அன்னை சாரதாதேவியின் வாழ்க்கை வரலாறு-பாகம்-85
அன்னையின் பெருமையை உணர்ந்து போற்றியவர்களுள் நாக மகாசயரும் முக்கியமான ஒருவர். இவர் குருதேவரின் சீடர் . இவர் பிறந்ததால் கிழக்கு வங்காளமே புனிதம் பெற்றுவிட்டது என்று சுவாமி விவேகானந்தர் குறிப்பிட்டார்.பக்தி என்றால் அப்படியொரு அசாதாரண அவரிடம் ஒரு பக்திப் புயலே வீசும். அன்னை நீலாம்பர் முகர்ஜியின் வீட்டில் தங்கியிருந்தபோது அவரைக் காண வருவார். அப்போதெல்லாம் புறவுலகை மறந்து தம்மையும் மறந்த நிலையிலேயே வருவார். அந்த நாட்களில் ஆண் பக்தர்கள் அன்னையின் முன் அனுமதிக்கப் படுவதில்லை. அவர்கள் கீழே படிக்கட்டில் தலைவைத்து வணங்குவர். ”இன்னார் வணங்குகிறார் என்று அப்போது அன்னையிடம் தெரிவிப்பர். அன்னை தாம் சொல்லவேண்டியவற்றை அவ்வாறே அந்த பக்தருக்குத் தெரிவிப்பார். நாகமகாசயர் வந்தால் மட்டும் அன்னை அவரைத் தமது அருகே அழைத்து கையைப்பிடித்து அமர வைத்துத் தாமே பிரசாதத்தை ஊட்டுவார். ஏனெனில் கையில் கொடுத்தால் பக்திப் பெருக்கினால் அதைத் தலையில் தேய்த்துக்கொள்வார். இல்லாவிடில் அன்னையின் புனிதக் கரங்கள் பட்டது என்பதற்காக பிரசாதம் வைத்த இலையையும் சேர்த்து உண்ணத் தொடங்கி விடுவார். வந்தது முதல் போகும் வரை தம்மை மறந்த பரவச நிலையில், அம்மா, அம்மா என்று மட்டுமே சொல்லிக் கொண்டிருப்பார். அன்னை அவரது முதுகைத் தடவியோ, காதில் குருதேவரின் திருப்பெயரை ஓதியோ அவருக்குச் சிறிதேனும் புறவுணர்வு வருமாறு செய்வார். ஒரு நாள் அவர் போகும் போது தந்தையைவிட அன்னையே கருணைமிக்கவர் என்று மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டே போனார். அன்னை தமது படுக்கையறைச் சவரில் சுவாமி விவேகானந்தர்,கிரீஷ், நாக மகாசயர் ஆகியோரின் படங்களை அவர்களின் காலங்களுக்குப் பிறகு மாட்டி வைத்திருந்தார். அவற்றைத் துணியால் துடைத்து சந்தனமிட்டு பாசத்துடன் தடவிக் கொடுப்பார். ஒரு நாள் நாக மகாசயரின் படத்தின் முன் மட்டும் நீண்ட நேரம் நின்று எத்தனையோ பக்தர்கள் வருகின்றனர்.ஆனால் இவரைப்போல் யாரும் இல்லை என்றார்.
இப்படி இனிமையும் இதயமும் இணைந்த பக்தர்கள் ஒரு புறமிருக்க, சிலரோ பக்தர்கள் என்ற பெயரில் அன்னைக்கு வேதனை தந்தார்கள். ஓரிரு நிகழ்ச்சிகளைக்காண்போம். ஒரு நாள் அன்னை உத்போதனில் பூஜை முடிந்து.தாழ்வாரத்தில் வந்து அமர்ந்தார். ஒரு பக்தர் கொஞ்சம் மலர்களைக் கையில் ஏந்தியபடி உள்ளே நுழைந்தார். புதியவர் ஒருவரைக் கண்டதும் அன்னை எழுந்து தம் முகத்திரையைச் சரி செய்தபடி அருகே இருந்த கட்டிலில், வாதத்தால் வேதனை தருகின்ற கால்களைத் தொங்கவிட்டபடி அமர்ந்தார். வந்த பக்தர் முதலில் மலர்களை அன்னையின் திருவடிகளில் இட்டு வணங்கினார். பிறகு அவர் காலடிகளில் அமர்ந்து கண்களை மூடி தியானத்தில் அமர்ந்தபடி பிராணாயாமம் செய்யத்துவங்கினார். வீட்டில் இருந்தோர் உள்ளே பல்வேறு வேலையாக இருந்தார்கள். அன்னையின் அருகில் யாருமே இல்லை. அந்த பக்தர் நெடுநேரம் மூச்சை இழுப்பதும் விடுவதுமாக ஏதோ பயிற்சியைச் செய்து கொண்டே இருந்தார். அன்னையோ ஒன்றும் செய்ய முடியாதவராக முகத்தை நன்றாக மூடிக்கொண்டுகட்டிலில் ஆடாமல் அசையாமல் உட்கார்ந்திருந்தார். வாதம் பிடித்த கால்கள் தொங்க விட்டாலே வலிக்கும்.