Sunday, 16 June 2019

அன்னை சாரதாதேவியின் வாழ்க்கை வரலாறு-பாகம்-59

அன்னை சாரதாதேவியின் வாழ்க்கை வரலாறு-பாகம்-59

கடிதம் கையில் கிடைத்தபோது அன்னை பெரும் குழப்பத்திற்கு ஆளானார். கல்கத்தாவிற்குப் போவதா வேண்டாமா என்று அவரால் முடிவு செய்ய இயலவில்லை. நானோ முப்பத்து நான்கே வயதான விதவை. உறவினர் அல்லாத அன்னியர் மத்தியில் போய்த் தங்குவது என்றால், எந்த முடிவுக்கும் வர முடியாத அன்னை, கிராமத்தினர் இது பற்றி என்ன நினைக்கிறார்கள் என்று அறிந்து கொள்ள நினைத்தார்.
அன்னை கல்கத்தா செல்வதை அவர்களுள் பலரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அப்போதுப்பிரசன்னா மாமி அன்னையின் துணைக்கு வந்தார். அவர் ஊராரிடம் கதாயியின் மனைவியைப்பற்றி  இந்த நாட்டுப்புற ஜனங்களுக்கு என்“னதெரியும்? கதாயியின் சீடர்கள் அவளுடைய பிள்ளைகள். பிள்ளைகளின் வேண்டுகோளை ஏற்றுஅவள் கல்கத்தா போவதில் என்ன தவறு? என்றார். பிரசன்னா மாமியின் ஆறுதலான வார்த்தைகளால் தைரியம் அடைந்த அன்னை, தம் தாய் என்ன நினைக்கிறார் என்பதை அறிந்து கொள்ள ஜெயராம்பாடி சென்றார்.சியாமாசுந்தரிக்கு அன்னை கல்கத்தா செல்வது முதலில் பொருத்தமாகப்படவில்லை. ஆனாலும் காமார்புகூர்  மக்கள் காட்டும் வெறுப்பையும் எதிர்ப்பையும்  நினைத்துப்பார்த்ததும் அங்கிருந்து செல்ல மகிழ்ச்சியுடன் அனுமதி கொடுத்தார். சுமார் ஒன்பது மாதங்கள் காமாபுகூரில் வாழ்ந்த பிறகு அன்னை ஏப்ரல் 188-இல் கல்கத்தாவுக்குப் புறப்பட்டார்.
 குருதேவர் மறைந்த பின் அன்னை சுமார் முப்பத்துமூன்று ஆண்டுகள் வாழ்ந்தார். இதில் முதல் பதின்மூன்று வருடங்கள் அதாவது ஏறக்குறைய 1898 வரை அன்னையின் வாழ்வு உலகம் அறியாதவராக இருந்தது.காமார்புகூர். கல்கத்தா. ஜெயராம்பாடி என்று அவரது இருப்பிடம் மாறிக்கொண்டே இருந்தது. காமார்புகூரில் உன் சொந்த வீட்டை விட்டுவிடாதே, என்று குருதேவர் கூறியதை அன்னை ஒருபோதும் மறக்கவில்லை.அவர்கூறியதுபோல் அங்கே தங்கி தவ வாழ்வில் ஈடுபடவே அவர் விரும்பினார். ஆனால் சூழ்நிலை முற்றிலும்  எதிராக இருந்ததால் தான் அவர் அங்கிருந்து கல்கத்தா செல்ல நேர்ந்தது.தம்மையும் தமது அவதாரப் பணியையும் அறியாதவர் அல்ல அன்னை. எதிர்காலத்தில்  நூற்றுக்கணக்கான  பிள்ளைகள் தம்மை நாடி வரும்போது, இப்படி எதிரான ஒரு சூழ்நிலை நிலவுமானால்  அவர்களை எப்படிப்பேண முடியும்? அவர்கள் எப்படி ஆன்மீக சாதனைகளில் ஈடுபட இயலும்? இதையெல்லாம் எண்ணியே காமார்புகூரைத்தம் நிலையான இருப்பிடமாகக் கொள்வதைத் தவிர்த்தார். ஆனால் கல்கத்தாவிலிருந்து வரும் போது அவ்வப்போது அங்கே தங்கவே செய்தார்.சில வேளைகளில் ஒரு வருடம் கூடத்தொடர்ந்து தங்கியதுண்டு.ஆனால் அந்தக்காலத்தில் அவர் வறுமையுடன் போராடவேண்டியிருக்கவில்லை. பக்தர்கள் அவரது தேவைகளைக் கவனித்துக்கொண்டனர். குருதேவரின் பக்தர்களைத்தவிர பிறரும் அன்னையை அறிந்து அவரிடம் வரத்தொடங்கிய பின்  அதாவது ஏறக்குறைய 1898-க்குப்பிறகு அன்னை காமார்புகூருக்கு மிகச்சில முறைகளே சென்றார். சியாமாசுந்தரி கேட்டுக்கொண்டதற்கு இணங்கி, அன்னை ஜெயராம்பாடியையே தமது நிலையான இருப்பிடமாகக்கொண்டார்.
எதிர்காலத்தில் தீர்த்தத் தலங்களுள்மிக முக்கியமான ஒன்றாக திகழப்போகின்ற காமார்புகூர் வீட்டைப்பாதுகாத்து வருங்கால ச்சந்ததிக்கு அளிப்பதான தமது பொறுப்பையும் அன்னை உணர்ந்தே இருந்தார். எனவே அவர் எங்கேஇருந்தாலும் குருதேவர் அவதரித்த அந்தப்புனிதக் குடிசையைப்பராமரித்து வந்தார். தம்மிடம் வருகின்ற பக்தர்களிடம் காமார்புகூரின் புனிதத்தைக்கூறி அங்கு ஒருநாள் தங்கிச் செல்லும்படியும் கூறினார். காமார்புகூரைப்பற்றியாரும் தவறாக எதையும் சொல்வதை அன்னை விரும்பவில்லை. கீழ்வரும் நிகழ்ச்சி  அதனைத் தெளிவாகக் காட்டுகிறது.
