Posts

Showing posts from November, 2018

அன்னை சாரதாதேவியின் அன்புமொழிகள்-பாகம்-29

Image
அன்னை சாரதாதேவியின் அன்புமொழிகள்-பாகம்-29 - தவறு செய்த ஒருவருக்குத் தண்டனை கொடுக்குமாறு அன்னையிடம் கூறியபோது அன்னை , நான் அவனது தாய் . நான் அவனுக்கு எப்படி தண்டனை கொடுக்க முடியும்?   என்று கேட்டார்ஒரு பக்தரிடம்   போக்கை ப்பற்றி   யோகின்மா அன்னையிடம் கூறி   அம்மா   அந்த பக்தரை சற்று கண்டித்து   வையுங்கள் . இல்லாவிட்டால் அவா் இன்னும் மோசமாகப் போவார்” என்றார். அதற்கு அன்னை கூறினார். யோகின் நான் கண்டிப்பேன் என்று தோன்றவில்லை. நான் சொன்னாலும்   அதன் படி அவனால்   வாழ இயலாது. நான் அவனது குரு .   என் பேச்சைத் தட்டி நடக்க நோ்ந்தால் அது அவனுக்குத் தீமை செய்யும். அன்னையின் சீடரானஇளைஞா்   ஒருவரின் நடத்தையில் தவறு நோ்ந்தது.   வயதான பக்தர் ஒருவா் அன்னையிடம்   இதைக்கூறி   இனி அவரை அங்கே வர விடக் கூடாது. என்று கேட்டுக் கொண்டார்.   அதற்கு அன்னை கூறினார்.   என்னிடம் வராவிட்டால் வேறு யாரிடம் போவான்.? நான் என்ன நல்லவா்களுக்கு மட்டும் தானா அன்னை?தீயவா்களுக்கு நான் அன்னை இல்லையா என்ன? பிரபல நடிகைகளான தின்கடியும் தாரா சுந்தரியும...

அன்னை சாரதாதேவியின் அன்புமொழிகள்-பாகம்-28

Image
அன்னை சாரதாதேவியின் அன்புமொழிகள்-பாகம்-28 - மனத்தின் பலவீனங்களைப் பற்றி  அன்னையிடம்  கூறியதற்கு அவா் பதிலளித்தார். மகனே! அமாவாசையும் பெளா்ணமியும் வருவது எப்படி இயற்கையின் நியதியோ  அது போலவே மனத்தின் பலவீனமும்.  சில வேளைகளில் அமைதியாகவும் சில வேளைகளில் தூய்மையற்று சஞ்சலமாகவும் இருப்பது மனத்தின்  இயற்கை நியதி. அம்மா! இந்த உலகில் உருப்படியாக எதையும் சாதிக்க முடியாது.மகனே! இந்த உலகம் ஒரு பெரிய சேற்றுக் குட்டை . அதில் விழுந்தால் கரையேறுவது மிகவும் கடினம். பிரம்மாவும் விஷ்ணுவும் அதில் விழுந்து மூச்சு வாங்குகிறார்கள். பாவம். மனிதனைப் பற்றி என்ன சொல்ல  இருக்கிறது. இறைவனின் திரு நாமத்தை சொல் ,  நாமஜபம் செய்ய ச்செய்ய அவரே உன்னை இந்த உவகியலிலிருந்து விடுவிப்பார். மகனே! அவரே விடுவிக்காவிட்டால்  யாராலாவது முக்தி பெற முடியுமா! அவரிடம் அசைக்க முடியாத  நம்பிக்கை கொள் . எப்படி குழந்தைகளுக்கு தந்தையும் தாயும் புகலிடமாக விளங்குகிறார்களோ , அப்படி குருதேவரை க்கருது. நம்பிக்கை பற்றிய பேச்சு வந்தது. மகனே! புத்தகங்களைப் படிப்பதால் அந்த நம்பிக்கை வரும்என்றா நினை...

