அன்னை சாரதாதேவியின் வாழ்க்கை வரலாறு-பாகம்-96
-
இளைஞர்களை இவ்வாறு துறவிகளாக்குவதை அன்னையின் வீட்டினரும் விரும்பவில்லை. தம்பியர்,தம்பி,மனைவியர், மருமகள்கள் என்று எல்லோருமே அன்னையை எதிர்த்தனர். இந்த விஷயத்தில் அன்னை அவர்களைச் சிறிதும் பொருட்படுத்தாமல் தமக்கே உரிய உறுதியுடன் இருந்தார். ஒரு முறை இளைஞர் ஒருவரின் துறவு நாட்டத்தைக் கண்ட அன்னை அவரை ஊக்குவித்தார். அதைக் கண்ட நளினி,அத்தையின் போக்கை ப் பார்.அவனோ பி.ஏ படித்துக் கொண்டிருக்கின்ற இளைஞன். எவ்வளவு செலவு செய்து பெற்றோர்கள் அவனைப் படிக்க வைத்திருப்பார்கள். அவன் பணம் சம்பாதித்து வயதான பெற்றோர்களைப் பாதுகாக்காமல் மடத்தில் சேரப்போகிறானாம்,அத்தையும் அதை ஆமோதிக்கிறாராம் என்றாள். அன்னைக்கு நளினியின் பேச்சு பிடிக்க வில்லை,இதோ பார் உனக்கு அவனைப்பற்றி என்ன தெரியும்? அவன் காகம் அல்ல, குயில்குஞ்சு வளர்ந்ததும் தன் உண்மைத் தாயை உணர்ந்து கொள்கிறது. உடனே வளர்ப்புத் தாயாகிய காகத்தை விட்டுப்பறந்து தாய்க்குயிலுடன் இணைந்து விடுகிறது என்றார். அந்த இளைஞர் பின்னர் துறவியானார்.
திருமணமான இளைஞர் ஒருவருக்கு அன்னை சன்னியாச தீட்சை கொடுத்தார்.இதையறிந்த அந்த இளைஞரின் தாய் மிகுந்த கோபத்துடன் வந்து அன்னையின் செயலை கண்டித்துக்கூறினார். அன்னை அந்தத் தாயின் புகார்கள் அனைத்தையும் அமைதியாக க் கேட்டுவிட்டு,அவன் செய்ததில் எந்தத் தவறுமில்லை. உண்மையைச் சொல்லப்போனால் அவன் சரியான பாதையையே தேர்ந்தெடுத்திருக்கிறான். மேலும் குடும்பத்திற்கான ஏற்பாடுகளைச் செய்து விட்டுத் தானே துறவியாகியுள்ளான்! என்று கூறிவிட்டார்.
மற்றோர் இளைஞனுக்கு அன்னை காவியுடை அளித்த போது அன்னையின் நாத்தனார் ஒருத்தி மீண்டும் அதே கதை இதோ இன்னொருவரையும் சன்னியாசியாக்கி விட்டார். என்றார். அன்னையின் மருமகள்களுள் ஒருத்தி அதைத் தொடர்ந்து அந்த இளைஞனின் பெற்றோர்கள் எவ்வளவு நம்பிக்கைகளுடன் அவனை வளர்த்திருப்பார்கள்! இப்போது எல்லாம் தகர்ந்து விட்டது.திருமணமும் ஒரு கடமையே அல்லவா! அத்தை இப்படி சன்னியாசிகளை உருவாக்கிக் கொண்டிருப்பாரானால் மகாமாயை கட்டாயமாகக் கோபம் தான் கொள்வாள். என்றாள்.இதைக்கேட்ட அன்னை மகளே,இதோ பார்,உலக இன்பங்களில் தீவிர நாட்டமுடைய ஒருவன் நான் சொல்வதால் மட்டும் உலகைத்துறந்து விடுவானா என்ன!ஆனால் யாராவது புண்ணியசாலி,இறைவனே உண்மை. உலகம் மாயையின் விளையாட்டு என்பதை உணர்ந்து கொண்டானானால் அவனுக்கு நான் சிறிது உதவ வேண்டாமா? இவர்கள் எல்லாம் என் தெய்வீக ப் பிள்ளைகள்.மலரைப்போன்ற புனிதத்துடன் உலகில் வாழ்வார்கள்.இதை விடப்பேறு ஒன்றிருக்க முடியுமா? இல்லறத்தார் படும் வேதனைகளைக்காணும் போது என் நாடிநரம்புகள் எல்லாம் தகிக்கின்றன என்றார்.
