அன்னை சாரதாதேவியின் வாழ்க்கை வரலாறு-பாகம்-18
அன்னை சாரதாதேவியின் வாழ்க்கை வரலாறு - பாகம் -18 நகபத் அறையச் சுற்றியுள்ள வெளி வாரத்தில் கிழக்குப் பகுதியில் மாடிக்குச் செல்வதற்கான படிக்கட்டுகள் உள்ளன . இந்தப் படிக்கட்டின் கீழ்ப்பகுதிதான் அன்னையின் சமையலறை . மாடியில் குருதேவரின் தாய் வாழ்ந்து வந்தார் . கீழே அன்னை தங்கினார் . அந்த அறை மிகவும் வசதி குறைவானது . அதில் ஒருவர் கால்நீட்டிப் படுப்பதற்குக்கூட முடியாது . அரிசி மற்றும் பருப்பு மூட்டைகள் , காய்கறிக் கூடைகள் எல்லாம் அங்கேதான் . போதாக்குறைக்கு , குருதேவருக்கான உணவு வைத்துள்ள பானைகள் வைக்கப்பட்ட உறிகள் தலைக்கு மேல் தொங்கிக் கொண்டிருக்கும் . அ ன்னையின் தனிமை வாழ்க்கைக்காக வராந்தாவைச் சுற்றி ஆளுயரத்திற்கு மூங்கில் தட்டிகள் வைக்கப்பட்டன . இதனால் சூரிய...