அன்னை சாரதாதேவியின் அன்புமொழிகள்-பாகம்-27

Image
அன்னை சாரதாதேவியின் அன்புமொழிகள்-பாகம்-27 - பணம் பணம் என்று அடித்து க் கொள்கின்ற  உறவினா் களிடம் ஒரு முறை அன்னை கூறினார். நீங்கள் ஒன்றோ இரண்டோ பிள்ளைகளை பெற்று கொண்டு  இவ்வளவு சலித்து போய் விட்டீா்கள். அவா்களை மனிதா்களாக வளா்க்க உங்களால் இயலவில்லை. நானோ பெறாமல்  பலரின் தாயாக உள்ளேன். ஆயிரமாயிரம் பிள்ளைகளை மனிதா்களாக்க வேண்டியுள்ளது. சிலா் நல்லவா்கள். சிலா் கெட்டவா்கள். சிலரோ மனத்தில்  சமநிலை கெட்டு போய் என்னிடம்  வந்து  அம்மா என்னை கரையேற்றுங்கள் என்கிறார்கள். இதெல்லாம் உங்களுக்கு எங்கே புரிய ப் போகிறது?  அவா்களுக்கு வேறு கதி இல்லை.  உங்களுக்கு தெரிந்ததெல்லாம் பணம், காசு, சொத்து, வீடு, வாசல் இவை தான்.எப்படி  வந்தீா்களோ அப்படி யே  தான் நீங்கள் போவீா்கள் , மனிதப்பிறவி வாய்ப்பது பெரும் பேறு என்கிறார்கள். அப்படிப்பட்ட மனிதப் பிறவியைப் பெற்று நீங்கள் என்ன தான் சாதித்தீா்கள்.?வங்க மொழியில் எல்லா உச்சரிப்புகளுக்கும்ஒவ்வோர்  எழுத்து தான் உள்ளது. சில வேளைகளில் இரண்டு எழுத்து இருக்கலாம். ஆனால் ஸ” மட்டும் மூன்று  ச,ஷ,ஸ-1 அதாவது பொறும...

அன்னை சாரதாதேவியின் அன்புமொழிகள்-பாகம்-26

Image
அன்னை சாரதாதேவியின் அன்புமொழிகள்-பாகம்-26 - பூக்களை தொடா்ந்து கையில் வைத்திருந்தால்  மணம் கிடைக்கும். சந்தணத்தை கல்லில் உரச,உரச வாசம் வீசும். அது போல் தெய்வீக  விஷயங்களை ச் சிந்திக்க ,சிந்திக்க ஆன்மீக விழிப்புணா்வு  உண்டாகும். ஆசைகள் அற்றவனாகி விட்டால்  அந்தக் கணமே இறையனுபூதி கிடைத்துவிடும்.அன்னை பூஜை அறையில்  அமர்ந்து இருந்தார். பூஜை நிறைவுற்றிருந்தது. துறவி ஒருவா் அன்னையிடம் அம்மா குருதேவரை நீங்கள் எப்படி பார்க்கிறீா்கள்.? என்று கேட்டார். அன்னை சிறிது நேரம் மௌனமாக இருந்தார்.பிறகு கம்பீரமாக  குழந்தையாக காண்கிறேன் என்றார்.அன்னையின் தினசரி பூஜைக்காக நான் தினமும் பூக்கள் . லில்வ இலை , துளசி இலை  போன்றவை பறித்து க் கொண்டு வருவது வழக்கம். ஒரு நாள் துளசி இலை கொண்டு  வர மறந்துவிட்டேன். அன்னை மிகவும் வருத்தமுற்று துளசி கொண்டு வரவில்லையா? துளசி இலை எவ்வளவு புனிதமானது தெரியுமா ? எதில் துளசி இலையை இட்டாலும் அது தூய்மையாகிவிடும். என்றார்.  நான் மிகவும் வருத்தத்துடன் சென்று துளசி இலையை பறித்து வந்தேன். ஒவ்வொருநாளும்  பூஜை முடிந்த பிறகு அன்னை...

