அன்னை சாரதாதேவியின் வாழ்க்கை வரலாறு-பாகம்-110
இது நாள் வரை அன்னை பொதுவாக பிரசன்னரின் வீட்டில் தான் வாழ்ந்து வந்தார். அன்னையை நாடி வருகின்ற பக்தர்களின் எண்ணிக்கை இந்தக் காலகட்டத்தில் மிகவும் அதிகரித்தது. எனவே அன்னைக்காக ஒரு வீடு கட்ட பக்தர்கள் முடிவு செய்தனர். அன்னையின் குடும்ப வீட்டிற்கு அருகிலேயே ஒரு நிலமும் அதைச் சேர்ந்த ஓரிரு வயல்களும் ஒரு குளமும் வாங்கப்பட்டன. நாலைந்து அறைகள் கொண்ட சிறிய வீடு ஒன்று கட்டப்பட்டது. 1916,மே 15-ஆம் நாள் அன்னை அதில் குடிபுகுந்தார். எஞ்சிய தமது வாழ்நாளில் ஜெயராம்பாடியில் இருந்தபோது அன்னை இந்த வீட்டிலேயே தங்கினார்.அன்னை புதிய வீட்டில் குடியேறிய போது சுவாமி சாரதானந்தர் கல்கத்தாவில் இல்லை.பிருந்தாவனத்திற்குப் போயிருந்தார். அங்கிருந்து திரும்பிவந்ததும் ஜெயராம்பாடி சென்றார்.அப்போது வீட்டையும் நிலம்மற்றும் வயல்களையும் பேலூர் மடத்தின் பெயருக்கு எழுத வைத்தார் அன்னை.
1919-இல் ராது கருவுற்றாள். அந்த நாட்களில் அவளது கர்வமும் பிடிவாதமும் எல்லை கடந்தன. உடல்நலமும் ஆபத்தான நிலையை அடைந்தது. இந்தக்காலம் அன்னையின் வாழ்வில் கவலையும் பரபரப்பும் நிறைந்த காலமாகும். முன்பைவிட ராது உடல்நிலையிலும் மனப்போக்கிலும் மோசமாகி விட்டாள். அவளுடைய தீராத நோய்களுக்கான மருத்துவத்திற்கும் செலவுகளுக்கான பணத்திற்கும் அன்னை எல்லை மீறி அலைந்தார். இதனால் அன்னையின் உடல்நலனும் கெட்டது.
கல்கத்தாவின் பரபரப்பிலிருந்து விலகியிருந்தால் ராதுவின் நிலையில் மாறுதல் ஏற்படலாம் என்று கருதிய அன்னை 1919 ஜனவரியில் ஜெயராம்பாடி புறப்பட்டார். அப்போது சீடர் ஒருவரிடம் மகனே, கொந்தளிக்கின்ற சமுத்திரம் ஒன்றையே என்னுடன் கட்டியிழுத்துக்கொண்டு செல்கிறேன். உதவிக்கு என் பிள்ளைகளாகிய உங்களைத்தான் நம்பியிருக்கிறேன் என்றார்.விஷ்ணுபூர்வரை எல்லோரும் ரயிலில் சென்றனர். அங்கே கைரேகை நிபுணன் ஒருவன் ராதுவின் கைகளைப் பார்த்துவிட்டு அவளது பிரசவம் சுலபமானதாக இருக்காது என்று கூறிவிட்டான். அன்னையின் கவலை வளர்ந்தது. அங்கிருந்து அனைவரும் ஆறு வண்டிகளில் ஜெயராம்பாடி புறப்பட்டனர். வழியில் ஓய்வெடுப்பதற்காக கோயால்பாரபவில் சில நாட்கள்தங்கினர். ஆசிரமத்தைச்சுற்றிலும் இருந்த அடர்ந்த வனமும் அங்கு நிலவிய அமைதியும் ராதுவை வெகுவாகக் கவர்ந்தன. எனவே மேலும் சில நாட்கள் அங்கே தங்க விரும்பினாள் அவள். அன்னையின் தம்பி காளி உட்பட பலரும் ராது அங்கிருப்பதையே நல்லதென்று கூறினர். எனவே அன்னை கோயால்பாராவில் ஜீலை மாதக் கடைசி விரை தங்கியிருந்தார்.