துறவறம் என்பதை அன்னை இந்தக் கண்ணோட்டத்துடன் பார்த்தார். அன்னை அளிக்கின்ற பிரம்மசரிய மற்றும் சன்னியாச தீட்சையும் இத்தகைய தாய்-சேய் உறவின் அடிப்படையிலேயே இருந்தது. மந்திர தீட்சையைப்போல் இங்கும் சடங்குகளோ சம்பிரதாயங்களோ முக்கிய இடம் பெறவில்லை. துறவின் லட்சியம்,ராமகிருஷ்ண சங்கத்தின் அடிப்படை அதன் நோக்கம், செயல்படுமுறை,துறவியரின் வாழ்க்கை முறை போன்றவற்றை விளக்கி அந்தந்த தீட்சைகளுக்குரிய வெள்ளைஆடை அல்லது காவியுடை அளிப்பார் அன்னை. பின்னர் எம்பெருமானே,இவர்கள் துறவு நெறியைச் சரிவரக் கடைபிடிக்குமாறு காப்பாற்றவேண்டும். மலை,காடு, என்று இவர்கள் எங்கிருந்தாலும் ஒரு பிடி உணவு கிடைக்குமாறு அருளவேண்டும் என்று குருதேவரைப் பிராத்திப்பார். ஹோமம் முதலான சடங்குகளை பேலூர் மடத்தில் சென்று செய்து கொள்ளும்படிக்கூறுவார்.இல்லறத்தாருக்குச் சொந்தம் பந்தம் என்று சொல்லிக்கொள்ள பலருண்டு. உலகைத்துறந்து குருதேவரை மட்டுமே கதியாக க்கொண்டு மடத்தில் சேர்ந்திருக்கின்ற துறவிப்பிள்ளைகளுக்குத் தாமே அன்னை,தந்தை, குரு எல்லாம் எனபதை உணர்ந்திருந்தார். அன்னை. அது மட்டுமல்ல,குருதேவரின் அவதாரப்பணியில்இந்தத்துறவிப் பிள்ளைகளின் பங்கு முக்கியமானது என்பதால் அவர்களுடன் ஒரு விசேஷப்பிணைப்பை அன்னை கொண்டிருந்தார்.ஆ! இறைவனுக்காக உலகைத்துறந்த இவர்களுடன் அல்லாமல் வேறு யாருடன் நான் வாழ்வேன்! என்று அடிக்கடி அவர் கூறுவதுண்டு. ஒரு நாள் தம் உறவினர்களைக்குறிப்பிட்டு சுவாமி அரூபானந்தரிடம் , அவர்களை நான் விசேஷமாகக் கவனிக்க வேண்டியுள்ளது.இல்லாவிடில் நான் அவர்களுக்கு ஏதோ அநீதி இழைத்துவிட்டதாக எண்ணிக்கொள்கிறார்கள். இருப்பதில் மிக நல்லவற்றை அவர்களுக்குக்கொடுக்க வேண்டும், எப்போதும் அவர்களைக் கவனிக்க வேண்டும். இல்லாவிடில் பிணங்கிக் கொள்வார்கள்.ஆனால் நீங்கள் என் பிள்ளைகள்.நான் எது செய்தாலும் உங்களுக்குத் திருப்திதான். உங்களை நான் சதா கவனிக்காவிட்டாலும் நீங்கள் அதைப்பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை.உண்மையில் நீங்கள் எல்லோரும் தான் என்னைச்சேர்ந்தவர்கள்,ராதுவும் பிறரும் அல்ல, உங்களிடம் நான் மிகவும் கவரப்பட்டாலும் அதில் மாயை இல்லை. இந்தக்கவர்ச்சி தான் என்னை மீண்டும் மீண்டும் பூமிக்கு இழுத்து வருகிறது என்றார்.
--
தொடரும்...
-
ஸ்ரீராமகிருஷ்ணரின் ஆன்மீகக் குழுவில் இணைய 9789374109 என்ற எண்ணிற்கு வாட்ஸ்அப் மூலம் ரிக்கொஸ்ட் மெசேஜ் அனுப்பவும்

No comments:
Post a Comment