அன்னை சாரதாதேவியின் அன்புமொழிகள்-பாகம்-25

Image
அன்னை சாரதாதேவியின் அன்புமொழிகள்-பாகம்-25 - ஒருநாள் உறவினர்   சிலருடன் ஒரு பக்தை அன்னையைக் காண ச் சென்றார்.பிற்பகலில் அன்னையுடன் அமர்ந்து பிரசாதமும்   சாப்பிட்டார். பெண்கள் ஓா் அறையில்   அன்னையுடனும் ஆண்கள் மற்றோர் அறையிலுமாக உண்டனா். சாப்பிட்டு முடித்த பிறகு அந்த பக்தையின்   வீட்டிற்கு ஒரு பாத்திரத்தில் கொஞ்சம்   பிரசாதம்   அனுப்புமாறு ஒருவரிடம் கூறினார்அன்னை.   அவா் வருவதற்குச்   சற்று தாமதானதும்   அன்னையே எழுந்தார். உடனே யோகின்மா , அம்மா நீங்கள் ஏன் எழுகிறீா்கள்? பாத்திரம் ஏதாவது கிடைக்குமா என்று பார்த்து அலம்பி கொண்டு வர வேண்டும் அல்லவா1! அதனால் தான் தாமதமாகிறது என்றார். பிறகு சற்று சிரித்து விட்டு   உங்கள் தந்தை வீட்டிலிருந்து வண்டி வண்டியாகப் பாத்திரங்கள் வந்தன அல்லவா? அதனால் தான் எல்லோருக்கும்   பாத்திரத்தில்   பிரசாதம் அனுப்ப நினைக்கிறீா்கள் போலும்.   என்றார். அன்னையும் சிரித்து விட்டு   வீட்டிலுள்ள பிள்ளைகளும்   பிரசாதம் பெற வேண்டும் அல்லவா! அதனால் தான் என்றார்.உங்களை எங்களுக்குத் தெரியாதா ? ...

அன்னை சாரதாதேவியின் அன்புமொழிகள்-பாகம்-24

Image
அன்னை சாரதாதேவியின் அன்புமொழிகள்-பாகம்-24 - கேகோகேஎந்த நேரம் வேண்டுமானாலும் வெள்ளம் வந்து வீட்டை அடித்து ச் செல்லலாம்.. பாம்பு பாம்பை க் காண நேர்ந்தால்   உடனடியாக எச்சரிக்கை கொள்ள      வேண்டும். அது என்ன செய்யும். எப்போது கொத்தும்   என்பது தெரியாது.   துறவியின் ஒரு சொல்   ஏன் ஓர் எண்ணம் கூட   உங்களுக்கு த் தீங்கு விளைக்கலாம். இது உங்களுக்குப் புரிவதில்லை.அவர் களை க் கண்டால் வணங்க வேண்டும்.வார்த்தைகளால் அவர் களை   அவமதிக்கக் கூடாது.காசியில் ஒரு நாள் அன்னையின் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.அன்று   சுவாமி கேசவானந்தரின் தாய் வந்திருந்தார்.யாரோ உறவினா் ஒருவரின்   மரணத்தை நினைத்து அவர் அழுது கொண்டிருந்தார். அதை கண்ட அன்னை . சீ! இன்று யாராவது அழுவார்களா! இன்று ஆனந்த திருநாள் ஆயிற்றே! என்றார்.ஒருநாள் அன்னையும் - என்று கூறினார்.அன்னையிடம் இருந்து தீட்சை பெற்ற சில நாட்களுள் லால்மோகனின் (சுவாமி கபிலேசுவரானந்தர்) மனத்தில் ஒரு சந்தேகம் எழுந்தது. என்ன செய்து தொலைத்தேன். ஒரு பெண்ணிடம் தீட்சை பெற்று விட்டேனே!.என்ற எண்ணம் அவரை தொடர்ந்...

அன்னை சாரதாதேவியின் அன்புமொழிகள்-பாகம்-23

Image
அன்னை சாரதாதேவியின் அன்புமொழிகள்-பாகம்-23 - இது ஒரு விதமான ஈர்ப்பு தான். ஆனால் இதில்   மாயை இல்லை. இந்த   ஈர்ப்பின் காரணமாகத் தான் மீண்டும் மீண்டும் வந்து போக வேண்டியிருக்கிறது. புரிகிறதா?. ஆம் அம்மா. போ இனி போய் தூங்கு. எழுதி க் கொள்கிறேன். உலகில் வேறு யாரும் உனக்கு சொந்தமானவர்கள்அல்ல என்பது.ஒரு நாள் உனக்கு தெரிய வரும். இந்த ஈர்ப்பு உண்மையில்என்ன என்பதை அப்போது நீ சரியாக புரிந்து கொள்வாய்.குடும்ப சண்டைகள் கூட அன்னையிடம் வருவதுண்டு. அவரும்   பொறுமையாக அவர்களிடம்   பேசி   சமாதானப்படுத்துவார். ஒரு முறை குருதேவரிடம்   சீடர் ஒருவரும் அவரது மனைவியும்   இவ்வாறு வந்தனர். வயதான தம்பதியினர்.இவர்கள் கூறியதையெல்லாம் கேட்ட பிறகு அன்னை   அந்த பக்தரிடம்கூறினார். இந்த வயதில் இதெல்லாம்   நன்றாகவா இருக்கிறது?   மகன் கல்லூரியில் படிக்கிறான் .இன்றோ நாளையோ திருமணம் செய்து கொள்ளும் வயதாகி விட்டது. மருமகள் வந்து இதெல்லாம் பார்த்தால் , அப்போதுதான் திருந்துவீர்கள் போல் இருக்கிறது. இனி இப்படி நடக்கக்கூடாது. நான் சொல்கிறேன் புரிகிறதா?. சரியம்மா, இனி அப்பட...

