைவிட்டு விட்டு முக்தியடைந்துவிடுவார்கள்.1 சதவீதம் பேர் மீண்டும் இந்த உலகத்திற்கு வருகிறார்கள்.அவ...

புரோகிதன் பிராம்மணன் அல்ல

புரோகிதன் பிராம்மணன் அல்ல ----- நான்கு ஜாதிகள் என்பது மனிதனின் வளர்சியில் நிகழும் நான்கு படிகளை பற்றி குறிப்பிடுகிறது. முதலில் வேலைக்காரனாக(சூத்திரன்) ஒரு மனிதன் தன் பயணத்தை தொடங்குகிறான்.பின்பு சுயதொழில் மூலம் (வைசியன்) முன்னேறுகிறான்.நன்றாக பணம் சம்பாதித்த பிறகு மக்களுக்கு உதவுவதற்காக அரசியலில் ஈடுபடுகிறான்(சத்திரியன்). மக்களை சிறப்பாக வழிநடத்தியபிறகு அனைத்தையும் விட்டுவிட்டு பிரம்மத்தை குறித்து தியானம் செய்கிறான்(பிராம்மணன்). இந்த நான்கு ஜாதிகளை பற்றிதான் வேதங்களில் குறிப் பிடப்பட்டுள்ளது. - இவைகள் ஒவ்வொன்றையும் கடந்து மனிதன் கடைசியில் பிராம்மணனாக வேண்டும். இல்லாவிட்டால் மறுபடி பிறக்க வேண்டும்.இதனால்தான் வேதங்கள் பிராம்மணன் உயர்ந்தவன் என்று கூறுகிறது.பிறப்பான் வருபவன் பிராமணன் அல்ல அவன் புரோகிதன்.அது மற்ற தொழில்களைபோல ஒரு தொழில்.புரோகிதன் ஒருவேளை சூத்திரனாக இருக்கலாம் அல்லது வைசியனாக இருக்கலாம்.பிராம்மணனாக இருக்க முடியாது.பிறப்பால் வரும் ஜாதி வேதத்திற்கு எதிரானது என்பதை வேதங்களே கூறுகின்றன.ஆகவே வேதத்தை பின்பற்றி வாழ்க்கையை அமைத்துக்கொள்வோம் - சுவாமி வித்யானந்தர் (16.4.2018)

இந்துமதம் வளர்ந்த வரலாறு

Image
இந்துமதம் வளர்ந்த வரலாறு - புத்தமதம்,சமணமதம் வளர்வதற்கு முன்பு இந்தியாவில் வேதமதம் வழக்கத்தில் இருந்தது.அந்த காலத்தில் உலகம் முழுவதும் தேவர்,தேவி வழிபாடுகள் நிறைந்திருந்தன.அவைகளை மகிழ்விப்பதற்காக மிருகபலிகளும்,பல நாடுகளில் மனித பலிகளும் கொடுக்கப்பட்டன.உபநிடங்கள் இவைகளைவிட மேலான ஞானமார்க்கத்தை(சாங்கியம்) போதித்தாலும்,அது மக்களிடையே பிரபலமாகவில்லை.காடுகளில் வாழ்ந்துவந்த ரிஷிகள்தான் அவைகளை பின்பற்றினார்கள்.பகவத்கீதையில் ஸ்ரீகிருஷ்ணர் கூறும் யோக மார்க்கத்தில் தேவர்,தேவி வழிபாடுகளும் சொர்க்கமும் அதை கடந்து முக்தி பற்றிய கருத்தும் உள்ளது.ஆனால் முக்தி பற்றிய கருத்து இல்லறத்தார்களிடம் பிரபலமாகவில்லை.அவர்களிடம் யாகங்கள்செய்து உயிர்பலி கொடுத்து தேவர்களை மகிழ்வித்து, சொர்க்கம் செல்ல வேண்டும் என்ற எணண்மே அதிகம் இருந்தது - 2500 ஆண்டுகளுக்கு முன் தோன்றிய புத்தரின் கடின முயற்சியால் வேதங்களின் கர்மகாண்டம்(தேவர் வழிபாடு) பெரும் சரிவை சந்தித்தது.உலகம் முழுவதும் இப்படிப்பட்ட தேவர் வழிபாடுகளை வீழ்த்தி புத்தமதம் பரவியது. கிரேக்க தேவதேவியர்,ரோமர்களின் தேவ தேவியர்கள்,பாபிலோனியர்கள் வழ...

நாஸ்டர்டாமஸ் கணிப்புபடி

Image
1.அந்த மனிதர் தென்னிந்தியாவை சேர்ந்தவராக இருப்பார்.அதிலும் மூன்று கடலும் சங்கமிக்கும் இடத்தை சேர்ந்தவராக இருப்பார் - 2.தென்னிந்தியாவிலிருந்து தோன்றப்போகும் மகான் வியாழன் அதாவது குரு வழிபாடு உடையவராக இருப்பார் என்று கூறப்பட்டுள்ளது. - 3.அவர் ஒரு துறவியாக இருப்பார் என்றும் சொல்லப்பட்டுள்ளது.மேலும் தலையில் தலைப்பாகை அணிந்திருப்பாராம். சுவாமிவிவேகானந்தர் தலைப்பாகை அணிந்தவர் .. 4.அவர் இந்தியாவை உலக அரங்கில் முன்னிலையில் கொண்டு வருவார் - 5.அவர் கிறிஸ்தவத்திற்கு எதிராக இருப்பார்- இஸ்லாம் மதத்திற்கு எதிராக செயல்படுவார் - -