அன்னை சாரதாதேவியின் வாழ்க்கை வரலாறு-பாகம்-50
தொடர்ந்து ஆன்மீகப் பேருணர்வு நிலைகளில் அன்னை மூழ்கத் தொடங்கினார். சில வேளைகளில் அவர் தியானம் செய்ய அமரும் போது புறவுலக நினைவு முற்றிலும் அவரிடமிருந்து நீங்கிவிடும். முகம் முழுவதும் ஈக்கள் மொய்த்து, கொசுக்கள் கடித்து புண்ணாகிவிடும். அதைக்கூட கவனியாமல் தியானத்தில் ஆழ்ந்திருப்பார். அடிக்கடி தெய்வீக ப் பரவச நிலைகளில் ஆழ்ந்து உலகையே மறந்தவராக யமுனை நதிக்கரையின் மெல்லிய ஆற்று மணலில் அளவில்வாத மகிழ்ச்சியோடும் வேகத்தோடும் நடக்கத் துவங்கி விடுவார். யோகின் மாவும் மற்றவர்களும் ஓடிப்போய் அவரைக் கட்டப்படுத்தி த் தங்களுடன் அழைத்துவர வேண்டியிருக்கும். அவள் தன்னை முற்றிலுமாக மறந்துவிட்டாள். அவளது செயலும் நடத்தையும் எல்லாம் சிவபெருமானையே நினைவு படுத்துவதாக இருந்தன. யாராவது பெயரைக்கேட்டால் கூட சிவன் என்றே சொன்னாள். தலைவனுக்குத் தன்னை முற்றிலுமாக அர்பணம் செய்த தலைவி ஒருத்தியின்நிலையை அப்பர் பெருமான் இவ்வாறு வர்ணிக்கிறார். பக்தியின் இந்த உயர்ந்த நிலையில் பக்தன் பகவானுடன் கலந்து இரண்டற்ற நிலையை அடைந்து விடுகிறான். அவன் மயமாகவே ஆகிவிடுகிறான். பக்தன் வேறு பகவான் வேறு என்ற நிலை அங்கே மறைந்து விடுகிறது. அன்னையும் குருதேவரிலிருந்து வேறுபடாத நிலையில் இருப்பதை இங்கு ஒரு நிகழ்ச்சி மூலம் காண்கிறோம். ஆன்மீகத்தின் மிகவுயர்ந்த இத்தகைய அனுபவங்கள் அவருக்கு எத்தனையோ ஏற்பட்டிருக்கும். ஆனால் அவர் எதையும் கூறியதில்லை. இப்போது நாம் காணப்போகும் நிகழ்ச்சி பின்னாளில் சுவாமி யோகானந்தர் கூறியது.
அன்னையும் பிறரும் பிருந்தாவனத்தில் யமுனைக் கரையிலுள்ள காலாபாபு குடியிருப்பில் ஒரு வீட்டில் தங்கியிருந்தனர். ஒரு நாள் அங்கே அன்னை ஆழ்ந்த சமாதியில் மூழ்கியிருந்தார். வெகுநேரமாகியும் அவருக்குப் புறவுலக நினைவு திரும்பவில்லை. யோகின்மா இறைவனின் திருநாமத்தை ஓதி,அன்னையின் மனத்தை உலகை நோக்கித் திருப்ப முயன்றார். நீண்ட நேரத்திற்குப்பிறகு அன்னைக்குச் சிறிது புறவுணர்வு திரும்பியது. இத்தகைய வேளைகளில் குருதேவர் எனக்கு ச்சாப்பிடஏதாவது வேண்டும்” என்று சொல்வார்.அது போலவே அன்னையும் சொன்னார். உடனே சில இனிப்புப் பண்டங்கள், வெற்றிலை, தண்ணீர் முதலிய வற்றை அவர் முன் வைத்தார்கள்.குருதேவரைப்போன்றே அவர் எல்லாவற்றிலும் சிறிதளவு எடுத்து உட்கொண்டார். பிறகு வெற்றிலை போடும் போது அதன் காம்பை குருதேவர் எப்படிக்கிள்ளி எறிவாரோ,அது போல் கிள்ளி எறிந்தார். அந்த நிலையில் கேட்ட பல கேள்விகளுக்கு குருதேவர் பதில் சொல்வது போலவே பதில் கூறினார். புற நினைவு முழுமையாகத் திரும்பியதும் மேற்கண்ட நிகழ்ச்சிகளையெல்லாம் அவரிடம் கூறியபோது தாம் அப்போது குருதேவரின் உணர்வில் ஒன்றிவிட்டிருந்ததாகக் கூறினார். இந்த உயர் உணர்வு நிலையிலேயே அன்னை தொடர்ந்து இரண்டு நாட்கள் இருந்ததாக யோகானந்தர் தமது நினைவுக் குறிப்புகளில் எழுதியுள்ளார்.
-
-
தொடரும்...

No comments:
Post a Comment