அன்னை சாரதாதேவியின் அன்புமொழிகள்-பாகம்-22

Image
அன்னை சாரதாதேவியின் அன்புமொழிகள்-பாகம்-22 - இந்த உடம்பின் முலம்   என்னென்ன செய்ய வேண்டும் என்று குருதேவர் திருவுளம் கொண்டிருந்தாரோ   அதெல்லாம் நிறைவுற்று   விட்டதென்று தான் தோன்றுகிறது. இப்போது மனம் எப்போதும் அவரையே நாடுகிறது. வேறெதுவும் பிடிக்கவில்லை.ஏன் இவ்வளவு கவலைப்படுகிறாய் ! உங்களையெல்லாம்   அவரது திருப்பாதங்களில் அல்லவா சமர்ப்பித்திருக்கிறேன். நீ ங்கள் அந்த வட்டத்திற்குள் தான் சுழன்றாக வேண்டும் .வேறெங்கும் போக முடியாது,உங்களை அவர் எப்போதும் காத்துகொண்டிருக்கிறார். தாய்க்கு பணிவிடை செய்வது என்பது   ஒவ்வொருவருடைய கடமை . அதிலும் மனித குலத்திற்கே சேவை செய்வதற்காக இங்கே வந்துள்ள நீங்கள் கட்டாயம் தாயை போற்றியாக வேண்டும். உன் தந்தை பணம் வைத்து விட்டு தான் சென்றுள்ளார்.இல்லாவிட்டால் நீ வேலை தேடி சம்பாதித்து உன் தாயை ப் பராமரிக்குமாறு சொல்லியிருப்பேன்.நேர்மையான வழியில் பணம் சம்பாதிப்மது மிகமிக கடினம். பணம் மனத்தை மாசுபடுத்துகிறது.இயன்ற அளவு விரைவில் பண விவகாரங்களை முடித்து விடுமாறு அதனால் தான் உனக்கு சொல்கிறேன்.சற்று நீண்ட காலம் பண விவகாரங்களை க்கையாண்டா...

அன்னை சாரதாதேவியின் அன்புமொழிகள்-பாகம்-21

Image
அன்னை சாரதாதேவியின் அன்புமொழிகள்-பாகம்-21 - அன்னை சாரதாதேவியின் அன்புமொழிகள்(உபதேசங்கள்) - பாகம் -21 - அன்னை ஒரு துறவியைப்பார்த்து கூறினார் இல்லற வாழ்வின் பிரச்சனைகளிலிருந்து உன்னை விடுவித்து தமது பாத கமலங்ககளில்    குருதேவர் வைத்துள்ளார் . இது என்ன சாதாரண பாக்கியமா ? ஜப தியானம் செய்கிறேன் , அல்லது செய்யாமல் போகிறேன் . குடும்பத்தின் பிக்கல் பிடுங்கலிலிருந்து விடுபட்டுள்ளேனே என்பான் யோகேன் . என்னைப் பாரேன் ! ராதுவின் காரணமாக இந்த மாயையில் என்ன அவதிப்படுகிறேன் . எத்தனையோ பிறவிகளின் வினைப்பயன் பாக்கி இருந்தது . இப்போது அவற்றைஅனுபவிக்க வேண்டியிருக்கிறது . எல்லா அலைகளும் ஓய்ந்து விட்டால் இந்த பிறவியிலேயே முக்தி கிடைத்து விடும் . குருதேவர்கூட வினைப்பயனை அனுபவிக்க வேண்டியிருந்தது அல்லவா ?. - மந்திரத்தை தந்தவர் தான் குரு . அந்த மந்திரத்திலிருந்துதான் படிப்படியாக தியாகம் , வைராக்கியம் , சன்னியாசம் எல்லாம் கிடைக்கிறது . மந்திரம் தந்த குருவையே தியானம் செய் .. அப்பா ! நீ என் வேலையைச் செய்கிறாய் . குருதேவரி...