அன்னை சாரதாதேவியின் வாழ்க்கை வரலாறு-பாகம்-87
-
இளைஞர் ஒருவர் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த காலத்தில் அன்னையிடம் தீட்சை பெற்றார். தேசிய விடுதலை இயக்கங்களில் தீவிரமாக ஈடுபட்டிருந்தவர்அவர். துறவியாக வேண்டும் என்ற நினைப்பே அப்போது அவருக்கு இல்லை. தீட்சை முடிந்ததும் அவர் பழங்கள்,இனிப்பு, துணி முதலியவற்றை குருதட்சிணையாக அன்னையிடம் சமர்பித்தார். ஆனால் அன்னை அதை ஏற்றுக் கொள்ளாமல் துறவிகளிடம் நான் காணிக்கை பெறுவதில்லை என்று கூறினார். அந்த இளைஞருக்குக் குழப்பமாகி விட்டது. தான் துறவியல்ல, ஒரு சாதாரணமான கல்லூரி மாணவன் என்றுஅன்னையிடம் கூறினார்.ஆனால் அன்னை முன்பு கூறியதையே மறுபடியும் கூறி, காணிக்கையை ஏற்க மறுத்தார். மூன்று முறை அந்த இளைஞர் அன்னையை வேண்டினார். அன்னை மூன்று முறையும் முதலில் கூறியதையே கூறி காணிக்கையை மறுத்துவிட்டார். சில ஆண்டுகள் கழிந்தன. அந்த இளைஞரின் வாழ்வில் எதிர்பாராத பல மாற்றங்கள் நேர்ந்தன. அவர் ராமகிருஷ்ணமடத்தில் சேர்ந்து துறவி ஆனார். அன்னையின் வரலாற்று ஆசிரியர்களுள் ஒருவரான சுவாமி நிகிலானந்தரே அவர், துறவு வாழ்க்கைக்குத் தகுதியானவர்களாகத் தாம் காண்பவர்களைத் துறவின் பெருமையைக்கூறி ஊக்கப்படுத்துவார். யார் எதிர்த்தாலும் கவலைப்படாமல் அவர்களுக்கு சன்னியாசம் அளிப்பார்.
அது போலவே துறவு வாழ்வை விரும்புகின்ற பலரைத்தடுத்தும் இருக்கிறார். அவர்களிடம் ஏனப்பா, திருமணம் வேண்டாம் என்கிறாய்! உலகிலுள்ள எல்லாம் ஜோடி ஜோடியாகத்தானே உள்ளன.கண்கள் இரண்டு,காதுகள், இரண்டுகால்கள் இரண்டு அது போலவே கணவன் மனைவியும் பயம் எதற்கு? குருதேவருக்கு எத்தனையோ இல்லற பக்தர்கள் இருந்தனர். பயமின்றித் திருமணம் செய்து கொள், என்று கூறுவார். துறவு வாழ்க்கைக்குத் தகுதியில்லாதவர்கள் என்று தாம் கருதுபவர்கள் எவ்வளவு தான் வற்புறுத்தினாலும் அவர்களுக்கு சன்னியாசம் கொடுக்கவோ துறவு வாழ்வில் ஊக்கப்படுத்தவோ மாட்டார்.
அடுத்தக்கட்டமாக சீடரின் இஷ்ட தெய்வத்தையும் மந்திரத்தையும் தேர்ந் தெடுப்பார். அவர் சைவரா,வைணவரா,சாக்தரா,அவருக்கு எந்த தெய்வத்தின் மீது பக்தி அதிகம் என்பதையெல்லாம் கேட்பார். சிலருக்கு இத்தகைய கேள்விகளுக்கெல்லாம் பதில் தெரியாது. அவர்கள் அன்னையிடம் பொறுப்பை விட்டு அன்னையே தங்களுக்குரிய இஷ்ட தெய்வத்தையும் மந்திரத்தையும் தேர்ந்தெடுத்து த்தரும் படி வேண்டுவார்கள். இனி, அவர்கள் கூறும் பதில்களை மட்டுமே வைத்து, அவர்களுக்கு அன்னை தீட்சை அளித்து விடுவதும் இல்லை. அவர்களிடம் சில விவரங்களைக் கேட்டபிறகு தியானத்தில் ஆழ்வார். அவர் கூறியதும் தமது உள்ளுணர்வும் ஒன்றாக உள்ளதா என்று பார்ப்பார்.பின்னரே அவருக்குரிய மந்திரத்தை அளிப்பார்.சில வேளைகளில் அது அந்தச் சீடர் பின்பற்றி வந்ததற்கு மாறாக பாதையாகவும் இருக்கும். ஓர் எடுத்துக்காட்டைக் காண்போம்.
காளிகிருஷ்ணர் என்ற இளைஞர் அன்னையிடம் தீட்சை பெற வந்தார்.அவர் ஏற்கனவே ஒரு குறிப்பிட்ட மந்திரத்தை ஜபம் செய்து அதன் மூலம் அமைதியும்ஆனந்தமும் பெற்று வந்தார். ஆனால் தீட்சையின் போது அன்னை வேறொரு மந்திரத்தை அளித்தார். ,இது அவருக்கு அதிர்ச்சியை அளித்தது. அன்னையிடம் அது பற்றிக் குறிப்பிட்டார். அதற்கு அன்னை அதைவிட இதுவே சிறந்தது. இதையே பின்பற்று என்று கூறினார். அன்னையின் இந்தச் சொற்கள் அவரிடம் ஒரு பெரிய அற்புதத்தை உண்டாக்கின. புதிய மந்திரத்தைப் புத்துணர்வுடன் பின்பற்றத் தொ்ங்கினார். சில நாட்களில் அவரது ஆன்மீக வாழ்வில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டது.தாம் இதற்கு முன் செய்து வந்த சாதனை முறையிலிருந்து இப்போதுள்ள முறை மாறுபட்டதல்ல என்பது அவருக்குப் புரிந்தது. புது ஆற்றலும் ஆனந்தமும் அவரிடம் பெருகின.உண்மையான குருவின் மதிப்பு எப்படிப்படடது என்பது அவருக்குத் தெளிவாகியது.
-
தொடரும்...
-
ஸ்ரீராமகிருஷ்ணரின் ஆன்மீகக் குழுவில் இணைய 9789374109 என்ற எண்ணிற்கு வாட்ஸ்அப் மூலம் ரிக்கொஸ்ட் மெசேஜ் அனுப்பவும்

No comments:
Post a Comment