சுவாமி விவேகானந்தரின் சிந்தனை துளிகள்-பாகம்-11
சுவாமி விவேகானந்தரின் சிந்தனை துளிகள்-பாகம்-11 - வேதாந்த தத்துவத்தின்படி மனிதன் மூன்று பொருளால் ஆனவன் 1. உடல், 2.ஆவிஉடல்(சூட்சுமஉடல்) ,3.ஆன்மா - நாம் காணும் உடல் தூலசரீரம். மனம்,புத்தி,நான்-உணர்வால் ஆன லிங்க சரீரம் அதற்கு பின்னால் உள்ளது.அடுத்து ஆன்மா உள்ளது - பிரபஞ்சம் எந்த அமைப்பில் உருவாக்கப்பட்டிருக்கிறதோ அதே அமைப்பில்தான் அதன் ஒவ்வொரு பகுதியும் கட்டப்பட்டிருக்கும் - இந்த பொருள்களெல்லாம் எங்கிருந்து வந்தன?சூன்யத்திலிருந்து பிரபஞ்சம் வந்தது என்று கூறுவது தவறு. - இந்த பூமி குளிர்ந்துகொண்டே சென்று ஒரு காலத்தில் துண்டுதுண்டாக சிதறிவிடும்.மீண்டும் அந்த சிறதலிலிருந்து பூமி உருவாகும் - சூன்யத்திலிருந்து இந்த உலகம் படைக்கப்பட வில்லை. இறைவனிடமிருந்து வெளிப்பட்டது என்று சொல்வதுதான் சரி - உலகம் துவங்கிய காலத்தை நினைக்க தொடங்கினால்,அதற்கு முன் உள்ள காலத்தையும் நினைக்கவேண்டிவரும்.காலத்திற்கு துவக்கம் இல்லை - பிரபஞ்சத்தின் எல்லையை நினைக்க துவங்கினால் எல்லைக்கு அப்பால் உள்ளதையும் நினைக்க வேண்டிவரும்.அப்போது எல்லை பொருளற்றதாகி விடுகிறது - ஒரு பொருளை உருவாக்க சிறிது மூலப்பொருளும், உருவாக்க...