சுவாமி விவேகானந்தரிடம் கேளுங்கள்-2
-
கேள்வி. மனிதன்,பிறக்கிறான்,வாழ்கிறான் பின்பு சாகிறான்.வாழ்க்கை என்பது இவ்வளவுதானா?மனிதசமுதாயத்தின் லட்சியம் தான் என்ன?
-
சுவாமிஜி..மனித சமுதாயத்தின் குறிக்கோள் அறிவு. மனிதனின் லட்சியம் இன்பத்தை அனுபவிப்பது அல்ல. அறிவை பெறுவதே அவனது லட்சியம்.இன்பமும்,துன்பமும் ஒரு முடிவுக்கு வந்தே தீரும்.இன்பத்தை அடைவதற்காக வாழ்வதாக நினைப்பது தவறு.இன்பத்தை அனுபவிப்பதே லட்சியம் என்று மனிதன் முட்டாள்தனமாக நினைக்கிறான்.இது தான் இன்று உலகில் காணப்படும் எல்லாவிதமான துன்பத்திற்கும் காரணம்.ஆனால் அவன் அறியாவிட்டாலும் அறிவைநோக்கியே சென்று கொண்டிருக்கிறான்.நமக்கு நடக்குட் தீமையிலிருந்து படிப்பினையை பெறுகிறோம்.இன்பமும் துன்பமும் நமது வாழ்க்கையை கடந்து செல்லும் போது அது நமக்கு பல அனுபவங்களை கற்றுத்தருகிறது.இந்த அனுபவங்களிலிருந்து பல பாடத்தை கற்றுக்கொள்கிறோம்.சில வேளைகளில் இன்பத்தைவிட துன்பதே நமக்கு பல பாடத்தை கற்றுத்தருகிறது.புகழ்மொழியைவிட ஏமாற்றஙே்களும்,வாழ்வில் கிடைக்கும் அடிகளும்,வறுமையும் நமக்கு பல பாடங்களை கற்றுத்தந்து,நமது அக ஆற்றல்களை வெளியே கொண்டுவருகிறது.
-
complete works of swami vivekananda(தமிழ்)புத்தகம்1.பக்கம்96)

No comments:
Post a Comment