இந்த நாட்களில் ராதுவின் நிலைமை அன்னையை மிகுந்த கவலைக்குள்ளாக்கியது.ஏற்கனவே அவள் உடல்நிலை பலவீனமானது.பிள்ளைப்பேற்றின் கடுமை அவள் உடல் நிலையை மேலும் மோசமாக்கியது. கடுமையான நரம்புத்தளர்ச்சியால் அவள் தாக்கப்பட்டாள். உடம்பு இளைத்து துரும்பாகியது. உடலை போலவே மனமும் பலவீனம் அடைந்தது. எதற்கும் எரிச்சல் அடைபவளாகவும்,எதைச் சொன்னாலும் கேட்காத அலட்சியம் நிறைந்தவளாகவும் மாறினாள். எந்த ஒரு சிறு சத்தத்தையும்,ஏன் யாராவது உரக்கப் பேசுவதைக்கூட அவளால் தாங்க முடியவில்லை. காக்கை கத்தினாலோ, யாராவது பாத்திரத்தைக் கீழே வைக்கும் போது ஓசை எழுப்பினாலோ அலறத் துவங்கினாள். சிலநேரங்களில் அவளுடைய இந்த அலறல் அதிகமாகி மேல் மூச்சு, கீழ் மூச்சு வாங்கியது. அதனுடன் உடம்பு முழுவதிலும் எப்போதுமே தாங்க முடியாத எரிச்சலாலும் வேதனைப்பட்டாள். இவற்றுடன் ஆசிரமத்தின் பக்கத்தில் கரடி ஒன்று இரவில் அலைவதாகவும், கிராமத்திற்குள் புகுந்து கிராமக் காவல்காரனைக் கடித்துக் குதறிவிட்டது என்றும் ஒரு செய்திஅங்கே பரவியது. ஆசிரமத்தை ஒட்டி அடர்ந்த தோப்பு இருந்ததால், கரடி எந்த நேரத்திலும் ஆசிரமத்தில் புகுந்து விடலாம் என்ற பயம் வேறு. இவற்றால் எல்லாம் ராதுவின் நிலைமை மேலும் மோசமாகியது. இது போதாதென்று பைத்தியக்காரன் ஒருவன் திடீரென்று இரவு நேரங்களில் ஆசிரமத்திற்குள் புகுந்து ஆஊ என்று கத்தி அமர்களம் செய்தான். இதுவும் பெண்களைப் பெரும் அச்சத்தைிற்கு உள்ளாக்கியது. அன்னை ஒரு நாள் அந்தப் பைத்தியத்தை அருகில் அழைத்து, அன்பான வார்த்தைகள் பேசி, உணவும் தின்பண்டமும் தந்து ஆசிரமத்திற்குள் நுழைந்து அமர்களம் செய்யாமல் இருக்குமாறு கூறி அமைதிப்படுத்தினார்.
இந்த நிலைமையைில் ராதுவின் உடல்நலத்திற்காகப் பல்வேறு சிகிச்சைகள் நடந்து கொண்டிருந்தன. எந்த மருந்தும் அவளது உடல்நிலையைச் சீராக்கவில்லை. மாறாக நாளுக்கு நாள் நோய் முற்றிக் கொண்டே வந்தது. பல்வேறு மருந்துகளையும் பார்த்த பிறகு, உடனிருந்தவர்கள், கூறியதன் பேரில் மந்திரவாதம் போன்றவையும் கையாளப்பட்டன.
கோயால்பாராவிலிருந்து பதினேழு மைல் தொலைவில் டிரோல் என்னும் ஊர் இருந்தது. அந்த ஊர் தெய்வமான பைத்தியக்காளி” மிகவும் ஆற்றல் பெற்றவள் என்றும் அவளுக்கு அணிவித்த வளையல்ளைக் கொண்டுவந்து ராதுவின் கைகளில் போட்டால் அவள் உடல்நலம் சரியாகிவிடும் என்றும் நளினி ஆலோசனை தெரிவித்தாள். முன்பு சுரபாலாவிற்கு பைத்தியம் முற்றியபோது அந்த வளையலை த்தான் போட்டனர். அதனால் ச் சிறிது பலனும் இருந்தது. இப்போது ராதுவும் ஏறக்குறைய பைத்திய நிலை யில் இருப்பதால் ,அந்த வளையல்-வைத்தியத்தை நினைவுபடுத்தினாள் நளினி. அன்னையும் உடனே டிரோலுக்கு ஆளனுப்பி,காளி தேவிக்கு முறைப்படி பூஜை நடத்தி, அதில் படைக்கப்பட்ட வளையல் ஒன்றை வாங்கி வருமாறு கூறினார். வளையல் வாங்கச் சென்றவன் இரவில் வீடு திரும்பினான். அவன் இரவில் வந்து சேர்ந்தது ஒரு பிரச்சனையை உருவாக்கியது. ஏனெனில் அந்த வளையலை இரவில் அணிவிக்கக் கூடாது. அதற்காகத் தரையில் வைத்துவிடவும் கூடாது. எனவே இரவு முழுவதும் அதை ஒரு மரத்தில் கட்டித் தொங்க விட்டனர். மறுநாள் எடுத்து ராதுவின் கையில் அணிவித்தனர். ஆனால் பலன் எதுவும் இல்லை. சுரபாலாவுக்கு வந்ததே கோபம். நளினியைத் திட்டித் தீர்த்தாள். இருவருக்கும் நடந்த ஓயாத சண்டை தான் சிகிச்சைக்குக் கிடைத்த பலன்.

No comments:
Post a Comment