பீபீ நாச்சியார்
பீபீ நாச்சியார் - ராமானுஜர் திருநாராயணபுரத்தில் பகவான் மஹாவிஷ்ணுவின் பூஜைகளை முடித்துவிட்டு ஒருநாள் அயர்ந்து உறங்கினார். அப்போது மஹாவிஷ்ணு, அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த ராமானுஜரின் கனவில் தோன்றினார். ராமானுஜா! உன் தொண்டில் நான் மகிழ்ந்தேன். ஆனால், எளிய பக்தர்களும் என்னைக் காண, டில்லி பாதுஷாவிடம் உள்ள என் உற்சவ விக்கிரகமான செல்வப்பிள்ளையைக் கொண்டு வா என்று கூறினார். ராமானுஜர் இரண்டு மாதங்கள் பயணம் செய்து டில்லி அரண்மனையை அடைந்தார். அவரது திருமேனி ஒளியையும் அறிவையும் கண்டு மகிழ்ந்த பாதுஷா, அவர் வந்த காரணத்தை வினவினார். அரசே! நான் செல்வப்பிள்ளையை எடுத்துச் செல்ல வந்துள்ளேன் என்று ராமானுஜர் கூற, - மன்னர், அப்படியே ஆகட்டும்! என்றார். எவ்வளவு தேடியும் செல்வப்பிள்ளையின் விக்கிரகம் கிடைக்கவில்லை. ராமானுஜர் கண்களில் நீர் மல்கக் கைகளைக் கூப்பியபடி வணங்கினார். ராமப்ரியரே! என் செல்வப்பிள்ளையே! எங்கிருக்கிறீர்? வாருங்கள்! என்று மனமுருகி வேண்டினார். அரசகுமாரியின் பெயர் பீபீ லகிமார். அவள் செல்வப் பிள்ளையை தனது மஞ்சத்தில் வைத்து அன்புடன் பூஜித்து வந்தாள். ராமானுஜர் அழைத்தபோது அவள் தனது அறையில்...