Sunday, 4 December 2016

இந்து மதத் தலைவர்கள் திருமணம் செய்து கொள்வதில்லையா?

நிரூபர்...இந்து மதத் தலைவர்கள் திருமணம் செய்து கொள்வதில்லையா?
-
சுவாமிஜி..அது அவரவர் விருப்பத்தைப் பொறுத்தது. ஒரு பெண்ணிற்கு அடிமையாக இருக்க வேண்டும் என்று நினைப்பவன் திருமணம் செய்து கொள்வான். பெண்ணிற்கு அடிமையாக இருக்க விரும்பாதவன் திருமணம் செய்துகொள்ள மாட்டான்.
-
நிரூபர்.”அப்படி எல்லோரும் திருமணம் செய்து கொள்ளாமல் இருந்தால் ஜனத் தொகை என்ன ஆவது?
-
சுவாமிஜி..பசியும் நோயும் துன்பமும் நிறைந்த இந்த உலகத்தில் போராடி மடிவதைவிட உயர்ந்த எதையும் பற்றி நீங்கள் சிந்திக்கவில்லை. குழந்தை அழுதுகொண்டே இந்த உலகத்திற்கு வருகிறான். வருகின்ற அவன் அழலாம்! ஆனால் உலகை விட்டு செல்பவன் ஏன் அழவேண்டும்?
-
ஒருவன் இறக்கும் போது, உடலை விட்டு விட்டான் என்று நாங்கள் சொல்கிறோம். உயிரை விட்டு விட்டான் என்று நீங்கள் சொல்கிறீர்கள். இறந்து போன உடல் உயிரை வெளியே போக அனுமதித்ததா?
-
(இந்துக்களைப்பொறுத்தவரை ஆன்மாவின் ஒரு சட்டை தான் உடல். ஆன்மா பல உடல்களை உண்டாக்குகிறது. பழைய ஒரு சட்டையை தூர எறிவதால் நாம் துன்பப்படுவதில்லை.அதே போல பழைய இந்த உடல் இறந்து போவது குறித்து நாம் துன்பப்படுவதில்லை.)
--
-
விவேகானந்தர் விஜயம் ---சுவாமி வித்யானந்தர்
-
🌿 சுவாமி விவேகானந்தர் வாட்ஸ் அப் குழு 97 89 37 41 09

No comments:

Post a Comment