Posts

Showing posts from August, 2017

முண்டக உபநிடதம் சொற்பொழிவிலிருந்து முக்கிய கருத்துக்கள்

Image
சுவாமி விவேகானந்தரின் முண்டக உபநிடதம் சொற்பொழிவிலிருந்து முக்கிய கருத்துக்கள் ‡ அந்தப்பரம்பொருளைக் காணமுடியாது, உணர முடியாது,குறிப்பிட்டுக்கூற முடியாது. அது நிறமற்றது.கண்கள் அற்றது.காதுகள் அற்றது,உடல் அற்றது,எங்கும் நிறைந்தது. தனியானது,எல்லாவற்றையும் ஊடுருவியுள்ளது. ‡ பரம்பொருளிலிருந்தே இந்த பிரபஞ்சம் வெளிவந்துள்ளது.மகான்கள்  அந்தப் பரம்பொருளைக் காண்கிறார்கள். அவரைக் காண்பதே மேலான ஞானம் ‡ பரம்பொருளில் ஆசை எழுகிறது.அதிலிருந்து படைப்புக் கடவுள் தோன்றினார். அதிலிருந்து உணர்வு,அதிலிருந்து ஜடப்பொருளும் எல்லா உலகங்களும் தோன்றின ‡ முக்தியை விரும்பாமல் சொர்க்கத்தை விரும்பி பல புண்ணியங்களை செய்தவன்  இறக்கும்போது சூரியக் கிரணங்கள் வழியாக பல்வேறு அழகிய உலகங்கள் வழியாக  சொர்க்கத்திற்கு செல்கிறான்.சிலகாலம் அங்கு வாழ்ந்தபின் மீண்டும் பூமியில் பிறக்கிறான் ‡ சொர்க்கத்தில் வசிப்பவர்கள் சிலகாலம் மட்டுமே அங்கு வாழ்கிறார்கள் புண்ணியபலன் தீர்ந்தபின் மீண்டும் மனிதர்களாக பிறக்கிறார்கள்,சிலர் இன்னும் கீழான பிறவியை அடைகிறார்கள் ‡ உலகைத் துறந்து, புலன்களை அடக்கக் கற்றுக் கொண்டவர்கள் காடுகளில் வச...

பேரின்பத்திற்கு வழி சொற்பொழிவின் முக்கிய கருத்துக்கள்

Image
சுவாமி விவேகானந்தரின் பேரின்பத்திற்கு வழி சொற்பொழிவின் முக்கிய கருத்துக்கள் ‡ இரண்டு வழிகள் உள்ளன. ஒன்று இன்பநுகர்ச்சி,மற்றொன்று பேரின்ப அனுபூதி. இவை இரண்டும் மக்களை கவர்கிறது. பேரின்ப வழியை தேர்ந்தெடுப்பவன் ஞானியாகிறான் ‡ ஆசிரியர் தெளிந்த ஞானம் இல்லாதவராக இருந்தால் அவர் நூறுமுறை உபதேசித்தாலும் சீடனால் ஆன்மாவை அறியமுடியாது ‡ யாரைக்காண மனிதன் பலவகைத் துறவுகளை மேற்கொள்கிறானோ,அவரது பெயரை சொல்கிறேன்.அதுதான் ஓம். அழிவில்லாத இந்த ஓம்தான் பிரம்மம் ‡ அந்த ஆன்மா பிறப்பதும் இல்லை, இறப்பதும் இல்லை.உடல் அழிந்தாலும் ஆன்மா அழிவதில்லை ‡ சிறியதில் சிறியதாகவும், பெரியதில் பெரியதாகவும், எல்லா உயிர்களுக்கும் இறைவனாக விளங்கும் அவர், எல்லா உயிர்களின் இதயக்குகையில் உறைகிறார். பாவம் இல்லாதவன் அவரை காண்கிறான் ‡ வேதங்களை ஓதுவதாலோ கூர்ந்த அறிவாலோ ஆன்மாவை அடையமுடியாது. ஆன்மா யாரை தேடுகிறதோ அவனே அதை அடைகிறான் ‡ தொடர்ந்து பாவச்செயல்களை செய்பவன், மனம் அமைதிபெறாதவன்,தியானம் செய்ய முடியாதவன், இவர்களால் ஆன்மாவை அடைய முடியாது ‡ நீ பயப்படாதே விழித்தெழுந்து முயற்சியில் ஈடுபடு. லட்சியத்தை அடையும்வரை நில்லாதே. அழிவே இல...