Posts

Showing posts from November, 2020

பாரதம் முழுவதையும் ஒரே அரசன் ஆட்சி செய்தானா

 இந்துமதம் வகுப்பு பாரத தேசம்  .. பாரதம் முழுவதையும் ஒரே அரசன் ஆட்சி செய்தானா? பாரதம் என்ற பெரும் நிலப்பரப்பிற்குள் பல சிறு தேசங்கள் இருந்தன.குறுநில மன்னர்கள் இருந்தார்கள்.மகாபாரத யுத்தத்தில் கலந்துகொண்ட அரசர்களும் அவர்களது தேசங்கள் பற்றியும் பாரதம் கூறுகிறது. .. அப்படியானால் ஒரே நாடு.ஒரே அரசர் இல்லையா? உண்டு.  இந்த பாரத தேசத்தை முழுவதும் ஆளும் தகுதி உள்ளவன் சக்கரவர்த்தி.அஷ்வமேத யாகம் என்ற யாகம் நடத்தக்கூடிய அளவுக்கு யாருக்கு வலிமை உண்டோ அவர்தான் பாரதம் முழுவதற்கான சக்கரவர்த்தி.  யுதிஷ்டிரர் உட்பட பல அரசர்கள் அஷ்வமேத யாகம் புரிந்து சக்கரவர்த்திகளாக ஆகியுள்ளார்கள். - பாரதம் என்ற மிகப்பெரிய நாடு.அதற்குள் பல சிறிய நாடுகள்.  பாரதத்தை ஆள ஒரு சக்கரவர்த்தி. சிறிய தேசங்களை ஆள பல அரசர்கள்,குறுநில மன்னர்கள் இது தான் பண்டைய இந்தியா .. திருதராஷ்டினன் சஞ்சயனிடம் கேட்டான் - எது பரதனின் பெயரால் அழைக்கப்படுகிறதோ, அப்படிப்பட்ட இந்த கண்டத்தை - பாரதக்கண்டத்தைக் குறித்த உண்மையை (ஓ! சஞ்சயா) எனக்குச் சொல்வாயாக   நீ புத்திக்கூர்மையுள்ளவன் என்பதால், இதை எனக்குச் சொல்வாயாக." ச...

இந்து மதத்தைத் தோற்றுவித்தவா்

 இந்துமதம் வகுப்பு 2.இந்து மதத்தைத் தோற்றுவித்தவா். இந்தியாவில் தோன்றிய ஒவ்வொரு தீர்க்கதரிசியும் ஒவ்வொரு மதத்தை உருவாக்கியுள்ளார்கள். ஒவ்வொரு நூற்றாண்டிலும் பல மதங்கள் புதிதாக தோன்றுகின்றன. பெரிய மதங்கள் பல பிரிவுகளாக பிரிவதுண்டு, சைவம்,வைணவம் போன்ற மதங்கள் பல பிரிவுகளாக பிரிந்து வளர்ந்தது அதேபோல காலப்போக்கில் பல மதங்கள் ஒன்றிணைந்து ஒரே மதமாக உருவாதும் உண்டு. ஆதிசங்கர் வாழ்ந்த காலத்தில் வேதத்தை அடிப்படையாகக் கொண்ட 78 மதங்கள் இருந்தன. ஆதி சங்கரர் அவைகளை ஒன்றிணைத்து ஆறு மதங்களுக்குள் கொண்டு வந்தார். பல மதங்கள் காலப்போக்கில் அழிந்துபோனதும் உண்டு .. வேதத்தை சாராத மதங்களும் இந்தியாவில் இருந்தன.அவைகளில் முக்கியமானது புத்தமதம்,சமணமதம் இந்தியாவில் எண்ணற்ற மதங்கள் தோன்றியுள்ளன.இனியும் பல மதங்கள் தோன்றும் என்பதைப் பார்க்கிறோம். .. எண்ணற்ற மதங்கள் புதிதாக தோன்றும்போது அவைகளுக்குள் சண்டைகள் ஏற்படுவதும் இயல்பானதுதான். வெளிநாடுகளில் இப்படி புதிய மதம் தோன்றும்போது,தங்களுக்குள் அடித்துக்கொண்டு இறந்துபோவார்கள். இந்தியாவிலும் ரிக் வேத காலத்திலேயே இந்த பிரச்சினைகள் உருவாக ஆரம்பித்துவிட்டது. அந்த காலத...