நெரம் செல்லச்செல்ல விண்விண்ணென்று வலிக்கத் தொடங்கின. பக்தர் எழுந்திருப்பதாகத் தெரியவில்லை. தொடர்ந்து பிராணாயாமம் செய்த கொண்டேயிருந்தார். அன்னையின் உடம்பெல்லாம் வலிக்கத் தொடங்கியது.வேதனையைப் பொறுத்தபடியே உட்கார்ந்திருந்தார். அப்போது உள்ளேயிருந்து அந்தப்பக்கம் வந்த கோலாப்மா.அங்கே நடப்பவற்றைக் கண்டதும் கோபத்துடன் அந்த மனிதரை எழுப்பி உனக்கு புத்தி ஏதாவது இருக்கிறதா? அன்னை என்ன மரச்சிலையா? அல்லது கற்சிலைக்கு நீ உன் பிராணாயாமத்தின் மூலம் உயிர்கொடுக்கப்போகிறாயா? நோயுற்ற நிலையில் இவ்வளவு நேரம் உட்கார்ந்து கொண்டு அன்னை வேதனைப்படுவது உனக்குத் தெரியவில்லையா? என்று பக்தரை எழுந்திருக்கச் செய்தார்.
மற்றொரு நாள் பக்தன் ஒருவன் அன்னையின் திருவடிகளில் வீழ்ந்து வணங்கும்போது. தன் தலையை அவரது கால் பெருவிரலில் மிகுந்த வேகத்தோடு மோதினான். வேதனை தாங்க முடியாமல் அன்னை ஓவென்று அலறிவிட்டார். அருகில் இருந்தவர்கள்,ஏன் அப்படிச் செய்தாய்? என்று கேட்டு,அவனைக் கண்டித்த போது அவன்,நான் வேண்டுமென்றே தான் அப்படிச் செய்தேன். அந்த வலியின் காரணமாக அன்னை என்னை எப்போதும் நினைவில் வைத்துக்கொண்டிருப்பார் இல்லையா? என்றான்.
இதே போல் அன்னை தன்னை எப்போதும் நினைத்துக்கொண்டிருக்க வேண்டும் என்பதற்காக இன்னொரு பக்தன் வணங்கும் போது அன்னையின் கால் கட்டைவிரலையே நறுக்கென்று கடித்துவிட்டான். மற்றொரு விசித்திரமான பக்தன் வணங்கும்போது அவருடைய கால்களைத்திடீரென்று பிடித்து இழுத்துத் தன் திருவடிகள் பட்டதால் தான் புண்ணியம் அடைந்ததாகக் கூறினான்.
இத்தகைய பக்தர்களின் முட்டாள்தனமான செயல்களை எல்லாம் பொறுத்துக்கொண்டு,அனைவருக்கும் அருள் செய்தார் என்றால் அன்னையிடம் எவ்வளவு அளவற்ற பொறுமையும் கருணையும் இருந்திருக்க வேண்டும்! இத்தகைய பக்தர்களிடமிருந்து அன்னை பெற்றது எதுவும் இல்லை. கூட்டம்கூட்டமாக மக்கள் தம்மை இப்படி வணங்குவதால் தாம் ஒரு பெரிய மதிப்பிற்குரியவளாகி விட்டோம் என்ற எண்ணமும் துளியளவும் அவரிடம் இல்லை. எண்ணற்ற பக்தர்கள் செய்யும் பூஜையும் வணக்கங்களும் புகழுரைகளும் அவர் மனத்தில் எந்தவித சலனத்தையும் உண்டாக்கவில்லை.தகுதி, தகுதியின்மை இவைகளை எல்லாம் பார்க்கமல் எல்லோரிடமும் அன்பு செலுத்துகின்ற பிரபஞ்சம் தழுவிய தாய்மை ஒன்றே அன்னையின் இத்தகைய குருநிலையின் பின்னணியாக இருந்தது.
இது நாம் எண்ணுவதுபோல் அவ்வளவு எளிய காரியமல்ல. கருணை அல்ல, மகாகருணை நிறைந்த ஒருவரால் மட்டுமே இப்படி ஓர் உண்மையான குருவாக இருக்க முடியும்.
-
தொடரும்...
-
ஸ்ரீராமகிருஷ்ணரின் ஆன்மீகக் குழுவில் இணைய 9789374109 என்ற எண்ணிற்கு வாட்ஸ்அப் மூலம் ரிக்கொஸ்ட் மெசேஜ் அனுப்பவும்

No comments:
Post a Comment