ஒரு முறை சிவராம் ஊரில் இல்லாத வேளையில் அவரது மனைவி தங்கள் பெண்ணை ஜாதியில் சற்று குறைந்த ஒருவனுக்குத் திருமணம் செய்து கொடுக்க முடிவு செய்தாள்.வேறு யாருக்கும்   இதில் விருப்பம் இல்லை. பெண் எங்கேயும் ஓடிவிடக்கூடாது என்பதற்காக அந்தப்பெண்ணை ஓர் அறையில் அடைத்து வைக்கவும் செய்தாள்.வீட்டிற்குப் பெரியவரான ராம்லாலுக்கு இது பெருத்த அவமானமாக இருந்தது. அதைக் கண்ட பக்தர்கள் இருவர் அந்தப் பெண்ணைத் தப்புவித்து,நேராக ஜெயராம்பாடியில்  அன்னையிடம் அழைத்து வந்தனர். அன்னை முதலில் இந்த விஷயத்தில் ராம்லாலின் கருத்து என்ன? என்று கேட்டார். அவருக்கு இந்தத் திருமணத்தில் விருப்பம் இல்லைஎன்று தெரிந்ததும், அப்படியானால்  நீங்கள் கவலைப்படவேண்டாம். என்றார். அப்போது அந்த பக்தர்களுள் ஒருவர், ஆனால் அம்மா பிற்காலத்தில் குருதேவருக்கு காமார்புகூரில் கோயில் கட்டும்போது,சிவராமின் மனைவிக்குச் சாதகமான ஊர்ப் பெரியவர்கள் ஏதாவது இடையூறு செய்யலாம் என்ற தமது ஆதாரமற்ற ஐயத்தைக் கிளப்பினார். அதற்கு அன்னை எதுவும் கூறவில்லை. அந்த பக்தர் மேலும் தொடர்ந்து அதனால் என்ன! குருதேவர் இந்த கோயில், நினைவு மண்டபம் இவற்றைப் பற்றியெல்லாம் கவலைப்படுபவர் அல்லவே! அதுமட்டுமின்றி அவை ஏற்கனவே வேண்டிய அளவுக்கு இருக்கவும், செய்கின்றன.என்று ஏதோ எல்லாம் தெரிந்தவர் போல் பேசினார். அன்னைக்கு இது அறவே பிடிக்கவில்லை.எனவே சற்று அழுத்தமான குரலில்,நீ என்ன பேசுகிறாய்? குருதேவர் அவதரித்த திருத்தலம் புனிதமானது அல்லவா! அவர் எப்போதும் உறைந்து அருள்புரிகின்ற அந்த இடம்பக்தர்களுக்கு ஒரு தீர்த்த தலம் அல்லவா?  அதைப்பற்றி இப்படி பேசலாமா?என்று கேட்டார். ஆனால் அந்த பக்தருக்குஇது உறைக்கவில்லை. எனவே அவர் தொடர்ந்து ஆனால் சிவராமின் மனைவி என்ன செய்வாளோ தெரியாது.ஒரு வேளை அந்தக் குடிசைகளுக்கு அவள் தீவைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்றார். இதைக்கேட்டதும் அன்னையின் கோபமும் ஆத்திரமும் அளவிடமுடியாததாயிற்று. அவரது நிலையிலேமாறிற்று.கோபம் கொப்பளிக்கின்ற குரலில் தீ வைத்துவிடுவாளா? வைத்துப்பார்க்கட்டும்.வைக்கவும் வேண்டியது தான்.குருதேவருக்குஅதுவும் விருப்ப மானதாகத்தான்  இருக்கும். அவர் தம் சுடுகாட்டை விரும்புபவர் ஆயிற்றே! அவள் கொளுத்தட்டும். அந்த இடத்தைச் சுடுகாடாக்கட்டும்! என்றார். இதைச்சொல்லி முடித்ததும் உணர்ச்சிவேகத்தில்  சிரிக்கத் தொடங்கினார். நிறுத்தாமல் சிரித்துக்கொண்டே இருந்தார். நேரம் செல்லச்செல்ல அது உக்கிரமாயிற்று. பின்னர் அது கர்ஜனை போலவே கேட்டதாம்.அந்த இடத்தில் அசாதாரணமானதொரு தெய்வீகச்சூழ்நிலை உருவாயிற்று. அருகில் நின்றவர்கள் பயத்தால் உறைந்து விட்டனர். நீண்ட நேரத்திற்குப்பின்னர் அன்னையின் உடல் ஒரு முறை அதிர்ந்தது. அதன்பிறகு அவர் சாதாரணநிலைக்குத் திரும்பினார். காமார்புகூருக்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுத்திருந்தார் அவர்.
அந்தத் திருத்தலத்தை மனித குலத்திற்கே சமர்பணம்  செய்ததன்மூலம் தமது பொறுப்பையும் அன்னை பின்னாளில் நிறைவேற்றினார்.
-
-
தொடரும்...
-


No comments:

Post a Comment