இந்துமதம் என பெயர் வரக்காரணம்

இந்துமதம் வகுப்பு 1.இந்துமதம் என பெயர் வரக்காரணம் .. வடமொழியில் ஹிந்து என்பதை தமிழில் இந்து என்று அழைக்கிறோம் தமிழில் இந்து என்றால் நிலா என்று ஒரு அர்த்தம் உள்ளது. பாரசீகர்கள் பாரததேசத்தை சிந்துநதியை மையப்படுத்தி அழைத்தார்கள்.  சிந்துஸ்தான் என்று அழைத்தார்கள் பின்பர் அது மருவி ஹிந்துஸ்தான் என்று ஆனது. பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தான்,உஸ்பெகிஸ்தான்,கஜகிஸ்தான் போன்ற பெயர்களில் வரும் ஸ்தான் என்பது ஸ்தலம்(இடம்) என்ற வடமொழியின் மருவு ஆகும்.ஆங்கிலத்தில் ஸ்டான்ட் என்று மருவியுள்ளது. .. சிந்து நதியின் மறுகரையில் வாழ்ந்த மக்களை அழைப்பதற்காக பயன்படுத்தப்பட்ட வார்த்தை ஹிந்துஸ்தான். இந்த வார்த்தை பிற்காலத்தில் பாரதம் முழுவதும் வாழ்ந்த மக்களை குறிக்கும் வார்த்தையாக மாறிவிட்டது. . வெளிநாட்டு மக்களைப்பொறுத்தவரை பாரதத்தில் வாழ்ந்த மக்கள் ஹிந்துக்கள். ஹிந்துக்கள் பின்பற்றிய மதம் ஹிந்துமதம்.  . பாரசீகர்கள்,அரேபியர்கள்,யூதர்களுக்கு ஒரு மதம்தான் இருந்தது. பிறமதங்கள் வளர்ச்சியடையாமல் நசுக்கப்பட்டுவிட்டன. ஆனால் பாரததேசத்தில் பல மதங்கள் பலரால் பின்பற்றப்பட்டு வந்தது.  அவைகள் பற்றி பாரசீகர்களுக்கு தெரிய...

ராமர் சம்பூகனை வதம் செய்தது சரியா?

 ❓கேள்வி-ராமாயணத்தில் ராமர் சம்பூகனை வதம் செய்தது சரியா?  சம்பூகன் எந்த தவறும் செய்யவில்லை.  சூத்திரன் தவம் செய்தான் என்பதற்காக ராமர் அவனைக்கொன்றது சரியா? .. ✍️பதில்-சூத்திரன் தவம் புரிந்தான் என்பதற்காக ராமர் அவனைக் கொல்லவில்லை.   சபரி என்ற சூத்திரபெண்  காட்டில் கடுமையான தவமியற்றி பலகாலம் வாழ்ந்தாள்.ராமர் அவளைச் சென்று பணிந்தார்.அவள்  கடித்து எச்சில்பட்ட பழங்களை ராமர் உண்டார். இங்கே ராமர் ஜாதியும் பார்க்கவில்லை,சூத்திரன் தவம் செய்யக்கூடாது என்றும் கூறவில்லை. . வால்மீகி வழிப்பறிக் கொள்ளை செய்து வந்தவர். அவரும் சூத்திர குலத்தை சேர்ந்தவர்தான். அவரை தவம் செய்யும்படி நாரதர் கூறினார். வால்மீகி பல காலம் தவம்புரிந்தார். பின்பு ராமருக்கு வேண்டிவரில் ஒருவரானார் இங்கே சூத்திரன் தவம் புரியக்கூடாது என்று யாரும் சொல்லவில்லை. வால்மீகி சூத்திரகுலத்தில் பிறந்ததால் யாரும் அவரை விலக்கிவைக்கவும் இல்லை. . குகன் சூத்திரகுலத்தை சேர்ந்தவன்.ராமர் அவனை தனது சகோதரனாக ஏற்றுக்கொண்டார். சூத்திரன் என்பதற்காக அவனை ஒதுக்கிவைக்கவில்லை. .. தற்செயலாகவோ அல்லது இயற்கை சீற்றம் காரணமாகவோகூட ...