இறைச்சி ஏன் சாப்பிட வேண்டும்?

இறைச்சி ஏன் சாப்பிட வேண்டும்?
-
சுவாமி விவேகானந்தர் அமெரிக்காவில் வாழ்ந்த போது, அங்குள்ள மக்கள் சிலர் வெள்ளையர்கள் இந்தியாவிற்கு வந்த பிறகு தான் இந்துக்கள் நாகரீகத்தை பற்றி தெரிந்துகொண்டார்கள் என்று பேசுவதுண்டு, அதற்கு சுவாமிஜி ஒரு முறை இவ்வாறு கூறினார். 
-
வெள்ளையர்கள் இந்தியாவிற்கு வந்தது இந்துக்களை வெல்வதற்காக அல்ல,அவர்களுக்குக் கற்றுக்கொடுப்பதற்காகவும் அல்ல, உண்மையில் இந்துக்களின் ரத்தத்தை உறிஞ்சுவதற்காகவே வந்தார்கள். இந்தியாவிற்கு வந்த படைவீரர்கள் நாகரீகம் தெரியாதவர்களாக இருந்தார்கள்.
-
ஒரு நாள் நான் தெருவேரமாக அமர்ந்திருந்தேன். அந்த வழியாக இரண்டு ஆங்கிலேய வீரர்கள் வந்தார்கள்.அவர்களில் ஒருவன் என்னைக்காலால் உதைத்தான், திகைப்படைந்த நான் அவனிடம் காரணம் கேட்டேன். அதற்கு அவன் இந்தியர்களைக்கண்டாலே இவ்வாறே ஏதாவது செய்ய வேண்டும் என்று தோன்றுகிறது என்றான். நானும் விடவில்லை, ஓ! உங்களைக்கண்டாலும் எங்களுக்கு அவ்வாறு தான் தோன்றுகிறது என்றேன்.
-
இந்த ஆங்கிலேய படைவீரர்கள் எத்தனை இந்தியப் பெண்களின் வாழ்க்கையை சீரழித்திருக்கிறார்கள் தெரியுமா? இந்தியன் ஒருவன் ஆங்கிலேயனிடம் தவறாக நடந்துகொண்டால் அவனை உடனே கொன்றுவிடுவார்கள். பாவம் இந்துக்கள் கதறி அழுவார்கள்,அவர்களால் வேறு என்ன தான் செய்ய முடியும். ஆனால் ஆங்கிலேயர்கள் இந்துக்களிடம் எவ்வளவு தான் தவறாக நடந்துகொண்டாலும் அதை பற்றி யாரும் கண்டுகொள்வதில்லை.
-
எங்களுக்கு மட்டும் சற்று போர்குணம் இருக்குமானால்,இப்படி விரல் விட்டு எண்ணக்கூடிய சில ஆங்கிலேயர்கள் எங்களை ஆளமுடியுமா? அதனால் தான் இந்தியா முழுவதும் சென்று அனைவரும் இறைச்சி சாப்பிடவேண்டும்,போர் குணத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று சொல்கிறேன்.
நமது உணவை ஒருவன் தட்டிப்பறிக்கிறான்.அதைக்கண்டு அழுது புலம்புவதா? அல்லது எதிர்த்து போராடி மடிவதா? எது மேலானது?.
-
விவேகானந்தர் விஜயம் ---சுவாமி வித்யானந்தர்
-
🌿 சுவாமி விவேகானந்தர் வாட்ஸ் அப் குழு 97 89 37 41 09

Comments

Popular posts from this blog

அன்னை சாரதாதேவியின் வாழ்க்கை வரலாறு

விவேகானந்தரின் மரணத்தில் உள்ள ரகசியம் என்ன?

Gemini AI and I Scientific Research Papers-6