Sunday, 4 December 2016

வேதாந்த விளக்கம்- சுவாமி விவேகானந்தர்-பகுதி-17

வேதாந்த விளக்கம்- சுவாமி விவேகானந்தர்-பகுதி-17
---
ச்ரோதவ்யோ மந்தவ்யோ நிதித்யாஸிதவ்ய...(பிருஹதாரண்யக உபநிடதம்.2.4.5)
-
”இந்த ஆன்மாவைப்பற்றி முதலில் கேட்க வேண்டும். பிறகு அதைப்பற்றிச் சிந்திக்க வேண்டும். பின்னர் அதை தியானம் செய்ய வேண்டும். ”
நீங்கள் ஆன்மா என்பதை அல்லும் பகலும் சிந்தித்து வாருங்கள்.உங்களுக்கு மரணம் இல்லை என்பதை மீண்டும் மீண்டும் சிந்தியுங்கள்
-
செயலை உயர்த்தியும் சிந்திப்பதைத் தாழ்த்தியும் மதிப்பிடுகின்ற ஒரு போக்கு தற்காலத்தில் நிலவுகிறது. செயல் சிறந்ததுதான் ஆனால் சிந்தனைதான் அதன் அடிப்படை. உடல் தசைகளின் மூலம் வெளிப்படும் சாதாரணமான சக்தியையே செயல் என்கிறோம். ஆனால் சிந்தனையின்றிச் செயலில்லை. ஆகவே சிறந்த எண்ணங்களால் மூளையை நிரப்புங்கள். சிறந்த லட்சியங்களையே கொள்ளுங்கள், அவற்றை உங்களிடமிருந்து ஒருபோதும் விலக விடாதீர்கள். இத்தகைய ஈடுபாட்டினால் அரிய செயல்களைச் செய்ய முடியும், தூய்மையின்மையைப் பற்றிப் பேசாதீர்கள். நாம் எப்போதும் தூய்மையானவர்களே என்று சொல்லுங்கள்.
--
விவேகானந்தர் விஜயம்---சுவாமி வித்யானந்தர்
--
complete works of swami vivekananda(தமிழ்)புத்தகம்3.பக்கம்208

No comments:

Post a Comment